வியாழன், 4 பிப்ரவரி, 2016

சுருதி - யுக்தி - அனுபவம் பூரணமான நிலை

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்த பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டோ டுமே

வேத சாத்திர புராண இதிகாச உபநிசத்து இன்னும் உள்ள
ஞான நூற்களை எல்லாம் ஓதிக்கொண்டேயிருந்தால்
போதுமா? கடவுளை பாடி மகிழ்ந்தால் மட்டும் போதுமா?
லட்டு இனிக்கும் என்றும் அது எப்படி செய்யலாம்
தித்திக்க  என்ன வேண்டும் என சொல்லிக் கொண்டேஇருந்தால்
இனிக்குமா என்ன!?

சுருதி என நூற்களை பெரியோர் கூறுகின்றனர்! சுருதி சொன்னதை
யுகுதியால் சிந்தித்து தெளிந்து-தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து புரிந்து
பின் "அனுபவத்தில் பார்க்கவும் வேண்டும்!

சுருதி - யுக்தி - அனுபவம் மூன்றும் தான் பூரணமான நிலை!

ஓதியதை உணர்க! செயல்படுக!  அப்போது தான் உண்மை விளங்கும்!
லட்டு இனிக்கும் என்றால் சாப்பிட்டு பார்த்தால் தானே தெரியும்!? ஞான
நூல்களில் சாத்திரங்களில் எல்லாம் சொல்லப்படுகிறது! முடிந்த
முடிபான நிலை ஞானத்தை பெற என்ன சொல்லப்பட்டிருக்கிறது 
என பார்த்து புரிந்து அதன்படி நடக்கணும்! வேத சாத்திரங்கள் எல்லாம்
வல்ல இறைவன் நமது உடலில் கண்களில் மணியில் ஒளியாக
துலங்குகிறான் என திரும்ப திரும்ப கூறுகின்றன!

கண்ணில் மணியில் ஒளியை நினைந்து உணர்ந்து அங்கேயே நிலைத்து நின்றால் அதுவே தவம் என்றும் எல்லா ஞானிகளும் கூறியிருக்கின்றனர்! அங்ஙனம் தவம் செய்கையில் கண்மணி ஒளி உள்ளே போகும் இருகண்ணும் உள்ளே சேரும் அக்னி நிலையை அடையும்! இதுவே சாதனை அனுபவம்! தவப்பயன்!

ஏ, மனிதா ஒரு மாத்திரை நேரமாயினும் கண் சிமிட்டும் நேரம் மட்டிலாவது
கண்மணி ஒளியை புறப்பார்வையிளிருந்து மாற்றி அகப்பர்வையாக மாற்று!
உள் நோக்கு! எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா? பசுமரத்தாணி
போல் உள்ளே விரைவாக செல்ல வேண்டும்! ஊன்றி பதிய வேண்டும்!

தவம் இங்ஙனம் நிலைத்து நீடித்தால் இறப்பு என்பது இல்லாதது ஆகும்!
பிறப்புக்கு சந்தர்ப்பமே இன்றி பிறந்த இப்பிறவியிலே முக்தி பெறுவோம்!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

இறைவன் திருவடியை நினைக்க உணர??

போதைக்கு அடிமையாகாதே அறிவு துலங்க வேண்டுமே தவிரே மயங்க கூடாது!

தப்பு செய்தால் தண்டனை கிட்டும். யாரும் தப்ப முடியாது. அரசாங்கத்திடம் தப்பலாம் ஆண்டவனிடம் தப்ப முடியாது! வினை விதைத்தவன் வினையறுத்தே ஆக வேண்டும்!இதற்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல! நல்லதே நினைப்போம்!நல்லதே சொல்வோம்! நல்லதே சொல்வோம்! நல்லதே நடக்கும்!

இறைவன் பாதமாகிய திருவடிகளை நினைக்க வேண்டுமானால் அவன் நல்லறம் செய்பவனாக இருத்தல்  வேண்டும். நன்னெறி வழி நடப்பவனாக இருக்க வேண்டும்! சைவ உணவு உட்கொள்பவனாக
இருக்க வேண்டும்! பஞ்ச மா பாதகங்கள் புரியாதவனாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவனாலேயே இறைவன் திருவடியை நினைக்க உணர முடியும்! 

கண்மணி ஒளியில் நின்று நிலைத்து உள்ளே உற்று உற்று பார்க்க அகத்துள்ளே துலங்கும் ஆத்ம சோதியை காணலாம். அங்ஙனம் கண்டவர்களே தன்னை உணர்ந்தவர்களே
சித்தர்கள் ஆவார்கள்! இங்ஙனம் தன்னை உணர்ந்த சித்தர்கள் ஞானிகளை பணிந்து அவர் திருவடியே கதி என சரணாகதி அடைந்தோமானால் அவருளாலே ஆசியாலே அவருக்கு முக்தி கொடுத்த இறைவன் நமக்கு முக்தி தர நம் முன்பு வருவார் ! அருள்வார்.
இது சத்தியம் !

Popular Posts