வியாழன், 25 ஜூன், 2015

அந்தணர் - பார்ப்பார் யார்?


பாரப்பா பலவேத நூலும் பாரு -  அகத்தியர்.

இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம் செய்பவரே அந்தணர் ஆவார்!  

அந்தணர் என்போர் அறவோர் - திருவள்ளுவரும் கூறுகிறார்!.

குடுமி வைத்து கொண்டு பூணூல் போட்டவன் அந்தணன் அல்ல!

வேதம் ஓதி உணர்ந்த அந்தணர் 'பார்ப்பார்' எதை? தன் கண்மணி ஒளியை! தூய வெள்ளொளியை! பால் போன்ற தண்ணொளியை! தவம் செய்து பார்ப்பார்! காண்பர்!

தன் உயிராக அந்த பரமனே இருப்பதை தன் உடலிலுள்ளே பார்ப்பார்! அதனால்தான், தன்னையே பார்ப்பவரைத் தான் பார்ப்பவர்! பார்ப்பனர்கள் என அழைத்தனர்! அந்தணரின் மற்றொரு பெயரே பார்ப்பார் நம்முள்ளே !

பரமாகிய பகவான் நம் உயிராகி ஒன்றானவனாக துலங்கி, அவரே நம் கண் இரு கண் மணி ஒளியாகவும் இரண்டாகவும் துலங்குகிறார்! ஒன்றான ஜீவன் இரண்டாக இரு கண் சூரிய சந்திர ஒளியுடன் சேர , மூன்றும் சேர்ந்தாலே அதுவே ஓங்காரம் ஆகும் ! 

அ உ ம் என்ற முச்சுடரும் தான் ஒன்றான ஓங்காரம்! வேதம் ஓதி , தவ உணர்வால் நாமும் அந்தணர் ஆகலாம்!

பார்ப்பார் -பார்! - பார்! என்ற குரு உபதேசத்தை கேட்டு தன்னையே கண்மணி ஒளி வழி உற்று பார்ப்பவரே , பார்த்துகொண்டு இருப்பவரே பார்ப்பார்!?
உள் ஒளியை  சதா காலமும் பார்ப்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார்!

பூவிலே கண்மலரிலே உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து, தவத்தால் ஒளிக்கலைகளை இணைப்பவரே அந்தணர்! பார்ப்பார்!
கண் உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து பூன வேண்டும்!

இதுவே பூணூல் சூரிய சந்திர அக்னி ஒளிக்கலைகளை இணைத்து ஒன்றாக வேண்டும் இதுவே குடுமி! புறத்தில் வேஷம் போடுபவர் வேடர்! அகத்திலே கொண்டவரே அந்தணர். புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தான்
உயர்ந்த ஜாதி என்கின்றனர் மூடர்கள்! பூ நூலை  தரித்து முச்சுடரை சேர்த்து ஒளியோடு இருப்பவரே  உண்மையான அந்தணர்! பார்ப்பார்!


சனி, 20 ஜூன், 2015

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்!

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல் வினை
மால் வைத்த சிந்தையை மாயமதமாக்கிவிடும்

குரு தீட்சை பெற்று திருவடி மேல் - கண்மணி ஒளி மேல் மனதை
வைத்து உணர்வை பெருக்கி தவம் செய்ய வேண்டும்! இங்ஙனம்
செய்யா விடில், வேறு எந்த சாதனை செய்தாலும் மேல் வினை?!
கண்மணி ஊசி முனை துவாரத்தின் மேல் உள்ள வினைத்திரை -
மும்மல வினை திரை மேல்வினை தான் வேலை செய்யும்! அது
மால்- மாயை - கிருஷ்ணன் -விஷ்ணுவால் சூழப்பட்டு மனம் செயல்பட்டு
மாயையின் வசம் சேர்ந்து விடுவோம்!

கண்மணிமேல் உள்ள வினைதிரையால் மனம் செயல்பட்டு மாயையால் மதியிழந்து விடுவர்! வாழ்க்கை சக்கரத்தில் சிக்கிகொள்வர் !

மனிதா முதலில் குருமேல் அன்புவை! குருவை பணி !  திருவடி தீட்சை பெறு !
பக்தியோடு வைராக்கியதோடு இருந்து தவம் செய்! வாலை தாய் அருள் பெற்று  மாயை மயக்கம் நீங்கி திருவடி ஞானம் பெறலாம்! நீ உன் குருமேல் வைக்கும் பக்தி மேல் வினையை நீக்கும்! குருமேல் பக்தி உள்ளவனே உண்மையான சீடன்!

வாலை தாயை பக்தியுடன் பணிபவனே மாயை அகலப்பெறுவான்!  மேல் வை - எப்போதும் உன் சிந்தனை மேலே உள்ள கண்ணை பற்றிய ஒளியின் மீதே இருக்கணும்! உன்மனம் கழுத்துக்கு கீழே போகாமல் பார்த்துகொள்! நாம் ஞானம்  பெறும் இடம் தலையே! தலையில்தானே ஞானேந்திரயங்கள் ஐந்தும் உள்ளன!

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்! மேலேயே இரு! உன் சிந்தனை மேலான பொருளை பற்றியே இருக்க வேண்டும்! உன் சிந்தனை மேலே , மேலே போனால் தான் மேலே இருக்கும் மேலானவனை - பரமாத்மனை அடைய முடியும்! உன் சிந்தனை கீழே
இருந்தால் , கீழ் தரமாக இருந்தால் நீ போவது மண்ணுக்கு கீழே தான்! இறைவன் திருவடி மேலே தான்! நம் கண்தான்! கீழேயல்ல!

ஞாயிறு, 14 ஜூன், 2015

எப்போது ஆத்மா நமக்கு குரு??


சன்மார்க்க நெறி நின்று மனதை இரு கண்மணி ஒளியில் நிறுத்தி தவம் செய்து
வந்தோமானால்! குரு உபதேசம் தீட்சை மூலம் தெளிந்த சீடன் தொடர்ந்து தவம் செய்ய செய்ய இரு கண்ணும் உள் சேரும் அக்னிஸ்தானமே நம் ஆத்மஸ்தானமே இறை சொருபம் தான் என்பதை கண்டு கொள்ளலாம்! பின் நான் ஆகிய சிவமே ஒளியே நமக்கு குரு ஆகிவிடும்!

நம் உள் ஒளியே ஆத்மாவே நமக்கு குருவாம்! ஒவ்வொருவரும் தத்தம் தனது ஜீவனையே குருவாக அடைய வேண்டும்! அவனே ஞானி! தத்தம் குருவாக விளங்கும் அவன் யார்?

சாட்சாத் இறைவன் தானே! அந்த சிவம் தானே குரு! சித்தத்தை சிவனிடம் வைத்து சும்மா இரு!

இதுவே இறைவனை சேரும் வழி !

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com

முப்புரம் ஆவது மும்மல காரியம்


அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறி வாரே! - திருமூலர்





அப்புவை அணிந்த சிவந்த சடைகளையுடைய ஆதி முதல்வன்
சிவம் ஒளி! நமது கண்களில் நீர் உள்ளது தவம் செய்வதால் சிவந்த ஒளிக்கலைகளை உடையது அந்த ஆதியே மணியின் ஒளி! சிவபெருமான் திரிபுரந்தகர்களை அழிக்க அவர்கள் கோட்டைகளை முப்புரங்களை புன்னகையால் எரித்து அழித்தார் என புராண கதை கூறுவார்! இங்ஙனம் கதை அளக்கும் சைவர்கள் மூடர்கள் முட்டாள்கள்  என திருமூலர் கூறுகிறார்! 

ஞானம் அறியாதவர்களை இதுவரை அடியேன் மூடர்கள்
என்று கூறுவது சரிதானே! கதை பேசி காலத்தை ஓட்டுபவர்கள் முட்டாள்களே! அதை கேட்டும்  பாமரன் ஒருநாளும் கடை தேற முடியாது!

"முப்புரம் ஆவது மும்மல காரியம்"  திருமூலரே கூறுகிறார் முப்புரம் என்பது நமது ஆத்மாவை மறைத்து நமது கண்ணை மறைத்திருக்கும் மெல்லிய - ஜவ்வே - திரையே மும்மலங்களால் ஆன சூட்சும சக்தியாகும்! இந்த திரை தான் சிவன் புன்னகைக்க எரிந்து விடும்! 

அதாவது புன்னகை - உதடுகள் லேசாக பிரிவது!நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியே சிவம்! நம் தவத்தால் ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்திருக்கும் ஜவ்வு லேசாக விலகும். விலக உள் ஒளி பிரவாகித்து வினை திரை யை எரித்து விடும்! எவ்வளவு பெரிய ஞான அனுபவத்தை திருமூலர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்! அதன் விளக்கத்தை அடியேனை வைத்து எவ்வளவு தெளிவாக எளிதாக ஞான விளக்கம் கொடுத்திருக்கிறார் அப்பெருமான்! இதுவே மெய்ஞானம் !

கதை பேசி காலத்தை ஓட்டாதீர் சைவர்களே! சைபர்கலே! உண்மை ஞானம் உணர்க! சாதி சமய வேறுபாடுகளை களைந்து ஒரே நெறியில் உயர் நெறியாம் சன்மார்க்க நிலை நின்று சாயுச்சயம் பெற வாரீர்! 

சிவன் புன்னைகைக்க மும்மலம் கழிய பிறகென்ன ஆத்ம ஞானம் கிட்டும் அதுவே பேரின்பம்! நீ முட்டாள் என கூறுவது உன்னை திட்டுவது அல்ல ! உண்மை அறியாமல் இருக்கிறாயே! உன் மெய்யில் அறியாமல் இருக்கிறாயே ! சிவம் இருப்பது உள்ளிலே! 

அறி என அறிவுருத்தவே சிந்தி நன்றாக சிந்தி! கண்ணீர் சிந்தி தவம் செய்தாலே சந்திப்பாய் சிவத்தை! சிவத்தை நீ சந்திக்கா விடில் நீ சவம்! ஏ மனிதா சீவனை சிவமாக்கு  இல்லையேல் சவந்தான்! தப்ப முடியாது!

படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

கல்லாத மூடருக்கு கல்லாதார் நல்லார் - திருமூலர் 

ஞான உபதேசம்  திருவடி உபதேசம் கேட்காதவன் அவனே மூடன்!

ஞான உபதேசம் திருவடி உபதேசம் கேட்ட பின்னரே ஒருவனின் துலங்க  அறிவு ஆரம்பிக்கும்!

அதனால் தான் கல்லாத மூடன் என உபதேசம் பெறாதவனை திருமூலர் கூறினார்!?

கல்லாதவர் - படிப்பறிவே  இல்லாதவன் - பாமரன் - படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

இன்றைய நடை முறையை திருமூலர் அன்றே தெளிவாக கூறி விட்டார்!  இன்றைக்கு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற, மேதைகள் என தன்னை தானே கூறிக்கொள்ளும் படித்த முட்டாள்கள்  ஞானம் கிலோ
என்ன விலை என கேட்கும் ஆசாமிகள் தான்! கற்றது கைமண்ணளவு 
கல்லாதது உலக அளவு என்ற ஆப்த வாக்கியம் படிக்காத முட்டாள்களே!

படித்திருந்தால் நல்ல சற்குருவை நாடி ஓடியிருப்பார்களே! கெளரவம் - ஆணவம் - அந்தஸ்து - தடுத்திருக்கதே! லட்டு இனிக்கும் என சொல்லி கொண்டே இருப்பவர்கள்! சாப்பிட மாட்டார்கள் ஞான சூனியர்ங்கள்! பேராசிரியர்களாக உலாவரும் அணிந்துரை வாழ்த்துரை வழங்கும் அறிவிலிகள்! இன்றைய பேராசிரியர் பலரும் பேர் - பெரிய ஆசிரியல்லர்!  அ  - சிறியர்! சின்ன பசங்கள் தான்! இப்படி பட்டவர்களிடம் படிக்கும்
மாணவன் எப்படி உருப்படுவான்? உரை நூல்களை வைத்து ஒப்பேற்றும் 
 அ - சிறியர் கூட்டம் தான் அதிகம்!

ஞான கல்வி படியுங்கள்! ஞானத்தை போதியுங்கள்! புனிதமான தொழில் பயிற்றுவித்தல்! பண்படுங்கள்! பண்படுத்துங்கள்!

கல்லாத மூடர் - படித்து ஞானம் அறியாதவன்.அதாவது சற்குருவிடம் 
உபதேசம் கேட்காதவன் அவனே  மூடன்!  


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Popular Posts