ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சத்திய ஞான சபை - ஞான அனுபவம்











வள்ளல் பெருமான் தானே முன்னின்று கட்டியது சத்திய ஞான சபை, ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறியருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கக் கட்டியதே ஞான சபை.

சத்திய ஞான சபையில் பிற கோவில்களில் உள்ளது போல் தெய்வத் திருவுருவங்கள் கிடையாது. பூசை வழிபாடு கிடையாது.

இறைவனை நாடி தவம் செய்யும் நமக்கு கிட்டும் முதல் பேறு, ஆத்ம ஜோதி தரிசனம் எல்லோரும் அறிய ஏற்படுத்தினார்.

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும்  சிற்சபை பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே - ஞானசபை உள்ளது. தைப்பூசம் அன்று ஞான சபையில் ஒவ்வொன்றாக ஏழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் பெரும் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.

இதுவரை யாரும் கட்டாத கோயில்!? எனவே இதை கோயில் என்று
அழைக்காமல் சத்திய ஞானசபை என்றார் வள்ளலார்.







இதுவரை யாரும் செய்யாத புதுமையான வழிபாடு!? பிற கோயில்கள் போன்று தெய்வ திருவுருவங்கள் இன்றி, ஒளி ஒன்றே பரமாத்ம நிலை என விளக்க ஞான சபை உள்ளே ஒளியை ஏற்றி காண்பிக்க செய்தார். ஒளியை காண வேண்டுமானால் அதை மறைத்து கொண்டிருக்கும் ஏழு திரைகள் விலக வேண்டும். அது என்ன?

ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் நமது கர்மவினைகளுக்கு
தகுந்த படி திரைகள் போன்று ஆத்ம ஜோதி தெரியாத படி மறைத்து கொண்டிருப்பதாகும்.

திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம். இது தான் வள்ளல் பெருமானின்
மிகப்பெரிய சாதனை?

இதுவரை வந்த ஞானிகள் பலர் உபதேசம் செய்துள்ளனர். ஞானிகள் பலர் கோவில் அமைத்தனர். இன்னும் பல ஞானிகள் ஞான உபதேசம் பரிபாசையாகவே செய்துள்ளனர். வேதம் இதிகாசம் புராணம் இன்னும் எவ்வளவோ?! இவை அனைத்துக்கும் மேலாக  அனுபவ ரீதியாக நம் முன் உருவாக்கி நிலை நிறுத்தியது தான் சத்திய ஞான சபை!

இறைவன் பேரொளி. அவனை காண உன்னிடமுள்ள அஞ்ஞான திரைகளை அகற்று என்பதே! எப்படி? புறத்திலே உள்ளதை புரிந்து கொள்வது?

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - சிற்சபை வலது கண். பொற்சபை இடது கண் இரு கண் மணியிலுள்ள ஒளியை பெருக்கினால் உள்ளே அக்னிகலையை ஞான சபையில்  ஆத்ம ஜோதியை  மறைத்து கொண்டிருக்கும் நம் கர்ம பந்தத்தால் ஏற்பட்ட திரைகள்
அதாவது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது ஜவ்வு. இந்த ஜவ்வு தான் 7 நிலை திரைகளாகும். நாம் தவம் செய்யச் செய்ய நினைந்து உணர்ந்து  நெகிழ கண்ணீர் பெருகும். கண்ணில் கனல் எழும்பும் அக்கனல் ஞானக்கனல் உள்ளிருக்கும்
ஜோதியை மறைத்துக்கொண்டிருக்கும் ஜவ்வை சூடாக்கி உருக்கி விடும். கொஞ்சங் கொஞ்சமாக திரை போன்ற ஜவ்வு உருகி கரைந்து விடும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும். இதை சொல்வதற்குதான் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபை கட்டி அங்கே ஜோதி தரிசனமும் காண வைத்தார்கள். ஜோதி தரிசனம் - ஞான அனுபவ நிலை.

இங்கே கண்ணை மூடி கொண்டிருந்தால் எப்படி ஜோதியை தரிசிக்க முடியும்.? இதற்குத்தான்  பெருமான் விழித்திரு என உபதேசம் செய்தார்.

கலையுரைத்த கற்பனையை நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக என வள்ளலார் கூறினார்.

இழிச் செயலையே, கண்மூடித்தனம் என்கிறோம். கண்மூடிதனம் என்பது அறியாமையால் செய்வது. இதுவல்லாமலால் நாம் கண்ணை திறந்து பார்த்தல் தானே எல்லாம் தெரியும்! கண்ணை மூடி கொண்டால் ஒரே இருளாகத்தானே இருக்கும்.

சரியை கிரியை யோகம் அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு செய்வது
சொற்ப பலனே மிஞ்சும். முழுமை கிட்டாது.

ஞானத்தில் கண்ணை திறந்து கொண்டுதான் தவம் செய்ய வேண்டும். கண்ணை மூடினால் இருள் கண்ணை திறந்தால் ஒளி. நாம் ஒளியை பேரொளியை தானே தவம் செய்ய வேண்டும்.

கண்திறந்து  காண்பதே உண்மை. கண்ணை மூடிக்காண்பது அனைத்தும் மாயை! கண் திறக்க வேண்டும்! ஞான சாதனைக்கு. கண் இமைகளை திறக்க வேண்டும். என்பது ஒன்று. கண்மணியை மறைத்து கொண்டிருக்கும் திரையை அகற்ற வேண்டும். அடைப்பட்ட வாசல் திறக்க வேண்டும்.என்பதும் ஆகும்.

கண் திறப்பது என்பது கண்மணியில் அடைத்து நிற்கும் வாசல் போன்ற திரைகள் நீங்க வேண்டும் என்பதே. அப்போது தான் ஜோதி தரிசனம் ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும். ஞானம் பெறலாம். தன் புறக்கண் இமைகளை விட்டு அகக்கண் மணித்திரை திறப்பதே ஞானம்.  திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் நீக்கியே -மணிக்கதவம் திறவாயே என வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

ஒரு ஓவியம் ஒரு சிற்பம் இவை செய்து முடித்த பின் முடிக்குமுன் கடைசியாக செய்வது கண் திறப்பது என்றேயாகும். கண் திறந்தால் பூர்த்தியாயிற்று என்று பொருள்.

அதுபோலவே ஒரு மனிதனுக்கும் அகக்கண் - மணித்திரை திறப்பதே பிறவியின் லட்சியம். பிறப்பில் மிக மிக முக்கியமான நிகழ்வு நாம் மனிதனாக பிறந்த பயன் பெற நம் க திறக்கப்பட வேண்டும். கண் திறந்தால் தான் ஜோதி தரிசனம், இறைவன் அருள் அடியேனுக்கு வள்ளல் பெருமான் அருள், குரு பீடமேறி, நயன தீட்சை மூலம் அகக்கண்களை திறந்து வைக்க அருள் பாலித்திருக்கிறது.

மாதா பிதா பெற்ற மனிதர் குருவை பெற்று தன் அகக்கண்களை திறந்து கொண்டு தவம் செய்து மேன்மையடைய வேண்டும். அதற்குத்தான் வள்ளல் பெருமான் படாத பாடுபட்டார், படுகிறார்.

www.vallalyaar.com

சித்தி வளாகம்

Image result for சித்தி வளாகம்

வள்ளல் யார் எனும் ஆராய்ச்சி செய்ய நம் பெருமான் பலகாலம் இருந்த இடமே சித்தி வளாகம்.

சனாதனதர்ம நெறி தழைத்தோங்க சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திற்கு கொடி அமைத்தார்.

அதன் விளக்கமும் ஞான அனுபவம் என்று உரைநடை பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

இன்றும் தைப்பூச ஜோதிதரிசனம் கண்ட மூன்றாம் நாள் நம் வள்ளல் பெருமான் திருக் காப்பிட்டுக் கொண்டு, ஒளியாகி கரைந்த வெளியிலே கலந்த, திருஅறை தரிசனம் காணலாம். சித்தி வளாகத்திலே சித்தியெலாம் பெற்றனன் என பெருமானார் குறிப்பிடுகிறார்.

சித்தி வளாகத்தில் அன்பர்களை கூட்டி சன்மார்க்க சங்கம் நடத்திய நம் பெருமான் நமக்கு கொடுத்த உபதேசம் என்ன தெரியுமா? தனித்திரு என்பது தான்! சாதுக்கள் சங்கத்தில் இரு என்ற வள்ளலார் தனித்திரு என்றே உபதேசித்தார்.

நான் ஆன்மா - சீவன் என்கிற தனி நிலையில் இருக்க வேண்டும். எப்போதுமே தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என்ற ஆவா மிகுதியால் சத்விசாரம் செய்து கொண்டே தனித்திருக்க வேண்டும் என்றார்.

சனாதன தர்மம் - வள்ளல் பெருமான் உரைத்த சன்மார்க்கம்.


பரமாத்மா சீவாத்மாவாகி நம் கண்மணி ஒளியில் இரு
நிலைகளாக உள்ளது!

அந்த இரண்டையும் ஒன்று சேர்ப்பதே தவம்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீராதனால் உடம்பு
நனைந்து
- இப்படி செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
கண்களை நினைத்து கண்மணியின் உள் ஒளியை நினைத்து உணர்ந்து
உணர்ந்து அதிலேயே நினைவை நிறுத்தி நிறுத்தி பழக பழக
நெகிழ்ச்சி உண்டாகும், நெகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதுவே
கருணையாக மலரும். கண்மணி ஒளியில் மனதை நிறுத்தும் போது
கடுப்பு உண்டாகும் கனல் பெருகும் கண்ணீர் தாரை தாரையாக கொட்டும்.
இப்படியே தொடர்ந்து தவம் செய்ய செய்ய கண்மணி ஒளி பெருகும்.
கொஞ்சங் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும் ஊன உடலே விரைவில்
ஒளிவுடல் ஆகும்,

இதுவே உன்னதானமான தவம். சீவனை சிவமாக்கும் ஒப்பற்ற கலை.
இந்த கலையை உலக மக்கள் அனைவரும் பயிலவேண்டும். பேரொளியாகிய
பரமாத்மாவாகிய இறைவன் சிற்றொளியாகிய - சீவான்மாவாகிய நாம் அடைய
இது ஒன்றே வழி!

எல்லோருக்கும் பொதுவான - மனிதன் மனிதனாக வாழ்ந்து இறையோடு கலக்க  வழி காட்டி கூட்டி செல்வதே சனாதன தர்மம். அதுதான் வள்ளல் பெருமான் உரைத்த  சன்மார்க்கம்.

சிதம்பரத்தில் நடராஜர் ஆடுவதை நிறுத்தினால் உலகம் அழிந்து விடும் ???


சிதம்பரத்தில் நடராஜர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவர் ஆடுவதை நிறுத்தினால் இந்த உலகம் அழிந்து விடும் என இன்றும் ஊரில் பலர் சொல்லிக்கொண்டேஇருக்கிறார்கள்!?
சிதம்பரம் போனேன் அங்கே நடராஜர் ஆடவில்லையே!

அப்படியானால் இதன் விளக்கம் யாது? சிதம்பரம் என்றால் சின்ன-அம்பலம் - அம்பரம்,சிற்றம்பலம், நடராஜன் நடனமிடும் - ராஜன் - இறைவன் - பேரொளியின் அம்சம் சிற்றொளி -ஒளி ஆடிக்கொண்டு தானே இருக்கும்.

அதாவது எங்கும் நிறைந்த இறைவன் நம் உடலில் சின்ன அம்பலாகிய எல்லோருக்கும் தெரியும்படியாக அம்பலமாக கண்ணில் ஒளியாகி ஆடிட் கொண்டிருக்கிறான் என்பதாகும்.

நம் கண்ணில் ஒளி ஆடிக்கொண்டிருந்தது. நம் கண் எப்போது ஆடாமல் அசையாமல் நிலைகுத்தி நிற்கும்? இறந்தால் தானே! கண் ஒளி ஆடாமல் இருந்தால் உயிர் பிரிந்து விட்டது என்று தானே பொருள். கண் அசைவு ஆட்டம் இருந்தால் உயிர் இருக்கிறது
என்று பொருள்.

இதைத்தான் நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளி நின்றால் நாம்
இறந்து விடுவோம் என்பதைத்தான் சிதம்பரத்தில் நடனமிடும் நடராஜர் ஆட்டம் நின்று விட்டால் உலகம் அழிந்து விடும் என பரிபாசையாக மறைமுகமாக சொன்னார்கள் முன்னோர்கள்!

இராமலிங்க வள்ளலார்


ஒத்த இடத்தில் இருந்து தூங்காமல் தூங்கி மோன
நிலையில் ஆன்ம பசியோடு இறைவன் திருவடியிலே
மட்டுமே மனதை இருத்தி விழி மலர்களை மலர்த்தி
விழித்திருந்து தவம் செய்தார், பலன் மனிதனான இராமலிங்கர்
புனிதன் ஆனார். தன்னுள் இருக்கும் அது தான் எங்கும் நிறைத்த
எல்லாம் வல்ல இறைவன் அம்சம் என்பதை உணர்ந்தார்.
தன்னை போலவே எல்லோர் உள்ளிலும் அதுதான் என்பதையும்
உணர்ந்தார். அதுதான் அண்டம் பகிரண்டம் எலாம் நிறைந்து எனவும்
கண்டார்.

தான் அதுவாக மாறிவிட்டார்! தனக்கு கிடைத்த சத்து சித்தாக மிளிரக்கண்டார்!
அதனால் கிடைத்த ஆனந்தம் அளவிலாதது என உணர்ந்தார்.

அதை அறிந்ததால் தான் உணர்ந்ததால் அதுவாக மாறியதால் அதன் இயல்பை
பெற்றார்  இராமலிங்க வள்ளலார்! ஆம் ராமலிங்கர் வள்ளலாரானார்!

எவ்வுயிரும் தானாக கண்டார். பயிர் வாடிய வாட்டம் அவர் பெற்றார்.

அறியாமையில் உழல்கின்ற உயிர்களை கண்டு மனம் வெதும்பினார்.
தீச்செயல் புரியும் மனிதர்களைக்கண்டு உளம் புதைத்தார். ஆணவத்தால்
அடாது செயும் மனிதர்களைக் கண்டு பயந்தார். பிற உயிர் படும் துன்பம்
அவர் பட்டார். அதுதான் ஒருமை.

ஆன்மநேய ஒருமை. வள்ளல் தன்மையை பெற்றவர் தன்மை இதுவே.
குறைந்த பட்சம் பசியாவது நீக்குவதே மனித இயல்வு என்றார்.

உணவால் மனித உயிர் வாழும் பின் தேறிவிடும் என்றுரைத்தார்.
அதன்பின் வள்ளல் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்குவார் என்றார்.
வள்ளலாகிய இறைவன் யார்? யார்? என்று இறைஞ்சுபவன்
ஏழைக்கு இரங்குவான். கருணையே உருவாவான்.

வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

மனம் போன போக்கிலே போக வேண்டாம்

சென்னை - திருவெற்றியூர் இரத வீதியிலே ஒரு நிர்வாண சந்நியாசி
அமர்ந்திருந்து அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் நாய் போகிறது
நரி போகிறது பண்ணி போகிறது பாம்பு போகிறது என கூறிக்கொண்டு இருந்தார்

இராமலிங்கர் அவ்வழியே வந்தபோது இதோ ஓர் உத்தமமான 'மனிதன்' வருகிறான் என்றார். அவரவர் குணத்தை வைத்து மக்களை அழைத்துக் கொண்டிருந்த திகம்பர சாமியார் இராமலிங்கரை மனிதன் - உத்தமமான மனிதர் என்றார்.
மனிதனாக பிறந்து மிருகங்களாக வாழும் மாக்கள் மத்தியில் இராமலிங்கர் மனிதனாக வலம்வந்தார்.

மனதை இதம் பண்ண தெரிந்தவர், மனம் போன போக்கிலே போகாமல் மனதை இறைவன்பால் செலுத்தி பக்குவப்படுத்தியவர்.

மனம் போன போக்கிலே போக வேண்டாம் என்ற மூதுரைக்கொப்ப வாழ்ந்தவர்
இராமலிங்கர். 'மனம் அடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்' என்ற ஞானக் கூற்றுப்படி மனம் அடங்கும் இடத்தில் இருந்தவர் இராமலிங்கர்.

1823 அக்டோபர் 5ம் நாளில் பிறந்த இந்த மனிதன் 51 வயது வரை
பூதவுடலை ஒளியுடலாக்கி இப்பூவுலகில் வாழ்ந்தார். நம்மை போலவே
இராமலிங்கரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சாதாரண மனிதனே!

சதா சர்வ காலமும் இறைவனை எண்ணி மோன நிலை கூடி வாழந்தார்.

மாயையான இவ்வுலகு நம் மனதில் பற்றாமல் பற்றற்று வாழ்ந்தார்.

மனதை இறைவன் திருவடியில் ஒருமைப்படுத்தியதால் அறிவு
பிரகாசமானது! ஓதாதே உணர்ந்தார்.


வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Popular Posts