புதன், 30 நவம்பர், 2011

இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.



ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் உள்ளிருந்த விளக்கை திருமாளிகை
புறத்தே வைத்து இதை தடை படாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி
விட போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர்
தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்கள் காலத்தை வீண்
கழிக்காமல்

"ஞான சரியை"

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்னும் தொடக்கமுடைய ௨௮(28) பாசுரம் அடங்கிய பாடலில் கண்டபடி
தெய்வப் பாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.
நாம் இப்பொழுது இந்த உடலில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும்
புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும்
இருப்போம். திருத்தி விடுவோம் அஞ்ச வேண்டாம்.

அகவினத்தாருக்கு சாகாவரமும், ஏனையோருக்கு பரிபாக நிலை அளிப்போம்.

சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.
திருவருட் செங்கோல் ஆட்சி செலுத்துவோம்

வள்ளலார் அடைந்த நிலை!!

வள்ளலார் அடைந்த நிலையை அவர் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே

அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து

சாகாத நல்வரம் தந்த மருந்து

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி

மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்


பொத்திய மலப்பிணிப் புழுக் குரம்பைதான்
சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

செவ்வாய், 29 நவம்பர், 2011

மனு முறை கண்ட வாசகம் -> தற்சோதனை


வள்ளல் அருளிய
மனு முறை கண்ட வாசகம்

மூலம்
நாமும்
தற்சோதனை
செய்வோம்...


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!


தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!

கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ!

ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறிவைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து஡ஷணஞ் செய்தேனோ!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே!

என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்




“யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
- திருவாசகம்


யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?

என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!

என் அன்பும் பொய் – நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி?

நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நஸ்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்!

மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.

“அழுதால் உன்னை பெறலாமே” என்றார் மாணிக்கவாச்கர்.

“ நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”




என்றார் வள்ளலார் .

“கண்ணீரோடு விதைக்கிறவன் கம்பீரத்தோடு அறுப்பான்”
என்றார் இயேசு பெருமான்!



ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர்.

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!

இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்க்காக அழத்தான் சொன்னார்கள்!

இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்!

எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!!

அந்த ஞான்குழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்!

அழுது, ஒளிபெருகி, அமுது பருகி, ஒலி கேட்டு, ஒளி கண்டு பேரின்பம் பெறலாம்! நம்மை படைத்தவனை பார்க்கலாம்! அவணடி சேரலாம்! ஞானம் பெற, இறையருள் பெற எப்படி அழ வேண்டும் என்பதை தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
———————————————————————————————————————————
ஏன் அழ வேண்டும் எதற்க்கு அழ வேண்டும் என்றால் முதலில் நமக்கு சித்தர்கள் இறைவன் திருவடி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

சித்தர்கள் திருவடி – Click Here





----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.


-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

திங்கள், 28 நவம்பர், 2011

எட்டும் இரண்டும்


சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு
2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக்கிற கடைக்கு போயிட்டு வா
கண்ணு என்று சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறீர்களா?

திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2 , 8 பற்றி பேசுகிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது!

முதலில் ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்த பட்டிருக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.

"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

எட்டு - அ - வலது கண் ............. இரண்டு - உ - இடது கண்




இவைதான் சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால் அறிவு துலங்க அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இரண்டுமான கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவலிங்கத்தை மேலிருந்து பார்க்க வேண்டும்... பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கிறார். ஞான சற்குருவின் உபதேசத்தால்தான் எட்டும் இரண்டும் அறிய முடியும். எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானிகளே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட வேண்டும். அடியேனால் முடிந்தவரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி விட்டேன்! எட்டாத தூரத்தில் இல்லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள் பரிபூரணமாக கிட்டும்!

எட்டு இரண்டு நமது தமிழ் மொழியுடன் எவ்வாறு பின்னி பினைந்திருக்கிறது என்பதற்க்கு ஒர் உதாரணம்

சிறு வயதில் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் “கடைக்கு போ” என்ற வார்த்தையை அவரவர் அம்மா வாயால் நிச்சயமாக கேட்டிருப்போம்.

நீங்கள் கேட்டு இருக்கிறீர்களோ இல்லையோ... இந்த கதையில் வரும் “தணிகை மணி” பலமுறை கேட்டு இருக்கிறான். கேட்ட மாத்திரத்தில் சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும் அவனுக்கு. ஏன் எனில் “தணிகை மணி” தான் கால்பந்து விளையாட செல்ல வேண்டுமே? கடைக்கு சென்றால கால்பந்து விளையாட முடியாதே!!

உடனே அவன் சொல்லுவான்... போம்மா கடை ரொம்ப தூரம் என்று....

தாயுக்கும் அவனை பற்றி தெரியும் அல்லவா.... இப்பொழுது அவள் அவன் பெயரை மறந்து விட்டு என்னடா கண்ணா இப்படி சொல்கிறாய் என்பாள்... (ஆம், சிந்தியுங்கள் நாம் குமார், கார்த்தி, ராம் அல்லது சிவா அல்லது எந்த பெயரில் இருந்தாலும் என் அனைத்து தமிழ் தாய் மார்களும் சொல்வது “கண்ணா” என்று மட்டும்தான்... இங்கே ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் சிந்தித்தால்... இதுதான் சித்தர்கள் சொன்ன ம்ற்றும் வள்ளல் பெருமான் இறங்கி சொன்ன ஞான தவம்)

ஒரு நொடியில் “தணிகை மணி” யாக இருந்து கண்ணணாக மாறிய அந்த பையன் சொல்வான் போம்மா... கடை ரொம்ப தூரம்... கால் எல்லாம் வலிக்கும் என்று சொல்கிறான்.



கண்ணன் கள்வன் அல்லவா... அதை அவள் தாயும் அறிவாள் அல்லவா?
ஒரு பொய் கோபத்துடன்..........
டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வாள்? அவனும் ஒருவாறு சமாதனம் அடைகிறான் என தாய் தெரிந்து கொள்கிறாள்....

இப்பொழுது ராஜா இல்லை, என் கண்ணு இல்லை, போட கண்ணா என்று அவளும் குழைந்து சொல்கிறாள்....மெல்ல... அவனுடைய திருவடிகளை எடுத்து வைக்கிறான்...



ஆம் 8 - லும், 2 - லும் வைக்கிறான்.... மெதுவாக நடக்கிறான்...

பின்னாடி இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கிறது..... என்னடா மச மச வென போய் கொண்டிருக்கிறாய்... விறு விறு என நடடா என்று....வைக்கிறான் வேகமாக..

8 , 2

2 , 8

8 , 2

2 , 8 என்று மாற்றி மாற்றி நடக்கிறான்.
தணிகைமணி போய் சேர்ந்தானா இல்லையா என்று கேட்கிறீர்களா.............
தணிகைமணி.....அவந்தான் கண்ணன் னாயிற்றே

அவந்தான் ராஜா வாயிற்றே --- போய் சேராமல் இருந்து விடுவானா என நான் கேட்கவில்லை வள்ளலார் கேட்கிறார்.

இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிந்தால் போதும்

ரெண்டு - 2
எட்டு - 8
வைத்தால்
கடை - ஞானம் (கடைந்தேருவது .... என்று பொருள்)

இந்த 8 ஐயும் 2 ஐயுமே கண்ணா(கண்கள்) என்று சொல்கிறார்கள்

இந்த கண்களையே ராஜா என்கிறார்கள்... ராஜா தானே ஆட்சியை
பிடிப்பான் ( ஞானத்தை பிடிப்பான்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

http://www.vallalyaar.com

----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வெள்ளி, 25 நவம்பர், 2011

இறைவன் நமக்கு கொடுத்த சீர்?


சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.

என வள்ளல் பெருமான் உரைக்கிறார். நேத்திரங்கள் என்றால்
கண்கள். சாத்திரங்களை நாம் உண்மை அறியாது படிப்போமானால்
நமக்கு தடுமாற்றமே உண்டாகும்-புரியாது. ஆனால் கண்களாகிய
சிற்றம்பலத்தில் குடியிருக்கும் இறைவனை அறிந்து
பார்த்தோமானால் கண்கள் நமக்கு அனைத்தையும் அறிவிக்கும்.
எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இந்த உலகத்தையும் இது
போன்ற பற்பல உலக நிலையும் நமக்கு உணர்த்தும்,
நாமும் உணரலாம் - ஞானமடயலாம். - பரிபூரண அறிவு பெறலாம்.


இறைவன் நமக்கு கொடுத்த மாபெரும் சீர் - திருமணத்தின் போது
பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள் என நாம் கேட்கிறோமல்லவா?
அதுதான். ஜீவர்களாகிய நமக்கு ஆண்டவர் கொடுத்த சீர் தான் கண்கள்.

அதை எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால்
உணர்ந்து கொண்ட வள்ளலார் நாமும் அறிந்து கொள்ளவே பாடி
திருவருட்பாவை நமக்கு அருளி இருக்கிறார்கள். என்ன அவர் தம்
கருணை! இரக்கம்.

நான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியாது என போல் இவ்வுலகம்
பெறுதல் வேண்டுவனே என ஆண்டவரிடம் வேண்டிய கருணையின்
வடிவமாயிற்றே அவர்! தான் அறிந்தவற்றை வெளிப்படுத்தி உலகர்
அனைவரும் மரணமில்ல பெருவாழ்வு அடைய வழி காட்டினார்.

திருவருட் பிரகாச வள்ளல் - சற்குரு - ராமலிங்க சுவாமிகள்
திருவடிகளை என்றும் வணங்குவோமாக!

பக்கம் 66

கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com




----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

புதன், 23 நவம்பர், 2011

திருமந்திரம் - உபநயனம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு
நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? 


 

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.
இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். 

உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி 
மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர்
கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!
உபநயனம் +
காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை
தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது
இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர்.


கிரியையில் நின்று விடுகின்றனர்.
ஞானத்திற்கு வருவதில்லை. 


எப்பொழுது புரிந்து ஞானம் அடைவார்களோ ? இறைவா உன் 
பக்தர்களை மேனிலை படுத்து. அருள் புரிவாயாக. இரு கண்களிலும் 
உள்ள ஒளியைப் பார்த்து சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் 
தூங்கி இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன்
காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில்
இதனை உணரலாம். 


சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

பக்கம் 70.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
 
www.vallalyaar.com

திங்கள், 21 நவம்பர், 2011

அகவல் - பிடித்த வரிகள்

உரை மனம் கடந்த ஒரு பெருவெளிமேல்
அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளியெனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி

இன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் அருட்பெருஞ் ஜோதி

சித்தி என்பது நிலைசேர்ந்த அநுபவம்
அத்திற லென்றவென்ன அருட்பெருஞ் ஜோதி

கதிர்நல என் இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

களங்க நீத்து உலகங் களிப்புற மெய்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

வீடுகளெல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்தருளு மரும்பெரும் பொருளே

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்றருள் ஆடல் செய் ஒருதனிப் பொருளே .


யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே

எம் பொருளாகி எமக் அருள் புரியுஞ்
செம் பொருளாகிய சிவமே சிவமே

அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியுந்
தெருளிது எனவே செப்பிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்தமெய்ச் சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே

கொல்ல நெறியே குருவருள் நெறி எனப்
பல்கா லெனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

உயிரெலாம் பொதுவினுள் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே .

உள்ளகத் அமர்ந்து எனது உயிற் கலந்தருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவ பதியே

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பட்டினத்தார் ஞானம் அடைய வழி - கண்

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்.


எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார் பாருங்கள்! பட்டினத்தார்.
ஞானம் அடைய நமக்கு வழி கூறுகிறார். கண்ணால்தான் சாதனை
புரிந்து ஞானம் அடையவேண்டும். இதை நெஞ்சே நீ அறிவாயாக
என்கிறார். ஆனால் நீ அதை விடுத்து மாயை வசப்பட்டு வேண்டாதெல்லாம்
எண்ணுகிறாய் என கூறுகிறார். மேலும் கண் மூலம் சாதனை செய்து
தான் தன்னையும் உணரவேண்டும் என்றும் அதன் மூலம் உன் ஊன
உடல் பத்தரை மாற்று பொன்னாக ஒளிர் விட்டு பிரகாசிக்கும் என்று
கூறியுள்ளார்.


பக்கம் 107.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

செவ்வாய், 15 நவம்பர், 2011

கண்தான் உடலுக்கு விளக்கு

விவிலியம்  சொல்வது என்ன?

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கு

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.

உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.



மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து"உலகின் ஒளி நானே என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும். நிலவோ இரத்த நிறமாக மாறும்.

ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஏனெனில் ஒருமுறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளாம் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது: எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்: உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்: எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்: எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.

ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.

ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.

கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.

அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.

தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும் ......

--இவை அனைத்தும் விவிலியம் இருந்து எடுத்தது

வெள்ளி, 11 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி-2

உணவு முறை :

கிழங்கு வகையில் கருணை கிழங்கு மட்டும் சாப்பிடவும்.
பழம் - பேயன் / ரஸ்தாளி சிறிது கொள்ளுதல் கூடும்.
பழைய கறிகளை(குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை) கொள்ளாதிருத்தல் வேண்டும்.
பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்கவேண்டும்.
மிளகு சீரகம் அதிகமாக சேர்க்க வேண்டும்.
கடுகு சேர்ப்பது அவசியமல்ல.
உப்பு குறைவாக சேர்க்க வேண்டும். தேக நீடிப்புக்கு ஏதுவாம்.
பசுவெண்ணை அல்லது நல்லெண்ணெய் - தாளிக்க பயன்படுத்தலாம்.
வெங்காயம் பூண்டு சிறிது சேர்க்கலாம்.

கத்தரிக்காய், வாழை , அவரை, முருங்கை, பீர்கங்காய்,கலியாண பூசணி,புடல,
தூதுலன் காய், கொத்தவரன்காய் இவைகளை பதார்த்தம் செய்தல் கூடும்.

ஏகதேசத்தில் சிறிது கொள்ள வேண்டியது
வடை அதிரசம் தோசை மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் தினமும் கொள்ளகூடாது
சர்க்கரை பொங்கல், ததியோதனம் , புளிசாதம் .

புளியாரை கீரை தினந்தோறும் கிடைகிணும் நன்று.


cont...



செவ்வாய், 8 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி

சூரியோதைதுக்கு முன் எழவேண்டும்
விபூதி தரிசித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை தியானம்
செய்யவேண்டும் வெற்றிலை + களிப்பாக்கு(அதிகமாக)+ சுண்ணாம்பு
குறைவாக போட்டு முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின் வரும்
ஜலத்தை உட்கொள்ளுதல் வேண்டும் பின்பு எழுந்து சற்று
உலாவுதல் வேண்டும்.

மல ஜல உபாதிகளை கழித்தல் வேண்டும்.

மலம் கழிக்கும் பொது வலது கையால் இடது பக்க அடி வயிற்றை
பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது இடது கையால்
வலது
பக்க அடி வயிற்றை பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது
ஜலமாவது பற்றறக் கழியும் வரையில் வேறு விசயங்களை சிறிதும் நினையாமல் மல ஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும் மலம்
பின்னுந் தடை படாமல் இடது பக்கமாக படுத்து பிராண வாயுவை
வலத்தே வரும் படி செய்து கொண்டு மலசங்கற்ப
த்தோடு மலவுபாதி
கழித்தல் வேண்டும் ஜலம் தடை பட்டால் வலது பக்கமாக சற்றே
படுத்து பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு
ஜல
சங்கற்பத்தோடு ஜலவுபதி கழித்தல் வேண்டும்


இது இல்லாதார்க்கு மட்டுமே விதித்தது, துறவர்த்தர்க்கு தாம்பூலம் தரித்தல் விலக்கு.

வெற்றிலை நுனியும் காம்பையும் கிள்ளி எரிய வேண்டும், முதுகு நரம்பை
நகத்தால் எடுத்து விடவேண்டும் பல் துலக்கும் முன் தாம்பூலம் தரிக்கலாகாது
காலையில் பாக்கு மிகுதியாகவும் , ஊச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும்
மலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ளவேண்டும்
வெற்றிலை போட்ட
பின்னரே பக்கை போடவேண்டும்.

மல ஜல வுபாதி கழிந்தபின் செவிகள்(காது) கண்கள் நாசி(மூக்கு) வாய் தொப்புள்
இவைகளில் அழுக்கு,பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும் கைகால்
முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றற துடைத்தல்
வேண்டும்.

பின் வேலங்குச்சி ஆலம் விழுது இவைகளை கொண்டு பல் அழுக்கு எடுக்க
வேண்டும்.

அதன் பின் கரிசலங்கண்ணி தூள் கொண்டு சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாய் அலம்பவும், பின் பொற்றலை கையாந்தகரை இல்லை அல்லது
கரிசலங்கண்ணி இலை ஒரு பங்கு தூதுளை இலை முசுமுசுக்கு இலை கால் பங்கு சீரகம் கால்பங்கு இவை ஒன்றாய் சேர்த்து சூரணம் செய்து அதில் ஒரு வராகன் எடை ஒரு சேர் நல்ல ஜலத்தில் போட்டு அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் பசும்பால் விட்டு கலந்து அதிலுள்ள ஒரு சேர் ஜலமும் சுண்ட காய்ச்சி அந்த பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடல் வேண்டும்


பொற்றலை கையாந்தகரை தூதுளை இலை ஞான பச்சிலைகள், இதை அடிகள்
அடிகடி வற்புறுத்தி அருளுவர்.


காலையில் இளம் வெயில் தேகத்திற்கு படாதபடி, பொழுது
விடிந்து (௫)5 நாழிகை பரியந்தம் உடம்பை போர்வையோடு காத்தல்
வேண்டும்.இளம் வெண்ணீரில் குளிக்க வேண்டும். விபூதி தரித்துச்
சிவசிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்,
ஆகாரம் கொடுக்கும் போது, மிகவும் ஆலசியமும் ஆகாது மிகுந்த தீவிரமும்
ஆகாது (ஆலசியம்: சோம்பல்:மடிமை.தாமதம்.சோம்புத் தன்மை)

முதற்பக்ஷம்(பதினைந்து நாள் கொண்ட காலம்) சீரகசம்பா அரிசி
அன்றி புன்செய் விளையும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசி வகைகள் ஆகும்.

அது சாதம் ஆகும்போது அதிகம் நெகிழ்ச்சியும் ஆகாது அதிக கடினமும் ஆகாது
நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படமலும் குறைவு படாமலும்
அறிந்து உண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒருபடி குறைந்த பக்ஷமே நன்மை.


போஜனம் செய்தபின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும்.
அந்த நல்ல நீரும் வெந்நீர் ஆதல் வேண்டும்.
அதுவும் அதிகமா குடியதிருத்தல் வேண்டும்.

















திங்கள், 7 நவம்பர், 2011

திரை

  1. கருப்பு நிறத்திரை - கரைவின் மாமாயைக் அரைசது மறைக்கும்(மாயா சக்தியையும்),
  2. நீல நிறத்திரை - ஆருயிர் மறைக்கு(கிரியா சக்தியையும்)
  3. பச்சைத்திரை - பரவெளி யதனை அச்சுற மறைக்கு (பராசக்தி)
  4. சிவப்புதிரை - சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் (இச்சா சக்தி)
  5. பொன்மைத் திரை - பொருளுறு வெளியை அண்மையின் மறைக்கும்
  6. வெள்ளைத்திரை - மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும்
  7. மஞ்சள் - (திரை ஞான சக்தி),

அருட்பெருஞ் ஜோதி

ஞாயிறு, 6 நவம்பர், 2011

சபரிமலை


பக்தியால் ஞானத்தை காட்டுவதில் 
முன்னிற்பது இன்று சபரிமலையிலே 
கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் 
தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே!!


தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, 
எல்லோரும் ஒரே  மாதிரி உடை, 
மலை அணிவது 
எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.

18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். 
அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. 
எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண  
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே 
சபரிமலை யாத்திரை.



குருவை பணித்து 
அவர் வழி காட்டுதலில்
இறைவனை காண 
பயண படவேண்டும். 


இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து
 மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். 

குரு வழி காட்ட மலை ஏறி 
ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்



--------பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ------

இரு முடி தாங்கி 
ஒரு மனதாகி 
குருவெனவே வந்தோம்
இரு வினை தீர்க்கும் 
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை 
காண வந்தோம்...

வெள்ளி, 4 நவம்பர், 2011

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்?

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார் என்று பாருங்கள்.

ஞான சரியை பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் கருணை .


வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்(கற்பனை) பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

விரைந்து விரைந் அடைந்திடுமின் மேதினியீர்(உலகியலீர்) இங்கே
மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்

வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக் கொண்டிடுவேன்
மனங் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே
புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே

ஊனேயும் உடலழியா தூழி தொறும் ஓங்கும்
உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே

மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்



Popular Posts