புதன், 4 மார்ச், 2020

சுருதி - யுக்தி - அனுபவம் மூன்றும் தான் பூரணமான நிலை!

"சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டோ டுமே"

பாடல் - 1631 திருமந்திரம்


வேத சாத்திரம் புராணம் இதிகாசம் உபநிஷத்து இன்னும் உள்ள
ஞான நூற்களையெல்லாம் ஓதிக் கொண்டேயிருந்தால் போதுமா?
கடவுளை பாடி மகிழ்ந்தால் மட்டும் போதுமா? லட்டு இனிக்கும்
என்றும் அது எப்படி செய்யலாம் தித்திக்க என்ன வேண்டும் என
சொல்லிக் கொண்டேயிருந்தால் இனிக்குமா என்ன?!

"சுருதி" என நூற்களை பெரியோர் கூறுகின்றனர்!
சுருதி சொன்னதை "யுக்தி”யால்
சிந்தித்து தெளிந்து - தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து புரிந்து பின்
அனுபவத்தில் பார்க்கவும் வேண்டும்!

சுருதி - யுக்தி - அனுபவம்
மூன்றும் தான் பூரணமான நிலை! ஓதியதை உணர்க! செயல்படுக!
அப்போதுதான் உண்மை விளங்கும்!

லட்டு இனிக்கும் என்றால்
சாப்பிட்டு பார்த்தால் தானே தெரியும்?! ஞான நூல்களில்
சாத்திரங்களில் எல்லாமே சொல்லப்படுகிறது! முடிந்த முடிபான நிலை
ஞானத்தை பெற என்ன சொல்லப்பட்டிருக்கிறது என பார்த்து புரிந்து
அதன்படி நடக்கணும்!

வேத சாத்திரங்கள், எல்லாம் வல்ல இறைவன்
நமது உடலில் கண்களில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என
திரும்பத் திரும்ப கூறுகின்றன!

 கண்ணில் மணியில் ஒளியை
நினைத்து உணர்ந்து அங்கேயே நிலைத்து நின்றால் அதுவே திருவடிதவம்
என்றும் எல்லா ஞானியரும் கூறியிருக்கின்றனர்! அங்ஙனம் தவம்
செய்கையில் கண்மணி ஒளி உள்ளே போகும் இரு கண்ணும்
உள்ளே சேரும் அக்னி நிலையை அடையும்! இதுவே சாதனை
அபைவம் ! தவப்பயன் !

ஏ, மனிதா ஒரு மாத்திரை நேரமாய்
கண் சிமிட்டும் நேரம் மட்டிலாவது கண்மணி ஒளியை புறப்பார்வையிலிருந்து 
மாற்றி அகப்பார்வையாக மாற்று ! உள்நோக்கு !


எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா? பசுமரத்தாணி போல் உள்ளே
விரைவாக செல்ல வேண்டும்! ஊன்றி பதிய வேண்டும் ! தவம்
அங்ஙனம் நிலைத்து நீடித்தால் இறப்பு என்பது இல்லாதாகும்!

பிறப்புக்கு சந்தர்ப்பமே இன்றி பிறந்த இப்பிறவியிலேயே முக்தி
பெறுவோம்!

" நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே "

- அருள் விளக்கமாலை - ஆறாம்திருமுறை - திருவருட்பா


ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை
கன்னியாகுமரி

ஞாயிறு, 1 மார்ச், 2020

அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!



"கண்ணிலான் சுடர் காணிய விழைந்த கருத்தை..பாடல் 8
கண்ணில்லாதவன் ஒளியை காண முடியுமா?

கண்களில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்!

கண்களில் ஒளியில்லாதவன் குருடன்! கண்களில் துலங்கும் ஒளி உள்ளே அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!


அதனால் பார்க்கும் ஆறறல் பெறுகிறான்.
அக்னி கலை ஒளி இரு நாடி வழி இரு கண்ணில் வராதவன் பார்வை இல்லாதவன்.
பார்க்கின்ற ஆற்றல் பெற்றவன் உணர்வால் ஒளியை பெருக்கி அதிவிரைவில்
வினையறுத்து ஞானம் பெற முடியும்!


பார்வை இல்லாதவனும் ஞானம் பெறலாம்.! இறைவன் அருள்வார்.!
உள்ளே அக்னி கலையில் கருத்தை செலுத்தி தவம் செய்ய வேண்டும்.
சற்று கடினமான செயல்தான்!இருப்பினும் முயன்றால் முடியாதது ஒன்றுண்டோ?

அருள்மயமான இறைவன் அருள்புரியாது போய்விடுவாரா?!
சதாசர்வ காலமும் இறைவனை நினைத்து உணர்ந்து நெகிழ்ந்தால்
கண்ணில்லாதவனுக்கும் காட்சி கொடுப்பார் கருணைகடலான கடவுள்!

ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா.
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை இரண்டாம் பகுதி
பக்கம்:31

www.vallalyaar.com

Popular Posts