திங்கள், 19 டிசம்பர், 2022

பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்



சாகாக்கல்வி நூலிலிருந்து : 40

🔥 தங்கஜோதியை கண்டால் ?🔥


நமது மெய் பொய்யல்ல ! அழியாதது ! நித்ய ஜீவனை தாங்கியிருக்கும் மெய் பொய்யா ? மெய் பொய்க்காமல் - அழியாமல் வைக்கும் உபாயம் அறிந்து காத்தால் மெய்தங்கிய மெய்யும் மெய்யாகிவிடும் !

மெய்யிலே இருக்கும் மெய் துணைகொண்டு, காயமே இது பொய்யடா என்றவர்களின் வாக்கை பொய்யாக்கிவிடலாம் ! காயத்துள் நின்ற கடவுளை கண்டால் மெய் மெய்யாகிவிடும் !

மெய்யை உடலை பொன்போல பாதுகாக்க வேண்டும் என்றார் வள்ளலார்.

உடலினுள் துலங்கும் தங்க ஜோதியை கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய் !

பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய்யே !

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது!" என்று ஒளவை பிராட்டி அருளிய அமுதமொழி படித்தோமல்லவா ?




அரிதானது மானுடதேகம் ! குறையின்றி பிறப்பது புண்ணிய பலன் ! இறைவன் அருளால் கிடைத்தது !




தந்தவனை, மெய்தந்தவனை, மெய்யினுள் மெய்ப்பொருள் தந்தவனை காணவேண்டாமா ? உணர வேண்டாமா ? நன்றி சொல்ல வேண்டாமா ?




தாய் தந்தை தந்ததல்ல உயிர் ! மெய் !




பூர்வ ஜன்ம கர்மக்கடன் தாய்தந்தை உடன் பிறப்பு சொந்தபந்தங்கள் !!

இதுவே மெய் !




தாயும் தந்தையுமான தயாபரன் சர்வேஸ்வரன் பரப்பிரம்மம் அவனே ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்ஜோதி வானவன் !

மெய் இதுவே !




அவனே நம் உயிருமாகி பெற்றோர் மூலம் உடலும் வர காரணமுமானான் !

மெய் தந்த மெய்ப்பொருள் !!




இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts