திங்கள், 22 ஏப்ரல், 2019

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்






ஶ்ரீ இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்!!

ஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர!! இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.! ஆஞ்சநேயர்!!

சிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.!

இன்றும் வாழ்கிறார்! கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.!

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்! பரமபதம் போக வழி காட்டுவார்!!

கண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான்! கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான்! காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.

ஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா.

நூல்:பரமபதம்
பக்கம்:91

www.vallalyaar.com

நம் காயக்கப்பல்!

மனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை துடுப்பாக யூன்றி சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு சம்சார சாகரத்திலே
பெருங்கடலிலே போகும் போது காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்!

நம் காயக்கப்பல்!

ஏன் இந்த அவலம்!

எத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது!

நம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்
பெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை) நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்!

தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்!

எப்படி? யாரால்?

நம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி!

மாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்!

எந்த கரை?

இறைவன் இருக்கும் அக்கரையிலே!

அக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேர முடியும்!

மாலுமியை நம்பு!

பிறவிப் பெருங்கடல் கடக்கலாம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 102

குருவின் திருவடி சரணம்

மூலிகை-யோகம்-பட்டினி-சூட்சுமம்

உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்!

விட்டதடி ஆசை புளியம்பழத்தோட்டோடு என்பர்!

நாம் உடலை வெறுக்க வேண்டாம்!

உயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்!

உடல் பக்குவமாகிவிடும்!

இது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.

இது மாபெறும் தவறு!

பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்!

தவறு!

உடலை புண்ணாக்காதீர்!

உயிரை போற்றுங்கள்!

இன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்!

வெறும் உடலை வைத்து என்ன செய்ய!

இதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்!

"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

                    - திருமூலர்

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!

அ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்!

இதுவே மதியாகும்!

ஆன்மீகசெம்மல் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : திரு மணி வாசக மாலை

பக்கம் : 107

குருவின் திருவடி சரணம்

Popular Posts