வியாழன், 25 ஆகஸ்ட், 2022

🔥 சாவாநிலை !🔥 - சாகாக்கல்வி நூலிலிருந்து


🔥 சாவாநிலை !🔥


செத்தால் தானே உயிர் மீண்டும் பிறக்கும் ?

சாவை தவிர்த்தால் இனி பிறப்பையும் தவிர்க்கலாமே !

சாவு ஏன் வருகிறது ? அது தெரிந்தால் தடுக்கலாமே !

சாவு கட்டாயமல்ல ! வாழத் தெரியவில்லை சாகிறான் !

எப்படி வாழ்வது ?

நமது ஞானிகள், காலையில் எழுந்திருப்பது தொடங்கி இரவு தூங்கப் போவது வரை அன்றாடம் நாம் செய்ய வேண்டிய நித்திய கரும விதிகளை சொல்லி வழிகாட்டியுள்ளனர்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்"

ஒரு மனிதனுக்கு மேன்மை தருவது நல்லொழுக்கமே ! நாம் நம் உயிரை விடவும் மேலாக ஒழுக்கத்தை கருதி கடைபிடிக்க வேண்டும் !

திருவள்ளுவர், கூறுவது யாதெனின், ஒருவன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை கடைபிடிப்பானாகில் அந்த உயிரை - இறைவனை உணரும் அடையும் நற்பேறு பெறுவான் ! எல்லாவற்றிலும் ஒழுக்கமே சிறந்தது !

இந்த ஒழுக்கம்

உடல் ஒழுக்கம், உயிர் ஒழுக்கம் என இருவகைப்படும் !

உடலும் உயிரும் சம்பந்தப்பட்டதல்லவா ? உடலும் உயிரும் என்றைக்கும் சம்பந்தப்பட்டே இருக்க ஒழுக்கம் அவசியமாகிறது !


உயிர் ஒழுக்கத்தை வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என விரிவாக தெளிவாக உபதேசித்துள்ளார்கள் ! எல்லாமே அதில் அடங்கிவிட்டது !


உடல் ஒழுக்கம் அதில் கூறப்பட்டுவிட்டது. நல் ஒழுக்கம் எது என்பதை விட, தீய ஒழுக்கம் எல்லாவற்றையும் தவிர் என்றால் சுலபமல்லவா ?

உடலைக் கெடுக்கும், உடலிலிருந்து உயிரை விரைந்து வெளியேற்ற துணைபுரியும் பஞ்சமா பாதகங்கள் செய்யாதே !

பொய், கொலை, களவு, கள், காமம் என்ற இந்த ஐந்தும் நம் வாழ்வில் வராது கவனமாக மிக மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் !

அறிவை மயக்குபவை, கெடுப்பவை, உடலை கெடுப்பவை, மனதை மயக்குபவை எதுவாயினும் தொடாதே - நெருங்காதே ! மனதாலும் எண்ணாதே ! இவை கொண்ட தீயவர்களோடும் சேராதே !

"துஷ்டனை கண்டால் தூர விலகு !"

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts