Monday, December 26, 2016

யோகம்
---------------------
பிராணாயாமம்,  வாசியோகம் என்று மூச்சை பிடித்துக்கொண்டு அலையும் மூடர்களே,

" வகையான வாசியது  மனமும் கண்ணும் "

கண்மணி ஒளியே நம்  ஜீவன் ! துலங்குகின்ற ஒளி என  குரு மூலம் உணர்ந்து மனதை திருவடியாகிய கண்ணிலே வை!  தியானம் செய்!

நூல் : ஞானம் பெற விழி 

பக்கம் : 118
--------------------------
வாசி வாசி என பேசிப் பயனில்லை!

ஊசிமுனை என தலை உச்சி பற்றி பற்பல யோகம் எதுவும் பிரியோஜனமில்லை.

அதைப்பற்றி பேசி பிதற்றித்திரிகிறார்கள்!

அதனால்  பயனுமில்லை.

நூல் : மந்திர மணி மாலை

பக்கம் : 193
------- ------- -------
 நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆண்டாள், நம்மாழ்வார், அகத்தியர், இயேசு, முகமது நபி முதலான ஞானிகள் சொன்னதை படியுங்கள்!

இவர்கள் யாரும் பிராணாயாமம் செய்யச் சொல்லவில்லை

இப்போது இருக்கிற சாமியார் பயல்கள் இவர்களை விட ஞானியா ?

மக்களே கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுங்கள்!

நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்


-  ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : திரு மணி வாசக மாலை 

-------------------------

" கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போக "

என திருவருட்ப்ரகாச வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!

இங்கே அகஸ்தியரும் கூறுகிறார்

"கண்ணை மூடி சாம்பவியென்றே வுரைப்பர் தவமில்லார்கள்" என்றே!?

இப்போது, பல சாமியார்களும் தியானம் சொல்லித்தாரேன்!

சாம்பவி  முத்திரை யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு அதை செய் அப்படி நினை என என்னவெல்லாமோ கூறுகிறார்கள்!  

ஏமாற்றிப்  பிழைக்கிறார்கள்! அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாதே! பாவம்!

மடையர்கள்!

நூல் : ஞானம்  பெற விழி

பக்கம் : 130

Friday, December 2, 2016

மெய் மறக்கலாகாது.

கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்சென்று அவ்வெளியில் நிற்கையிலே,விண்ணிலுள்ள ஆறு,நெருப்பாறு வந்து அந்த வெளிவழி பாய்ந்து வருவதைக் காணலாம்.

இந்த ஊசிமுனை துவார உள் பாதையே மயிர் பாலம்.அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும்.அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும்.அந்த ஒளி தண்ணொளி,விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு.சுகமான அக்னி.குளிர்ச்சி பொருந்திய தீ.அதுவே "சுயஞ்சோதி" !

நடு மூக்கு - இது பரிபாஷை ! மூக்கைப் பார்த்து மோசம் போனவர் ஏராளம்.தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா?அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்லுவோம்.நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு.கண்ணைத்தான் இங்கு திருமூலர் மூக்கு என்கிறார்.
தவறாக பொருள் கொண்டு மூக்கைப் பார்த்து மூச்சை அடக்கி மோசம் போவார் பலர்.போலி குருக்களால் மூச்சுப்பயிற்ச்சி செய்து மோசம் போகாதீர்கள்.
 

கண் வழியே ஒளி ஊடுருவி ஆத்மஸ்தானத்தை அடையும் போது தசவித நாதம் கேட்கும்.ஆணவம் கொண்டோருக்கு ஒருபோதும் கிட்டாது.

துணிந்தவர்க்கே துணையாவாள் தாயானவள். 

ஒளியைக்கண்டு,ஒலியைக்கேட்டு ஆனந்தம் அடைந்தவர் அம்மையைக் காண்பர்.
 

தவம் புரிவோர் பின் அவ்விடத்திலே நிலைத்து இருக்க வேண்டும்.அப்போது தான் விடமுண்ட கண்டனை காண முடியும்.நாத முடிவிலே தான் இவையனைத்தும்.
 

அங்ஙனம் சமாதி கூடியவர்க்கு அட்டமா சித்தியும் கை கூடும்.சமாதி கூடிய அன்றே தான் ஆகிய ஆத்மாவுடன் கூடிய பரமாத்மா கைவல்யமாகும்.
 

சமாதியில் நின்று விடலாகாது.மேலும் மேலும் தவம் கூடக்கூட ஊன் உடலே ஒளியுடல் ஆகும்.
 

சமாதி நிலை ஞானத்தின் ஒரு படியே.சமாதி கூடி மெய் மறந்து போன தவ சீலர்கள் கோடி கோடிபேர்கள் நம் நாட்டிலுன்டு.

மெய் மறக்கலாகாது.
 

"சாயுச்சியம் பெற வேண்டும்"

Thursday, December 1, 2016

உச்சந்தலையில் உள்ள கோழை

ஆரம்ப கால சாதகர்களுக்கு தவத்தால் பித்தம் கலங்குவதால் அதிகமாக இனிப்பு சாப்பிட தோன்றும்.

உடல் மலத்தில் ஏழாவது ஆதாரமாக சகஸ்ர தளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லப்படுகிறது.

இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.இந்த கோழை முழுவதும் நீங்கினாலே நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

கண்களில் உள்ள ஒளியை உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும்.கண்களில் கனல் பெருகும்..


அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னிக்கலையை அடைந்து அங்கிருந்து மேலே ஏறிச்செல்லும் போது ஞானக்கனல் பெருகிப்பெருகி அந்த
உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும்.எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவம் இயற்ற வேண்டும்.


தவம் செய்யும்போது கண்கள் திறந்திருக்கவேண்டும்.கண் மூடினால் இருள்.திறந்தால் ஒளி.


கண்ணே சரீரத்தின் விளக்கு - பைபிள்.


பேரொளியான தேவனை தரிசிக்கவேண்டுமானால் கண்ணில் உள்ள சிறிய ஒளியை தவத்தால் பெருக்கி உடலை ஒளியாக்க வேண்டும்.உச்சி முதல் உள்ளங்கால் வரை சுத்த உஷ்ணம் பரவி ஊன் உடலே ஒளியுடலாகும்.நாம் தவம் செய்யும்போது,கண்மணி ஒளியை தியானம் செய்யும்போது முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி.தவம் தொடரும்போது நம் சிரசின் பின் தோன்றும் ஒளி வட்டம்.மேலும் தவம் தொடரத்தொடர சூரிய சந்திர அக்னிக்கலை சேர்ந்து மேலெழும்பும்.சிரநடு மேல் எழும்பும் நடுவான ஜோதி !!
அனுபவம் கூறும் உண்மை.

வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி

மனிதர்கள் காமவசத்தால் கண் ஒளி மங்கி இறப்பர்.

கள்ளுண்டு போதையால் அறிவு மங்கி ஞானம் பெறாது போவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணை அறியாத-கண்மணி ஒளியை-திருவடியை அறியாத மூடர்கள் உபதேசத்தால்- கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவர்.

கண்ணை மூடி தியானம் செய்பவர் முடிவில் கண்ணை மூடிவிடுவர்.அதாவது இறந்துவிடுவர்.கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்.உய்வர்.

கண்ணை திறக்க ஒரு குரு தேவை.குரு இல்லாத வித்தை பாழ்.குரு அருளின்றி திருவருள் கிட்டாது.


நாம் கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி தவம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் ஐந்து.சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம் எனப்படும்.நம் கண்மணி சுழற்சி வேகம் தான் இந்த அனுபவம்.துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை-எங்குமான ஜோதி நம்முள் திகழ்வதை காணலாம்.


திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி இது ;-
மனோ வலிமை இல்லாதவர்களே உலகில் உள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல் திண்டாடாதீர்கள்.பயப்பட வேண்டாம்.குருவாக என்னைக்கருதி என்னுடன் சேர்ந்து திருவாகிய இறைவன் ஜோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும் வள்ளலார்-இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக.நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனீடம் வாங்கி தருகிறேன்.என்னை நம்புங்கள் என உலக மக்களை அன்போடு அழைக்கிறார்.

காமத்தை எரிப்பது ?

காமத்தை-மாயையை எரிப்பது விளக்கான நம் கண்மணி ஒளியே
மும்மலங்களில் ஒன்றான மாயை - காமம் கண்ணொளி உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்.

இது அனுபவம்.காமம் அழிந்தால் தான் மெய்ஞானம்.
தவம் செய்யும் போது கண் திறந்திருக்கவேண்டும்.ஆனால் பார்க்கக்கூடாது.எப்படி?


கண்ணில் மணியின் உணர்வை குரு மூலம் தீட்சை மூலம் பெற்று இருத்தினால்,மனம் கண்மணி உணர்விலே லயித்து நின்றால்,மனம் வேறு எங்கும் போகாது.உணர்வு மணியிலே இருக்கும் வரை மனம் அதிலேயே இருக்கும்.இப்படியே இருக்க இருக்க புறப்பார்வை அற்றுவிடும்.அகப்பார்வை கிட்டும்.இதுவே மடை மாற்றம் என்பதாம்.


மனம் ஆகிய முயலகன் என்ற அரக்கனை தட்சிணாமூர்த்தி தன் பாதங்களில் போட்டு மிதித்து வைத்திருக்கிறார்.


பாதம் என்றால் - திருவடிகள் என்றால்- கண்கள். எனவே நம் கண்களில் மனதை நிறுத்தினால் மனம் அடங்கும் என்பது ஞானம்.
 

மனமடங்க வேறு மார்க்கம் இல்லை.
புலால் உண்பவனுக்கு ஞானம் கிட்டாது.
 

சத்தன்-சிவன்-வலது கண்-சூரிய கலை.சக்தி-இடது கண்-சந்திர கலை.கண்மணி உணர்வு பெற்று தவம் செய்யும்போது சில சமயம் இடது கண்ணும் சில சமயம் வலது கண்ணும் உணர்வு மேலோங்கும்.எது வந்தாலும் முடிவில் இரண்டும் ஒன்றாகிவிடும்.மூலம் என்றால் கண் என அகத்தியர் கூறுவார்.ஆசன வாயருகே உள்ள மூலம் கீழ் மூலம்.அது கர்ம பலன் நல்குவது.ஞானத்திற்கு கழுத்திற்கு மேல் தான் எல்லாம்.தலை தான் தலையதாகும்.

மூல முதல் ஆதாரம் ஆறையும் கீழ் தள்ளி,முதிர்ந்து நின்ற மேலாதாரம் பாரு பாரு என்றார் அகத்தியர்.

Popular Posts