புதன், 12 மே, 2021

கோவில் ஞானப் பள்ளிக்கூடமே ! ஒழுங்காக கோவிலுக்கு போ ! பக்தி செய் !

"சீர் திகழ் தோகை மயில் மேலே - ஒரு செஞ்சுடர் தோன்றும் திறம் போலே" என்று இராமலிங்க வள்ளலார் பாடியருள்கிறார். 

இது என்ன ? "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி" இதையும் வடலூர் வள்ளலாரே பாடினார் ! 

நாம் தவம் செய்யும் போது பலவித வர்ணங்களில் மயிலின் தோகைபோல் ஒளிக்காட்சி காணும் ! அதன்மேல் செஞ்சுடர் ஒளிகாணும் ! 

 மயிலின் மேல் முருகன் என்றனர் பக்தர்கள். பலநிறவர்ண ஒளி காட்சிக்கு பின் செஞ்சடர் காட்சி ! இது ஞானிகள் !  செஞ்சுடர் உதயமாகும் போது தசவித நாதமும் கேட்கும் இதுவே ஞான சாதனை அனுபவம்.  🔥ஒளியும் ஒலியும் !🔥 

 பக்தியில் கோவிலில் சாமிக்கு தீபாராதனை கற்பூர ஒளி காட்டும் போது மேளதாளம் சங்கொலி மணியோசை ஒலிக்கச் செய்வார்கள் ! 
ஞான சாதனை செய்யும்போது, உனக்குள் கற்பூர ஜோதி காண்கையில் நாதத் தொனி கேட்கும் என உணர்த்தவே !  கோவில் ஞானப் பள்ளிக்கூடமே ! ஒழுங்காக கோவிலுக்கு போ ! பக்தி செய் ! ஒவ்வொன்றும் ஏன் எதற்கு என சிந்தி ! ஞானம் விளங்கும் ! அதனால் தான் ஔவை யார் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார்கள். 

 👁️🔥👁️  "என்னிரு கண்ணே, கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" 
 என்கிறார் திருநாவுக்கரசர் ! 👁️🔥👁️ 
 
🔴 திருப்பாவை என்று பாவையான பாப்பாவான கண்மணியில் திருவாகிய இறைவன் துலங்குவதையே கூறுகிறாள் ஆண்டாள் ! 
 
🔴 திருவெம்பாவை என்று பாவையான பாப்பாவான கண்மணியில் திருவாகிய இறைவன் துலங்குவதையும் அது என் பாவை என் பாவையில் உள்ள திருவே என் உயிர் என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர் ! 

 🔴 திருநாவுக்கரசரும் கண்ணே மணியே பாவையே என்று இதையே பாடுகிறார் !

 திருப்பாவையும் திருவெம்பாவையும் சைவமும் வைஷ்ணவமும் நம் இரு கண்கள் போன்றதே ! 

 இருவர் பாடலும் ஆன்மாவை உணர, ஆன்மா கடைத்தேற காட்டும் வழியே ! விழியே ! இறைவன் திருவடிகளே நம் கண்கள்!! -

ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி போற்றி!! அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி!! 


ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

என்ன செய்வோர் .. எக்காலமும் காண முடியாது கண்ணனை!?

"அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பார்" நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்−2049 

 அன்பை உன் கண்ணில் வை! அதிலேயே வேறு எந்த சிந்தையுமின்றி நில்! 

அப்படியே தியானம் செய்தால் கண்மணி உள் ஜோதி விளக்கு சுடர் விட்டு பிரகாசிப்பதை நீயே காணலாம். தன் உடலில் உள்ள ஜோதியே தன் முன்னே தோன்றும்.! 

இதை விடுத்து ஐம்புலன் அடக்கி பட்டினி கிடந்து வாயுவை இழுத்துப் பிடித்து என்னென்னவோ செய்வோர் எக்காலமும் காண முடியாது கண்ணனை!? 

 நூல்: பரமபதம் பக்கம்:125

ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

Popular Posts