சாகாக்கல்வி நூலிலிருந்து : 20
இன்றைய உலகில் குரு என சொல்லிக் கொண்டு பெரிய ஆசிரமங்களை உருவாக்குவதிலேயே முழுகவனம் செலுத்தி, பல்லாயிரம் மக்களை கவர்ச்சியான செயல்பாடுகளால் கவர்ந்து யோகாசனமும் பிராணாயாமமுமே சொல்லிக் கொடுத்து முடித்து விடுகிறார்கள் !
இப்படிப்பட்ட குருமார்கள் வாழ்க்கை முடிந்து போகிறதை நாம் கண்கூடாக காண்கிறோம் !
இன்னும் பலர் கடவுளை பற்றியே பேசாதவர்கள் !
ஞானம் என்ற வார்த்தை கூட அறியாதவர்கள் !
பலர் சிறு தெய்வ வழிபாடு செய்து அருள்வாக்கு கூறும் ஆசாமிகள் !
இதற்குத்தான் கூட்டம்.
இன்றைய இத்தகைய குருமார்கள் பள்ளிக்கூடம் கோயில் ஆஸ்பத்திரி கட்டி நல்ல வருமானத்திற்கு வழிதேடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் !
இப்படிப்பட்ட குருமார்களிடம் சென்று ஏமாந்து போகாதீர்கள்.
எல்லோரையும் பாருங்கள்.
கடவுளை அடைய ஞானம் பெற யார் வழிகாட்டுகிறார் என அறியுங்கள்.
எல்லா மத நூல்களையும் படியுங்கள்.
எல்லா மகான்கள் வரலாறையும் பாருங்கள்.
உண்மையை உணருங்கள்.
எல்லா மதமும் இறைவனைப் பற்றித் தானே கூறுகிறது ?!
எல்லா மதமும் அந்த ஏக இறைவனை அடைய அன்பைத்தானே, ஆன்மநேய ஒருமைப்பாட்டைத் தானே போதிக்கின்றது !?
இறைவனை அடைய நமக்கு தேவை,,,
நல்லொழுக்கம்,
நற்பண்பு,
எல்லா உயிர்களிடத்தும் அன்பு, பணிவு,
நல்ல ஒரு குரு,
மகான்களோடு சத்சங்கம்
இவைகள் தான் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக