வியாழன், 29 மார்ச், 2018

சிவனேன்னு சும்மா இரேண்டா

*உலகோரே ஞானதவம் "சும்மா இருப்பதே"!*

"சிவனேன்னு சும்மா இரேண்டா" என சுட்டித்தனம் பண்ணும் குழந்தைகளை அதட்டி இருத்துவார்கள்!

ஞானம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் போதிக்கப்படுகிறது பார்த்தீர்களா?

*ஆகையால் கண்ட கண்ட யோகங்கள் செய்து கெட்டுப் போகாதீர்கள்!*

*சும்மா இரு!*

இறைவன் உங்களை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை?

சும்மா இரு என்றுதானே சொல்கிறார்?

ஏன்?

எதையாவது செய்து மேலும் மேலும் பாவ மூட்டையை பெரிதாக்குகிறாய்?

ஒன்றும் செய்யாதே!

சும்மா இரு!

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திரு மணி வாசக
          மாலை

பக்கம் : 129

குருவின் திருவடி சரணம்

புதன், 28 மார்ச், 2018

வேதங்கள் முடிவாக கூறுவது

ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் முடிவாக கூறுவதும்,இராமாயணம்,மகாபாரதம்,இதிகாசங்கள் இயம்புவதும்,பதினெட்டு புராணங்கள் கூறுகின்றதும்,ஆறு அந்தங்களும் எல்லா ஆகமங்களிலும் சொல்லப்படுவது இறைவனை பரம்பொருளைப் பற்றியே!
அப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே−என்றே உரைக்கின்றன.!

அந்த ஒருவன் நம் மெய்யிலே−உடலிலே கண்மணியிலே ஒளியாக உள்ளான் என்பதாகும்!

நம் கண்மணி ஒளியில் மனதை வைத்து தவம் செய்தால் நாதத்தொனி கேட்கலாம்!

நாதமுடிவில் *வாலைத்தாய் அமுதம் தரக் காத்திருக்கிறாள்.*

அவளருளால் அமுதம் உண்டு நாயகன் பரம்பொருள் சந்நிதியை அடையலாம்.

"நாட்டம் இரண்டும் ஒளியானால் நமனில்லையே"

இறைவனை நாடுகின்றவர்க்கு இது எளிதே!"

*"கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததாம்"நாம் இறைவனை நாடிப்போனால் இறைவன் நம்மை நாடி வேகமாக வந்திடுவார்!*

ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா..

🙏👁👁🙏..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை
மூன்றாம் பகுதி..

பக்கம்:86

ஞாயிறு, 25 மார்ச், 2018

பயம்

வன்புலால் வேலும் அஞ்சேன்
வளக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலாதவரைக் கண்டால் அம்மநாம்  அஞ்சுமாறே

வலிமையான உடல் கொண்டவன் கைவேலுக்கு அஞ்சமாட்டேன் !
பெண்களின் கடைக்கண் பார்வைக்கும் விழுந்து விடமாட்டேன் !
எலும்பும் உருகும் படியாக நோக்கிஇருந்து  - விழித்திருந்து
அம்பலத்தாடுகின்ற என் அற்புத திறம்மிகுந்த மணியை
போற்றி புகழ்ந்து தவம் செய்து பேரின்பம் தரும் இறையருளை
பருக மாட்டாதவரை அப்படிப்பட்டை அன்பில்லாதவரை கண்டால் தான் எனக்கு பயம் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்! தவம் செய்யாதவரை கண்டு தான் பயம். வேறு யாருக்கும் எதற்கும் பயமில்லை என்கிறார்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

புதன், 21 மார்ச், 2018

இறைவன் இயல்பு!

"நாம் தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம் தேடச் செய்கின்ற நற்றாய்"

இதுதான் இறைவன் இயல்பு!

கருணை!

இறைவன் தாயாகி முதலில் தன்னை உணரச் செய்கிறார்!

பின் நாம் பக்குவம் பெற்று நன்னெறியடைந்து தவம் செய்து நாம் தேடிக் கண்டடையச் செய்கிறார் தாய்!

உடலைதந்த தாயைத்தான் பெரிதாக சொல்கிறோம்!

உயிரைதந்த தயாபரனை நாம் நினைக்கிறோமா?

*அம்மையும் அப்பனுமான இறைவன் உயிர்தராவிட்டால் உடல் சவம்தானே!*

கொஞ்சமாக தன்னை காட்டும் தாய் ஆன இறைவனை பின்நான் கெஞ்சி கூத்தாடி *தவமியற்றி பரிபூரணமாக உணர வேண்டும்!*

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திருவருட்பாமாலை
          மூன்றாம் பகுதி

பக்கம் : 51

குருவின் திருவடி சரணம்

இரு உதயம் - இருதயம்!

"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "

பாடல்_ 2761

இரு உதயம் - இருதயம்! வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம்! இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்? "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்! இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம்  அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்! எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?!  இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச்  செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம  ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!

திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்! ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்!

ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !

ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,

நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202

செவ்வாய், 20 மார்ச், 2018

கடவுளை காணும் வழி


கடவுளை காணும் வழி :–
திருஅருட்பிரகாச வள்ளலார்.
(Www.VallalYaar.Com)

இறைவனை அடைவதாக சொல்லி 
பலர் செய்யும் தவறான
செயல் முறைகளை கீழ்கண்ட
பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.

"காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலரே"
– திருவருட்பா *(தலைப்பு : அறிவரும் பெருமை)
இந்த பாடலின் மெய்ஞ்ஞான விளக்கத்தை ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் “திருவருட்பா” பாடல்களுக்கு எழுதி உள்ள உரையில் “திருவருட்பா பாமாலை“ முதல் பகுதி என்ற நூலில் விளக்கி உள்ளார்கள்.
இறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இதுகதை!? இவைகள் நமக்கு தெரிவிப்பது என்ன?
நம் உடம்பில் , யோகம் – தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி குய்யத்துக்கும் குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ , பிரணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர். அங்கே காண முடியாது இறைவனை.
இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர். பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர் . அபாயம். மூடும் தலையையும் இல்லாமல் செய்யும் தவம் இது. பேராபத்துக்கள் இதனால் ஏற்படும். பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான். காணவே முடியாது கடவுளை.
இந்த இரு வழியிலும் செல்வோர் தான் அதிகம்.
கீழே போனாலும்(குண்டலினி-வராகர்) காண முடியாது.
மேலே போனாலும்(பிரம்மா-வாசி)
காண முடியாது.

நடுவிலே – கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண உணர வேண்டும். வழி காட்ட குரு வேண்டும். விழி காட்ட பெற்றால் விழியின் உள் சென்று இறைவன் – திருவடியை உணர்ந்து தவம் செய்தால் திருமுடி அறியலாம். உணரலாம். காணலாம்.
காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடும் அல்லவா. திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்துவிடும். இறைவன் கருணை வடிவானவன் அல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான். காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே. முதலில் திருவடி தரிசனம். பின்பு தான் திருமுடி தரிசனம்.
கண்ணில் தான் – கண்மணி ஒளியில் தான் தவம் செய்ய வேண்டும் என்று மற்ற பாடலிலும் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறி உள்ளார்கள்.
கண்மணிக்குள் துலங்கும் கண்மணி ஒளியான இறைவன் திருவடியை காணவும் கண்மணி ஒளியை நினைந்து , குரு அருளால் பெற்ற ஒளி உணர்வை பற்றி கண்ணீர் பெருக தவம் செய்ய வேண்டும்.
இதுவே இறைவன் அடி – முடி காண ஒரே வழி.

தகுந்த ஆச்சாரியர் மூலம் உங்கள் நடுக்கண்ணைத்(கண்மணிமத்தி) திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் (அருட்பா)
👀

ஞானம் முடிந்த முடிவாம் |



"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "
பாடல்_ 2761
இரு உதயம் - இருதயம்! வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம்! இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்? "இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்! இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம் அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்! 

எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?! இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச் செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும்!

பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!
திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்!
ஞானம் முடிந்த முடிவாம் |
ஞானம் பெறுவதே பேரின்பம் தரும்!
ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !


ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202

Popular Posts