திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திங்கள், 26 டிசம்பர், 2022
🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥
நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?
பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !
சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !
உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !
மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !
" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !
திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !
வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :
நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !
வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !
மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !
இது ஒன்றே மெய் !
மெய்யாலுமே இதுவே மெய் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 20 டிசம்பர், 2022
தவம் செய்வோர் தப்புவர்!
சாகாக்கல்வி நூலிலிருந்து : 39
🔥 தவம் செய்வோர் தப்புவர்! 🔥
இரத்தம், எலும்பு, சதை மஜ்ஜையால் ஆன இந்த மெய், தாயின் கருவில் முதலில் தோன்றும் கண்ணால் அதன் ஒளியால் வெதுப்பி வெதுப்பி தோன்றி பிண்ட உற்பத்தி பூரணமாகிறது !
மூன்று மாதத்திற்கு பின் இறையருளால் உயிர் வந்து சேரும் !
உயிரும் உடலும் இணைந்து பூரணமாகி 10 மாதத்தில் 270 நாட்களில் ஜனனமாகிறது !
தாயின் உயிரை சார்ந்து கருவில் இருந்த நாம் திருவின் அருளால் தனித்து விடப்படுகிறோம் இவ்வுலகில் !
ஒன்றும் அறியா குழந்தையாக பிறந்த மனிதன் தான் பிறந்தது பிறப்பிக்கச் செய்தவனோடு ஒன்றிவிடத்தான் என உணர்ந்தால் !? பிழைத்தான் !!
ஒன்றும் அறிவை அறிய அறிவிக்கும் ஆசானை பணிந்து மெய்ப்பொருள் உணர்ந்து ஆன்றவிந்து அடங்கிட தவம் செய்வோர் தப்புவர் !
ஒன்றும், இரண்டிலே, எட்டாகிய இரண்டிலே வழிகண்டு ஊசிமுனை வாசல் வழி கண்டு போனாலே உய்யலாம் ! வாழலாம் ! பேரின்பம் பெறலாம் !
ஒன்றான இறைவனை இரண்டாக உள்ள மெய்ப்பொருளிலே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டற்று ஒன்றாகலாமே !
ஜீவன் முக்தராகலாமே !
ஒன்றே மெய்ப்பொருள் என இரண்டையும், கண் இரண்டையும் ஒன்றாக்கினால் உள்ளே, ஒளிரும் மூன்றாவது கண் ! துலங்கும் !
ஓங்காரமான அ, உ, ம் - சேர்ந்ததே. மூன்றாமிடம் - முப்பாழ் - லலாடம் - அக்னிகலை - அகக்கண் - ஞானக்கண் நெற்றிக்கண் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 19 டிசம்பர், 2022
பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்
சாகாக்கல்வி நூலிலிருந்து : 40
🔥 தங்கஜோதியை கண்டால் ?🔥
நமது மெய் பொய்யல்ல ! அழியாதது ! நித்ய ஜீவனை தாங்கியிருக்கும் மெய் பொய்யா ? மெய் பொய்க்காமல் - அழியாமல் வைக்கும் உபாயம் அறிந்து காத்தால் மெய்தங்கிய மெய்யும் மெய்யாகிவிடும் !
மெய்யிலே இருக்கும் மெய் துணைகொண்டு, காயமே இது பொய்யடா என்றவர்களின் வாக்கை பொய்யாக்கிவிடலாம் ! காயத்துள் நின்ற கடவுளை கண்டால் மெய் மெய்யாகிவிடும் !
மெய்யை உடலை பொன்போல பாதுகாக்க வேண்டும் என்றார் வள்ளலார்.
உடலினுள் துலங்கும் தங்க ஜோதியை கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய் !
பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய்யே !
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது!" என்று ஒளவை பிராட்டி அருளிய அமுதமொழி படித்தோமல்லவா ?
அரிதானது மானுடதேகம் ! குறையின்றி பிறப்பது புண்ணிய பலன் ! இறைவன் அருளால் கிடைத்தது !
தந்தவனை, மெய்தந்தவனை, மெய்யினுள் மெய்ப்பொருள் தந்தவனை காணவேண்டாமா ? உணர வேண்டாமா ? நன்றி சொல்ல வேண்டாமா ?
தாய் தந்தை தந்ததல்ல உயிர் ! மெய் !
பூர்வ ஜன்ம கர்மக்கடன் தாய்தந்தை உடன் பிறப்பு சொந்தபந்தங்கள் !!
இதுவே மெய் !
தாயும் தந்தையுமான தயாபரன் சர்வேஸ்வரன் பரப்பிரம்மம் அவனே ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்ஜோதி வானவன் !
மெய் இதுவே !
அவனே நம் உயிருமாகி பெற்றோர் மூலம் உடலும் வர காரணமுமானான் !
மெய் தந்த மெய்ப்பொருள் !!
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 13 டிசம்பர், 2022
அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள்
சாகாக்கல்வி நூலிலிருந்து : 38
🔥 ஞானிகள் கூற்று ! 🔥
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்". அவரவர் கையால் அளந்தால் அவரவர் உடம்பு எட்டு சாண் அளவே இருக்கும் ! இதில் தலை ஒரு சாண்.
நம் உடம்புக்கு தலையானது - முக்கியமானது, தலையே - சிரசே !
முக்கியமான - பிரதானமான இடத்தில் தானே தலைநகரத்தில் தானே தலைவர் இருப்பார். தலையில் இருப்பதால் தான் - தலைபோல் இருப்பதால் தான் தலைவர்.
நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.
இறைவன் - பரம்பொருள் நம் உயிராக, பிராணனாக, ஜீவனாக நம் தலையின் உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பாத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறது!
உயிர் தங்கிய சற்பாத்திரம் நம் உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது !
அதுவே மெய் ! அதுவே மெய்ப்பொருள் !
நமது மெய்யில் எழுபத்தீராயிரம் நாடிகள் உள்ளது இது மெய் ! ஞானிகள் கூற்று !
அனைத்தும் தொடர்புடைய இடம் உயிர்ஸ்தானம் ! மெய்ப்பொருள் !
ஏழு ஆதாரம் நமது மெய்யில், அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள் !
பஞ்சபூத கூட்டுறவால் ஆனது இப்பிரபஞ்சமே ! நம் மெய்யும் பஞ்சபூத கூட்டுறவே ! இதுவும் மெய்யே !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 6 டிசம்பர், 2022
மெய் எது ? சத்தியம் உடல்?
சாகாக்கல்வி நூலிலிருந்து : 37
🔥 மெய் எது ? 🔥
மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.
"தமிழ்மொழி தெய்வீகமானது.
அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை நல்க வல்லது"
என வள்ளல் இராமலிங்கர் பகிர்ந்துள்ளார் !
எப்படி எனில்,,
தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்து மெய்எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே உள்ளது.
உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே, உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது !
உயிரோடு கலந்தது தமிழ் என்பதே சரி
மெய்யிலே உள்ள மெய் உயிரே ! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம் உயிரே ! மெய்யெழுத்து தனித்து இயங்காதே ! உயிர் எழுத்தோடு மெய்யெழுத்தும் சேர்ந்தே இயங்கும்.
உடல் மட்டும் மெய்மட்டும் தனித்தியங்காது. உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம் எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்ப்பொருளாக விளங்குகிறது !
சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கலந்து சுந்தரத்தமிழில் அருட்பாக்கள் எண்ணிலடங்காதவை பாடியருளிய ஞானிகள் தமிழ் மண்ணிலே ஏராளம் ! ஏராளம் !
"தேவர் குறளும் திருநான் மறை முடியும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்".
திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர் முதலான சித்தர்பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது
ஒரு வாசகம் !
மெய் ! உண்மை ! சத்தியம் !
அது மெய்ப்பொருள் !
ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும், பக்தி இலக்கியமாகட்டும், இலக்கண நூலாகட்டும், காப்பியங்களாகட்டும், அருட்பாக்களாகட்டும் இவை அனைத்தும் உரைப்பது முடிவில் மெய்ப்பொருளே !
மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
வியாழன், 1 டிசம்பர், 2022
🔥 மரணமிலா பெருவாழ்வு பெற கண் தான் வழி 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 36
🔥 கண் தான் வழி 🔥
கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம் !
காதலன் காதலியை கண்ணே என்கிறான் !
கணவன் மனைவியர் கண்ணே என்பார்கள் !
பெற்றோர், பெரியோர் பாதம்தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம் !
கோவிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொள்கின்றோம் !
கண் கண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம் !
கண் அவனே கணவன் உலகில் பெண்களுக்கு, கணவனே கண் கண்ட தெய்வம் !
ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது !
பரம்பொருள் நம் கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது !
மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவரே துவிஜன் ! மீண்டும் பிறந்தவன் !
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்வோரே பிறவாநிலை பெறுவர் ! இறவாநிலை அடைவர் !
மெய்ப்பொருளை சொல்லி புரியவைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு
தவம் செய்து ! சும்மா இருந்து தன்னை உணர்பவரே ஞானி
மரணமிலா பெருவாழ்வு பெறுவர் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 28 நவம்பர், 2022
🔥 எட்டு இரண்டு 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 35
🔥 எட்டு இரண்டு 🔥
ஊர்ப்புறங்களில் வீட்டிலுள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வரவேண்டுமானால் சொல்லிக் கொண்டுபோவர் ! எப்படி தெரியுமா ? இரண்டு எட்டு போய் வாரேன் என்பர் !!
இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள் ! இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டவேண்டும். புலப்படவேண்டும். எட்டை, மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை !
இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில்தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார் !
இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே, மறைத்தே சொல்லி வந்துள்ளனர்.
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதன்முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன் !
மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை !
ஆனால் எல்லாமே மறைபொருளாக பரிபாஷையாக சூட்சுமமாக குரு மூலம் அறியக்கூடிய வகையிலேயே உள்ளது !
உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞானநூற்களை எழுதவைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர் !
எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது !
இயேசுபெருமானும் நபிபெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
ஞாயிறு, 20 நவம்பர், 2022
🔥 7 - திரை எங்கே இருக்கிறது? 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 33
🔥 7-திரை எங்கே இருக்கிறது? 🔥
வள்ளல் பெருமான் கண்ணே, கண்மணியே என்று மெய்ப்பொருளை பல்லாயிரம் தடவை திருஅருட்பாவில் சுட்டிக்காட்டி நாமும் மரணமிலா பெருவாழ்வு பெற வழிகாட்டியுள்ளார்.
"தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக்கொள்வது நலம்"! என வள்ளல் இராமலிங்கர் உரைத்துள்ளார் ! நடுக்கண் - கண்மணியை திறக்கப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ?! அப்படியானால் நடுக்கண் மூடப்பட்டுள்ளது என்று தானே பொருள் !
யார் மூடியது ? எதற்காக மூடியது ?
எதனால் மூடியது என அறிய வேண்டாமா மனிதா ?
கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு சிறிய துவாரம் உள்ளது !? அந்த ஓட்டை தான் மெல்லிய ஜவ்வால் மூடப்பட்டுள்ளது ! உள்ளே, ஊசிமுனை துவாரத்தின் உள்ளே ஊசிமுனையளவு ஒளி நம் ஆத்மஜோதி துலங்குகிறது !
ஓட்டையை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே. நமது மும்மலங்கள் ! வள்ளல்பெருமான் இதைத்தான் திரைகள் என்கிறார் !
இதையெல்லாம் சூட்சுமமாக சிருஷ்டித்தவன் எல்லாம் வல்ல இறைவன் ! இதனை கண்டு உணர்ந்து உய்தனர் ஞானிகள் !
திரைகளாகிய ஜவ்வே நாம் நீக்க வேண்டிய பொருள் ! திரை - நீங்கினாலே, மெய்ப்பொருளின் திரை நீங்கினாலே நம் ஆத்மஜோதியை நாம் காணமுடியும் ?! இதுவே, நாம் அடைய வேண்டிய மாபெரும் பேரின்ப பெருநிலையாகும் !
மனிதனாக பிறந்த நாம் பெறவேண்டிய அதி உன்னத நிலை இதுவே !
நம்மை நாம் காண உணர மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்ய வேண்டும் !
ஞான சற்குருவை பணிந்து தீட்சை பெற்று தவம் செய்து பெறவேண்டும்.
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
வெள்ளி, 18 நவம்பர், 2022
🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 34
🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥
நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லாநிலையிலும் காணுகின்ற பொருட்களிலும் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.
பல ஊர் பெயர்கள் மெய்ப்பொருள் விளக்கம் :
திருக்கண்ணபுரம், எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி இப்படி ஊர் பெயர்கள்.
திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணபுரம் !
எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண் !
எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன் !
திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டிருக்கும் இடம் அதுவே திருவாவடுதுறை !
ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடியிருப்பவன் இறைவன் எனவே குறுங்குடி !
இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே !
தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் எனக் குறிக்க வந்ததே தாம்பரம் !
சிதம்பரம் சின்ன அம்பரம் சின்னகோவில் அதுதான் சிதம்பரம்.
கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே !
கண் ஆகிய அவன் கண்ணிலே இருக்கும் ஒளியாகிய இறைவன். கண் அவன் கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி !
நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவர் !
நேத்திரம் நயனம் என்றாலும் கண்.
உபநயனம் ஒரு சடங்கு. பூணூல் பூட்டும் வைபவம் !
துணை, இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்பற்றி அறிவதே அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 15 நவம்பர், 2022
🔥 பட்டினத்தார்க்கு குரு சொன்ன உபதேசம் 1 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 31
🔥 பட்டினத்தார்க்கு குரு சொன்ன உபதேசம் 1 🔥
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே"
இதையெல்லாம் என் குருநாதன் எனக்கு உபதேசித்து மெய்ப்பொருள் உணர்த்தி அருளினார் என்றார் சித்தர் பெருமகனார் ! என் அனைத்தும் பரிபாஷை !
சூட்சுமமாக சொல்லப்பட்டது !
அனைத்துமே ஒரே பொருள்தான் !
மெய்ப்பொருள் தான் !
⚫ வெட்டாத சக்கரம் :
சக்கரம்போல் உருண்டையாக வட்டமாக இருப்பது நம் கண்மணி ! சக்கரம் உருள்வது போல் கண்மணி சுழன்று கொண்டிருக்கிறது ! கண்மணியாகிய சக்கரம் வெட்டி உருவாக்கப்பட்டதல்ல ! வெட்டி ஒட்டாமல் முழுதாக இறைவனால் உருவாக்கப்பட்ட சக்கரமே கண்மணி ! அதனால்தான் கண்மணியை வெட்டாத சக்கரம் என்றனர் !
👀 பேசாத மந்திரம் : மந்திரம் எனப்படுவது இறைவனை மனதில் திறமாக நினைந்து இருத்தச் சொல்லப்படும் வார்த்தை ! இது எண்ணிலடங்கா அளவில் உள்ளது ! " மாமறை நூல் ஏற்றிக்கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் " என வள்ளல் பெருமான் கூறுகிறார் ! " பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் பலகோடி " என சிவவாக்கியர் கூறுகிறார் ! அப்படியானால், ஜபிக்க வேண்டாம் வார்த்தைகளை ! மந்திரம் என்றால் மனதை திறமாக திடமாக வைத்து விடுவது ! மனம் திடமான இருக்கும் இடம் ! அந்த - இடத்திலேயே இருத்திவிடுவது ! அது கண்மணியான இடமே ! கண்மணியின் ஊசிமுனை வாசலில் உள்ள மெல்லிய ஜவ்வே திரையே நம் மும்மலத்திரை ! அதிலிருந்து வெளிப்படுவதே மனம் ! கண்மணி முன்னர் சூட்சுமமாக இருப்பதே மனம் ! கண்மணியிலுள்ள மனதை அதிலேயே திறமாக வைப்பதால் "மந்திரம்" எனப்படுகிறது கண்மணி ! கண் பேசாது அல்லவா அதனால் தான் கண்மணியே பேசாத மந்திரம் !
🌼 வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் :
புஷ்பம் என்றால் மலர் பூ. கண்மலர் என்று நாம் கூறுவோமல்லவா ? இந்த புஷ்பத்தை வேறு யாராவது எட்ட முடியுமா ? அவரவர் கண் - மெய்ப்பொருள் அவரவர்க்கே எட்டும் இடத்தில் உள்ளது ! எட்டாக உள்ள புஷ்பம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் நம் கண்மணியே !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
ஞாயிறு, 13 நவம்பர், 2022
நடுக்கண் புருவபூட்டு - வள்ளலார்
🔥 புருவமத்தி - வள்ளலார் 🔥
வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறி விட்டார்.
"கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டுகளி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு” என வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் ! "நடுக்கண் தான் புருவபூட்டு"
இதற்கு விளக்கமும் வேண்டுமோ ?!
“பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
என்றொரு சித்தர் பாடுவார். நடுக்கண் புருவபூட்டை திறக்க வேண்டும் !
எப்படி ? கையாலே இங்கே கை என்பதும் நமது கண்களே ! கண்கள் தான் நமக்கு கை !
கண்கள்தான் இறைவனின் திருவடி - கால்கள் !
இந்த சித்தர் கண்ணாலே பூட்டை திறக்க கூறியுள்ளார்.
அங்கே மனமாகிய பூட்டும் உள்ளதாம் அதை மெய்யாலே திறக்கணுமாம் !
இங்கே இன்னொரு இரகசியமும் வெளிப்பட்டது.
மனம் இருப்பதும் கண்ணில் தான் !
அதை மெய் கொண்டு திறக்கணுமாம் !
மெய் எது உண்மை. சத்தியம் அழியாதது. ஒளி ஒன்றுதானே !
அதாவது கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி !
ஒளியை வைத்து மனதை திற !
கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே ஞான இரகசியம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 8 நவம்பர், 2022
🔥 புருவ-மத்தி 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 29
🔥 புருவ-மத்தி 🔥
புருவ மத்தியில் தியானம் செய் என எல்லோரும் கூறுவர்.
புருவமத்தி எது என தெரிய வேண்டாமா ?
சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் புருவமத்தி நாம் நெற்றியில் பொட்டு
வைக்கும் இடத்தையே காட்டுவர் ! அதாவது இரு புருவங்களுக்கிடையே தான் காட்டுவர்.
ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே !
புருவமத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
ஒரு புருவம் அதன் மத்தி ஒன்றுமில்லை,
அதன் கீழேயிருப்பது கண்.
இப்படி சிந்திக்க வேண்டும், யூகிக்க வேண்டும்.
புருவமத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணைப் பற்றித்தான்
சொல்லியிருப்பர். அதன் விளக்கம் இதுவாகத்தான் உள்ளது என சிந்தித்து அறியவேண்டும்.
கண்ணின் தன்மையை அறியவேண்டும்.
புருவமத்தி என்றால் கண்தான் என மற்றொரு சித்தர் உண்மையை போட்டு உடைக்கிறார்.
ஒரு சித்தர் போட்ட பூட்டை இன்னொரு சித்தர் திறந்துவைக்கிறார் ! இப்படியேதான் எல்லா சித்தர்களும் ஞானிகளும் மெய்ப்பொருளை பரிபாஷையாக சூட்சுமமாக பலப்பலவிதமாக கூறி அருளியிருக்கிறார்கள் !
" புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி ".
எவ்வளவு சிறந்த சூட்சுமமான - பரிபாஷை சங்கேத வார்த்தை ! - படிக்கப் படிக்க பேரானந்தம் !
புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி !
அண்டம் போல் அழகான, பூமிபோல அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும் !
அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது.
புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி !
இப்படியே தான் எப்பொருளும் மெய்ப்பொருளே !
செவ்வாய், 1 நவம்பர், 2022
அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் - பரிபாஷை
சாகாக்கல்வி நூலிலிருந்து : 28
🔥 பரிபாஷை 🔥 பட்டினத்தார் கூறுகிறார்,
"அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு" என்று.
நமது கண்மணி நாமிருக்கும் பூமியைப் போல அழகாகத்தானே உள்ளது !
கண் மூன்றுடையதாம், வெள்ளைவிழி கருவிழி கண்மணி என புறத்தே மூன்று நிலைகளாக உள்ளது.
வலது கண் இடதுகண் இரண்டும் உள்ளே கூடும் நெற்றிக்கண் என கண் மூன்று உள்ளது.
பட்டினத்தார், திருவொற்றியூர் கடற்கரையிலே நிற்குமாம் கரும்பு என்கிறார்.
நேரடியாக பொருள் காணமுடியாது !
இதுதான் பரிபாஷை !
கடற்கரையிலே கரும்பு விளையாதே !
கடல்போல நீர் பெருகும் கண்களிலே ஒற்றியிருக்கும் கண்மணி ஒளி என்பதே !
கரும் - பு !
அதாவது கருப்பு பூ !
அது நம் கண் மலரை குறிப்பதாகும் !
உலகத்தில் எங்காவது கருப்பு பூ உண்டா ?
கண்மலர் என கண்ணை சொல்வோமல்லவா ?
பட்டினத்தார் கூறியது கண்மணியே !
கருப்பு பூ என்றும் அது இந்த பூமியை போல அழகானது என்றும் அது மூன்று கண் என்றும் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்.
இப்படியே எல்லா சித்தர்களும் ஞானிகளும் பரிபாஷையாக சூட்சுமமாக இறைவன் ஒளியாக துலங்கும் கண்மணியை, மெய்ப்பொருளை பலப்பல விதமாக கூறியருளியிருக்கிறார்கள்
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 17 அக்டோபர், 2022
🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥
🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥
கண்மணி அந்தரத்தில் இருக்கிறது எனச் சொன்னேன் அல்லவா ?
எந்த ஒரு பொருளாவது அந்தரத்தில் நிற்குமா ?
நிற்கும் ! நாம் இருக்கும் பூமி அந்தரத்தில் தானே இருக்கிறது ?!
பூமி எப்படி அந்தரத்தில் ஆகாயத்தில் இருக்கிறதோ அதுபோல் தான் கண்மணியும் இருக்கிறது !?
"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என ஞானியர் கூற்று !
அண்டத்தில் எவ்வாறோ ? அவ்வாறே பிண்டத்திலும் !
இதுவே உண்மை !
பூமி உருண்டையாக, கோளமாக பந்துபோல இருக்கிறது ! அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது !
உருண்டையான பூமி ஆகாயத்தில் சுற்றுகிறது ?
முடியுமா ? சுற்றுகிறதே !?
இப்படி இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா ?
என்ன அது ? பூமி சுழல என்ன காரணம் ?
பூமியின் உள்ளே, மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு குழம்பே, அதன் வேகமே, சக்தியே பூமியை சுழல வைக்கின்றது !! அந்த நெருப்பு குழம்பு தான் எரிமலையில் வெளிப்படுகிறது !
ஆக உள்ளிருக்கும் நெருப்புதான் சுழல்வதற்கும் காரணம் ! புவியீர்ப்பு விசைக்கும் காரணம் !
கண்மணியிலும் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பு இருப்பதால் தான் கண்மணியும் சுழல்கிறது ஆகாயத்தில் நிற்கிறது !
இதன்மூலமும் கண்ணில் மணியில் நெருப்பு உள்ளது என நிரூபணமாகிறது !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 3 அக்டோபர், 2022
Kadappa district Jeeva samadhi (with google map)
Andra pradesh - Kadappa district Jeeva samadhi
1) Ameen Peer Dargah
5:30–10am 5pm–10pm
https://goo.gl/maps/nQBsW3CiLTiMwPLg8
----next 3 near by each other left side of kadapa
Avadhutha Ramaya Swami Samadhi Temple, CPPW+CQ5, Gopalapuram,
ck dinne, Kadapa, Andhra Pradesh
https://goo.gl/maps/nevsdLsLHRFrUPTBA
Siddaguru swami temple (25 kms from ammen)
Address: CJPH+5C3, Cherlopalli, Pendlimarri, 516216
https://goo.gl/maps/8wKDVs8fGKwNqvTh9
2) Sri sadguru Pullaiah swamy temple (23 km - left side)
CJWQ+7XC, Pendlimarri, Andhra Pradesh 516216
https://goo.gl/maps/UGVNVMqHyQybzwXj9
Sri Sadguru Samartha Narayana Ashram & Goshala Upparapalli
(10 km from ammen peer on the way to mydukur)
1-119/A, Upparapalli Kshetram Proddatur Mandal
Kadapa district, Andhra Pradesh 516362
https://goo.gl/maps/im3ejAigVNwvynpD7
Muniswamy 17th century (20 km from mydukur)
Mukthi Rameswaram - siva temple
https://goo.gl/maps/EWLwboztCVHrcDDe8
PGVP+97 Proddatur, Andhra Pradesh
---------B MATTAM (kadapa - mydukur - bmattam)
2) Brahmamgari Sajeeva Samadi, Brahmamgari matham (57 km from ammen peer)
8am–1pm 3–9pm
Kakkaya Mattam RVCJ+GVG, Chodavaram, Andhra Pradesh 51650
https://goo.gl/maps/1TtuDL7qrm7CEStX8
3) ESWARI DEVI SAMADHI who is the grand daughter of lord veera brahmendra...Virat bhavanam brahamgari matam (easwari devi matam) RVFG+7W9, Somireddipalle, Andhra Pradesh 516503
https://goo.gl/maps/ceAypmRy8At2qFXQA - eswari devi mattam
https://www.youtube.com/watch?v=LzAuHLbe7F0 cave ,
where Sri eswari mahadevi did penence for 14 years
https://goo.gl/maps/p6X8r1TSbAVpHPRx7
------------
4) Sri siddaiah Achamamba temple
RV7H+VHH, Nagasanipalli Mallepalli Rd, Jangamrajupalle, Andhra Pradesh 516503
https://goo.gl/maps/3nJbzrS96M1Thmsa7
5) Sri avadoota narayana Swamy temple
RV6F+4XR, Unnamed Road, Jangamrajupalle, Andhra Pradesh 516502
https://goo.gl/maps/udDNMLPb6siqk4ge9
6) NARAYANA SWAMY TEMPLE (near river)
RV5G+4C8, Jangamrajupalle, Andhra Pradesh 516502
https://goo.gl/maps/SeUuE5VoxQtH6F4BA
RV5G+4C8, Jangamrajupalle, Andhra Pradesh 516502
7) Kakkaya Mattam (350 m from easwri devi)
Kakkayya, disciple of sri potuluri veera brahmendra swamy.kakkayya
matam is located in the entrance of the kandimallayapalli
RVCJ+GVG, Chodavaram, Andhra Pradesh 516503
https://goo.gl/maps/AcYXsiXi4sd1YJ7h6
-------
8) Siddaiah Swami was a dear disciple of Brahmendra Swami. (15km from easwari devi)
6:30am–9:40pm
Siddhaiah Gari Matham Kadapa,Mudumala Andhra Pradesh 516503
https://goo.gl/maps/YUwQiZzaSrFe8FmU6
Kakkaya swamy matam Kandimallayapalle Mudumala, Andhra Pradesh 516503
https://goo.gl/maps/HQms7BBFH3W1BMeh7
https://www.youtube.com/watch?v=X1XkykDgVdY&t=59s
----- 11 km from Mudumala
9) SRI MADDIMANU GURAPPA SWAMY TEMPLE
XXM5+5XC, Gurappagaripalle village,
Rangasamudram Post, Porumamilla Mandal,
Andhra Pradesh 516193
https://goo.gl/maps/SUbSNvuYF2c91tXn9
---- 40 km from B MATTAM ---- 28 km from Mudumala
10) Induru Appayya swamy temple
Samadhi at Chennakesavaswamy temple in Kalasapadu.
https://goo.gl/maps/nT2vH4ee265qChnJA
4W5R+485, Kalasapadu, Andhra Pradesh 516217
11) SRI PEDDA NAGAIAH SWAMY TOMB
4W6Q+PGM, Giddaluru Road, Badvel Palika,
Kadapa District, Kalasapadu, Andhra Pradesh 516217
https://goo.gl/maps/i7udvSbKDswLDd4u
வெள்ளி, 30 செப்டம்பர், 2022
தேவி பூஜாவிதி
மகிழோங்காரி"
தேவி பூஜாவிதி
வாலை திரிசூலி ஓங்கார
நாதமானவள் ஆதாலல் ஓங்காரி!
ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னிய குமரியிலே வந்தமர்ந்தளாம்!
மூன்று மூன்று மூன்று வட்டமாக மூம்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்!
ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழ பிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி- நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையைக் கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா! ஞானம்!
வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - வாலை - கன்னிய குமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியகுமாரிக்கு!
பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்!
கன்னி 'ய' குமரியிலே!
பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே! எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவன்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணீ!
ஞானம் பெற விழி
பக்கம் எண் 125
புதன், 14 செப்டம்பர், 2022
🔥 இரகசியம்🔥சூட்சுமம் 🔥
"அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது ?
ஆறைந்து இதழிரண்டு முளைத்ததெங்கே ?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே ?
சொல்லவல்லார் உண்டானால் நாளும் குரு என பணிந்து வணங்கலாமே".
ஒரு தாயின் கருவில் குழந்தை உருவாகும்போது, சுக்கில சுரோணித சம்பந்தத்தால் உருவாகும் முதல் உறுப்பு "கண்" !
கண் ஒளி தான் பிண்ட உற்பத்திக்கு காரணமாகிறது !
ஆறுமுகம் கொண்ட ஆறுமுகனாகவும் ஆறுபட்டை கொண்ட ஒளிக்காட்சியாக தோன்றுவது, ஐந்து கரங்கொண்ட விநாயகனாகவும் கணங்களின் பதியான கணபதி ஒங்காரமாகவும், இரண்டு இதழ்கள். மலரின் இதழ்கள் போன்று மென்மையான இரு கண்மணிகளாக அதில் ஜோதியாக முளைத்து துலங்குவதாகும் !
ஐம்பூதங்களும் கண்ணில் உள்ளது.
கண்ணில் உள்ள சதை மண் அம்சம் !
கண்ணில் நீர் இருக்கிறதல்லவா ?
நீர் அம்சமாயிற்று !
கண்ணீர் சில சமயம் சூடாக இருப்பதை நாம் அறியலாம். அப்படியானால் தீ இருக்கிறது என்று தானே பொருள் !
அக்னி அம்சமுமாயிற்று !
தீ இருக்கிறது என்றால் நிச்சயம் காற்று இருந்தாகவேண்டுமே !?
நாலாவது பூதம் வாயுவுமாயிற்று !
அடுத்து ஆகாயம் ?
இதுதான் இரகசியம் ! சூட்சுமம் !
நமது கண்ணின் அமைப்பை பாருங்கள்.
வெள்ளைவிழி அதற்கு நடுவே கருவிழி அதற்கும் மத்தியில் கண்மணி கிருஷ்ணமணி என்பர், பாப்பா என்பர். கண்மணி, கருவிழியின் மத்தியில், கருவிழியின் உள், கருவிழியை தொடாமல் அந்தரத்தில் இருக்கிறது !! அங்கே இருக்குது வான்வெளி வெட்டவெளி அதுவே ஆகாயம் !
இப்படி ஐம்பூதங்களும் ஒரே இடத்தில் இருப்பது கண்ணில் மட்டுமே !
ஐம்பூத ஒடுக்கம் கண்ணிலே !
எல்லாவற்றையும் இரகசியம் ஏதுமின்றி எந்த மறைப்புமின்றி சொல்லிவிட்டேன் !
எங்குரு அருளாலே !
அடியேனை குரு என ஏற்றுக் கொள்ளலாமா ?
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 5 செப்டம்பர், 2022
🔥 மெய்ப்பொருளை பற்றுவோம் 🔥
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
உலகிலுள்ளவர்கள் எல்லோரும் சொல்லும் விஷயங்கள் பலவாயினும் அவற்றின் அடிப்படை, ஆரம்பம் இறைவனைப் பற்றியதேயாகும் !
அறிவுப் பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் தான் எல்லோரும் சொல்வது "மெய்ப்பொருள்" பற்றித்தான் எனப்புரியும் !
யார் சொன்ன சொல்லாயினும் அதை பிரித்து பார்த்து ஏன் எதற்கு என சிந்தித்தால் உண்மை - உன்மெய் - மெய்ப்பொருள் தான் எல்லாமே எனப் புரியும் ! விளங்கும் !
எப்பொருளும் மெய்ப்பொருள் தான் எனப் புரிய வேண்டுமானால் நாம் மெய்ப்பொருளை பற்றித்தான் ஆகவேண்டும் !
அது ஞான சற்குரு பற்ற வைத்தால்தான் நடக்கும் !
தீ பற்ற வேண்டுமல்லவா ?
குருவை பணிந்தால் குரு பற்ற வைப்பார் !
நீங்கள் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்.
மெய்ப்பொருள் ஒளி உங்களுக்கு கைவல்யப்படும் !
"மெய்ப்பொருள் இன்னதென்று குருவே சொல்வார்" என சித்தர் பெருமகனார் கூறுவார்.
திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அடியேனை குருவாக்கி கன்னியாகுமரி தங்கஜோதி ஞானசபையில் வைத்து, இந்த ஞான உபதேசங்களை உலகருக்கு உரைத்திடவும், நூல்களாக எழுதி வெளியிட்டு உலகர் உணர்ந்திடவும், ஞான தீட்சை கொடுத்து உலகர் ஞானம் பெறவும், அடியேனை கருவியாக்கி வைத்துள்ளார்கள். அடியேன் எழுதி வெளிவரும் 24-வது நூல் இது ! "சாகாக்கல்வி".
கற்பிக்கிறேன் ! கற்றுக் கொள்ளுங்கள் !
கண்ணின் மணியான கருணைக்கடல் கடவுள் கைவிடமாட்டார். அவன் திருவடியை பற்றினால், நம்மை கைதூக்கி மேலேற்றி மரணமிலா பெருவாழ்வு நல்குவார் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
வெள்ளி, 2 செப்டம்பர், 2022
🔥 வினையற்றால் சாகாநிலை! 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 23
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்"
மனந்தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழ்வினைகளையும் வென்றுவிட முடியும் என திருவள்ளுவர் தெளிவாக கூறுகிறார் !
சதா சர்வகாலமும் தவம் செய்வோமானால் கண்மணி ஒளியில் கருத்தை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருந்தோமானால் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் சுட்டு எரிக்கப்பட்டு அழிந்து போகும் !
வினையற்றால் சாகாநிலை !
"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை !"
ஒளவையார் கூறும் ஆறுதல் வார்த்தை இது ! இந்த மாதிரி ஞானதவம் செய்பவருக்கு அவமாகிய வினைதுன்பம் ஒருநாளும் வராது ! இதுவே சத்தியம் !
"முயற்சி திருவினையாக்கும்"
ஞான சற்குருமூலம் உபதேசம் தீட்சை பெற்று, தொடர்ந்து சதாகாலமும் தவம் மேற்கொண்டோமானால், நமது வினைகள் எல்லாம் இல்லாமலாவதுடன் நம்மை "திரு"வாகிய இறைவனாகவே ஆக்கிவிடும் !
உண்மை தானே !
வினை இருந்தால் தானே நான் ! வினையற்றால் அவன்தானே !
கடவுள் தானே !
நான்தான் அது !
“தத்துவமஸி” அதுதான் நான் !
இது தானே நமக்கு வேண்டும் !
நான் அதுவானால் மரணம் ஏது ? பிறப்பு ஏது ? துன்பம் ஏது ?
பேரின்பம் ! எப்போதும் பேரின்பமே !
ஒளியை மறைத்த வினையகன்றால் ஒளி பிரகாசிக்குமல்லவா ?
ஒளி மேலும் மேலும் பெருக பெருக ஒளியுடல் பெறலாம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
புதன், 31 ஆகஸ்ட், 2022
🔥 யாராலும் மறுக்கமுடியாத உண்மை 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 21
ஜாதி மதம் இனம் மொழி தேவையில்லை. உலகிலுள்ள மனிதர்கள்
அனைவரும் எல்லாம் வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகள் !
ஜீவாத்மாக்கள் ! அவ்வளவே !
நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரி விளங்கும் கண்மணியில் ஊசிமுனை
அளவு ஒளியாகவே அந்த ஏக இறைவன் உள்ளான் !
இதை மட்டும் நம் மனதில் கொண்டால் போதும் !
"யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா"
இந்த உலகமே மனித குலத்துக்கு சொந்தம்.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே !
நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே !
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் இறைவனே !
உலகுக்கு இறைவன் ஒருவரே !
இதுவே சத்தியம் !
யாராலும் மறுக்கமுடியாத உண்மை !
இதை அறியாதவன் குழந்தை !
இதை புரிந்து கொள்ளாதவன் அறிவில்லாதவன் !
இதை ஒப்புக் கொள்ளாதவன் முட்டாள் !
இதை ஏற்றுக் கொள்ளாதவன் மனிதனேயல்ல !
ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவரே
தான் பொறுப்பு ! வேறு யாரும் கிடையாது !
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும்
இருவினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது !
இதுவே இறைநியதி !
"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்"
நாம் பிறர்க்கு செய்யும் நல்லதோ கெட்டதோ இனி ஒருநாள் நமக்கு வந்தே தீரும் !
"வினை விதைத்தவன் வினையறுப்பான்"
சுவற்றில் எறிந்த பந்து அதேபோல் திரும்பி வந்தே தீரும் !
எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது !!
ஆனால்,,,
இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார் !
பிறப்பின் இரகசியம் இது !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022
🔥 வினைகளை அழிக்கும் வழி 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 22
"பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமே"
என்று தானே சித்தர் பெருமகனார் கூறியுள்ளார் !
இதுதானே உண்மை !
நாம் பிறக்கும்போது நம் உயிரோடு இறைவன் சேர்த்து அனுப்பியது பிராரத்துவம் !
பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.
பிராரத்துவம் விதி ஆகாமியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் நிறைய செய்து தீவினை கூடலாம். இப்படி ஏதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான் !
ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே !
ஆக, பிறக்கும்போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது !!
பிறக்கும்போது வந்ததைவிட கூடவோ குறையவோ செய்யலாம் !
இந்த இடம்தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது !
விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதையெதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல் ?! எதையெதையோ செய்யாமல், விதியிலிருந்து வினையிலிருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால் !!
வினைகளை அழித்துவிட்டால் !!
சாகாமல் இருக்கலாமல்லவா ?!
வினையிருந்தால் தானே சாவு !
வினையிருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?!
வினைகளை இல்லாமல் செய்து விட்டால் ?!
பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ?
இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!
இதுவே நல்வழி ! சிறந்த வழி ! ஒப்பற்ற வழி !
புத்திசாலித்தனமான வழி !
உலக ஞானிகள் அனைவரும் கூறியருளிய வழி !
ஞானவழி !
விழி வழி ! விழி ! விழி ! என விழிக்கும் வழி !
மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும் ! நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி, உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கிறது !
ஞான சற்குருவால் உபதேசம் தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால்,
நமது உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை - ஜவ்வை - திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம் !!
முடியும் ! எல்லோராலும் முடியும் !
இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை !
"முயற்சிஉடையார் இகழ்ச்சியடையார்"
உங்களுக்கு ஞானம் அருள, வினைநீக்க வள்ளல் பெருமான் உதவ காத்திருக்கிறார் !!
"வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூவி உலகரை அழைக்கிறார் ! வாருங்கள் தங்க ஜோதி ஞான சபைக்கு ! கன்னியாகுமரிக்கு !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
🔥 இதற்குத்தான் கூட்டம்! 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 20
இன்றைய உலகில் குரு என சொல்லிக் கொண்டு பெரிய ஆசிரமங்களை உருவாக்குவதிலேயே முழுகவனம் செலுத்தி, பல்லாயிரம் மக்களை கவர்ச்சியான செயல்பாடுகளால் கவர்ந்து யோகாசனமும் பிராணாயாமமுமே சொல்லிக் கொடுத்து முடித்து விடுகிறார்கள் !
இப்படிப்பட்ட குருமார்கள் வாழ்க்கை முடிந்து போகிறதை நாம் கண்கூடாக காண்கிறோம் !
இன்னும் பலர் கடவுளை பற்றியே பேசாதவர்கள் !
ஞானம் என்ற வார்த்தை கூட அறியாதவர்கள் !
பலர் சிறு தெய்வ வழிபாடு செய்து அருள்வாக்கு கூறும் ஆசாமிகள் !
இதற்குத்தான் கூட்டம்.
இன்றைய இத்தகைய குருமார்கள் பள்ளிக்கூடம் கோயில் ஆஸ்பத்திரி கட்டி நல்ல வருமானத்திற்கு வழிதேடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் !
இப்படிப்பட்ட குருமார்களிடம் சென்று ஏமாந்து போகாதீர்கள்.
எல்லோரையும் பாருங்கள்.
கடவுளை அடைய ஞானம் பெற யார் வழிகாட்டுகிறார் என அறியுங்கள்.
எல்லா மத நூல்களையும் படியுங்கள்.
எல்லா மகான்கள் வரலாறையும் பாருங்கள்.
உண்மையை உணருங்கள்.
எல்லா மதமும் இறைவனைப் பற்றித் தானே கூறுகிறது ?!
எல்லா மதமும் அந்த ஏக இறைவனை அடைய அன்பைத்தானே, ஆன்மநேய ஒருமைப்பாட்டைத் தானே போதிக்கின்றது !?
இறைவனை அடைய நமக்கு தேவை,,,
நல்லொழுக்கம்,
நற்பண்பு,
எல்லா உயிர்களிடத்தும் அன்பு, பணிவு,
நல்ல ஒரு குரு,
மகான்களோடு சத்சங்கம்
இவைகள் தான் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
திங்கள், 29 ஆகஸ்ட், 2022
🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 19
“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே" என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் !
ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் !
நன்றாக கவனியுங்கள்,,,
நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !
குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் !
இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ?
வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ?
ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !
இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் !
இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே !
இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !
ஞானம் என்றால் தன்னை அறிவது !
நான் யார் ? என உணர்வது !
ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் !
பக்தியில் லாமல் ஞானமில்லை !
சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ?
பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் !
அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
🔥 குருவை பெற வேண்டாமா? 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 18
ஓருயிரிலிருந்து ஆறுயிர் வரை 84 லட்சம் யோனி வகை பிறவிகளுள் மிகவும் அருமையான, பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்ற நாம், மாதா பிதாவினால் சரீரம் பெற்ற நாம், குருவை பெற வேண்டாமா ?
குரு மூலம் தானே வினையற்று இறைவனை அடைய வழி பிறக்கும் !
இறைவன்
கருணைக்கடல் !
அருட்கடல் !
அண்டினவர்க்கு அவனருள் நிச்சயம் கிட்டும் !
"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு"
திருவள்ளுவர் பிறப்பை பேதைமை என்கிறார்.
அறியாமை என்னும் இருள்சூழ்ந்தவரே பிறக்கிறார் மீண்டும் பிறக்கிறார். பேதை பெண்போல தடுமாற்றம் கொண்டு பிறந்து துன்புறாமல் பிறப்பு நீங்க அறிவு சிறக்க வேண்டும்.
குருவை நாடி மெய்ப்பொருள் கற்றுணர்ந்து தவம் செய்தால் மெய்ப்பொருள் - கண் சிவந்து செம்மையான கண் ஆகும்.
அதுவே செம்பொருள் என்றார் திருவள்ளுவர் !
அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்ப்பர் !
🔥உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது !
🔥மரணத்தில் உடலைவிட்டு பிரிந்து விடுகிறது !
🔥மயக்கத்தில் தடுமாறுகிறது !
தடுமாறாமல் ஒடுங்காமல், பிரியாமல் உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச் செய்வதுவே ஞானம் !
உயிர் தன்மையை உடல் பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் !
ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
சனி, 27 ஆகஸ்ட், 2022
🔥 மெய்ப்பொருளை - அறிந்தால் மட்டும் போதுமா? 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 16
இறைவன் படைத்து விட்டுவிட்டான் நம்மை இந்த உலகிலே !
பிறப்பைப் பற்றி ஞானிகள் கூறுவது யாதெனில், ஒரு ஆத்மா, அது பற்பல பிறவிகளில் செய்த வினைகளின் ஒரு பகுதியை கொண்டு இறைவனால் பிறப்பிக்கச் செய்யப்படுகிறது.
விதிக்கப்பட்ட அளவு வினையுடன் "பிராரத்துவம்" பிறக்கிறது. இந்த ஊரில் இன்னாருக்கு இன்னநிலையில் பிறக்க வேண்டும் என அந்த இறைவன் தான் தீர்மானிக்கிறான் ! அந்தபடியே வந்து பிறக்கிறான் மனிதன் !
மனிதன் தன்னைப் பற்றி ஏதுமறியாமலே வளர்கிறான் ! வாழ்கிறான் ! காலம் போகிறது. காலன் வரநேரம் பார்க்கிறான். அப்போதைக்கப்போது நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன் என இறைவன் நம்முள் இருந்து வெளிப்பட்டு வெளிப்பட்டு தன்னை அறிய உணர மனிதனை தூண்டுகிறான் ! இதுதான் இறைவனின் பேரருட் செயல் !
இறைவன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் மனிதன் ஒருபோதும் இறைவனை அறியமாட்டான் !!
பூர்வஜென்ம புண்ணியம் இருந்து, இறைவன் அருளால் இறைவனை அறிய உணர முற்படுகிறான் மனிதர்களில் சிலரே !
பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம் என சரியை கிரியை யோகத்தில் அலைந்து திரிந்து புண்ணியம் இருந்தால் முடிவில் சற்குருவை அடைகிறான் !
ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான் !
மெய்ப்பொருளை சுட்டி உணர்த்துபவரே ஞானசற்குரு ! மெய்குரு !!
மெய்ப்பொருளை அறிந்தால் மட்டும் போதாது !
ஞான சற்குரு மூலம் ஞான தீட்சை பெறவேண்டும் !
ஞான தீட்சை பெற்றவனே ஆத்ம சாதகன் ! சித்தர்களும் ஞானிகளும் உரைத்த ஞானபாதையில் நடப்பவன் அவனே !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022
🔥ஞானநிலை🙏மோனநிலை 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 15
வாழ்க்கை வாழ்வதற்கே !
நாம் பிறந்தது சிறப்பாக வாழவே !
சாவதற்கல்ல !
நல்லபடியாக வாழ்வதற்கே !
நாடு போற்ற வாழ வேண்டும் !
உற்றார் பெற்றார் கற்றார் நாட்டார் போற்ற வாழ வேண்டும் !
அப்படிப்பட்ட வாழ்வே மரணத்தைப் போக்கும் !
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது முட்டாள்களின் வாதம் ! இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே ஆன்றோர் அறிவுரை ! ஆன்றோர் காட்டிய வழிதான் ஆண்டவனை காட்டும் !
பிறந்த நாம் எப்படி வாழ வேண்டும் என உபதேசித்தபடி வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, என்றும் வாழ ஞானிகள் அவர்கள் சுட்டிக் காட்டிய குருமார்க்கமாக சென்று மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்ய வேண்டும்.
உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்வு ! உண்டுவளந்தான் என்ற பெயரே மிஞ்சும் ! தூக்கம் தொலைத்தால் ஆயுள் விருத்தியாகும் !
"ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தூங்கி பழகுவானானால் அவன் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பான் ! என்று வள்ளலார் உரைத்துள்ளார்."
நாமெல்லாம் பல மணி நேரம் தூங்குகிறோம் ஏன் ?
நம் ஆகாரம், ஒழுக்கநிலை, உழைப்பு இவற்றையெல்லாம் பொறுத்து உடல் சோர்வடைகிறது. அப்போது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தூங்கிவிடுகிறோம். தூங்கி எழுந்ததும் உற்சாகம் வந்து விடுகிறதல்லவா ?
கடுமையான தூக்கம் வந்தால் கண்ணை கட்டுகிறது என சொல்வோமல்லவா ? ஏன் ?
உயிர் கண்ணில் உள்ளதால் அது தூக்கம் என்று நிலைகொள்ள வேண்டியிருப்பதால் அந்நிலை !
தூங்கும்போது நம் உயிர் ஒடுங்கி விடுகிறது ! உயிர் ஒடுங்கிவிட்டால் நாம் செயலிழந்து விடுகிறோம் !
பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்கச் செய்து விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர் ! இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானதல்ல என வள்ளலார் கூறுகிறார் !
உயிர்அறியாது ஒடுங்குவது தூக்கம் !
உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி !
சாதாரண மக்களுக்கு தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஓய்வு கிடைக்கிறது.
ஓய்வு என்றால் என்ன ?
சும்மா இருப்பது தானே ?!
சும்மா இருப்பதுதான் ஞானம் !
அறியாமல் சும்மா இருந்தால் ஓய்வு !
அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால் ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !
உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கிவிடாமல் உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை ! மோனநிலை !
"சமாதி பழக்கம் பழக்கமல்ல, சகஜ பழக்கமே பழக்கம்" என வள்ளலார் கூறுகிறார்.
சமாதியில் மூழ்குவது பெரிதல்ல, உயிர் அனுபவம் உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக எப்போதும் இருப்பதுவே சிறப்பு ! என்கிறார்.
சகஜ நிலையிலேயே எப்போதும் இருப்பதுவே மரணமிலா பெருவாழ்வுக்கு வழியாகும் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
வியாழன், 25 ஆகஸ்ட், 2022
🔥 ஆன்மீகவாதி🔥 சாகாக்கல்வி நூலிலிருந்து
🔥 ஆன்மீகவாதி🔥
உணவு உடலுக்கு இன்றியமையாதது. உயிர் வாழ உணவு நீர் காற்று அவசியமல்லவா ?
நீரை நன்றாக காய்ச்சியே குடிக்க வேண்டும் !
நாம் இருக்கும் வீட்டைச் சுற்றி அந்த பகுதிகளில் நிறைய மரங்களை நட்டு தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.
உணவு சுத்தசைவ உணவையே உட்கொள்ளவேண்டும் !
"கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்"
எவ்வுயிரையும் கொல்லாதவன் ! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதிருப்பவன் ! புலால் உணவு உண்ணாதவன் தான் மனிதன் ! அவனை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் கைகூப்பித் தொழும் !
எல்லா உயிரும் கும்பிட வேண்டாம் குறைசொல்லும் படி நாம் நடக்க வேண்டாமே !
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தம சீலரே உண்மையான நல்ல ஆன்மீகவாதி !
ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவராவார் !
உயிர் இறைவனல்லவா ?
எல்லா உயிரும் இறைவன் தானே ! அப்படியாயின் எவ்வுயிரும் வணக்கத்திற்க்குரியது தானே ! இந்த உண்மையை உணர்ந்தவனே ஞானி ! சித்தன் !
ஆத்திச்சூடியில் ஒளவையார் உரைத்த வாழ்க்கைநெறியை கடைபிடித்தால் நாமும் மனிதனாகலாம் !
"நெய் உருக்கி நீர் கருக்கி மோர் பெருக்கி உண்பவர் தம் பேர் உரைக்கில் போமே பிணி"
என தேரையர் சித்தர் கூறுகிறார் !
நெய்யை நன்றாக உருக்கியே உபயோகிக்கணும். தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்தே பருகணும். தயிர் சாப்பிடக்கூடாது. தயிரில் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் தண்ணீர் சேர்த்து மோர் ஆக்கி சாப்பிட சுகம் கிடைக்கும்.
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
🙏ஞான தீட்சை மறுபிறப்பு !🙏
சாகாக்கல்வி நூலிலிருந்து : 17
ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் வந்து விடுவான் !
ஞான தீட்சை கொடுத்து அந்த சீடனை ஆட்க்கொள்கிறார் ஞானி !
அப்படிப்பட்டவனே "துவிஜன்" ஆகிறான்! மறுபிறப்பாளன் ஆகிறான்.
ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுப்பதே மீண்டும் பிறக்கும் நிலை !
இப்படி பிறப்பவரே ஞானம் பெற முடியும் ! பிறந்தவன் செத்து மீண்டும் பிறப்பதல்ல "துவிஜன்". சீடன் !'
"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்திய மகரிஷி கூறுவதும் இதைத்தான் !
"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் " என இயேசுபெருமான் கூறியதும் இதைத்தான் !
இப்படி துவிஜன் ஆனவனே ஆகாமிய கர்மம் அற்றுப் போகிறான் ! ஆகாமியம் அவன் ஆசானையே சாரும் ! சீடன் ஆத்ம சாதகனாகி தவம் செய்து வருங்கால் அவனை வினை எந்த விதத்திலும் பாதிக்காமல் குரு பார்த்துக் கொள்வார் !
பிராரத்துவ கர்மத்தோடு பிறந்த மனிதன் துவிஜனானால் ஆகாமிய கர்மம் பாதிக்காது அவன் ஆசான் பார்த்துக் கொள்வார் !
சாதனை தொடர தொடர வினைகள் அனைத்தும் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்படி குரு செய்வார் !
மேலும் மேலும் புனிதம் பெறுவான் ! துவிஜன் பூரணத்தைநோக்கி பீடுநடை பயில்வான் !
பிராரத்துவமும் ஆகாமியமும் போனால் எஞ்சியிருக்கும் சஞ்சித கர்மும் வந்து தாக்கும் !
எது வந்தால் என்ன ?
எது போனால் என்ன ?
துவிஜன் சாதனை தொடருமானால் வினைமுழுவதும் அழிந்து போகும் ஆசானின் அருளாலே !
மாதா பிதாவினால் உடலெடுத்த மனிதன் குருவால் துவிஜனாகி முடிவில் ஞானம் பெற்று இறைவனை அடைகிறான் !
ஸ்தூல உடலோடு பிறப்பவன் தன்னுள் சூட்சும சரீரம் இருப்பதை குருவால் உணர்ந்து அடைகிறான் ! காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமிலா பெருவாழ்வு பெற்றவனாகிறான் !
இந்த ஒரு பிறப்பில் மீண்டும் பிறப்பவனே முக்தன் சித்தன் ஞானியாவான் !
எத்தனையோ பிறவிக்குபின் பெற்ற இந்த அருமையான மானுட பிறப்பை உதாசீனபடுத்துபவன் இன்னும் எத்தனையோ பிறவி எடுக்க நேரிடலாம் !?
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
🔥 சாவாநிலை !🔥 - சாகாக்கல்வி நூலிலிருந்து
🔥 சாவாநிலை !🔥
செத்தால் தானே உயிர் மீண்டும் பிறக்கும் ?
சாவை தவிர்த்தால் இனி பிறப்பையும் தவிர்க்கலாமே !
சாவு ஏன் வருகிறது ? அது தெரிந்தால் தடுக்கலாமே !
சாவு கட்டாயமல்ல ! வாழத் தெரியவில்லை சாகிறான் !
எப்படி வாழ்வது ?
நமது ஞானிகள், காலையில் எழுந்திருப்பது தொடங்கி இரவு தூங்கப் போவது வரை அன்றாடம் நாம் செய்ய வேண்டிய நித்திய கரும விதிகளை சொல்லி வழிகாட்டியுள்ளனர்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
ஒரு மனிதனுக்கு மேன்மை தருவது நல்லொழுக்கமே ! நாம் நம் உயிரை விடவும் மேலாக ஒழுக்கத்தை கருதி கடைபிடிக்க வேண்டும் !
திருவள்ளுவர், கூறுவது யாதெனின், ஒருவன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை கடைபிடிப்பானாகில் அந்த உயிரை - இறைவனை உணரும் அடையும் நற்பேறு பெறுவான் ! எல்லாவற்றிலும் ஒழுக்கமே சிறந்தது !
இந்த ஒழுக்கம்
உடல் ஒழுக்கம், உயிர் ஒழுக்கம் என இருவகைப்படும் !
உடலும் உயிரும் சம்பந்தப்பட்டதல்லவா ? உடலும் உயிரும் என்றைக்கும் சம்பந்தப்பட்டே இருக்க ஒழுக்கம் அவசியமாகிறது !
உயிர் ஒழுக்கத்தை வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என விரிவாக தெளிவாக உபதேசித்துள்ளார்கள் ! எல்லாமே அதில் அடங்கிவிட்டது !
உடல் ஒழுக்கம் அதில் கூறப்பட்டுவிட்டது. நல் ஒழுக்கம் எது என்பதை விட, தீய ஒழுக்கம் எல்லாவற்றையும் தவிர் என்றால் சுலபமல்லவா ?
உடலைக் கெடுக்கும், உடலிலிருந்து உயிரை விரைந்து வெளியேற்ற துணைபுரியும் பஞ்சமா பாதகங்கள் செய்யாதே !
பொய், கொலை, களவு, கள், காமம் என்ற இந்த ஐந்தும் நம் வாழ்வில் வராது கவனமாக மிக மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் !
அறிவை மயக்குபவை, கெடுப்பவை, உடலை கெடுப்பவை, மனதை மயக்குபவை எதுவாயினும் தொடாதே - நெருங்காதே ! மனதாலும் எண்ணாதே ! இவை கொண்ட தீயவர்களோடும் சேராதே !
"துஷ்டனை கண்டால் தூர விலகு !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022
ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள்
சாகாக்கல்வி நூலிலிருந்து : 19
🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥
“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே" என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் !
ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் !
நன்றாக கவனியுங்கள்,,,
நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !
குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் !
இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ?
வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ?
ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !
இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் !
இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே !
இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !
ஞானம் என்றால் தன்னை அறிவது !
நான் யார் ? என உணர்வது !
ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் !
பக்தியில் லாமல் ஞானமில்லை !
சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ?
பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் !
அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
திங்கள், 15 ஆகஸ்ட், 2022
🔥 துவிஜன் / மறுபிறப்பாளன் 🔥
சாகாக்கல்வி நூலிலிருந்து : 17
ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் வந்து விடுவான் !
ஞான தீட்சை கொடுத்து அந்த சீடனை ஆட்க்கொள்கிறார் ஞானி !
அப்படிப்பட்டவனே "துவிஜன்" ஆகிறான்! மறுபிறப்பாளன் ஆகிறான்.
ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுப்பதே மீண்டும் பிறக்கும் நிலை !
🙏குரு தீட்சையே மறுபிறப்பு !🙏
இப்படி பிறப்பவரே ஞானம் பெற முடியும் ! பிறந்தவன் செத்து மீண்டும் பிறப்பதல்ல "துவிஜன்". சீடன் !'
"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்திய மகரிஷி கூறுவதும் இதைத்தான் !
"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் " என இயேசுபெருமான் கூறியதும் இதைத்தான் !
இப்படி துவிஜன் ஆனவனே ஆகாமிய கர்மம் அற்றுப் போகிறான் ! ஆகாமியம் அவன் ஆசானையே சாரும் ! சீடன் ஆத்ம சாதகனாகி தவம் செய்து வருங்கால் அவனை வினை எந்த விதத்திலும் பாதிக்காமல் குரு பார்த்துக் கொள்வார் !
பிராரத்துவ கர்மத்தோடு பிறந்த மனிதன் துவிஜனானால் ஆகாமிய கர்மம் பாதிக்காது அவன் ஆசான் பார்த்துக் கொள்வார் !
சாதனை தொடர தொடர வினைகள் அனைத்தும் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்படி குரு செய்வார் !
மேலும் மேலும் புனிதம் பெறுவான் ! துவிஜன் பூரணத்தைநோக்கி பீடுநடை பயில்வான் !
பிராரத்துவமும் ஆகாமியமும் போனால் எஞ்சியிருக்கும் சஞ்சித கர்மும் வந்து தாக்கும் !
எது வந்தால் என்ன ?
எது போனால் என்ன ?
துவிஜன் சாதனை தொடருமானால் வினைமுழுவதும் அழிந்து போகும் ஆசானின் அருளாலே !
மாதா பிதாவினால் உடலெடுத்த மனிதன் குருவால் துவிஜனாகி முடிவில் ஞானம் பெற்று இறைவனை அடைகிறான் !
ஸ்தூல உடலோடு பிறப்பவன் தன்னுள் சூட்சும சரீரம் இருப்பதை குருவால் உணர்ந்து அடைகிறான் ! காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமிலா பெருவாழ்வு பெற்றவனாகிறான் !
இந்த ஒரு பிறப்பில் மீண்டும் பிறப்பவனே முக்தன் சித்தன் ஞானியாவான் !
எத்தனையோ பிறவிக்குபின் பெற்ற இந்த அருமையான மானுட பிறப்பை உதாசீனபடுத்துபவன் இன்னும் எத்தனையோ பிறவி எடுக்க நேரிடலாம் !?
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா சாதனை
தங்கஜோதி ஞான சபையின் ஸ்தாபகர் ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் புரிந்த முதல் ஆன்மீக புரட்சி 1992-ல் ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி ' கண்மணி மாலை' எனும் மெய்ஞ்ஞான நூலை வெளியிட்டது.
இரண்டாவது ஆன்மீகபுரட்சி தொடர்ந்து 40 மெய்ஞ்ஞான நுற்களை வெளியிட்டது தான்! இதுவரை உலகில் வேறு எவரும் செய்திராத இமாலய சாதனை!
மூன்றாவது ஆன்மீக புரட்சி ஆபத்பாந்தவன் அனுமன் ஜெயந்தியன்று 1-1-2014ல் உலகுக்கு ஞான தீட்சை வழங்கிட 9 அருளாளர்களை ஞான சற்குருவாக்கியது தான் !
உலககுரு வள்ளலார் கருணை பரிபூரணமாய் கிட்டியது!
செவ்வாய், 26 ஜூலை, 2022
மும்மலம் நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்து உருக
"கல்லை உந்திவான் நதி கடப்பவர்......" பாடல்-8
கல்லை தெப்பமாக கொண்டு கரைசேர முடியாதல்லவா?
உலகத்தில் முடியாததெல்லாம் அருளாளர்கள் வாழ்வில் இறையருளால் நடந்துள்ளது!
திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் ஆழ்த்தினான் கொடியவன் ஒருவன். நமச்சிவாயமாகிய கண்மணி ஒளியைபற்றி கல்லை மிதக்கச் செய்து தெப்பமாக்கி கரைசேர்ந்தார். இது சரித்திரம்! நடந்த உண்மை?!
இறைவன் திருவடியை சரணடைந்தால் எதுவும் நடக்கும்!
"எல்லாம் செயல்கூடும்" என வள்ளல் பெருமான் என கூறுகிறார்?
இங்கே வள்ளல்பெருமான் கூறுவது தியான அனுபவம் கல் என கூறியது மனதை
"நெஞ்சக்கன கல்லும்" அருணகிரிநாதரும் கூறுகிறார்.
நமது நெஞ்சம் அஞ்சு பூதமும் ஒருமித்த இடம்!
ஐம்பொறிகளும் கூடும் இடம்! அஞ்சும் இணைந்த இடமே நெஞ்சு!
அது நமது கண் அல்லவா?! நமது நெஞ்சமாகிய கண்ணில் கல்போல இருப்பது நம் வினையாகிய திரை!
மும்மலம் நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்து உருக கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கல்போன்ற கரைய ஆரம்பித்து விடும்!
அந்நிலை வரவேண்டும். வளர வேண்டும். அந்த கல்லான மனம் இருக்கும் கண்மணியை உந்தி உந்தி உள்முகமாக வான் - பரவெளி நதியாகிய ஒளிவெள்ளம் கடந்து போக வேண்டும். இதுதான் சாதனை! தவம்! தவம் செய்ய குருவை நாடு!
திருவருட்பா மாலை பக்கம் -24
குருவின் திருவடி சரணம்
சனி, 9 ஜூலை, 2022
இல்லறமல்லது நல்லறமன்று
சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!
தொடாமல் தொடுவது! உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது! தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!
தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை பெருஞ் ஜோதியை எண்ணி எண்ணி அதிலேயே லயித்திருப்பவனே அதை சார்ந்திருப்பவனே பிராமணன்!
பிரம்மச்சாரி என்பவனும் இவனே! கல்யாணம் செய்யாமல் இருப்பவன் பிரம்மச்சாரி இல்லை!
"இல்லறமல்லது நல்லறமன்று
திருமண வாழ்க்கை வேண்டாம் என்று, விரும்பி துறவற
வாழ்க்கை மேற்கொண்ட ஒளவையார் சொல்வதுதான்!
"இல்லறமல்லது நல்லறமன்று"
ஒளவையார் கூறிய இல்லறம் எது தெரியுமா? இல் என்றால் இல்லம். நமது இல்லம் நமது உடல்தானே!
நமது இல் ஆகிய உடலில் குடிகொண்டிருக்கும் இறைவனோடு - உடலில் கண்மணியில் ஒளியில் நல்ல நெறியோடு அறத்துடன் வாழ்வதுதான் நல்லறம்!
ஆத்மாக்கள் அனைவரும் பெண். பரமாத்மா மட்டுமே புருஷன். ஆத்மாக்களாகிய நாம் புருஷோத்தமனான பரமாத்மாவோடு கூடுவதே இல்அறம் என சிறந்த இல்லறம் என ஞானிகள் கூறுகின்றனர்.
ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்தம் உரைக்கிறது.
கண்மணி ஒளியாக! கண் ஜீவன் இருக்குமிடம் ஒளியை பெருக்கி நாம் பக்குவமாகிய பின்னரே;
எல்லாமே ஞானந்தான்!
நம் நாட்டில் சொல்வது அனைத்தும் ஞானமே! அதனால் தான் இது ஞான பூமி என்கிறோம்!
பெண் ஆகிய ஆன்மா ஆகிய நாம் பக்குவம் பெறுவதே கண் திறப்பதே தீட்சையின் பலன்!
சூட்சும சரீரமே ஆன்மசரீரம்; ஆன்ம சரீரம் பிறப்பது தீட்சையினால்தான்!
முதலில் பிறக்கணும்! பின்னர் பக்குவமாகணும்! பின்னரே கல்யாணம்!
நூல் : சநாதன தர்மம்
குருவே சரணம்🙏🙏🙏
திங்கள், 27 ஜூன், 2022
அகஸ்தியர் கூறும் ஞானதவம்
🔥 அகஸ்தியர் கூறும் ஞானதவம் 🔥
"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி”
- அகஸ்தியர் மெய்ஞ்ஞான சூத்திரம்
வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் !
கண்ணில் நின்ற ஒளிபாரு ! இதுவே ஞானதவம் !
கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு !
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண்இரண்டும்
இதை விண்ணில் நின்று, எல்லாமே வெட்டவெளிதான் என உணர்ந்து
🙏உன் ஞானசற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டுசெய் !🙏
"குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"
- ஒளவைக்குறள் !
குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார் ?!
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல்
குருவைப் பணி !
குரு பார்க்க கோடிவினை தீரும் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
புதன், 22 ஜூன், 2022
பெரியாழ்வார் ஞானத்தில் கண்ணன்
பாடல் - 202
ஸ்ரீ பெரியாழ்வார்
______________


. பக்தியில்.......,

கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடுசென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை வெளியே விடாதே! வீட்டுக்கு உள்ளே கூப்பிடு! வீட்டிலேயே இருத்திவிடு என்கிறார்களாம்!


ஞானத்தில்.......


கண்ணன் புறத்தே போனான் என்றால் நம் மனம் போனது
எனப்பொருள்!
"மனம் போன போக்கில் போனால் என்னாகும்? துன்பமே மிச்சம்!"
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்திவிட்டால்! _"நம் மனதை கண் மணி ஒளியிலேயே இருத்திவிட்டால் பேரின்பமே!"
அதனால் கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை உள்ளே திரும்பினால் ஒளி கண்ஒளி பெருகும்!
நூல்: பரம பதம்
பக்கம்: 44
www.vallalyaar.com
செவ்வாய், 21 ஜூன், 2022
ஞானி என யாரை சொல்லலாம் ?
#ஞானி_யார் ?
ஞானி என யாரை சொல்லலாம் என்றால் ?
இறைவன் நம்முள்ளும் காரியப்படுகிறான் என்றும், எப்படியிருக்கிறான் என்றும் கூறி, அவனை , தான் அடைந்த அனுபவம் கூறி, இந்த இறைவன் தன்னை இப்படியெல்லாம் ஆட்க்கொண்டான் என்றும் கூறி, பாடி அருள்பவரே !
தன்னுள் இருக்கும் இறைவனை காணமுடியாதவன் ஞானம் பெற
முடியாது ?! *ஞானம் என்பது பரிபூரண அறிவு! ஞானம் என்பது தன்னை - தான் யார் என்று அறிவதே உணர்வதே யாகும் !*
தன்னை அறியாதவன் தலைவனை அறியமாட்டான்!
*கண்ணே சரீரத்தின் விளக்கு*
- #பைபிள்_வாசகம்
"கண்ணில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்"
- #உபநிஷத_வாசகம்
*காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்*
- #அப்பர்_வாசகம்
*கண்ணகத்தே நின்று களிதரும் தேனே*
- #திருவாசகம்
"கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு"
- #திருவருட்பா
இப்படி எல்லா ஞானிகளும் "கண்ணில் மணியில் ஒளியானவன் கடவுள்" என்றே கூறியிருக்கின்றனர்!
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- #ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#வள்ளலார் #திருவடிகள் போற்றி!
#Vallalar #meditation
www.vallalyaar.com
திங்கள், 20 ஜூன், 2022
🔥திருவடி எது? 🔥
🔥 திருவடி எது? 🔥
"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"
திருமந்திரம் - 138
இறைவனின் திருவடியே நமது கண்கள் ! சற்குரு உபதேசம் பெற்று
தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே
சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் !
தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !
திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ? எப்படிபோகும் ?
நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து ! திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் ! சேர்ந்து சிவ நடனம் காணலாம் !
கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே
நம் உள்ளம் தெளிவாகும் !
அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் !
அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
எல்லாம் பெற தேவை திருவடி !
நாம் நாட வேண்டியது திருவடி !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
First Book of Guru
கண்மணி ஒளி - ஞானதவமே உயர்ந்த ஞான நிலை
"ஒண்போதலர் கமலச் சிறுக்கால் உறைத்தொன்றும் நோவாமே
தண்போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ!"
பாடல்-94
குட்டிக்கண்ணன் இளமையான கண்மணி, தனது குஞ்சுப்பாதங்களால் நடக்கையில் - தளர்நடை கால்நோவுமா?
நமது கண்மணியை நினைந்து ஞான தவம் இயற்றுகையில் வலிக்காது!
இதைத்தான் நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளும்,
"நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவர்" எனப் பாடியுள்ளார். கண்மணி ஒளியை எண்ணி ஞானதவம் செய்வதே மேலானது. நோவாது நோன்பு நோற்பதாம்!
மற்றெல்லா யோகங்களும் தவங்களும் உடலை வருத்தி பலவிதமாக கஷ்டப்பட்டு செய்யும் பயிற்சிகளாகும், சித்தர்களும் ஞானிகளும் சைவ ஆச்சார்யர்களும் வைணவ ஆச்சார்யர்களும் சொன்ன இந்த கண்மணி ஒளியை எண்ணி செய்யும் ஞானதவமே உயர்ந்த ஞான நிலை பெற வழிவகுக்கும்,
துன்பமிலாது பேரின்பம் பெறும் ஒப்பற்ற ஞான மார்க்க மாகும்!
பரமபதம்
பக்கம்-38
குருவின் திருவடி சரணம்
வெள்ளி, 17 ஜூன், 2022
நாம் பிறந்த இடம் எது ? கீழான இடத்தை நினைக்காதீர்கள்.
🔥 கண்மணிமாலை 🔥
"சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்திடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்"
- பட்டினத்தார்
ஆன்மாக்களே,
இந்நூலை நீங்கள் சரியாக படித்து உணர்ந்திருப்பீர்களானால் இந்தப் பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள் ! அதை விடுத்து இந்தப்பாடலை ஆபாசமாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள்.
சிந்தித்துப் பாருங்கள்.
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க -
சிற்றம்பலமாகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க,
வெற்றம்பலந்தேடி விட்டோமே -
ஒன்றுமில்லாத வெருமையான வெளியிடங்களை தேடிவிட்டோமே ;
நித்தம் பிறந்திடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம் -
நம் பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடத்தை தேடுகிறது.
நாம் பிறந்த இடம் எது ?
நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா ? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம் ! நமது பேதை மனது தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக் கூறுகிறார் !
கீழான இடத்தை நினைக்காதீர்கள்.
கறந்திடத்தை நாடுதே கண் -
நமது கண்கள் சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவா ? இந்த இரு ஒளிக்கலைகளும், அகமுகமாக அக்னி கலையோடு கூடும்போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணலாம் ! நாதத்தொனி கேட்கலாம் !
பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நமது கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார். எவ்வளவு உயர்ந்த ஞானம் !
தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர்கள். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியையே கூறுகின்றனர்.
எனவே,,,
"மெய்ப்பொருளை" உணருங்கள் !
"திருவடியை" சரணடையுங்கள் !
"கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் !
மரணமிலா பெருவாழ்வு வாழலாம் !
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !"
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
புதன், 18 மே, 2022
சனி, 14 மே, 2022
அகவினத்தார் - புறவினத்தார்
சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான்!!
உலக விவகாரங்களிலே மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஒட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார்!
அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்திய ஞான சபை!
அங்கே பார் தங்கஜோதியை! "சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா?
சாப்பாட்டு ராமன்கள் தர்மச்சாலையிலே சாப்பிட்டு விட்டு அப்படியே போய்விடுங்கள்! ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்திய ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள்! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள்!!
ஜோதி பாத்தாச்சு, சோறு போட்டாச்சு, அருட்பா படிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல!?
சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே ஏழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார்! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி!!
சுத்த சன்மார்க்கி! வள்ளலாரைப் போல் வேடம் போடாதே! வள்ளலார் சொன்னதை செய்! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும்!
இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன! அவர்கள் அதை செய்யட்டும்! உன்னால் முடிந்தால் உதவிசெய்!
வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய்! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான்!! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும்!
நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும்!
நூல் - ஞானம் பெற விழி!
www.vallalyaar.com
வெள்ளி, 13 மே, 2022
ஓசூர் 2013 மெய்ஞான உபதேசங்கள்
ஓசூர் 2013 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
மெய்ஞான உபதேசங்கள்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
புதன், 4 மே, 2022
தட்சிணாமூர்த்தி - முயலகன்
புலன்களை 'தன்னில்' நிறுத்தினால் நாய் மாதிரி வெளியே திரியாது! தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் தன்னில் மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்! இறைவன் திருவடியில் நம் மனதை போட்டால் மட்டுமே மனம் அடங்கும்!
சனி, 30 ஏப்ரல், 2022
சனி, 22 ஜனவரி, 2022
🔥 வள்ளலாரின் ஞானோபதேசம்🔥
கண்மணிமாலை நூலிலிருந்து : 117
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் உள்ளது திருவருட்பா. ஆறாம் திருமறையில் 63-ஆவது பதிகம் "ஞானோபதேசம்" எனும் பகுதியிலுள்ள 10 பாடல்கள். ஒவ்வொரு ஆத்ம சாதகனும் ஆராய்ந்து அறிய வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று இதுவாகும்.
கண்ணே கண்மணியே எனத்தொடங்கி எனக்கு உண்மை உரைத்தருளே என முடிக்கிறார் வள்ளலார்.
" கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
தொண்டே திரு அம்பலந் தனக் காக்கிச் சுக அமுதம்
உண்டேன் உயிர் தழைத் தோங்குகின்றேன் உள் உவப்புறவே"
- திருவருட்பா 4687
" கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என்பற்றெனப் பற்றினனே"
- திருவருட்பா 4745
“ ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட் பெருஞ்சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ்ஜோதி அது"
- திருவருட்பா 4823
" அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே
ஆனந்தத் தெள்ளமு துண்டேனே
இருட்பெரு மாயையை விண்டேனே
எல்லாம் செய் சித்தியை கொண்டேனே "
- திருவருட்பா 5116
"கையற விலாது நடுக்கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு
ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு"
- திருவருட்பா 5258
"பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்த்தே இறைவன் எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானோம்
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே"
- திருவருட்பா 5486
" கண்ணிற் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து"
- திருவருட்பா 5487
" ஒளி ஒன்றே அண்டபகிரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்றது "
- திருவருட்பா 5697
"கற்பூரம் மணக்கின்றது என் உடம்புமுழுதும்
கணவர் திருமேனியில் கலந்த மணம் அதுதான்"
- திருவருட்பா 5723
"எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப் பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன்"
- திருவருட்பா 5803
மெய்ப் பொருளாம் - சிவம் - ஒளி - ஒன்றே உலகெங்கும் உள்ளது என உணர்ந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியை கண்களில் கண்டார்.
அங்கே கற்றதே சிற்றம்பலக் கல்வி - சாகாக் கல்வி என்றார். அதனால் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் பெற்றார். தன் ஊன உடலே ஒளி உடலாக ஓங்கப் பெற்றார்.
அந்நிலையில் அவர் மேனியிலே கற்பூரவாசம் வீசியது. இது இறைவன் அவரோடு கலந்து வெளிப்பட்டு நின்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறது.
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
ஞாயிறு, 2 ஜனவரி, 2022
🔥 திருஅருட்பா ஓர் ஆன்மிக புரட்சியே 🔥
திருவருட்பா பாத்திரத்தில் சிறந்தது என்பது அடியேன் கருத்து. 'பா' திறத்தில் மிகமிகச் சிறந்தது இது. சுமார் 6000 பாடல்களைப் பாடிய வள்ளலார் எந்தப் புலவரிடமும் பயிலாதவர், அருட்கவி. கற்க வேண்டியவைகளை இறைவனிடமே கற்றார்.
எல்லாவித இலக்கண நெறிக்கு உட்பட்டதும் - மிக மிக உயர்ந்த நடையை உடையதுமாகும். இலக்கணம் படித்தவர் இதனை கண்டு வியப்பர் ! சாதாரண மனிதன் இப்படி எழுத முடியுமா ?
திருவருட்பா எல்லா ஞானிகளின் கருத்துச் சாறு என்றால் திருவருட்பாவின் ஞானரசம் வள்ளலாரால் அருட்பெருஞ் ஜோதி அகவலில் திரட்டப்பட்டுள்ளது ! இதனை படித்து வியக்காத பண்டிதனே கிடையாது ! இனி சொல்வதற்கு வேறொன்றுமேயில்லை எல்லாம் இந்த அருட்பெருஞ் ஜோதி அகவல் ஒன்றிலேயே உள்ளது.
இப்படி 'பா' வாகிய பாடல்களின் திறத்தில் மிகமிக உயர்ந்தது திருவருட்பா என்றால் அது மிகையாகாது. அடுத்து திருவருட்பா "பாத்திரத்தில் சிறந்ததாகும்."
அதாவது - பாத்திரம்-இறைவன் நம் உடலில் காரியப்பட்டுள்ள சற்பாத்திரத்தின் திறனை நயம்பட உரைத்தப்பாங்கு, பாத்திரத்தின் இடம், தன்மை, செயல்படும் விதம், முடிவு எல்லாம் விளங்கக் கூறுவதால்
- இது பாத்திரத்தின் சிறப்பை விளங்க வைப்பதால் பாத்திரத்திலும் சிறந்தது என்றாகிறது.
இப்படி 'பா' திறத்தாலும், பாத்திரத்தை உணர்த்தும் பான்மையாலும் மிகச் சிறந்தது திருவருட்பா என்றால் அது யாராலும் மறுக்க முடியாததாகும். எனவே பாத்திரத்தில் சிறந்தது திருவருட்பாவேயாகும்.
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்!
இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்!!
ஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர!! இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.! ஆஞ்சநேயர்!!
சிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.!
இன்றும் வாழ்கிறார்! கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.!
பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்!
பரமபதம் போக வழி காட்டுவார்!!
கண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான்!
கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான்!
காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.
ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா!
நூல்:பரமபதம். பக்கம்:91.
www.vallalyaar.com
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.

