சனி, 5 டிசம்பர், 2020

உடம்புடன் ஒளியில் கலந்தவர்கள்



பட்டினத்தார் திருவொற்றியூரில் சமாதியில் அமர்ந்து உடம்பை சிவலிங்கமாக ஆக்கியவர்
பத்திரகிரியார் திருவிடைமருதூர் ஆலயத்தில் உடம்புடன் மறைந்தவர்

ஆண்டாள் திருவரங்கத்தில் அரங்கநாதர் விக்கிரத்தில் உடம்புடன் கலந்தார்
திருநாவுக்கரசர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் திருப்புகலூரில் சிவலிங்கத்தில் உடம்புடன் கலந்தவர்


ஞானசம்பந்தர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் உடம்புடன் ஒளியில் கலந்தவர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்களில் ஒருவர் சிதம்பரம் சிற்சபையில் உடம்புடன் கலந்தவர்.
சுந்தரர் சைவ சமய குரவர்களில் ஒருவர் வெள்ளை யானையில் அமர்ந்து உடம்புடன் கயிலை சென்றதாக கூறப்படுகிறது.


ஹரதத்தர் தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் வாழ்ந்தவர் உடம்புடன் பலரும் காண மறைந்தார்


சத்குரு சாமிகள் நரை திரை பிணி மூப்பு இன்றி திருச்சி மாவட்டம் வெள்ளலூரில் சமாதி இருந்தவர் அன்பர்கள் காண குற்றாலத்தில் உடம்போடு மறைந்தவர்


ஸ்ரீதர சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவிசநல்லூரில் வாழ்ந்தவர். திருவிடைமருதூர் ஆலய சன்னதியில் பலரும் காண உடம்புடன் மறைந்ததாக கூறப்படுகிறது


மத்வாசாரியார் கர்நாடகவில் பிறந்து நீண்ட நாள் வாழ்ந்து உடுப்பியில் உடம்புடன் மறைந்தவர்


இராமதாசர் ஆந்திரா பத்ராசலம் என்னும் இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து, பல சோதனைகளை சந்தித்தவர். விமானத்தில் ஏறி உடம்புடன் வானொலியில் மறைந்தார் என்று கூறப்படுகிறது.


துக்காராம் இறைவனின் புகழை பாடியவாறு, அன்பர்களுடன் வீதியில் நடந்து செல்லும்போது பலரும் காண உடம்புடன் மறைந்தவர். இவர் மறைந்த இடம் பூனாவுக்கு அருகில் உள்ளது. அங்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வருகிறது

வெள்ளி, 30 அக்டோபர், 2020

நவராத்திரி - விஜய தசமி

"மங்களமாய் நவராத்திரிப் பூசைக் காக வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி"

- தேவி பூஜாவிதி
வாலை திரிசூலி ஓங்கார நாதமானவள் ஆதலால் ஓங்காரி! ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னியகுமரியிலே வந்தமர்ந்தாளாம்!

மூன்று மூன்று மூன்று வட்டமாக மும்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்! ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழபிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி - நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையை கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா!

ஞானம்! வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - கன்னியகுமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியாகுமரிக்கு! பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்! கன்னி'ய'குமரியிலே! பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே!

எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவள்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணி!!

படியுங்கள்! பண்படுங்கள்!
பரம்பொருள் அருள் கிட்டும்!
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ்

                    www.vallalyaar.com

புதன், 21 அக்டோபர், 2020

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் ...


" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"


இங்கே நாம் ஒரு செல் அமீபாவிலிருந்து மனிதனாவது வரை உள்ள
பரிணாம வளர்ச்சியை சொல்கிறார் மணிவாசகர்! கல்லாய் - புல்லாய் - பூடாய்
- மரமாய் - புழுவாய் - பாம்பாய் - பல்விருகமாய் - பறவையாய் - பேயாய் - கணங்களாய்
- வல்லசுரராய் - தேவராய் - மனிதராய் - முனிவராய் இப்படியே நம் பிறப்பு
எண்ணிலா பிறப்பாம் !

அவரவர் கர்ம வினைக்கேற்ப பிறப்பு எண்ணிலா பிறப்பாம்! அவரவர் கர்ம
வினைக்கேற்ப பிறப்பு மாற்றி மாற்றியும் அமைந்து விடும்! அதுவே விதி! " தாவர
சங்கமம் " என பிறப்பு நிலையை ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ளதை
குறிப்பிடுகிறார்! விஞ்ஞானம் பேசும் அறிவில்லாதவர்கள் குரங்கிலிருந்து தான்
மனிதன் தோன்றினான் என்கிறார்கள்! மெய்ஞ்ஞானம் சொல்வது ஓரறிவு தொடங்கி
ஆறறிவு மனிதனாகி பின் அவரவர் வினைக்கேற்ப பிறப்பு அமைகிறது! அது வினைக்கேற்ப
எப்படி வேண்டுமானாலும் அமையலாம்! இப்படி எல்லா பிறப்பும் பிறந்து பிறந்து
நொந்து போனேனே இறைவா எம் பெருமானே இனியாவது பிறவா நெறி தந்து என்னை
இரட்சிப்பாய் என வேண்டுகிறார் மணிவாசகர்!

புத்தர், தான் ஒரு செல் அமீபாவாக இருந்ததை உணர்கிறேன் என்கிறார்!
மாணிக்கவாசகர் சொல்வது சரிதான்! விஞ்ஞானிகள் சொல்வது போல, நான் குரங்கிலிருந்து
பிறந்தேன் எனக் கூறவில்லை! விஞ்ஞானம் நாளுக்குநாள் மாறுவது! அறிவில்லாதவர்
கூற்று, ஒரு வரையறைக்கு உட்பட்டது! மெய்ஞ்ஞானம் - பரிபூரணமானது! தன்னை
அறிந்து பின் இறைவனை உணர்ந்த ஞானிகள் கூறுவது! பரிபூரண - தெளிந்த அறிவே
மெய்ஞ்ஞானம் தருகின்றது!

இந்த பரிபூரண ஞானம் - மெய்ஞ்ஞானம் நம் பாரத தேசத்தில் பெற்றவர்கள்
கோடானுகோடி பேர்கள்!! புரிந்து கொண்டவர்கள், விழித்துக் கொண்டவர்கள். பிறவிச்
சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்! அல்லாதவர்கள் வினைப்பயனால் வெந்து
மனம் வாடுகிறார்கள்! மனிதனே - நீ முதலில் மிருகம்போல் பறவைபோல், பேய்
மாதிரி வாழாதே! அரக்கனாக மாறாதே! ஞானிகள் கூறிய அறநெறிப்படி வாழ்ந்து
மனிதா முதலில் நீ நல்ல மனிதனாக வாழு! தவம் செய்! ஞானதானம் செய்!
புனிதனாவாய்! இறைவனருள் பரிபூரணமாக கிட்டும்! உலக மக்கள் அனைவருக்கும்
அம்மையும் அப்பனும் ஒரே இறைவன்தான்! ஒளிதான்! இருப்பது கண்ணிலே!
செல்லா, அ நின்ற இத்தாவர சங்கமத்துள் - இறைவன் இத்தாவர சங்கமத்துள்
' அ ' விலே நிற்கிறார்! 'அ ' வாகிய கண்களிலே ஒளியாக துலங்குகிறார். 'அ ' என்றால்
8. வலது கண் - சிவம் - சூரியஒளி எனப்படும்!


அருளியவர்:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

திங்கள், 19 அக்டோபர், 2020

உபசாந்தம்

  எட்டாம் தந்திரம்

"சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம்"

திருமந்திரம் பாடல் - 2376

சீவன் சிவனாக - பரமாக பற்று அறக் கூடுவது உபசாந்தபதமதிலே! உப என்றால் இரண்டு. சாந்தம் - அமைதி - மோனம் கண். நம் இரு கண்களே உபசாந்தம் எனப்படும். 

நம் சீவனை சிவமாக்க இரு கண்ணைப் பிடி முதலில்! உலகப் பற்றறும்! கண்ணைப் பற்றியிருக்கும் மும்மலப்பற்றறும்! உள்புகும் ஒளி பெருகி சீவன் சிவமாகும்! அறியலாம்! உணரலாம்

                 படியுங்கள்! பண்படுங்கள்!

             பரம்பொருள் அருள் கிட்டும்!

               

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,

          ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

                            🔥அய்யா🔥

www.vallalyaar.com

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்!



எட்டாம் தந்திரம்

"அத்த னமைத்த வுடலிரு கூறினிற்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே"

திருமந்திரம் பாடல் - 2123

உலக மக்கள் அனைவருக்கும் அத்தன் - அனைத்துமானவன் - இறைவன், தான் உயிராக உடலினுள் நின்று அருள்கிறான்!  அப்படி அவன் அமைத்த உடல் இரண்டு கூறாக உள்ளது! நாம் பார்க்கின்ற நமது ஸ்தூல உடல்! இதற்குள் அமைந்த சூக்கும உடல்! என இரண்டு! 

சூக்கும உடல் ஸ்தூல உடல் தோற்றம் போலவே வெள்ளொளியென விளங்கும் புகை படலம் போன்றது! இது சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தினையும் உணர வல்லதாகும்! சத்தம் காதால் கேட்பது. பரிசம் உடலால் உணர்வது. ரூபம் கண்ணால் பார்ப்பது. ரசம் வாயால் சுவைப்பது. கந்தம் மூக்கால் நுகர்வது என பஞ்சேந்திரிய செயலாகும்! 

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்! ஆங்காரம் உள்ளவன் - செயலாற்றும் திறன் படைத்தவன். தலைக்கனம் கொண்ட ஆணவக்காரன் அல்ல! இதுவே புரியட்டகாயம் எனப்படும்! ஔவையார் விநாயகர் அகவலில் புரியட்டகாயம் புலப்பட எனக்கு தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி என பாடுவதை காண்க!

                     🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,

        ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

                          🔥அய்யா🔥

           www.vallalyaar.com

இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே

  எட்டாம் தந்திரம்

"எண்சாண ளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கா லுடலிற் கரக்கின்ற கைகளில்|
புண் கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண் பாலுடம்பு தன்னாலுடம் பாமே"

திருமந்திரம் பாடல் - 2127

எண்சாண் உடம்பு! நமது உடல் அளவு இதுதான்! அவரவர் கையால் அளந்தால் ஒரு சாண் ஒருகையளவு எட்டுகையளவுதான் எண் சாண்தான் உடம்பு! எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்! தலையே நம் உடலில் தலையாயது! முக்கியமானது! ஏனெனில் உயிர் நம் சிரநடுவுள் தான் உள்ளது! கண்கால் - நம் கண்களே இறைவனின் கால்கள். திருவடி! அதனால் தான் கண்கால் என்றார் திருமூலர்! 

நமது உடலில் கரக்கின்ற கை - தலையில் உள்ள கை நம் இரு கண்களே! நமது கண்கள் தான் நமது கை, இறைவனுக்கு கால்! பரிபாஷை இரகசியம்! நமது வலக்கை வலது கண் இடக்கை இடது கண் இரண்டையும் குவித்து இறைவனை தொழுதால்! இரு கரம் சேர்த்து தானே கும்பிட வேண்டும்! இரு கண் இணைந்தால், உள்ளே இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே புண் கால் நாம் சேர வேண்டிய மூன்றாம் இடம்! முச்சுடரும் சேர்ந்த நிலை! 

அது 8 கலை உடைய அக்னி! 8ன் விரிவு, 8x8 64 கலையாகும்! இரு கண் உள் சேர்ந்தால் வலது சூரிய கலை 12-ம் இடது சந்திர கலை 16-ல் 12 உடன் சேரும் எஞ்சிய 4 கலை அக்னி கலையின் 64 கலையுடன் சேர்ந்து 68 கலையாகும்! அப்போதுதான், சூரிய சந்திர கலை இணைந்து அக்னி கலையுடன் சேரும்போதுதான் ஆத்மஜோதி தரிசனம் கிட்டும்! புணர்தல் என்றால் சூரிய சந்திர கலைகள் இணைதல்! புணர்ந்து அக்னி கலையுடன் சேர்வதால் இது புண் கால் அறுபத்தெட்டு ஆத்மஸ்தான அவ்வுடலே சூக்கும உடல் - யாக்கை எனப்பட்டது! 

அங்கே தான் நன்மைதரும் பால்-அமுதம் கிட்டும் எனவே தான் நண் பால் உடம்பு என்றார் திருமூலர்! அதுயார்? இறைவன் தன்னால் நமக்கு அருளப்பட்ட உடம்பு! சூக்கும சரீரம்!- புரியட்டகாயம்!

                              🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

                            www.vallalyaar.com

பாம்பு என்றால் கட்செவி!

  எட்டாம் தந்திரம்

"அழிகின்ற ஒருடம் பாகும் செவிகண்"

திருமந்திரம் பாடல் - 2140

காம வசப்பட்டு மனிதன் கண்ணிருந்தும் குருடனாய்! செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்! நல்ல சற்குருவை நாடி வேதபுராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான் பாவி! சற்குருமூலம் திருவடி தீட்சை கண்களில் பெற மாட்டான்! மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம்போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்! "

அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்" என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார்! ஆம், இந்த மானுடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம்போனபடிவாழ்ந்தால்! மனதை செவிகண்ணில் நிறுத்தி தவம் செய்தால், மனதை இறைவன் திருவடியில் ஒப்படைத்து தவம் செய்தால், செவிக்கண் ஒளிர்ந்து நாதத்தொனி கேட்டு, விண்ணிலே விளங்கும் நாதத்தொனி, ஓம் கேட்டு, தன்னிலும் ஒலிக்கக்கேட்டு, உடலில் ஒளிவியாபித்து உடலும் அழியாது உயிரும் பிரியாது பேரானந்த நிலை பெறுவர்! மெய்ஞ்ஞானியாவார்! செவிக்கண் -  நம்கண் பார்க்க மட்டுமல்ல! கேட்கவும், உள்ளேபோனால் நாதத்தொனி, தசவித நாதம் கேட்கவும் செய்யும்! பாம்புக்கு செவி - காது கிடையாது! கண்ணே பார்க்கவும் ஒலியை கேட்கவும் செய்கிறது அதனால் தான் பாம்பின் கண்ணை "கட்செவி" என்பர்! 

பாம்பிற்கு மற்றொரு பெயர் "அரவம்"! ஏன் எனில் அது சப்தத்தை அரவத்தை உணர்ந்து செயல்படுவதால் தான்! கண்ணால் பார்க்கவும் சப்தத்தை அரவத்தை உணரவும் ஆண்டவன் கட்செவி தந்துள்ளான்! இது ஒரு ஞான ஜீவன்! எல்லா தெய்வங்களுடனும் பாம்பு சம்பந்தப்பட்டிருக்கும்! ஒருவர் கழுத்திலே பாம்பு! ஒருவர் பாம்பணையில் படுத்திருக்கிறார்! ஒருவர் பாம்பை இடுப்பில் கட்டியிருக்கிறார்! ஒருவர் பாதத்திலே பாம்பு! ஒருவருக்கு பாம்பு கிரீடமாகிறது! இது போதாதென்று பாம்பாட்டி சித்தர் என்றொருவர்! பாம்பு என்றால் கட்செவி! 

கண்ணும் செவியும் சேர்ந்தது. கண்ணில் மணியில் ஒளியை நினைந்து நீ தவம் செய்தால் கண் உள்ளேயே தசவித நாதமும் ஓங்காரமும் கேட்கலாம்! இதை உணர்த்தவே, மனிதன் அறியவே இந்த பாம்பு புராணமெல்லாம்! கண்ணின் - செவிகண்ணின் மகத்துவத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ஞானம் பெற கண்ணை அறி!


                 படியுங்கள்! பண்படுங்கள்!

               பரம்பொருள் அருள் கிட்டும்!

             

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

                    wwww.vallalyaar.com

சித்தர் போகர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல!

 "இலையா மிடையி லெழுகின்ற காமம்"

திருமந்திரம் பாடல் - 2141


மனிதன் பிறக்கிறான் - குழந்தை! ஒன்றுமே தெரியாது! பச்சை மண்! எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான்! ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மீக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும்! நாத்திக, குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருப்பட்டதேயில்லை! 

குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான் அப்போது நிகழும் உடல் வளர்ச்சி, பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு! அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி, காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்! வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் - வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல! நமது உடலின் இடையில் - இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலைதூக்குகிறது. இந்த இடையில் ஏற்படும் மாற்றமே, இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும்! 

நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள்! பக்தியை ஊட்டினார்கள்! இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட, உணர வழிகாட்டினார்கள்! குருகுல வாழ்வை ஏற்படுத்தி பாலப் பிராயத்திலேயே நல்ல பண்போடு வளர வழி காட்டினார்கள்! மனிதன், மனிதப்பிறப்பெடுத்ததோடு நின்றுவிடாமல், மிருகம் போல் வாழாமல், மனிதனாக வாழவும்

வழிகாட்டினார்கள்! மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவுகள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால்தான் மனிதன்! மனதில் எழும் மும்மலமான ஆணவம் கன்மம் மாயையின் செயல் ஆசை, காமத்தில் தான் உதயமாகிறது! "மாயை" மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது! சிக்கிவிடாதே சீரழிந்து போவாய்! காமம் மனித

இயல்பு! சீராக்கிக்கொள்! திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு! மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர்! மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள்! பிற,உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்!

மனைவியோடும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம்! அதுவே உத்தமம்! விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும்!

ஜாக்கிரதை! உடல் நலமாக, பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும்! "காம சூத்திரம்" என்றொரு நூலை வாத்ஸ்யாயன மகரிஷி எழுதியுள்ளார்! ஒரு மகரிஷியே அதை எழுதி மக்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார்! காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்துதான் போவீர்கள்! காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும்! இலேசாக தொட்டுக் கொள்ளலாம்! ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தங்காது! திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும்!

பக்தி ஞானஈடுபாடு உடையவராக திகழ வேண்டும்! நமது பாத பண்பாடு இதுவே! திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து  இல்லறநெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும்! சற்புத்திரர் பத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும் பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மீக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்! பிள்ளைகளை பெற்றால் போதாது?!

தக்கதொரு சன்மார்க்ககுருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும்! மாதா பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும்! குருவைக் காட்டாத பெற்றோர் வீண்! திருமணத்திற்கு பின்தான் காமம்! அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும்! பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்! இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே! பெரிய பெரிய சாமியார்களெல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள்! சாமானியன் எம்மாத்திரம்! கடவுளே என்றிருந்தால், பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம்! அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாய் அபிராமியாகவே பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர்! காமத்தில் மூழ்கிகிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார்-கடவுளை தொட்டார்! காமம் விலக கடவுளை நினை! கடவுளைப் பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்! 

அசைவ உணவு காமத்தை உண்டாக்கும்! சைவ உணவே சன்மார்க்க உணவு! சாத்வீக குணம் சைவ உணவால் வரும்! அன்பு காட்டு! எல்லா உயிரையும் நேசி! எல்லா உயிரும் இறைவன்தான்! ஆசை கொள்ளாதே! காம உணர்வுக்கு அடிமையாகாதே! போகர்

சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல! பரம்பொருளோடு புருஷோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர்! அதனால் தான் போகர்! “பிறந்த இடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம்! கறந்த இடத்தை நாடுதே கடைகண்" என்றார் பட்டினத்தார்! இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர்! பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தையல்லவா சொல்லியிருப்பார்?! அதை சிந்திக்க வேண்டாமா?

அடியேன் 1992-ல் முதன்முதலாக எழுதிய "கண்மணி மாலை" நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன்! திருவருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன்! இதுவே மெய்ஞ்ஞானம்! பிறந்த இடம் - நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்தல்லவா! நம்மை பேதை என்கிறார் -  பெண்ணின் பருவம் இது! ஜீவாத்மாக்களாகிய நாம் பெண் அம்சம் பேதைப்பெண்! சீவனாகிய பெண்பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே!

கறந்த இடம் - நாம் கண்மணி ஒளியை ஞானசற்குருமூலம் தூண்டி  பின் தொடர்ந்து தவம் செய்யச் செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம்! அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறது! கடைசியில் கண்போய் கடைக்கண் சேர்ந்து நாடினால்தான் அமுதம் கிட்டும்! அதைத்தான் பட்டினத்தார் வெகு அழகாக கூறியுள்ளார்! காமம் நிறைந்த மனிதனுக்கு, மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகத் தெரியும்! கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் கடவுளையே காண்பர்! அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பர்! அறிவு தானே ஞானம்! "காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி" என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அம்மையை சரணடைய வேண்டும்! சதாகாலமும் சிவத்தை காமமுற்றவளே சிவகாமி! நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே, காண்பிக்கின்றவளே சிவகாமி! 

அந்த சிவகாமிதான் தாய் - வாலை - கன்னி'ய' குமரி! தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம்! பணியுங்கள்! பார்க்கலாம்?! அடியேன் பார்த்தேன்! பரவசமானேன்! பகவதி அம்மா பரிவுடன் எங்களை காத்தருள்கிறாள்! ஆன்மீக குருவாய் எம்மை அமர்த்தி நாடி வருபவர் ஞானம் பெற மெய்ப்பொருள் உபதேசம், திருவடி தீட்சை செய்யும் பணியை செய்ய வைத்து காத்தருள்கிறாள்! இந்த வாலைத்தாயின் கன்னியாகுமரியைவிட சிறந்த கோவில் இந்த உலகத்திலேயே இல்லை!!

                 படியுங்கள்! பண்படுங்கள்!  பரம்பொருள் அருள் கிட்டும்!

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,          ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

               www.vallalyaar.com

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஞான சற்குருவை நாடுங்கள்!

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே"

திருமந்திரம் பாடல் - 2119


சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர், இதேபோல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி கோடி மாந்தர்! அதனால் பயனொன்றுமில்லை என்கிறார் திருமூலர்! இதெல்லாம் பக்திமார்க்கம்! இதேபோல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயனொன்றுமில்லை இதெல்லாம் கர்மமார்க்கம்! இதேபோல் பிராணாயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலனொன்றுமில்லை! இதெல்லாம் யோகமார்க்கம்! இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி கர்ம யோக மார்க்கங்களில் இறைவனை நீ அறிய முடியாது? ஏதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும்!? அது பிரயோஜனமில்லை!? தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தந்திருத்தமாக அடித்துக் கூறுகிறார்!

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்! உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞானசற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்! குரு இல்லாமல் இறைவனை அடைய முடியாது! பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார்!

குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே, ராமன், கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்! அந்த காலத்தில் எல்லா மன்னர்களும் ராஜகுரு வைத்திருந்தனர். அவர் ஆலோசனைபடியே நாட்டை ஆண்டனர். குருகுலம் சென்று கல்வி பயின்றே வாழ்ந்தனர்! குரு இல்லாமல் இருந்த ஒருவரை கூற முடியுமா? நமது வேதம் புராணம் இதிகாசம் ஞான நூற்கள் ரிஷிகள் சித்தர் உபதேசங்கள் இவையெல்லாம் குருவின் மகத்துவத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

"குருதான் பிரம்மா குருதான் விஷ்ணு குருதான் மகேஸ்வரன் குருதான் சாட்சாத் பரப்பிரம்மம் இப்படி எல்லாமான குருவை வணங்குகிறேன் என்கிறது வேதம்! புரியவில்லையா? நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உலகர் பல பள்ளி ஆசிரியர்கள் பலநூல்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தது தானே இப்போதைய உங்கள் அறிவு! பிறரால் சொல்லப்பட்டது நூற்களில் படித்தது இயற்கை இவையெல்லாம் குருவாக இருந்து கற்றுத் தந்த பாடம்தான் இப்போதைய உங்கள் அறிவு! இதுவா அறிவு?! இதனால் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார்கள்! என்ன? இன்றைய மனிதனின் மூளை ஐந்து சதவீதமே இயங்குகிறது?! மீதி 95 சதவீதம் இயங்கவில்லை என்றனர்! மாபெரும் உண்மை இது! பல்கலைகழகங்கள் கொடுத்த தாள்களை வைத்துக்கொண்டு தங்களை அதிமேதாவி எனச் சொல்லும் படித்த முட்டாள்களே அந்ததாள்களை - காகிதங்களை வைத்து ஒரு பிரயோஜனமுமில்லை!

இறைவனின் தாள்களை திருவடிகளை அறிந்தாலே உணர்ந்தாலே முக்தி! அதற்கு ஞானசற்குருவை நாடுங்கள்! உங்களை போல பல்கலை கழக தாள் இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களைப்போல் பணம் பதவி அந்தஸ்து இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களை விட வயதில் சிறியவராயிருக்கலாம்

 குரு! எப்படியிருந்தாலும் சரி  ஞான உபதேசம் தீட்சை 

கொடுப்பாரானால் அவர்தான் ஞானசற்குரு!   அவரை பணி!

                        🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

------------------------------------------------------------------------                                                 

                      கன்னியாகுமரி

        🔥தங்கஜோதி ஞானசபை🔥 

          வந்தால் பெறலாம் ஞானம்!


மேலும் அறிய:

🌐 www.vallalyaar.com

▶️ YouTube: Thangajothi Gnanasabai

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான்.

மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறைவனை அடைய வழி கூறி அருளியுள்ளார்கள் ஞானிகள். 

மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை ,காமத்தில் தான் உதயமாகிறது.

 “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது.

சிக்கி விடாதே சீரழிந்து போவாய். ஆனால் மனிதன் காம வசப்பட்டு , மாதரின் மாய வலையில் அகப்பட்டு உழன்று உடலை புண்ணாக்கி மனதை கெடுத்து சீரழிவர்.சாவார் காம கண் கொண்டவன் காமாந்தகன் கடவுளை காணான். காம வசப்பட மனிதன் கண்ணிருந்தும் குருடனாய், செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்.

நல்ல சறகுருவை நாடி வேத புராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான். மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம் போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்.

“அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்” என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார். ஆம் மானிடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம் போன படி வாழ்ந்தால். காமம் ஏன் ஏற்படுகிறது?

“இலையா மிடையி லெழுகின்ற காமம்” – திருமந்திரம் பாடல் 2141

மனிதன் பிறக்கிறான் – குழந்தை. ஒன்றுமே தெரியாது. பச்சை மண். எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான். ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மிக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும். நாத்திக குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருபட்டதேயில்லை. குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான். அப்போது நிகழும் உடல் வளர்ச்சி , பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு. அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி , காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் – வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல. நமது உடலில் இடையில் ஏற்படும் – இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலை தூக்குகிறது.

இந்த இடையில் ஏற்படும் மாற்றமே , இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும். நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள். பக்தியை ஊட்டினார்கள். இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட , உணர வழிகாட்டினார்கள். மனிதன் , மனித பிறப்பெடுத்ததோடு நின்று விடாமல் , மிருகம் போல வாழாமல் மனிதனாக வாழவும் வழிகாட்டினார்கள்.

மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவு, கள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால் தான் மனிதன். மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை , காமத்தில் தான் உதயமாகிறது. “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது. சிக்கி விடாதே சீரழிந்து போவாய். காமம் மனித இயல்பு சீராக்கிக்கொள். திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு. மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர். மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள். பிற உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்.

மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே. திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்.

பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண்.

திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே.

திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண். திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்.

கடவுளே என்றிருந்தால் , பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம். அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாயாக பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர். காமத்தில் மூழ்கி கிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார் – கடவுளை தொட்டார்.

காமம் விலக — கடவுளை நினை. கடவுளை பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்.அசைவ உணவு காமத்தை உண்டாக்கும். சைவ உணவே சன்மார்க்க உணவு. சாத்விக குணம் சைவ உணவு உண்டால் தான் வரும்.

அன்பு காட்டு. ஆசை கொள்ளாதே. காம உணர்வுக்கு அடிமையாகாதே.

போகர் சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல. பரம்பொருளோடு புருசோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர். அதனால் தான் போகர்.

“பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் ! கறந்த இடத்தை நாடுதே கடைக்கண்” என்றார் பட்டினத்தார். இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர். பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தை அல்லவா சொல்லியிருப்பார். அதை சிந்திக்க வேண்டாமா?அடியேன் 1992 ல் முதன் முதலாக எழுதிய “கண்மணி மாலை” நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். திருஅருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன். இதுவே மெய்ஞ்ஞானம்.

பிறந்த இடம் – நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்து அல்லவா. நம்மை பேதை என்கிறார் – பெண்ணின் பருவம் இது. ஜீவாத்மாவான நாம் பெண் அம்சம் பேதை பெண். சீவனாகிய பெண் பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே. கறந்த இடம் – நாம் கண்மணி ஒளியை ஞான சற்குரு மூலம் தூண்டி பின் தொடர்ந்து தவம் செய்ய செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம். அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெலாம் துடித்து கொண்டிருக்கிறது. கடைசியில் கண் போய் கடைக்கண் சேர்ந்து நாடினால் தான் அமுதம் கிட்டும். அதை தான் பட்டினத்தார் அழகாக பாடி அருள்கிறார்.

காமம் நிறைந்த மனிதனுக்கு , மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகாத் தான் தெரியும். கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் காண்பர் கடவுளை. அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பார். அறிவு தானே ஞானம்.

“காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி” என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அன்னையை சரணடைய வேண்டும். சதாகாலமும் சிவத்தை காமுற்றிருப்பவளே சிவகாமி. நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே , காண்பிக்கின்றவளே சிவகாமி. அந்த சிவகாமி தான் – தாய் – வாலை- கன்னி “யா” குமரி. தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம். காமம் அகற்றி அருள்வதால் அவள் காமாட்சி. பணியுங்கள். ஒழுக்கமான பண்பான வாழ்வருள்வாள் நமக்கு உயிர் தந்த அன்னை வாலை .


திருச்சிற்றம்பலம்.

_______________


www.vallalyaar.com இணைய தள பதிவில் இருந்து

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கண் காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்

 "கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
 கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"

திருமந்திரம் - பாடல் - 2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்! 

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! 

அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! 

மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

                              🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா🔥

www.vallalyaar.com

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திருவாசகம் - சிவபுராணம் -2

             " ஏகன்  அநேகன்  இறைவ  னடிவாழ்க "

             ஏகன்  -  இறைவன்  ஒருவரே!  அநேகன்  -  எல்லா  ஜீவராசிகளிடத்தும் 
உயிராக,  அநேக  யோனி  பேதமாகவும்  இறைவன்  துலங்குகிறான்!  இப்படி 
எல்லாம்  வல்ல  இறைவன்  ஒருவரே,  எல்லா  உயிர்க்கும்  உயிராக  துலங்குகிறார்!
அப்படி  அவர்  துலங்கும்  இடமே  அவர்  திருவடியாக  கருதப்படும்.  அது  நமது 
கண்களே.  அது  வாழ்க  என்றுரைக்கிறது  மணிவாசகமான  திருவாசகம்!


              " வேகங்  கெடுத்தாண்ட  வேந்த  னடிவெல்க "

             நம்  மனமே  அதிவேகமாக  செயல்படுவது.  நாம்,  நமக்கெல்லாம் 
வேந்தனான -  அரசனான  அந்த  இறைவன்  திருவடியில்  சரணடைந்தால்,
நம்  மனதை  வேகத்தை  கட்டுப்படுத்தி,  பின்  இல்லாமலாக்கி  அருள்வான் 
அத்திருவடி  வெல்லட்டும்.

              " பிறப்பறுக்கும்  பிஞ்ஞகன்றன்  பெய்கழல்கள்  வெல்க "

             எண்ணிலா  பிறப்பெடுத்து  கர்மவினையால்  துன்புறும்  நம்மை  
மீண்டும்  பிறவாமல்  தடுத்து  காப்பது  இறைவன்  திருவடி -  கழல்களே 
-  கண்களேயாகும்!  அது  எப்படி  இருக்கிறது  தெரியுமா?  பிஞ்சாக  -
இளசாக -  பாப்பா  என  சொல்வோமல்லவா?  நம்  கண்மணிதான்  அப்படி 
உள்ளது.  அங்கே  தான்  கண்ணீர்  அருவியென  பெய்து  கொண்டே  இருக்கும் 
தவம்  செய்யும்  போது!  அது  வெல்லட்டும்.  வெற்றி  கிட்டட்டும்.

              " புறத்தார்க்குச்  சேயோன்றன்  பூங்கழல்கள்  வெல்க "

             திருவடியை  அடையாதவனுக்கு,  அறியாதவருக்கு  புறத்தார்க்கு 
எட்டாத  தூரத்தில்  இருப்பவன்  இறைவன்!  இறைவன்  திருவடியே  நம் 
கண்கள்  என  அறிந்தோர்க்கு  எட்டை  எட்டிப்  பிடித்தவர்க்கு  இறைவன் 
குழந்தையைப்  போலவே!  அவன்  கழல் -  திருவடி -  பூப்போன்ற  பாதமே!
அது  வெற்றி  பெறட்டும்.

               " கரங்குவிவார்  உள்மகிழுங்  கோன்கழல்கள்  வெல்க "

              இரு  கரங்கூப்பி  வணங்குதல்  புற  வணக்கம்.  இரு  கரம்  என்பது 
மெய்ஞானத்தில்  இரு  கண்களே!  இறைவனுக்கு  கால்  நமக்கு  கை  நம்  
இரு  கண்களே!  நம்  இரு  கரங்களை  -  கண்களை  உள்ளே  குவிப்பதே 
ஞான  தவம்!  அங்ஙனம்  தவம்  செய்வோருக்கு  மகிழ்வுடன்  பேரின்பம் 
அருளுவது  இறைவன்  -  தலைவன்  திருவடிகளே!  அது  வெல்க!

               " சிரங்குவிவார்  ஓங்குவிக்குஞ்  சீரோன்  கழல்  வெல்க "

              நமது  சிரசின்  உள்ளே  மத்தியில்  நமக்கு  சீர் -  கண்  கொடுத்த  
சீரோன்  இறைவன் -  ஆத்மாவாய்  இருப்பதை  அறிந்து,  சீர்கொண்டு -
கண்களை  அகமுகமாக  குவிப்பவரை -  திருவடி  ஒளியை  ஆத்ம  ஜோதியாய் 
ஓங்கச்  செய்வான்  இறைவன்!  அந்த  திருவடி  வெல்க. 

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com


திருவாசகம் - சிவபுராணம் -1

           " நமச்சிவாய  வாஅழ்க  நாதன்தாள்  வாழ்க 
             இமைப்பொழுதும்  என்நெஞ்சில்  நீங்காதான்  தாள்வாழ்க "

             இறைவனை  வாழ்த்தி  நமச்சிவாய  வாழ்க  என்றும்,  நமச்சிவாயா  
என்னிடம்  வா!  என்னை  நீ  அள்ளுக -  அள்ளிக்கொள்  -  சேர்த்துக்கொள் 
என்பதனையே  வாஅழ்க  என்றது  மணிவாசகம்!

             இறைவனே  எவ்வுயிர்க்கும்  நாதன்  -  தலைவன்.  அந்த  நாதனுடைய 
தாள்  திருவடி  -  மெய்ப்பொருள்  -  நம்  கண்கள்.  நம்  கண்களே  நம்  நாதனாம் 
இறைவனின்  திருவடி  அது  வாழ்க  என்றது  மணிவாசகம்!

            இறைவன்  இமைப்பொழுதும்  நீங்காமல்  என்  நெஞ்சில்  -  நெஞ்சு 
என்பது  ஐஞ்சும்  சேர்ந்த  இடம்!  அதாவது  ஐம்பூதமும்  ஒத்த  இருக்கும் 
இடம்!  நமது  கண்ணிலே  தான்  இருக்கிறது.  கண்ணையே  நெஞ்சு  என்பதே 
மணிவாசகம்!  அப்படி  சதா  சர்வ  காலமும்  என்  நெஞ்சிலே,  என்  கண்ணிலே,
மணியிலே  ஒளியாக  ஒளிரும்  தாள்  -  திருவடி  வாழ்க!

            " கோகழி  யாண்ட  குருமணிதன்  தாள்வாழ்க "

             கோகழி  -  பெரிய  உப்பு  ஆறு.  அதாவது  கழிமுகம்  என்போமல்லவா?
அதாவது  ஆறு  கடலில்  கலக்கும்  இடம்!  இங்கே  பெரிய  கழிமுகமாக  நமது 
கண்ணே  விளங்குகிறது!  கண்ணீர்  உப்புதானே!  கோ  என்றால்  இறைவன் 
-  தலைவன்!  இறைவன்  உள்ளே  இருக்கிறார்  அதன்  அருகே  கழிமுகம்!
கடலாகிய  இறைவனின்  முன்  உள்ள,  ஆறு  கடலில்  கலக்குமிடம்  கழிமுகம்!
அதனை  ஆண்டு  கொண்டிருப்பவன்  தான்  குருவானவன்  அதுவே  நம்  மணி 
கண்மணி  அதுவே  இறைவன்  திருவடி  அது  வாழ்க  என்பதே  மணிவாசகம்.


           " ஆகமம்  ஆகிநின்  றண்ணிப்பான்  தாள்  வாழ்க "

            ஆகமம்  எல்லாம்  -  வேதங்கள்  ஆகமங்கள்  புராண  இதிகாசங்கள்  எல்லாம் சொல்வது  இறைவனைப்  பற்றித்தானே!  எல்லா  ஆகமப்  பொருளுமாகி  நிற்பவன் இறைவனே!  அவன்  வேறு  எங்கோ  தூரத்தில்  இல்லை!  நமக்கு  வெகு  அண்மையில்தான்! நம்  உடலிலே  கண்ணிலே  மணியோடு  ஒளியாகத்தான்  துலங்குகிறான்  அதுவே  இறைவன்  திருவடி!  வாழ்க!  என்கிறது  மணிவாசகம்!

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சற்குரு வணக்கம்

சற்குரு வணக்கம் -ஆன்மீக செம்மல் 
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 


பூரணமாய்ப் பூத்தெழுந்த புண்ணியமெய் மாமலரின் 
புகழ்விளங்க வந்த அய்யனே வருக! 
புருவநடுப் பொட்டினிடைப் புத்தமுதுப் புனல்பெருகப் 
புதையலான ஞானமெய்யனே வருக! 
மாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை 
மானுடர்க் களிக்க எண்ணியே வருக! 
மாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி கனிபறித்த 
மாகுரு சிவசெல்வ ராஜரே வருக! 
காரணமாய் நான்குயகக் காரியமும் ஆற்றிடவே 
கருமணியுள் கானலுமாகியே வருக!
கருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக் 
கண்கலந்த வான வட்டமே வருக! 
ஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும் 
ஆஃதுணர்த்த வந்த செல்வமே வருக! 
அடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும் 
 அற்புத மெய்ஞ்ஞான குருபரா வருக! வருகவே! 


ஞான சற்குரு சிவசெல்வராஜ் 

அவதார தினம் - பங்குனி மாதம்  புனர்பூச நட்சத்திரம்

புதன், 20 மே, 2020

ஞான பூமியாம் இந்தியா


நான் யார்? நான்-ஆத்மா ! நான் ஏன்  பிறந்தேன்? என் பாப புண்ணிய வினைகளுக்கு முடிவு  கட்ட
இறைவன் கருணையினால் பிறப்பிக்கப்பட்டேன் ! நான் எப்படி பிறந்தேன் ? ஏன் தாயும்  தந்தையும்
சுரோணித  சுக்கிலத்தால்  பிண்ட  உற்பத்திக்கு  மட்டும் காரணமாக, என்  இரு  வினைகளுக்கு
தகுந்த படி  ஆத்மாவை  மாயையால்  பொதிந்து, பிண்டத்துக்கு  உள்  இறைவன்  செலுத்தியதால்
உயிரோடு  உடலோடு  பிறந்தேன்.

      இந்த  உடலில்  இந்த உயிர்  எங்கு  இருக்கிறது ? அதாவது  ஆத்மாவின்  இருப்பிடம்  யாது ?
அதாவது  ஜீவன்  எங்கு இருக்கிறது ? எப்படி இருக்கிறது?

      இந்த ஒரு  கேள்விக்கு  விடை  தெரிந்தால்  அவன்  ஞானி !

     இந்த  கேள்வியின்  விடையை  அறிந்து, உணர்ந்தால்  அவன்  சித்தன் !!

     இந்த  கேள்வியின் விடையை  அறிந்து, உணர்ந்து  அனுபூதியடைபவனே  தெய்வமாகிறான் !!!
தான்  அதுவாகிறான் .

     தன்னுள்  குடிகொண்டிருக்கும்  தெய்வத்தை  உணர்ந்து, அதுவாகவே  மாறுபவன் - தன்
இருவினைகளையும்  இல்லாமலாக்குகிறான்  -  மாந்தருள்  தெய்வமாகிறான்! பஞ்ச  பூதத்தால்
ஆன  தூல  உடல்  ஒளியுடலாக  விளங்க  பெறுகிறான்!

     இப்படிப்பட்ட  ஒரு  மகோன்னத  நிலையடைந்தவர்  தான், கடந்த  நூற்றாண்டிலே  தமிழகத்திலே வடலூரிலே  உலாவந்தவர்தான்  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க  சுவாமிகள்  அவர்கள் .

     63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும்  அகத்தியர்  முதலான  எண்ணிறந்த  சித்தர்  பெருமக்களும் இன்னும்  பற்பல  ஞானிகளும்  மகான்களும்  இந்த  மகோன்னத  நிலையடைந்துள்ளனர் .

     நமது  புண்ணிய  பூமியாம், ஞான பூமியாம் இந்தியாவில் இது போல் ஒப்பற்ற உயர்ந்த ஞான நிலையடைந்த மகான்கள் ஏராளம்! ஏராளம்!!

இந்த புண்ணிய பூமியிலே நம்மை  பிறப்பித்தமைக்கு  முதலில்  நாம்  இறைவனுக்கு நன்றி  கூற கடமைப்பட்டுள்ளோம்.

     ஒவ்வொரு  ஆத்மாவும்  தன்னிலை  உணர  இறைவன்  அருள்  பாலிக்கிறான் .

     அவரவர்  கொண்ட  வினைக்கு  தக்கவாறு, செயலுக்கு  தக்கவாறு  உயரவோ  தாழவோ  செய்கிறான் .

 நாம்  நம்மை  உணர  வேண்டும்  -  ஆத்மானுபூதி  பெற  வேண்டும். அதுவே  நமது  பிறவிப்பயன் .

     சிந்தித்து - தெளிந்து - உணர்வு  பெறுக !

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் 

       www.vallalyaar.con

ஞாயிறு, 10 மே, 2020

குருவே சிவமெனக் கூறினன் நந்தி

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே" பாடல் - 1581

குருவே சிவம் - ஒளி - இறைவன் எனக் கூறினான் நந்தி - நம் தீ!
உலகில் இறைவனைப் பற்றிக் கூறி அடைய வழிகாட்டும் குருவே சிவம்!

சிவத்தின் அருள் பெற்றே சிவத்தைப் பற்றி கூறுவார்!
ஆகையால் மெய்யுரைக்கும் மெய்ப்பொருள் உரைக்கும் குருவே சாட்சாத் சிவமாம்!?
இது புறத்தே!

நம் அகத்தே சிவத்தை கண்டு ஆத்ம ஜோதியை கண்டு மகிழ்ந்தவர்க்கு
அகத்தீயே சிவமே குருவாய்விடும்!

பின் நம் ஆன்மாவாகிய குருவே நமக்கு வழிகாட்ட இறைவனை பரமாத்மனை அடையலாம்!

நந்தி தான் கூறுகிறான் நம்புங்கள்!

நம் குருவை நாமடைய வழிகாட்டும் விழி உணர்த்தும் குரு சிவந்தானே?!

சந்தேகமா?!

குருவே சிவம் என்பதைக் குறித்து ஓர்ந்து உணர்ந்து அறிய வேண்டும்!

அங்ஙனம் ஓராதார் உள்ளத்தும் ஒளியாய் நிற்பவன் சிவனே"!

சிந்திக்க வைத்து சுருதி காட்டி தெளிவைத் தருகிறார் குரு!

அப்படிப்பட்ட குரு தானே நமக்கு கடவுள்! மாதா பிதா குரு தெய்வம் என்பர்?

இதன் உண்மை பொருள் என்ன தெரியுமா? மாதாவும் பிதாவுமாயிருப்பவரே குரு!

அப்படிப்பட்ட குருவே தெய்வம்!? இதை சிந்தித்து தெளிபவனே உண்மை சீடன்!

உண்மை சீடனே சீவனை அறிவான்!

சுட்டிக் காட்டிய குரு சுடர் விழியில் உணர்த்தியதால் அகத்தே
சிவமாய் எவ்வுயிர்க்கும் தலைவனாய் ஒளியாய்
துலங்குவதே மெய்குரு என்பதை உணர்வான்!

காண்பான்!

அந்த குரு மெய்குரு மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்டவர்!

"குரு அருளின்ற திருவருள் உறாது" உலக குரு காட்ட,
உடலுளே மெய்குருவைப் பெற்றே இறைவனை அடையலாம்!

சத்தியம் இதுவே!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு  சிவ செல்வராஜ் அய்யா

MMM - 126

குருவின் திருவடி சரணம்

ஞானதவம் "சும்மா இருப்பதே"!

உலகோரே ஞானதவம் "சும்மா இருப்பதே"!

"சிவனேன்னு சும்மா இரேண்டா" என சுட்டித்தனம் பண்ணும்
குழந்தைகளை அதட்டி இருத்துவார்கள்!

ஞானம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் போதிக்கப்படுகிறது பார்த்தீர்களா?

ஆகையால் கண்ட கண்ட யோகங்கள் செய்து கெட்டுப் போகாதீர்கள்!

சும்மா இரு!

சாகாக்கல்வி: சும்மா இருக்கும் சுகம்

இறைவன் உங்களை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை?

சும்மா இரு என்றுதானே சொல்கிறார்?

ஏன்?

எதையாவது செய்து மேலும் மேலும் பாவ மூட்டையை பெரிதாக்குகிறாய்?

ஒன்றும் செய்யாதே!

சும்மா இரு!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

TVMM - 129

குருவின் திருவடி சரணம்

நல்ல மருந்து?

* கண்மணி ஒளியே நல்ல மருந்து *

"முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னை பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து”


முன்னை வினையிரண்டும் - நம் கண்மணி முன்னால் திரையாக
துலங்கும் வினையிரண்டையும் வேரறுத்து முன்னின்றான் - நம்
கண்ணிலுள்ளவன் நம் கண்முன்னே நின்று காட்சி கொடுத்தான்!

சிவன்! அவன் தான் இனி பிறப்பதை தடுத்த பேரருளாளன் இறைவன்!

தென்பக்கமான நம் முகத்தில் கண்மணியில் பெருந்துறையில் மேவிய
துலங்கிய பெருங்கருணையாளன் ! அதுவே நம் கண்மணி உள்
துலங்கும் ஒளியே நமக்கு வரும் எல்லா துயரங்களையும் நீக்கும்
மருந்தாகும்!

நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத
மருந்து அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்ஜோதி மருந்து என்று
வள்ளல் பெருமான் போற்றிப் பணிகிறார்!


ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

www.vallalyaar.com

 

திங்கள், 13 ஏப்ரல், 2020

சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!

அந்தத் தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசிபெற்றே
சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!

சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!

நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயைவிட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைப்பவள் வாலைத்தாயே!

நம் உடலுக்கு சக்தியூட்டிய தாய்!

உலக அண்ணை! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி!
ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி!

நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள்!

நம் உயிர் துலங்க உறுதுணையானவள் சக்தியே! தாயே!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

MMM - 103

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

புதன், 4 மார்ச், 2020

சுருதி - யுக்தி - அனுபவம் மூன்றும் தான் பூரணமான நிலை!

"சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டோ டுமே"

பாடல் - 1631 திருமந்திரம்


வேத சாத்திரம் புராணம் இதிகாசம் உபநிஷத்து இன்னும் உள்ள
ஞான நூற்களையெல்லாம் ஓதிக் கொண்டேயிருந்தால் போதுமா?
கடவுளை பாடி மகிழ்ந்தால் மட்டும் போதுமா? லட்டு இனிக்கும்
என்றும் அது எப்படி செய்யலாம் தித்திக்க என்ன வேண்டும் என
சொல்லிக் கொண்டேயிருந்தால் இனிக்குமா என்ன?!

"சுருதி" என நூற்களை பெரியோர் கூறுகின்றனர்!
சுருதி சொன்னதை "யுக்தி”யால்
சிந்தித்து தெளிந்து - தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து புரிந்து பின்
அனுபவத்தில் பார்க்கவும் வேண்டும்!

சுருதி - யுக்தி - அனுபவம்
மூன்றும் தான் பூரணமான நிலை! ஓதியதை உணர்க! செயல்படுக!
அப்போதுதான் உண்மை விளங்கும்!

லட்டு இனிக்கும் என்றால்
சாப்பிட்டு பார்த்தால் தானே தெரியும்?! ஞான நூல்களில்
சாத்திரங்களில் எல்லாமே சொல்லப்படுகிறது! முடிந்த முடிபான நிலை
ஞானத்தை பெற என்ன சொல்லப்பட்டிருக்கிறது என பார்த்து புரிந்து
அதன்படி நடக்கணும்!

வேத சாத்திரங்கள், எல்லாம் வல்ல இறைவன்
நமது உடலில் கண்களில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என
திரும்பத் திரும்ப கூறுகின்றன!

 கண்ணில் மணியில் ஒளியை
நினைத்து உணர்ந்து அங்கேயே நிலைத்து நின்றால் அதுவே திருவடிதவம்
என்றும் எல்லா ஞானியரும் கூறியிருக்கின்றனர்! அங்ஙனம் தவம்
செய்கையில் கண்மணி ஒளி உள்ளே போகும் இரு கண்ணும்
உள்ளே சேரும் அக்னி நிலையை அடையும்! இதுவே சாதனை
அபைவம் ! தவப்பயன் !

ஏ, மனிதா ஒரு மாத்திரை நேரமாய்
கண் சிமிட்டும் நேரம் மட்டிலாவது கண்மணி ஒளியை புறப்பார்வையிலிருந்து 
மாற்றி அகப்பார்வையாக மாற்று ! உள்நோக்கு !


எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா? பசுமரத்தாணி போல் உள்ளே
விரைவாக செல்ல வேண்டும்! ஊன்றி பதிய வேண்டும் ! தவம்
அங்ஙனம் நிலைத்து நீடித்தால் இறப்பு என்பது இல்லாதாகும்!

பிறப்புக்கு சந்தர்ப்பமே இன்றி பிறந்த இப்பிறவியிலேயே முக்தி
பெறுவோம்!

" நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே "

- அருள் விளக்கமாலை - ஆறாம்திருமுறை - திருவருட்பா


ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை
கன்னியாகுமரி

ஞாயிறு, 1 மார்ச், 2020

அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!



"கண்ணிலான் சுடர் காணிய விழைந்த கருத்தை..பாடல் 8
கண்ணில்லாதவன் ஒளியை காண முடியுமா?

கண்களில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்!

கண்களில் ஒளியில்லாதவன் குருடன்! கண்களில் துலங்கும் ஒளி உள்ளே அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!


அதனால் பார்க்கும் ஆறறல் பெறுகிறான்.
அக்னி கலை ஒளி இரு நாடி வழி இரு கண்ணில் வராதவன் பார்வை இல்லாதவன்.
பார்க்கின்ற ஆற்றல் பெற்றவன் உணர்வால் ஒளியை பெருக்கி அதிவிரைவில்
வினையறுத்து ஞானம் பெற முடியும்!


பார்வை இல்லாதவனும் ஞானம் பெறலாம்.! இறைவன் அருள்வார்.!
உள்ளே அக்னி கலையில் கருத்தை செலுத்தி தவம் செய்ய வேண்டும்.
சற்று கடினமான செயல்தான்!இருப்பினும் முயன்றால் முடியாதது ஒன்றுண்டோ?

அருள்மயமான இறைவன் அருள்புரியாது போய்விடுவாரா?!
சதாசர்வ காலமும் இறைவனை நினைத்து உணர்ந்து நெகிழ்ந்தால்
கண்ணில்லாதவனுக்கும் காட்சி கொடுப்பார் கருணைகடலான கடவுள்!

ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா.
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை இரண்டாம் பகுதி
பக்கம்:31

www.vallalyaar.com

சனி, 22 பிப்ரவரி, 2020

Jeeva samadhi - Maharastra 8


22 Swami Samarth Samadhi Math, Math Road, Budhwarpet, Akkalkot, Maharashtra 413216 (40 km from solapur)
26 Shree Baburao Swami Samdhi Math Kajikanbas, Maharashtra 413216

23. Prabhakar Maharaj Mandir Songla, Jawaharlal Housing Society, Keshav Nagra, Solapur, Maharashtra 413007
24. Yogi Nath Samadhi Mandir solapur Kumar Swamy Nagar, Shelgi, Solapur, Maharashtra 413002
25. Siddheshwar temple, Solapur

Shri Satguru Ramchandra Maharaj Tikotekar Samadhi Mandir, Vijapur
Shri Rukmangad Maharaj Samadhi, Vijayapura, Karnataka 586102

Sant Narayan Maharaj Samadhi Mandir, Shrigonda, Maharashtra 413726
Sadguru Madake Dada samadhi mandir Khetmalaswadi, Maharashtra 413702
Sadguru Narayan Bet Samadhi Mandir. Narayan Maharaj Kedagaon Bet, Maharashtra 412204
Bramha Chaitanya Gondavalekar Maharaj Temple Gondawale, Maharashtra 415508
Kashipate Nilakanth Maharaj Matha (Samdhi) Ranand Rd, Dahiwadi, Maharashtra 415508
Jagannath Baba Samadhi Mandir जगन्नाथ बाबा समाधी मंदिर Dahiwadi-Phaltan Rd, Mogarale, Maharashtra 415523
Sant Uplekar Maharaj Samadhi Mandir Ravivar Peth, Phaltan, Maharashtra 415523
SHANKAR MAHARAJ DHOTE Samadhi Temple तिरकवाडी, Sonwadi Kh., Maharashtra 415523

shri gajanan maharaj samadhi shegaon Mahatma Jyotiba Phule Nagar, Shegaon, Maharashtra 444203
Shri Shitalnath Maharaj Samadhi Mahatma Jyotiba Phule Nagar, Shegaon, Maharashtra 444203
Shri Raghunathpant Deo Yanchi Samadhi Sakharkherda, Maharashtra 443202
Swami Shukdas Maharajshree Samadhi Hiwara Bk., Maharashtra 444301
Sant Jagdish Baba Samadhi Bilal Nagar, Mehkar, Maharashtra 443301

Datta Maharaj Samadhi Mandir दत्त महाराज समाधी मंदिर. Datta maharaj samadhi mandir, Amruta Awati, Ashta, Maharashtra 416301

Pandharpur - Jeeva samadhi -Maharastra 7


1 Sant Namdev Panduranga Temple, Panduranga Temple, Pandharpur,
    Maharashtra Jeeva Samadhi along with his 14 disciples at the footsteps of the temple (Namdev Chi Payari)
2 Bhakta Chokamela Samadhi
3 ChokkaSwami Panduranga Temple, Chokkaswami mandir Pandharpur (opp. panduranga temple),
4. Narad rishi Narad rishi Mandir, River Chandrabhaga, Pandharpur
5. Pundalik Pundalik Mandir, Pandharpur, Maharashtra
6. Prahlad Maharaj Samadhi Temple, Near Panduranga temple,Pandharpur, Maharashtra
7. Purandaradasa - Panduranga Temple, Panduranga Temple, Pandharpur, Maharashtra
8 Shri Sant Kabir Maharaj And Sant kamal maharaj samadhi mandir Math
9 Dehukar Samadhi Mandir Bhima tir, Pandharpur, Maharashtra 413304

10 चोखोबा महाराज समाधी मंदिर PT Utpat Path, Chouphala, Pandharpur, Maharashtra 413304
11. Sakku Bai(alias Jana Bai) Gopalpur Mandir, Gopalpur,Pandharpur, Maharashtra 2km
12. Sant Damaji Pant Mangal Wedha(25 km from Pandharpur), Maharashtra --- Sant kanhopatra
13 Shri Sant Chokhamela Samadhi, Mangalwedha, Maharashtra 413305 25km from Pandharpur
14 Kashinath Maharaj Samadhi Mandir HH75+WV Machnur, Maharashtra (near Pandharpur)
15 Sant Narhari Samadhi Mandir, Keshavraj Vittal Temple, Chouphala, Pandharpur, Maharashtra 413304
16 Sant Narahari Sonar Maharaj Math, namdev Payari Pandharpur

Ahamednagar - Pandharpur Maharastra jeeva samadhi 6



Shree Nispruha Baba Sanjeevan Samadhi Mandir, Arangaon, Arangaon, Maharashtra 413201
Sakhayanand Maharaj Samadhi Mandir, Sade, Solapur, Maharashtra 413251
श्री संत रघुराज महाराज समाधी मंदीर, बिटारगांव, Maharashtra 413202
गोसावी महाराज समाधी Surwad Bhandgaon Rd, Surwad, Maharashtra 413103
Shri Sant Shiromani Savta Maharaj Sanjeevan Samadhi, Aran, Maharashtra 413301
Sant Savatamali Samadhi, Aran, Maharashtra 413301
Sadguru Shree Ramsiddhabuva Samadhi Mandir, Vadashinge, Maharashtra 413209
BHAJLING MAHARAJ MATH, Karkamb, Maharashtra 413302
Pandharpur 


https://goo.gl/maps/tkJRYrJCAfEEad1t7

Aurangabad - Ahamed nagar Jeevasamadhi Maharastra 5

https://goo.gl/maps/E1jBjQ9bpMAMBowt5
Sant Parvati Kaku Maharaj Samadhi (juney Kawsan) Paithan, Maharashtra 431107
Sant Mohan Kaka Maharaj Samadhi( Juney Kawsan ) Paithan, Maharashtra 431107
Gauba Maharaj Samadhi Kawsan Paithan, Maharashtra 431107
Dargah Maulana Sahab Johri Paithan, Maharashtra 431107
Sant Eknath Maharaj Samadhi Mandir Godavari river bank, Paithan, India
Samadhi of Bhagwan Baba and Bhimsingh Maharaj Shirur Kasar, Maharashtra 414113
श्री संत वामनभाऊ महाराज मंदिर, Chumbhali, Pathardi, Maharashtra
Shri Kshetra Jalindarnath Devasthan, Yevlewadi, Taluka Shirura, Maharashtra 414205
Shree Kshetra gahininath gad Shekapur-Gahininath Gadh Road Chincholi, Maharashtra 414203 (Shree Gahininath Samadhi ) AN
Sant Vamanbhau Maharaj Samadhi Mandir, Gahininath Gadh, Chincholi, Maharashtra 413207
श्री.सिदाजीअप्पा समाधी मंदिर, ता, जि, Savargaon, Maharashtra
Shri Kshetra Machindranath Samadhi mandir maymba Sawargaon Madhi, Maharashtra 414202
Shree Chaitanya Kanifnaath Samadhi Mandir Madhi, Maharashtra 414102
Shri Devendranath Samadhi Mandir Madhi, Maharashtra 414102 (near Ahmednagar)
Shani Signapur - Udasi Maharaj Shani Shignapur Shani Temple, Jeeva Samadhi with his 4 disciples
रामनाथ बाबा समाधी Ahmednagar, Maharashtra 414603
Pais Khamb Dnyaneshwar Temple Nevasa Kh. Rural, Maharashtra 414603
H.B.P. Bansibuva Tambe Samadhi Mandir Newasa Chichban Road, Nevasa Kh. Rural, Maharashtra 414603
Pralhadgiri Maharaj Samadhi Place Handinimgaon, Maharashtra 414603
Sri Gorakshnath Mandir Gorakshnath Rd, Dongargan, Maharashtra 414601 near ahamed nagar hills
Meher Baba Samadhi, Meherashram, Ahmednagar,Maharashtra

https://goo.gl/maps/YQDGELvVtXLW1GHfA
https://goo.gl/maps/k6GSwgBDhsc6x3Qv7

Shiradi - Trimbak - Aurangabad Jeevasamadhi Maharastra 4







https://goo.gl/maps/2PYD6SuzE22qNm4D8


Shri Rastrasant Sadguru Janardan Swami (Moungiri) Maharaj Samadhi Temple Kopargaon Road, Ahmednagar District, Kopargaon, Maharashtra 423601


Guru Shukracharya Mandir . Bet Kopargaon, Kopargaon, Maharashtra 423601


Santa Aaisaheb Samadhi


Samadhi Baba Mandir Near Gosavi Nagar, Gosavi Nagar, Upnagar, Nashik, Maharashtra 422006


Trimbakeswarar Trimbak


Adya Jyotirlinga Trimbakeshwar, Nashik, Trimbak, Maharashtra 422212


Purn Chaitan Maharaj Samadhi, Way to Brahmagiri, Metghar Killa, Maharashtra 422212


Trisandeswar Mahadev Mandir Trimbak, Maharashtra 422212


Nivruttinath Maharaj Samadhi Mandir Trimbak, Maharashtra 422212


Shree Samarth Sadguru Dhage Maharaj Samadhi Mandir Gadge Maharaj Rd, Near Ram Kund, Kharewada, Saraf Bazar, Panchavati, Nashik, Maharashtra 422001


Paramhans Shri Narsing Gopaldas Maharaj Sanjeevan Samadhi Mandir Gadge Maharaj Bridge, Mhasoba Maharaj Patangan Near, Nashik, Maharashtra 422001


https://goo.gl/maps/9BpdXytKAEzPZFSN8


Paramhans Shri Narsing Gopaldas Maharaj Sanjeevan Samadhi Mandir Gadge Maharaj Bridge, Mhasoba Maharaj Patangan Near, Nashik, Maharashtra 422001


Janardhan Maharaj Mandir, Dahegaon, Maharashtra 423703


shri sant Shankar Swami sanjeevan samadhi Temple, Shivoor, Maharashtra 431116


Shri Revanath Maharaj Samadhi Mandir, Vita, Maharashtra 431103


गुरुवर्य प्रभूनाथ महाराज समाधी मंदिर श्री क्षेत्र जळगाव (घाट), Athegaon, Maharashtra 431103


Shri Vyankatnath Maharaj Samadhi Mandir / Shri Dutta Mandir, Deogaon Main Road, रोड, Deogaon Rangari, Maharashtra 431115


Sadguru Narayananand Kate Baba Samadhi Mandir., Pimpri, Maharashtra 431102


Shri Bajirao Baba Samadhi Mandir., Tisgaon, Maharashtra 431102


Grishneshwar Temple, Mahesh Hospital, Verul, Maharashtra 431102


Shri Balkrishna Maharaj Samadhi Mandir, Swatantrya Sainik Colony, Nageshwarwadi, Aurangabad, Maharashtra 431001


Hotel Holiday Era Lodging


https://goo.gl/maps/8BF1Eo7B1CBWDFAd9

Jeeva samadhi Maharastra 3


  1. Jnaneshwar Maharaj / Sant Tukaram
  2. Sri Malluappa Waskar Maharaj Samadhi Mandir Kamble Wada, Maharashtra 412105
  3. श्री रघुनाथ बाबा समाधी मंदिर , Vadgaon, Maharashtra 412105
  4. Sant Tukaram Vaikunthsthan Temple Dehu, Maharashtra 412109
  5. Shri Samarth Sadguru Shripati Baba Maharaj Temple. Mahalunge Ingale, Maharashtra 410501
  6. Sant Santaji Jagnade Maharaj Samadhi Mandir , Sudumbre, Maharashtra 412109
  7. Bhimashankar
  8. Krushnadas Maharaj Samadhi Temple near Bheema sankar
  9. Kashinatha Baba Samadhi Temple, Khanapur, Maharashtra 410502
  10. bhaktaraj maharaj samadhi mandir, Kandali. Vadgaon Kandali, Maharashtra 410504
  11. Chaitanya Maharaj Samadhi mandir, Otur, Maharashtra 412409 near Alephata, Maharashtra
  12. सद्गुरु धोंडिबा महाराज समाधी मंदिर, Nandurkhandarmal, Maharashtra 422620
  13. Shri Kalanki Dev Sansthan | श्री कलंकी देव समाधी मंदिर Shri. Kalanki Dev Sansthan, Opposite Dnyanmata School, Nagar, Road, Sangamner, Maharashtra 422605
  14. Saibaba temple, Shirdi, Maharashtra

Jeeva samadhi Pune - Maharastra 2


  1. Shankar Maharaj Math, Pune Satara Road, Dhankawadi, Pune, Maharashtra 411043
  2. Shree Mangir Baba Temple Pune - Mumbai Highway, Near Sandvik Pvt. Ltd, Phugewadi, Dapodi, Pimpri-Chinchwad, Maharashtra 411012
  3. Shri Gopalswami maharaj Samadhi Camp, Pune, Maharashtra 411001
  4. Hazrat Babajan - Babajan Dargah 2015, Gaffar Baig Strret, Babajan Chowk, Camp, Pune, Maharashtra 411001
  5. Pataleshwar Temple Jangali Maharaj Rd, Revenue Colony, Shivajinagar, Pune, Maharashtra 411005
  6. Sadguru Shri Jangli Maharaj Samadhi Temple Revenue Colony, Shivajinagar, Pune, Maharashtra 411028
  7. Shree Sadguru Digambardas Maharaj Samadhi Mandir 937/ D, Chatushrungi Road, Near Dnyaneshwar Paduka Chowk, Shivajinagar, Pune, Maharashtra 411016
  8. Shree Baba Maharaj Sahastrabuddhe Samadhi Mandir Model Colony, Shivajinagar, Pune, Maharashtra 411016
  9. Sadguru Sadikbaba Samadhi Mandir - Pashan - Sus Rd, Jai Bhavani Nagar, Pashan, Pune, Maharashtra 411021
  10. Shree Sadguru Shreehari Khade Baba Samadhi Mandir , Shirode Rd, opp. Naujivan Hospital, Gangarde Nagar, Pimple Gurav, Pimpri-Chinchwad, Maharashtra 411061

https://goo.gl/maps/tfiwTNCLNt2aKNGG9

Jeeva samadhi 1 - Hubli - Pune Samadhi mandir



1. Shri Atavi Shivayogi Temple Sri Siddaganga Kshetra, Tumakuru, Karnataka
2. Uddana Shivayogi Temple ಉದ್ಧಾನ ಶಿವಯೋಗಿ ಗದ್ದುಗೆ Sri Siddaganga Kshetra,
Tumakuru, Karnataka 572104

3. Gurunatharudhaswamy Samadhi Mandir Siddharudhaswamymath, Srinivas Nagar, Hubali-
Dharwad, Karnataka 580030
4. Shri Siddaroodha Swami Math, Srinivas Nagar, Hubali-Dharwad, Karnataka 580024
5. Shri Sadguru Mahadev Tata Sannidhi Someshwara Temple, Rajivgandhinagar,
Dharwad, Karnataka 580002

6.Sri Sri Sri Yogishwar Swamiji Samadhi Mandir, Karnatak University, Dharwad, Near, Dharwad, Karnataka 580003
7. Sadguru Shri Saint Balumama Temple, Adamapur, Tal- Bhudargad, Maharashtra 416208
8. Halsiddhanath Sanjivan Samadhi Ghumat Mandir Appachiwadi, Karnataka 591241. (near to kohlapur)

9. Ramanand Samadhi Mandir, Ramanand Nagar, Kalamba, Kolhapur, Maharashtra 416013
10. Babu Jamal Dargah, Rajopadhye Bol, Shivaji Peth A Ward, C Ward, Kolhapur, 
      Maharashtra 416012
11 Shri KrishnaSarasvati Maharaj Samadhi, D Ward, Papachi Tikati, Kolhapur, Maharashtra 416012
12 Rajyogi Shree Gajanan Maharaj Samadhi, 2757, Avdhut Galli, near Jain Math, D Ward,
Shukrawar Peth, Kolhapur, Maharashtra 416002
13 Hazarat Balesaheb Dargah https://goo.gl/maps/GMxQH7DzCjudktZdA
Hazarat Peer Jangali Baba Dargah, Maharashtra 416229. -

14 Sadguru Vishwanath Maharaj Samadhi Rukadi, Maharashtra 416118 in a farm  Samartha Ramdas     Swami Samadhi, Sajjangad Rd, Parali, Maharashtra 415013 (satara / shenre - 18 km ) 5 am to 9 pm 
15 Kapurkar Tatya Samadhi Rethare BK Rethare bk., Maharashtra 415108 (next to kasegeon) 
16 Yashwantrao Chavan Samadhi Pantacha Kot, Somwar Peth, Karad, Maharashtra 415110. (kohlapur to samadhi 73 kms)
17 Shri Jalindarnath Samadhi Temple Ganeshwadi, Nagthane, Maharashtra 415519 (before satar 0 atit - 10 km)
18 चैतन्य महादेव महाराज संजीवनी समाधी मंदीर वाठार Wathar, Maharashtra 415539 (next to kasegeon)
19 श्री बाजीबुवा तांबे महाराज समाधी मंदिर Shirwal, Maharashtra 412801
20 Hajrat Kamar Ali Durvesh Dargah Khed Shivapur, Maharashtra 412205
21 Kamarali Durvesh Dargah (Shivapur Dargah) Khed Shivapur, Maharashtra 412205


22 Datta Maharaj Samadhi Mandir, Datta maharaj samadhi mandir, Amruta Awati, Ashta,        
     Maharashtra 416301
23 Dhondiraj Maharaj Samadhi Mandir, Palus, Maharashtra 416310

Saswad. From kapurhol. 23 kms east
24 Sopandev Maharaj Samadhi Saswad-Dive Rd, Trishul Housing Society, Saswad, 
     Maharashtra 412301
25 Veer Baji Pasalkar Samadhi Kumbharwada, Saswad, Maharashtra 412301
26 Sopande dev Samadhi Mandir Sidhheshwar Colony, Saswad, Maharashtra 412301
27 Sadguru Sadhubaba Maharaj Samadhi Mandir Bhivdi, Bhivadi, Maharashtra
28 Narasoba Wadi, Kolhapur, Maharashtra Narsobachi wadi is famous for its Dattatreya temple and         the samadhi of the saint Swami Narsinha Saraswati .





செவ்வாய், 21 ஜனவரி, 2020

ராமானுஜர் - ராமலிங்கர் - ரகசியம்

மஹானுபவர் ஸ்ரீ ராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாச்சர மந்திரத்தை
நீ  வெளியே சொன்னால் நரகத்திற்கு தான் போவாய் இது ரகசியம் என்று உரைத்ததை  மீறி
உலகர் எல்லோரும் சொர்க்கத்திற்கு போகட்டும் என்று ஊர் நடுவே கோபுரம் ஏறி
கூறினாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை
என்று மூட குருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்!
அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!

மந்திரத்தை சொன்ன ராமானுஜரே கருணை கடல் என்றால் இறைவனை அடைய
இதுவரை ரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ ராமலிங்கர் யார்?
கடவுள் யார்? எப்படி இருக்கிறார்? நம் உடலில் கண்ணில் ஒளியாக இருக்கிறார். நம்
சிர நடுவில் ஆத்ம ஜோதியாக துலங்குகிறார் !  அதுவே சத்திய ஞான சபை விளக்கம்!
தை பூச ஜோதி தரிசன விளக்கம் என்று உரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க
வந்த மகாஞானியல்லவா இதை உலகம்  உணர வேண்டாமா?

பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய  உணர அடைய வழி-விழி காட்டுகிறார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் - ஞானம் பெறுவதிழும் வந்தது வள்ளலாரால்!
மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியில் இருந்து வந்துள்ள
தர்ம நெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழ்ந்த மனிதன் தன்னை படைத்த பரம் பொருளை
அறிவதே, உணர்வதே திருவடியை அடைவதே பரிபூரண நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத

பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதை தான் சனாதன தர்மம் என்றனர்!
இதைத்தான் வள்ளலாரும் ஸ்ரீ ராமலிங்கரும் சன்மார்க்கம் என்று பெயரிட்டு உபதேசித்தார்
வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவனன்றே என பணிவாக கூறுகிறார் வள்ளலார்!

வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லபட்டதுதான்! 18 புராணங்களில் உபநிஷத்துகளில் சொல்லபட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னது தான்! இயேசு பிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபி பெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம் திருக்குறள் இன்னும் எத்தனையோ மகன்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம் ! தக்கலை ஞான மாமேதை பீர்முகமது உரைத்த ஞானம் ! எல்லார் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!

www.vallalyaar.com

திங்கள், 20 ஜனவரி, 2020

149 - தைப்பூச ஜோதி தரிசனம்


Date - 7/8/9/10 Feb 2020

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை ஒத்தது ஆகும்.
சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என வள்ளலார்
பாடி அருள்கிறார்! அதாவது நம் தலை நடுவே உள்ள அருட்பெருஞ்சோதி
ஆண்டவர் தங்கம் போல் தகதகக்கும் ஜோதியாக ஒளிர்கிறார்.
இதைத்தான் சத்திய ஞான சபை நடுவே உள்ளே காட்டினார்!

அதிகாலை கிழக்கே சூரிய உதயமாகும் ,
மேற்கே பூரண சந்திர அஸ்தமனமாகும் 
சூரிய
சந்திர
சத்திய ஞான சபையில் தங்க ஜோதி
வடலூர் பெருவெளியில் நின்றால் தான் காண முடியும்
அதாவது ஒரே சமயத்தில் மூன்று ஜோதியை காணலாம்.
ஞானத்தை விளக்க இவ்வாறு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்
உருவாக்கினார். இதுபோலவே தலையின் உள் நடுவே ஆத்ம ஜோதி
தங்க ஜோதி ஒளிவிட்டு பிரகாசித்து கொண்டிருக்கிறது.

நமது வலது கண் சூரிய
ஒளியாகவும் நம் இடது கண் சந்திர ஒளியாகவும் பிரகாசித்து
கொண்டிருக்கிறது \என்பதே ஞானிகள் கூறும் ரகசியம் ஆகும்.. 

செவ்வாய், 14 ஜனவரி, 2020

63 நாயன்மார்கள் பிறந்த/முக்தி மாதம்

63 நாயன்மார்கள் பெயர்.

(whatsapp forward)
01.பெயர் : திருநீலகண்டர்
பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்

02.பெயர் : இயற்பகையார்
பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, உத்திரம்

03. பெயர் : இளையான்குடி மாறனார்
பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மகம்

04. பெயர் : மெய்ப்பொருளார்
பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம்

05.பெயர் : விறல்மிண்டர்
பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, திருவாதிரை

06.பெயர் : அமர்நீதியார்
பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, பூரம்

07.பெயர் : எறிபத்தர்
பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்தம்

08.பெயர் : ஏனாதி நாயனார்
பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்

09.பெயர் : கண்ணப்பர்
பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, மிருகசீரிடம்

10.பெயர் : குங்கிலியக்கலயர்
பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, மூலம்

11.பெயர்  : மானக்கஞ்சாறர்
பிறந்த ஊர் :  கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, சுவாதி

12.பெயர்  : அரிவட்டாயர்
பிறந்த ஊர் : கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை,திருவாதிரை

13.பெயர்  : ஆரையர்
பிறந்த ஊர் : திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்தம்

14.பெயர்  : மூர்த்தி நாயனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை

15.பெயர்  : முருகர்
பிறந்த ஊர் : திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, மூலம்

16.பெயர்  : உருத்திரபசுபதி
பிறந்த ஊர் : திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அஸ்வினி

17.பெயர்  : திருநாளைப்போவார்
பிறந்த ஊர் : ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, ரோகிணி

18.பெயர்  : திருக்குறிப்புத்தொண்டர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, சுவாதி

19.பெயர்  : சண்டேசுவரர்
பிறந்த ஊர் : திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, உத்திரம்

20.பெயர்  : திருநாவுக்கரசர்
பிறந்த ஊர் : திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்

21. பெயர்  : குலச்சிறையார் 
பிறந்த ஊர் : மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் :கார்த்திகை, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, சித்திரை

22. பெயர்  : பெருமிழலைக்குறும்பர்
பிறந்த ஊர் : பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சித்திரை

23. பெயர்  : காரைக்கால் அம்மையார்
பிறந்த ஊர் : காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி

24. பெயர்  : அப்பூதி அடிகள் 
பிறந்த ஊர் : திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, சதயம்

25. பெயர்  : திருநீலநக்கர்
பிறந்த ஊர் : சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

26. பெயர்  : நமிநந்தி அடிகள்
பிறந்த ஊர் : எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பூசம்

27. பெயர்  :  திருஞானசம்பந்தர்
பிறந்த ஊர் : சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

28. பெயர்  : ஏயர்கோன் கவிக்காமர்
பிறந்த ஊர் : பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி

29. பெயர்  : திருமூலர்
பிறந்த ஊர் : சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அஸ்வினி

30. பெயர்  : தண்டியடிகள்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, சதயம்

31. பெயர்  : மூர்க்கர்
பிறந்த ஊர் : திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, ஆயில்யம்

32. பெயர்  : சோமாசிமாறர்
பிறந்த ஊர் : திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, ஆயில்யம்

33. பெயர்  : சாக்கியர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூராடம்

34. பெயர்  : சிறப்புலியார்
பிறந்த ஊர் : திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, பூராடம்

35. பெயர்  : சிறுத்தொண்டர்
பிறந்த ஊர் : திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, பரணி

36. பெயர்  : கழறிற்றறிவார்  (சேரமான் பெருமாள்)
பிறந்த ஊர் : திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

37. பெயர்  : கணநாதர்
பிறந்த ஊர் : சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, திருவாதிரை

38. பெயர்  : கூற்றவர்
பிறந்த ஊர் : திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, திருவாதிரை

39. பெயர்  : புகழ்ச்சோழர்
பிறந்த ஊர் : உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை

40. பெயர்  : நரசிங்க முனையரையர்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் :  புரட்டாசி, சதயம்

41. பெயர்  : அதிபத்தர்
பிறந்த ஊர் : நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, ஆயில்யம்

42. பெயர்  : கலிக்கம்பர்
பிறந்த ஊர் : பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை, ரேவதி

43. பெயர்  :  கலியர்
பிறந்த ஊர் : திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை

44. பெயர்  : சத்தியார்
பிறந்த ஊர் : வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பூசம்

45. பெயர்  : ஐயடிகள் காடவர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்

46. பெயர்  : கணம்புல்லர்
பிறந்த ஊர் : இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை

47. பெயர்  : காரி
பிறந்த ஊர் : திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, பூராடம்

48. பெயர்  : நின்றசீர் நெடுமாறனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பரணி

49. பெயர்  : வாயிலார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, ரேவதி

50. பெயர்  : முனையடுவார்
பிறந்த ஊர் : நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்

51. பெயர்  : கழற்சிங்கர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி

52. பெயர்  : இடங்கழி
பிறந்த ஊர் : கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, கார்த்திகை

53. பெயர்  :  செருத்துணையார்
பிறந்த ஊர் : கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

54. பெயர்  : புகழ்த்துணை
பிறந்த ஊர் : செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, ஆயில்யம்

55. பெயர்  : கோட்புலியார்
பிறந்த ஊர் :நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை

56. பெயர்  : பூசலார்
பிறந்த ஊர் : திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அனுஷம்

57. பெயர்  : மங்கயைர்க்கரசியார்
பிறந்த ஊர் : பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரோகிணி

58. பெயர்  :  நேசர்
பிறந்த ஊர் : காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி

59. பெயர்  : கோச்செங்கட்சோழர்
பிறந்த ஊர் :உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, சதயம்

60. பெயர்  : நீலகண்ட யாழ்ப்பாணர்
பிறந்த ஊர் : எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

61. பெயர்  : சடையனார்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை

62. பெயர்  : இசைஞானியார்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை

63. பெயர்  : நம்பி ஆரூரர் (சுந்தரர்)
பிறந்த ஊர் : திருநாவலூர் ர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

Popular Posts