Wednesday, August 31, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 6

வாழ்வே
வழி காட்டி சென்றனர்
வாழையடி வாழையென ஞானியர்

ஞானியர்
பலவாறு பகர்ந்தது
சிந்தித்து உறுதி பெறுவதற்கே

பெறுவதற்கே
நாமும் பிறந்தோமே
பேதமை நீங்கி பார்ப்பீரே

பார்ப்பீரே
உலகை ஒன்றாகவே
ஆன்ம நேயம் வளரனும்

வளரணுமே
அறிவு அன்பு
சீவ காருண்யம் அனைவரிடமும்

அனைவரிடமும்
அன்பு பாராட்டினால்
உயிர்கள் கை கூப்பி தொழும்

தோழும்
பக்தியோடு சரனாகியே
பரகதி உனக்கு உண்டே

உண்டே
கண்டித்ததை தவிர்த்தே
பசிக்கு புசித்து வாழ்வாயே

வாழ்வாயே
பாரோர் மெச்சிடவே
பகலவனை பற்றி நில்லே

Sunday, August 28, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 5கூட்டே
பத்து வரவே
எட்டும் இரண்டும் பத்தே

பத்தே
நாதங்கள் கேட்குமே
மயில் குயிலாகும் விந்தையே

விந்தையே
விந்துவும் நாதமும்
பார்த்து கேட்டபின் பாதமே

பாதமே
திருவடியே ஆன்மாவே
பற்றினால் கிட்டுமே பேரின்பம்

பேரின்பம்
சிற்றின்பம் அல்ல
பெருவிரலை உறுதியாக பற்றே

பற்றே
சந்திர சூரியனை
சக்தி சிவத்தை கண்களை

கண்களை
பெற்றிருந்தும் குருடரே
கண்மணி அறியாத மானிடரே

மானிடரே
மண்ணில் பிறந்தது
நல்ல வண்ணம் வாழவே

Saturday, August 27, 2016

இறைவனை கண்டவர் யார் ?


இறைவனை கண்டவர் யார் ? யார்? என கேட்கிறார்களே?

கண்டேன் கண்டேன் என்று பதில் கூறுகிறார் பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார் என்று கேட்பவர்களுக்கு , இறைவனை எப்படி எப்போது காண முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறார்கள் ஞானிகள்.கீழ்கண்ட கட்டுரையை முழுவதும் படியுங்கள்
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
- பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன் கண்டேன் என்று கதறுகிறார் பேயாழ்வார்! ஆஹா என்ன அழகு! என்ன அழகு அதை எப்படி கூறுவேன்? இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா? எம்பெருமானின் அழகிய திருமேனியை கண்டேன்.

ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம் பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன்.

கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன் என்கிறார் பேயாழ்வார். எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.

இந்நிகழ்ச்சி நடந்த சம்பவத்தை வில்லிபுத்தூராழ்வார்
கீழ்கண்ட பாடலில் விளக்குகிறார் :

"பாவரும் தமிழால் பேர் பெரு பனுவற்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழி விளக் கேற்றி
முகந்தனைத் தொழுத நன்னாடு
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ்சடைக் கடவுளைப் பாடி
ஏவரும் மதித் தோர் மூவரில்
இருவர் பிறந்த நாடிந்த நன்னாடு"

ஒரு நாள் இரவு குளிர்காலம் ஒட்டுத்திண்ணை ஒன்றிலே படுத்திருந்தாராம் பொய்கையாழ்வார்! சிறு தூறல் வேறு வாடைக்காற்றும் வீசிய நேரம்! பூதத்தாழ்வார் அங்கு வந்து ஒதுங்கினாராம். படுத்திருந்த பொய்கையாழ்வார் பளிச்சென்று எழுந்து , இந்த இடம் ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும் ஆகும் என்று கூறி அவரை அருகில் இருக்கச் செய்து தானும் இருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு அங்கு பேயாழ்வார் வந்தார். அமர்ந்திருந்த இருவரும் உடனே எழுந்து, இங்கு ஒருவர் படுக்கலாம் , இருவர் இருக்கலாம் , மூவர் நிற்கலாம் என்று கூறி, நின்று கொண்டார்கள் அச்சிறு இடத்தில மூவரும் நெருங்கிய படியே நின்றார்கள்.

ஒரே அமைதி. சிறிது நேரத்திற்கு பின் கன்னங்கரேல் என்று ஒருவர், மொழு மொழு என்று உடம்புடன் அங்கு வந்து அவர்களை நெருங்கி கொண்டு உட்புகுந்து நின்றார். அந்த இடம் மிக நெருக்கமான சிறு இடம். ஒருவர் மட்டும் படுக்கவும், இருவர் மட்டும் இருக்கவும், மூவர் மட்டுமே நிற்கவும் முடியும். இந்நிலையில் அச்சிறு இடத்தில மூவர் நெருங்கி நின்று கொண்டிருக்க, நாலாவதாக வந்து ஒருவர் நெருங்கி நுழைந்து விட்டார். மூவரும் திக்கு முக்காடிப் போய்விட்டார்கள். முச்சுத் திணறியது. ஐயா நீர் யார்? என்று கேட்டார்கள், பதில் இல்லை.

ஐயா தங்களை யார் என அறிய விரும்புகிறோம் என்ற போதும் பதில் இல்லை. ஒரே அமைதி. மௌனம்.விளக்கு இருந்தால் அவர் யார் என நாமே பார்த்து விடலாமே என்று பொய்கை யாழ்வார் மொழி விளக்கு ஏற்றினார்.

வந்தது என்ன சிறுவிளக்கா? உலகில் உள்ள எல்லா விளக்குகட்கும் பெரிய விளக்கு! ஐந்து கண்டங்கட்கும் ஒளி தரக்கூடிய அத்துணை பெரிய விளக்கு! அப்படி பட்ட விளக்குக்கு நெய் ஒரு படி இப்படி விட்டாற் போதுமா? இந்த பூமியே அகல், கடலே நெய், மேருகிரி திரி, சூரியனே விளக்கு என்று பாடினார் பொய்கையாழ்வார்.

"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய சுடரே விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று"

அடுத்ததாக பூதத்தாழ்வார் உள்ளத்தில் ஒரு விளக்கு ஏற்றுவாராயினர். அதற்கு அன்பு அகல், ஆர்வம் நெய், எண்ணம் திரி, ஞானமே விளக்கு.

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாராணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்"

இங்ஙனம் பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடியபின் ஒரு ஜோதி விளக்கு தோன்றியது. அவ்வொளியில் தங்களை நெருங்கியபடி நிற்பது யார் என பார்த்தார்கள். கண்டார்கள். அவர் திருவுருவம் நன்கு தெரிகிறது. அப்போது பாடிய பாடல் தான் பேயாழ்வார் பாடியது, இக்கட்டுரையில் முதலில் கொடுக்கப்பட்டது.

இந்த கதை அனைத்தும் ஞான அனுபவமே! ஒருவர் படுத்திருந்தார் அது ஆத்மா. இருவர் இருந்தனர் அது இரு கண்கள். மூவர் நின்றனர் சூரிய சந்திர அக்னி. படுத்திருந்த நாராயணரை எழுப்ப வேண்டுமானால் அவரும் நம்மோடு இருக்க வேண்டுமானால் நம் இரு கண்களில் நாம் இருக்க வேண்டும்.

கண்ணனிடம் கண் - மணியிடம் ஒளியிடம் லயிக்க வேண்டும். இதுவே ஞான தவம். சாதனை கூடுமானால் சூரிய சந்திர ஜோதி எழும் அக்னியையும் எழுப்பிவிடும்.

மூவர் நின்றது இதுதான். மூவரும் நெருங்கி நின்றால் சூரிய சந்திர அக்னி சேர்ந்தால் வந்திடுவான் இறைவன் ஜோதியாக நம்முள்ளே. நம் முன்னே. நம்முடனேயே. ஈடு இணையில்லாத ஒப்பற்ற இறைவனை காண எவ்வளவு அழகான கதை இது பார்த்தீரா? இது கதையல்ல நிஜம். ஈடு இணையில்லாத ஞான சாதனை இது.

ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டும். பிறந்த நாம் செத்தால் சேராது. இதற்கு முன் சேராததினால் தான் நாம் பிறந்துள்ளோம். தற்கொலை செய்தால் கிட்டி விடுமா? பேய் உருவம் தான் மிஞ்சும். பின் என்ன தான் செய்வது? ஞான தவம் ஒன்றினால் தான் பரமாத்மாவுடன் ஐக்கியம் ஆகா முடியும். தவம் செய்து குருவை பணிந்து தீட்சை பெற்று கண்களில் உணர்வுடன் விழித்திருந்தால் ஒளியை காணலாம். பின்னரே முக்தி மோட்சம்.
- ஞான சற்குரு சிவசெல்வராஜ் "ஞானம் பெற விழி" நூலில்

Thursday, August 25, 2016

சித்தர்கள் அருள் பெற என்ன வழி ?


ஒரு ஆத்மா கடை தேற ஞானத்தை சொல்லி கொடுப்பது தான் சிறந்தது.
ஒரு ஆத்மா எத்தனையோ பிறவி பிறந்து பிறந்து இறந்து இறந்து கஷ்ட படுகிறது அல்லவா ஒரு கோடி கோடியா பணம் கொடுத்தாலும் வீண்.

ஞானத்தை சொல்லி கொடுங்க. ஆத்மா கடைத்தேறும் அல்லவா? அது தான் கோடி புண்ணியம்...

எல்லோருக்கும் சொல்லி கொடுங்க. மறைப்பு எதுவும் இல்லை.
ஒருவன் விஷயத்தை மறைக்கிறான் என்றால் அவனுக்கு தெரியாது என்று அர்த்தம்.

இறைவன் - சித்தர்கள் அருள் பெற என்ன வழி ? அடுத்தவங்களுக்கு ஞானம்
சொல்லி கொடுப்பதுதான்.இதில் ரகசியம் மறைப்பு என்று எதுவும் இல்லை.
எல்லோரும் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கலாம். ரகசியம் சத்தியம்
வாங்குவார்கள். அது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.

இறைவனை பற்றி சொல்லி கொடுத்தால் கேட்டு போவானா? இறைவனை
அடைய தவம் செய்ய சொல்லி கொடுத்தால் கெட்டு போவார்களா?
எல்லோருக்கும் சொல்லி கொடுங்க.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தான் நீங்க நன்றாக இருப்பீர்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

நாலு ஆன்மா நல்லா இருக்கனுமுன்னு ஏதாவது செய்கரீகள் அல்லவா? இது சித்தார்கள் ஞானிகளுக்கு தெரியும். அவர்கள் உங்களுக்கு அருள் தருவார்கள். இந்த பிள்ளை நாலு பேருக்கு வழி காட்டுகிறான் நல்ல இருக்கட்டும். அவர்கள் ஆசிர்வாதம் ஈசி யா கிடைக்கும். அவர்களுக்கு பூசை மற்ற எதுவும் தேவை இல்லை. பரோபகாரம் நாலு ஆன்மா நன்றாக இருக்க செய்ய கூடிய எடுக்க கூடிய முயற்சி தான் அவர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

ஜோதி ஐக்கூ அந்தாதி - 4

இல்லையே
இருவினை துன்பங்கள்
இதயத்தில் இறைவனை கண்டால்

கண்டால்
கண்ணனின் ஒளியை
கண்மணியை எண்ணிப்பார்த்தே

பார்த்தே
இருக்க வேண்டும்
பரமன் நடனம் காணலாம்

காணலாம்
காணாத காட்சிகளை
கண்டு மேலே செல்லலாம்

செல்லலாம்
சீவன் முகத்தராகியே
சிவனும் சீவனும் ஒன்றாகியே

ஒன்றாகியே
வரவே பாடுபடு
முச்சுடரும் சேர்ந்தாலே முக்தியே

முக்தியே
முடிவான நிலையாகும்
மூன்று தீயே ஆரம்பமாகும்

ஆரம்பமாகும்
உணர்வு சூட்டை
எண்ணி எண்ணி கூட்டே

Monday, August 22, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

நாமே
சாதனை செய்தால்
சாதிக்கலாம் சர்வமும் பெறலாம்

பெறலாம்
வைராக்கியம் இருந்தால்
பேரின்பம் தானாய் வந்திடுமே

வந்திடும்
சன்மார்க்க ஒழுக்கத்தில்
வகையாய் மூலம் அறிந்து

அறிந்தே
எட்டும் இரண்டே
பரிபாசை அனைத்தும் ஒன்றே

ஒன்றே
மனதை செலுத்தியே
கடவுள் ஒருவரே உணர்வீர்

உணர்வீர்
உம்முள் இருப்பதை
பிரம்மம் சீவனாய் ஒளியாகியே

ஒளியாகியே
எங்குமாய் நிறைந்தவன்
நம்மிலும் இருக்கிறார் நாடுவோமே

நாடுவோமே
நாதன் இருப்பிடத்தை
நம்புங்கள் நமன் இல்லையே

ஞானசற்குரு

 ஜோதி ஐக்கூ அந்தாதி  -  2                   ஜோதி ஐக்கூ அந்தாதி  -  4

Sunday, August 21, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2


சத்தியம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்

சத்தியம்
ஒழுக்கம் பண்பாடு
உள்ளவரே உள்ளவரை அறிவார்

அறிவார்
உண்மை குருவை
மெய்ப்பொருளை நாடியே பெறுவார்

பெறுவார்
தீட்சை தசம்
அறிவால் அறிவர் குருவை

குருவை
காரணமும் காரியமும்
பெற்றவரே அடைவர் ஞானம்

ஞானம்
பரிபூரண அறவே
நன்றாக உணர்ந்து கொள்ளே

கொள்ளே
ஞானிகள் நவின்றதை
அறிவில் தெளிவு கிட்டும்.

கிட்டும்
மரணமிலா பெருவாழ்வு
வாழ்வாங்கு வாழலாம் நாமே

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1                   ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

Saturday, August 20, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1


உலகம்
என்னையும் ஏற்றது
அன்னையும் தந்தையும் பெற்றதால்

பெற்றதால்
பேணி வளர்த்தனர்
என்னையும் வளர்த்தான் இறைவனே

இறைவனே
என்னுள் இருக்கிறான்
நான் எங்கே இருக்கிறேன்

இருக்கிறேன்
இறைவன் அம்சமாக
சீவன் என்று அறியலாமே

அறியலாமே
சீவன் இருப்பிடத்தை
முயன்று பார்த்தால் முடியும்

முடியும்
அறிவுள்ளோர் நம்பிக்கை
ஆன்றோர் அறிவித்ததை பாரே

பாரே
போற்றும் பேரறிவாளர்
பண்பு உரைத்ததை படியே

படியே
சாத்திரத்தில் சிறந்தது
திருமந்திரம் திருமூலர் அருளினாரே

‪அருளினாரே
தோத்திரத்தில் சிறந்தது
திருவாசகம் மாணிக்க வாசகரே

வாசகரே
பாத்திரத்தில் சிறந்தது
திருவருட்பா இராமலிங்க சுவாமிகளே

சுவாமிகளே
சிந்தையை தெளிவிப்பது
சித்தர்கள் அருளிய பாடல்களே

பாடல்களே
பாடினால் பரவசமே
சரியை பக்தி நிலையாம்

நிலையாம்
பூசைகள் செய்வதுமே
கிரியை என்றே கூறுவர்

கூறுவர்
பிராணாயமமே உயர்ந்தது
யோகம் இதுதானே

இதுதான்
என அறியும் அறிவேயாம்
ஞானம் இவ்வளவே பூரணம்

பூரணம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்.

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2  

Thursday, August 18, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி

{ஜோதி ஐக்கூ அந்தாதி}
101 ஐக்கூ கவிதைகள் 101 தெய்வ திரு உருவங்களை தாங்கி வருகிறது.
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
ஆதி சித்தர் ஸ்ரீ சிவன்
அமுதம் தரும் தாய் வாலை
தேவ சேனாதிபதி
கலியுக காவலன்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
63 நாயன்மார்கள்
12 ஆழ்வார்கள்
20 சித்தர்கள் 


1 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
உலகம் என்னையும் ஏற்றது
அன்னையும் தந்தையும் பெற்றதால்

2 ஸ்ரீ சிவன்
பெற்றதால் பேணி வளர்த்தனர்
என்னையும் வளர்த்தான் இறைவனே

3.வாலை
இறைவனே என்னுள் இருக்கிறான்
நான் எங்கே இருக்கிறேன்

4 முருகன்
இருக்கிறேன் இறைவன் அம்சமாக
சீவன் என்று அறியலாமே

Saturday, August 13, 2016

முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்!

கன்னி ய குமரியே - ய விலே இருப்பவளே வாலை! கன்னியும்
அவளே, 6 வயது குழந்தை! குமரி அவளே, 16 வயது சௌந்தர்ய
மங்கை! உலகுயிர்க்கு தாயும் அவளே அமுதம் தருவதால்!

தவம் செய்யும் ஞானிகள் உணர்வர் வாலையின் மகிமையை!
உலக மக்களுக்கு உயிர் கொடுத்து அந்த உயிராகவே சிவமாகவே ஒளிர்ப்பவளே வாலை!

அந்த மாபெரும் சக்தியை, வாலையை ஞான தவம் செய்து நாமும்
அந்த வாலை திருவடியை அடையலாம்! அதற்க்கு கண்ணை விழித்து சும்மா
இருக்கும் தவம் செய்!

ஞானம் பெற விழி! விழி வாலை காட்டுவாள்!
வாலையே கன்னி யாவிலே இருப்பவள் குமரி! கன்னியாகுமரி பகவதியம்மனே  வாலைத் தாய்!  முக்கண்ணாம் முக்கடல் தீர்த்தமாடி முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்! வா கன்னியாகுமரிக்கு!!

Friday, August 12, 2016

யார் பெறுவார் உண்மை குரு?


இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில்.
 
அவர்கள் நமக்கு அருளியுள்ள நூல்களின் "குருவினை" பற்றி அவர்கள் கூறியுள்ள கருத்தினை பாப்போம்.

மெய்ஞ்ஞான விளக்கங்கள் எங்கள் குருநாதர் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் வெளியிட்டுள்ள புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

போலி குருவை எப்படி அடையாளம் காண்பது?

கீழ்கண்ட திருமந்திர பாடலில் போலி குருவை பற்றி திருமூலர் பெருமான் எச்சரிக்கிறார்

"குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே" - திருமந்திர பாடல் 1680

வினை வழி வந்த மனிதரில் பலர், அறியாமையால் குருடாயிருக்கும் நம் கண்களை திறக்கும் சற்குருவை அறியமாட்டார்கள் அடையமாட்டார்கள். நம் கண்களை வினைத் திரையால் மூடப்பட்டு , நாம் கண்ணிருந்தும் குருடராகவே இருக்கிறோம்!? நம் கண்ணிலிருக்கும் வினைத்திரையை விலக்கி கண்மணி ஒளியை தூண்டி உணரச் செய்யும் ஒரு நல்ல ஞான சற்குருவை பெற வேண்டும்.

போலிச் சாமியார்களை நம்பி பணத்தை மானத்தை இழப்பவர்களே அதிகம். தமது கண்கள் குருடு என்பதை அறியாத போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர். நம் கண்களை திறப்பவனே உண்மை குரு. நம் கண்ணில் ஒரு மறைப்பு உள்ளது என காட்டி அதை அகற்ற , 
தவம் செய்யச் சொல்லித் தருபவரே உண்மை ஞான சற்குரு .

முதலில் புறக்கண்ணை திறக்கத் சொல்பவனே, இமைகளை திறந்து தியானம் பண்ணச் சொல்பவனே உண்மை குரு.

அந்த உண்மை, மெய்ஞ்ஞான சற்குரு அருளாலே, கண்மணி ஒளியை தூண்ட வழி கிட்டி , நாம் தவம் செய்தாலே முதலில் புறக்கண் திறக்கும். பின் அகக் கண்ணும் திறக்கணும்.

இப்படிப்பட்ட குருவை பெற வேண்டும். இந்த கண் குருட்டு விபரம் அறியாதவன் குருவே அல்ல. அவனுக்கும் ஞானத்துக்கும் சம்மதமே இல்லை.

இப்படி சம்பந்தமே இல்லாத சம்பந்தரை குருவாக பெற்றவர்கள் குருடர்களே! ஏனெனில் குருவே குருடன் மறைப்பறியாதவன். பின் சீடனானவன் எப்படி உண்மை அறிவான். சீடனும் முழுக் குருடனே. இந்த குருவான குருடனும் குருட்டு குருவை பெற்ற குருட்டு சீடனும் எங்கேயாவது போக முடியுமா? வழி தெரியுமா? விழியின் மகத்துவம் தெரியாதவனுக்கு எப்படி வழி துலங்கும்? யானையை பார்த்த குருடன் கதை தான். மேடு பள்ளம் அறியாமல் விழுகின்ற குருடனைப் போல , இந்த குருட்டு குருவும் குருட்டு சீடனும் உண்மை அறியாமல் , உணராமல் உன்மெய் அறியாமல் , மெய்ப்பொருள் அறியாமல் சுடுகாட்டு குழியிலே தான் விழுவர்.

உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட திருமந்திர பாடலில் திருமூலர் பெருமான் எப்போது ஒருவருக்கு உண்மை குரு வாய்ப்பார் என்று கூறி அருள்கிறார்

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே" - திருமந்திர பாடல் 2119

சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர் , இது போல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி மாந்தர். அதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார் திருமூலர். இதெல்லாம் பக்தி மார்க்கம்.
இதே போல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் கர்மமார்க்கம்.

இதே போல் பிரணயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் யோக மார்க்கம்.

இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி , கர்ம, யோக மார்க்கங்களில் நீ இறைவனை அறிய முடியாது. எதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும். அது பிரயோஜனமில்லை.

தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தம் திருத்தமாக அடித்து கூறுகிறார். "மூர்த்தி தளம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே" என தெளிவாக கூறுகிறார்.

உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞான சற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்.

குரு இல்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது. பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார். குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே ராமன் , கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினார்.

"காட்டும் குருவின்றி காண வொண்ணாதே" ,"குருவில்லா வித்தை பாழ்!" குருவே எல்லாம் எனக்கருதி அவர் பாதங்களில் எவர் ஒருவர் சரணடைகிறாரோ அவரே இரட்சிக்கப்படுவார்.

"குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"இது ஒளவைக் குறள். குருவை வணங்கி பணிபவனே நல்ல சீடனாவான்.

குருவாக - மெய்குருவாக இருப்பவர் யார் தெரியுமா?

குருவால் நியமிக்கப்படுபவனே! ஒரு குருவுக்கு ஆயிரம் சீடர்கள் தகுதியுடையவராய் இருக்கலாம். அத்தனை பேரும் குருவல்ல. அந்த குரு பார்த்து தேர்ந்தெடுக்கும் உண்மை சீடனே குருவாவார். வேறு யாரும் குரு ஆகா முடியாது. இவ்வாறு குருவான ஒருவரே அவர் குருவருளால் உண்மைஞானம் உணரப் பெறுவார். அப்படிப்பட்ட மெய் குருவை ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற்றாலே நீவிரும் ஞானம் பெற முடியும்!!

"குருவை வணங்க கூசி நின்றேனோ?" "குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ ?" என மனுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமானே குருவின் மகத்துவத்தை கூறுகிறார். அதுமட்டுமா? " தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்" எனவும் திருவருட்பா வசன பாகத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் கூறுகிறார். குரு வழியே ஞானம். குரு விழி வழியே ஞானம் துலங்கும்.

குருவை பிடி. முதலில் ஸ்தூலம். பின்னர் சூட்சமம். குரு உன் உள்ளே இருக்கிறார். அதை அடைய உணர வெளியே ஞான சற்குரு ஒருவரை சரணடை . ஞானி ஒருவர் அருள அருள்பவர் தான் ஞான சற்குரு.

நாம் மனதில் நிறுத்த வேண்டியது :

"இந்தியாவில் குருமார்களுக்கு பஞ்சமேயில்லை நல்ல சீடன் ஒருவனை பார்ப்பது அரிது"- சுவாமி விவேகானந்தர் நல்ல குருவை தேடும் முன் நல்ல சீடனுக்கு உள்ள பண்புகளை வளர்த்து கொள்ளுங்கள். ஒழுக்கமாக , நீதி நெறியாக வாழுங்கள். சைவ உணவை உண்பவனே ஞானம் பெற தகுதி உடையவன். இறைவனிடம் பக்தி செய்து நல்ல குருவை காட்ட வேண்டுங்கள்.
எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.

திருச்சிற்றம்பலம்

Wednesday, August 10, 2016

காணுகின்ற பொருட்களில் ஞானம்


நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் காணுகின்ற பொருட்களில் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.பல ஊர் பெயர்கள்  மெய்ப்பொருள் விளக்கம்.

திருக்கண்ணபுரம் ,எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி,இப்படி ஊர் பெயர்கள் திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணாபுரம்! எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண்! எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன்!திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டு இருக்கும் இடமே
திருவாவடுதுறை! ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடி இருப்பவன் இறைவன்  எனவே குறுங்குடி! இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே!

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் என குறிக்க வந்ததே தாம்பரம்.! சிதம்பரம் -சின்ன அம்பரம் சின்னக்கோவில் அதுதான் சிதம்பரம்.

கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே! கண்ணாகியை அவன் - கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி! கணபதி - கண்ணில் பதி கண நாயகன்!  திருக்கண்ணை மங்கை! நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவார்! நேத்திரம் நயனம் என்றாலும் கண். உபநயனம் ஒரு
சடங்கு. பூணூல் பூட்டு வைபவம்! துணை , இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்ணைப்பற்றி அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம்!

ஊர் புறங்களில் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வர வேண்டுமானால் சொல்லிக்கொண்டு போவர்! எப்படி தெரியுமா? இரண்டு எட்டு போய் வர்றேன் என்பர்! இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள்! இதெல்லாம், நம்  அறிவுக்கு எட்ட வேண்டும் புலப்பட வேண்டும், ஏட்டை மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை!

இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார்.

இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே மறைத்தே சொல்லி வந்துள்ளனர். திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதல் முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன்!

மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை! ஆனால் எல்லோரும் மறைபொருளாக பரிபாசையாக சூட்சுமமாக குருமூலம் அறியக்கூடிய வகையிலே உள்ளது! உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞான நூற்களை
எழுத வைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர்! எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது! இயேசு பெருமானும் நபி பெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே ! ஒன்றே! நன்றே! மெய்ப்பொருளே!

கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம்! காதலன் காதலியை கண்ணே என்கிறான்! கணவன்  மனைவியர் கண்ணே என்பார்கள்! பெற்றோர், பெரியோர் பாதம் தொட்டு கண்ணில் ஒற்றி கொள்கிறோம்!

கோயிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம்! கண்காண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை  குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம்! கண் அவனே கணவன்உலகில் பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்! ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது!  பரம்பொருள் நம்கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது!

மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவனே துவிஜன்! மீண்டும் பிறந்தவன்!
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்பவரே பிறவாநிலை பெறுவார்! இறவாநிலை அடைவர்! மெய்ப்பொருளை சொல்லி புரிய வைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு ! தவம் செய்து!  சும்மா இருந்து  தன்னை உணர்பவனே ஞானி!  மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!

Sunday, August 7, 2016

முப்புரம் எரித்தார்

சிவபெருமான் முப்புரம் எரித்தார் என்று சொன்னது இந்த(திருவடி தவம்) சாதனையைத்தான்.

ஆணவம் கன்மம் மாயையாகிய  மும்மலங்களே முப்புரம். சிவம் புன்னகையால் வென்றார் என்பது ஜவ்வால் மூடிய ஊசி முனை துவாரம் உள்ளிருக்கும் சிவமாகிய ஒளி பெருக அந்த அனலில் ஜாவ்வு லேசாக விலகும். இதையே புன்னகை என்றார்.

அதாவது வாய் லேசாக திறந்தது என்று பொருள். வாய் கண்மணி துவாரம், லேசாக திறந்தாலே புன்னகையாலே நம்மும் மலமும் எரிந்து போயிற்றாம். அப்படியானால் நன்றாக சிரித்தால் வந்த வினையும் வருகின்ற வாழ்வினையும் எரிந்து சாம்பல் ஆகிவிடும் அல்லாவா? திருமந்திரம் கூறும் உண்மை ஞானம் இது!

வள்ளலார் - முருகப் பெருமான் அனுபவம்


வள்ளல் பெருமான் தன்வீட்டில் சிறுவயதிலே கண்ணாடியில் ஆறுமுக கடவுளை கண்டவரல்லவா?

எப்படி? கண் - ஆடியில் இருமூன்று ஆறு. முகத்துக்கு முகமான ஆறு வட்டத்தை ஆறுமுகமாக ஒளிவிட்டு ஜொலிக்கும் அழகை கண்டார்.

பன்னிரு கரம் - சூரிய கலை 12 ஆகும். மயில் மீது - பல வண்ண ஒளிகளோடு பார்த்தார். சேவல் கொடி - தசவித நாதம் கேட்டார். மயிலே பலவர்ண  ஒளியாகவும் சேவலை நாதமாக கூறப்படுகிறது.

வள்ளல் பெருமான் கண் திறந்து தவமியற்றும் போது தன் கண்ணையே கண்மணி ஒளியை நாதத்தொனியுடன் கேட்டு பார்த்து பரவமானார் .

ஜோதி ஏற்றி கண்ணை நாடி தியானம் செய்யும் போது பலவர்ண ஒளிகளை தன் கண்களிலேயே கண்டார். அப்போது நாதமும் கேட்டது! தன் கண்களையே தன் முன்னால் கண்டார். இது ஞான அனுபவம். சிறுவன் வள்ளலாருக்கு அப்போதே சித்திதத்தது - தித்தித்தது. திரு அருட்பா ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டது.

"நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ" என்றே
வள்ளல் பெருமான் கூறுகிறார்.

எப்படி? சிறுவனாக இருக்கும் போதே, தன் கண்ணிலே ஆடிக்கொண்டிருக்கும் ஒளியை , திருவடியை கண்டார். தன்னுள் இறைவனை ஜோதியை - பரமாத்மாவை உணர்ந்தார்.

தன்னுள்ளிருந்து இறைவன்தான் எல்லாம் நடத்துகிறார் என்று நமக்கு சொன்னார்.

ஆறு ஆறுக்கு அப்பால்


அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம் பொருள்
இருக்குமிடம் நம் உடலில் ஆறாறுக்கப்பால்! நமது
கண்கள் ஒவ்வொன்றும் மூன்று வட்டங்கள் இரு கண்கள் ஆறுவட்டம்!

இரு கண்களாகிய ஆறுவட்டம் தாண்டி உள்ளே போனால் நெருப்பாறு,
மயிர்பாலம் வெண்சாரை உண்டு.

ஆறுவட்டங்களை தாண்டி ஆறுபோல் ஓடி ஒளி உள்ளே போகும். பரிபாசையாக  சொன்ன மெய் மெய்யனுபவம் இது!

ஆறாறு முப்பத்தாறு. மயிர்பாலம் ஏறி  நெருப்பாறு தாண்டி போகும் போது
வெண்சாரை வந்து மறிக்கும் . அதை உண்டு முன்னோக்கி போனால்
இறைவனை காணலாம். இந்த நிலை பெற்றவன் ஆறாறு முப்பத்தாறு
தத்துவம் வென்றவனாகிறான். ஆத்ம ஜோதி தரிசனம் கண்டவன் இறப்பதில்லை.மரணமிலா பெருவாழ்வு பெறுவான். வள்ளலார் துணையாக வந்து நம்மை கரைசேர்ப்பார்.

Popular Posts