திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!
சாகாக்கல்வி நூலிலிருந்து : 45
🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥
கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?
ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.
இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !
எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !
மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?
மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.
இது மெய்தானே !
பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !
அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !
அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !
👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !
👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !
இது மெய் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
தெய்வத்தால் ஆகாது ??
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தால் ஆகாது - எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். அப்போ திருவள்ளுவர் தெய்வத்தால் ஆகாது என்று சொல்லுகிறார். நம்ம கிட்ட இருக்கு(தெய்வம்) உள்ளே இருக்குது அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன்? வினையில் act பண்ணி கொண்டு இருக்கிறோம். உள் இருக்கும் தெய்வத்தால் ஆகாமல் வினை ஆட்டுவிக்கின்றது. அப்போ இந்த வினையை தீர்த்தால்
முயற்சி செய்து தவம் செய்து தீர்த்தால் .. தெய்வத்தால் எல்லாம் ஆகும். இதுதான் திருக்குறளுக்கு விளக்கம். யாராவது சொல்லி இருக்காங்களா? இதுதான் ஞானம். உண்மை பொருள் மெய்ப்பொருளை சிந்திக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மெய்ப்பொருள் என்றால் கண் ஒளி தான். இறைவன் துலங்க கூடிய இடம் தான் கண்ணை தான் மெய்ப்பொருள் என்பது..
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
சித்தர் போகர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல!
"இலையா மிடையி லெழுகின்ற காமம்"
திருமந்திரம் பாடல் - 2141
மனிதன் பிறக்கிறான் - குழந்தை! ஒன்றுமே தெரியாது! பச்சை மண்! எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான்! ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மீக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும்! நாத்திக, குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருப்பட்டதேயில்லை!
குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான் அப்போது நிகழும் உடல் வளர்ச்சி, பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு! அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி, காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்! வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் - வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல! நமது உடலின் இடையில் - இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலைதூக்குகிறது. இந்த இடையில் ஏற்படும் மாற்றமே, இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும்!
நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள்! பக்தியை ஊட்டினார்கள்! இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட, உணர வழிகாட்டினார்கள்! குருகுல வாழ்வை ஏற்படுத்தி பாலப் பிராயத்திலேயே நல்ல பண்போடு வளர வழி காட்டினார்கள்! மனிதன், மனிதப்பிறப்பெடுத்ததோடு நின்றுவிடாமல், மிருகம் போல் வாழாமல், மனிதனாக வாழவும்
வழிகாட்டினார்கள்! மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவுகள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால்தான் மனிதன்! மனதில் எழும் மும்மலமான ஆணவம் கன்மம் மாயையின் செயல் ஆசை, காமத்தில் தான் உதயமாகிறது! "மாயை" மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது! சிக்கிவிடாதே சீரழிந்து போவாய்! காமம் மனித
இயல்பு! சீராக்கிக்கொள்! திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு! மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர்! மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள்! பிற,உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்!
மனைவியோடும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம்! அதுவே உத்தமம்! விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும்!
ஜாக்கிரதை! உடல் நலமாக, பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும்! "காம சூத்திரம்" என்றொரு நூலை வாத்ஸ்யாயன மகரிஷி எழுதியுள்ளார்! ஒரு மகரிஷியே அதை எழுதி மக்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார்! காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்துதான் போவீர்கள்! காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும்! இலேசாக தொட்டுக் கொள்ளலாம்! ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தங்காது! திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும்!
பக்தி ஞானஈடுபாடு உடையவராக திகழ வேண்டும்! நமது பாத பண்பாடு இதுவே! திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லறநெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும்! சற்புத்திரர் பத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும் பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மீக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்! பிள்ளைகளை பெற்றால் போதாது?!
தக்கதொரு சன்மார்க்ககுருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும்! மாதா பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும்! குருவைக் காட்டாத பெற்றோர் வீண்! திருமணத்திற்கு பின்தான் காமம்! அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும்! பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்! இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே! பெரிய பெரிய சாமியார்களெல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள்! சாமானியன் எம்மாத்திரம்! கடவுளே என்றிருந்தால், பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம்! அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாய் அபிராமியாகவே பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர்! காமத்தில் மூழ்கிகிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார்-கடவுளை தொட்டார்! காமம் விலக கடவுளை நினை! கடவுளைப் பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்!
அசைவ உணவு காமத்தை உண்டாக்கும்! சைவ உணவே சன்மார்க்க உணவு! சாத்வீக குணம் சைவ உணவால் வரும்! அன்பு காட்டு! எல்லா உயிரையும் நேசி! எல்லா உயிரும் இறைவன்தான்! ஆசை கொள்ளாதே! காம உணர்வுக்கு அடிமையாகாதே! போகர்
சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல! பரம்பொருளோடு புருஷோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர்! அதனால் தான் போகர்! “பிறந்த இடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம்! கறந்த இடத்தை நாடுதே கடைகண்" என்றார் பட்டினத்தார்! இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர்! பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தையல்லவா சொல்லியிருப்பார்?! அதை சிந்திக்க வேண்டாமா?
அடியேன் 1992-ல் முதன்முதலாக எழுதிய "கண்மணி மாலை" நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன்! திருவருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன்! இதுவே மெய்ஞ்ஞானம்! பிறந்த இடம் - நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்தல்லவா! நம்மை பேதை என்கிறார் - பெண்ணின் பருவம் இது! ஜீவாத்மாக்களாகிய நாம் பெண் அம்சம் பேதைப்பெண்! சீவனாகிய பெண்பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே!
கறந்த இடம் - நாம் கண்மணி ஒளியை ஞானசற்குருமூலம் தூண்டி பின் தொடர்ந்து தவம் செய்யச் செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம்! அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறது! கடைசியில் கண்போய் கடைக்கண் சேர்ந்து நாடினால்தான் அமுதம் கிட்டும்! அதைத்தான் பட்டினத்தார் வெகு அழகாக கூறியுள்ளார்! காமம் நிறைந்த மனிதனுக்கு, மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகத் தெரியும்! கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் கடவுளையே காண்பர்! அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பர்! அறிவு தானே ஞானம்! "காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி" என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அம்மையை சரணடைய வேண்டும்! சதாகாலமும் சிவத்தை காமமுற்றவளே சிவகாமி! நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே, காண்பிக்கின்றவளே சிவகாமி!
அந்த சிவகாமிதான் தாய் - வாலை - கன்னி'ய' குமரி! தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம்! பணியுங்கள்! பார்க்கலாம்?! அடியேன் பார்த்தேன்! பரவசமானேன்! பகவதி அம்மா பரிவுடன் எங்களை காத்தருள்கிறாள்! ஆன்மீக குருவாய் எம்மை அமர்த்தி நாடி வருபவர் ஞானம் பெற மெய்ப்பொருள் உபதேசம், திருவடி தீட்சை செய்யும் பணியை செய்ய வைத்து காத்தருள்கிறாள்! இந்த வாலைத்தாயின் கன்னியாகுமரியைவிட சிறந்த கோவில் இந்த உலகத்திலேயே இல்லை!!
படியுங்கள்! பண்படுங்கள்! பரம்பொருள் அருள் கிட்டும்!
🔥அருளியவர்🔥:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்
www.vallalyaar.com
வியாழன், 25 ஜூலை, 2019
57 . மருட்கை விண்ணப்பம்
57 . மருட்கை விண்ணப்பம்
யாது செய்குவன் போதுபோ கின்ற
தண்ண லேஉம தன் பருக் கடியேன்
கோது செய்யினும் பொருத்தருள் புரியும்
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன்
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர் என் கண்மணி அணையீரே
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.
மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?
காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3
ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7
இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8
இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!
சஞ்சி தந்தரும் காமம் - பாடல் 9
ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை! எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
வெள்ளி, 9 மார்ச், 2012
திருவடி மெய்ப்பொருள் எது?
சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம்
சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - திருஅருட்பா
ஒன்றாகிய இறைவனை இரு கண்களாகிய ஆறு
வட்டங்கள் கடந்து ஏழு திரைகள் விலக்கி
ஆன்மஜோதியை நம் உள் காண வாரீர்
(ஞான சற்குரு சிவசெல்வராஜ்)
நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -
அம்மை திருப்பதிகம்(வள்ளலார் )
என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன்
- மெய்யருள்வியப்பு (வள்ளலார் )
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.
(பட்டினத்தார்)
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - (சிவவாக்கியர்)
எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!(பாரதியார்)
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
(கந்த குரு கவசம்)
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற
தெய்வம் தூண்டாத மணி விளக்காய்
துலங்குகின்ற தெய்வம்
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
