புதன், 18 மே, 2016

குரு


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 27

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே

சனி, 14 மே, 2016

மாயை


ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு
ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவ சக்தியாய் துலகுவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம்சம் அல்லவா சிவம் படைத்தவரல்லவா
உயிராக எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக
சக்தி துலங்குவதால் மகளுமாவாள்!

தாயே வாலையே என மகா மாயையை பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும்
ஆட்டுவிப்பாள்! தாயே என சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமி பட்டரை போலே!

ஞாயிறு, 8 மே, 2016

வள்ளல் பெருமான் எத்தகைய மக்களை தவிர்த்தார் / விரும்பவில்லை?

"நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ
நெறி செல்லும் மானிட பேய்கள் பேய்கள் பால் சேராமை ஏற்கருள்வாய்" - திருவருட்பா

மேல் உள்ள பாடலில் வள்ளல் பெருமான் இறைவனிடம் திருவடி தியானம் செய்யாதவர்கள் , சிறுதெய்வ வழிபாடு செய்து உயிர் கொலை செய்பவர்கள் தனது அருகில் வராமல் காத்து அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறார். விரிவான விளக்கம் - ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் திருவருட்பா மெய்ஞான உரை என்ற புத்தகத்திலிருந்து :
ஒளியான இறைவா உன் திருவருள் அனுவளவேனும் கிடைத்தால் சிறு துரும்பும் முத்தொழிலை செய்யும் ஆற்றல் பெறும்! என வேதங்கள் உரைக்கின்றனவே! இதை உணராமல் இந்த மானுட ஜன்மங்கள், இறைவன் திருவடி தியானம் செய்யாமல் ஞானம் சிறிதேனும் இல்லாமல் செத்தொழிகிண்டறனர் !? மாதா பிதா பெற்ற மானிட பிறவிகள், குருவை பெற்று ஞானம் பெற்று தெய்வத்தை அடைய முயற்சி கூட செய்ய மாட்டேன் என்கிறார்கள்!? அறியாமையால் மூழ்கி கிடக்கும் மாந்தரை பார்த்து இவ்வுலகில் தோன்றிய அனைத்து மகான்களும் வேதனை பட்டனர்! விரக்தி அடைந்தனர்! ஞானம் பெற விரும்பாமல் நரகம் போக வேக வேகமாக செயல் படுகின்றர்கள் என ஞானிகள் எல்லோரும் வருந்தினர்!
உலகத்திற்கே ஞானம் போதிக்கும் எண்ணிலா ஞானிகள் இருக்கும் ஞான பூமியாம் இந்தியாவில் இருந்து கொண்டு இந்த திருவடி ஞானம் அறியாதவர்களை என்னவென்று சொல்வது! இறைவனை அறியாதது மட்டுமல்ல! இறை நிலைக்கு விரோதமாக செயல்பட்டு பாவ மூட்டையை மேலும் சேர்கிறார்கள் அந்தோ பரிதாபம்!
இறைவனை அறியாமல், உணராமல் தெய்வம் என்று கண்டபடி பற்பல தீயவழிபாடுகள் புரிந்து கெட்டும் போகிறீர்கள்! சிந்தியுங்கள்! எல்லா உயிரகளையும் படைத்த இறைவனுக்கு நீயார் உயிர்பலி கொடுக்க!? இறைவன் படைத்த உயிரை கொல்வது
அந்த இறைவனுக்கு விரோதமான காரிய மில்லையா?! சிறு துரும்பை கூட அசைக்க சக்தி இல்லத நீ எப்படி பிற உயிரை அழிக்க முனைந்தாய்? பிற உயிரை வதைப்பவன் மிருகமேயாவான்! அவன் மனித உருவில் உள்ள பேய்கள்!? சாமிக்கு மது மாமிசம் படைக்கும் அறிவிலிகள் மற்றவர்களிடம் அன்பாகவா நடந்து கொள்வார்? இப்படி பட்டவர்கள் தான் பேய் குணம் கொண்டவர்கள்! இவர்களால் தான் நாட்டில் பஞ்ச மா பாதகங்களும் நடக்கின்றன!

புதன், 4 மே, 2016

வாலை

தூக்கத்தில் மனம் ஒடுங்கும்! ஞான தவம் செய்யும் போது மனமும் ஒடுங்கும் பிராணனும் ஒடுங்கும்! மனம் செம்மையாக பக்தி செய்! ஞான நூற்களை படி! கோவிலுக்கு போ!

புண்ணியர்களை தரிசனம் செய்! சத்சங்கத்தில் கூடு!

எல்லாவற்றிக்கும் மேலான  தாயைப் பணி !வாலையை பணி! கன்னியாகுமரிக்கு வா! பகவதியம்மனை வணங்கு!
அருள் பெறுவாய்! ஞானம் பெறுவாய்! துர்குணங்களில் இருந்து மனம் விடுபடும்!

நம்மை பெற்றவள் வாலை! நம்மை வளர்ப்பவள் வாலை ! நம்முள் இருந்து வாழ  வைப்பவளே வாலையே ! அந்த வாலையை பணிய வேண்டாமா? அருள் பெற வேண்டாமா?

மனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வசப்படும்! மேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது பிராணனும் நிலை பெறும் ஒடுங்கும் இதுவே சமாதி!

இங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும்!
ஒரேயடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது! இதற்குதான் தக்க
குரு வேண்டும் என்பது!? சமாதியில் மூழ்கினால் குரு தட்டி எழுப்பி விடுவார்!

ஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூட்சும நிலையில் உன்
ஞான சற்குரு கூடவே இருப்பதால்!? சமாதி பழக்கம் பழக்கமல்ல சகஜ பழக்கமே  பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான வழியை கூறுகிறார்!

குண்டலினி சக்தி - தலை ஞான கேந்திரம்!


இறைவன் மீது பக்தி இல்லை எனில், குரு மீது பக்தி இல்லை
எனில் எவனுக்கும் ஞானம் வராது! இறைவனை பணியாத
ஞானி யாராவது உண்டா என்று சொல்லுங்கள்!? பக்தி பெருக்கால்
ஞானம் தோன்றி அதனால் தான் இறைவனை அடைய முடியும்!
பக்தி இல்லையேல் ஞானம் இல்லை!

இன்ப துன்பத்தை சமமாக பார்க்கும் தன்மை! வெளிப்பார்வை
குறைந்து அகப்பார்வை அதிகமாகும்!சதா சும்மா இருப்பது!
இதுவே ஞானியின் லட்சணம்! குண்டலினி சக்தியாக பரிமளிப்பவள்
வாலைத்தாயே! யோக சாஸ்திரம் கீழே மூலம் என்று கூறும்?
நமக்கு அதுவேண்டாம். ஞானம் சொல்வது என்னவென்றால்
கழுத்துக்கு கீழே கர்மமே! தலை மட்டுமே ஞான கேந்திரம்!
குண்டு போல் இருக்கும் இடத்தில் அனல் உள்ளது! அது தான் நீ
என்கிறது ஞானம்! இதுவே பெரும் ரகசியம்! நம் கண்மணி உருண்டையாக
பூமியை போல் பூமியை போல் குண்டு போல் தானே உள்ளது?
பூமியின் உள் மத்தியில் அனல் உள்ளது போல் கண்மணி உள்  மத்தியில்
அனல் உள்ளது. அது நீ தான்! குண்டு + அனல் + நீ  குண்டலினி! நமது
கண்மணி தான் குண்டலினி சக்தி உள்ள இடம்! அது தான் உயிராகிய
ஆத்மா துலங்கும் இடம்!


திங்கள், 2 மே, 2016

ஞானம் பெற பக்தி வேண்டும்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன்
தவம் செய்ய வேண்டும்! பக்தி யாரிடமாவது காட்டு அப்போது தான் நீ பண்படுவாய் !

பக்தியில்லையேல் ஞானம் இல்லை! குருவிடம் பக்தி செலுத்து! உருப்படுவாய்! பக்திதான் ஒழுக்கத்தை பணிவை கொடுக்கும்! பக்தியே முக்திக்கு முதல் படி!

மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தி அல்ல! ஜம்பத்துக்காக பக்தி செலுத்துவது  அன்னதானம் செய்வது பக்தியல்ல! இறைவன் பெரும் புகழை மனமுருகி பாடு!

இறைவனை பற்றி உலகுக்கு எடுத்துக்கூறு! ஞான தானம் செய்! இறைவன்
ஓவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்க ஜோதியாகவே அருட்பெரும் ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறு இதுவே ஞான தானம்!இதை விளக்கும் நூல்களை ஞான தானம் செய்!


Popular Posts