Monday, June 26, 2017

கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சை.

புருவமத்தி எதென்றாக்கால் பரப்பிரம் மானதொரு அண்ட் உச்சி
பரப்பிரம்மம் ஆகிய ஒளியாகிய அண்ட உச்சி, அண்டம் போல்
அழகியதாம் - பட்டினத்தார் பாடல். அண்டம் போல் உள்ளது
கண்மணி. அதன் உச்சி என்பது மத்திய பகுதி. புருவமத்தி
எது எனில் கண்மணியின் ஒளிபொருந்திய மத்திய பகுதி.
நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட ஆக்னா
சக்கர இடமில்லை!

ஒத்த இடத்தில் நித்திரைகொள்
இது - நம் கண்மணி ஒளியில் நிலைத்து
தூங்காமல் தூங்குவதே ஞானம்.
திருவடி தவம்

சக்கர நெறிநில் - ஒளவையார் கூறியது சக்கரம்போல்
உள்ள கண்மணியைப் பற்றிதான்! வெட்டாத சக்கரம்
என இன்னொரு ஞானி கூறியதும் இதுவ

தீட்சை - தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள
தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்!
தீ உள்ள கையில் - கண்ணில் உணர்வு கொடுப்பது தான்
தீக்கை!  சீடன் கண்மணியில் உள்ள தீயை குரு தன் கண்மணி
ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்.

சூட்சும சாரீரமே ஆன்ம சரீரம். ஆன்ம சரீரம் பிறப்பது
தீட்சையில் தான்!  முதலில் பிறக்கணும்! பிறகு பக்குவம் ஆகணும்!
பின்னரே கல்யாணம்! வாருங்கள் தீட்சையின் மூலம் மீண்டும் பிறக்க!

Friday, June 2, 2017

வள்ளலார் கருங்குழியில் தண்ணீரில் விளக்கெரித்தது


திருவருட்பிரகாச வள்ளலார் கருங்குழியில் தண்ணீரில் விளக்கெரித்தது

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகள் வடலூர் அருகே கருங்குழி என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்த சமயம் ஒருநாள் இரவு வழக்கம் போல் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நினைத்து பாமாலைகள் எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்திலே அகல் விளக்கு மண் விளக்கு ஒளி தந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் எழுதினார் வள்ளலார். விளக்கில் எண்ணெய் தீர தீர அருகில் மண்கலயத்தில் இருந்த நீரை எண்ணெய் எனக் கருதி ஊற்றி கொண்டிருந்தார். சுத்த ஞானி கைபட்ட தண்ணீரும் அங்கே எண்ணெய் ஆயிற்று. அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால் இராமலிங்கர் கையால் ஊற்றிய தண்ணீரால் இரவு முழுவதும் விளக்கு ஒளி விட்டு பிரகாசித்தது. மறுநாள் வீட்டுக்கார அம்மா வந்து தான் எண்ணெய் வைக்க மறந்ததும் , மண் கலயத்தை பழக்குவதற்காக தண்ணீர் விட்டு வைத்ததையும் கூறிய பிறகே இராமலிங்கர் தான் இரவு முழுவதும் தண்ணீர் விட்டே விளக்கெரித்தோம் என அறிந்தார். இச்செய்தியை தன் சென்னை நகர அன்பர்களுக்கு எழுதி அருளினார். அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அருள் செயலை அறிந்து ஆனந்தம் அடைந்தார். நெய் விட்டு விளக்கெரித்தால் எத்தனை பிரகாசமாக எரியுமோ அது போன்று தண்ணீர் விளக்கும் எரிய செய்தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என வள்ளலார் மகிழ்ந்து கூறியருளினார்.


இதிலே ஞான இரகசியமும் உள்ளது. திருவருட்பிரகாச வள்ளலார் கருங்குழி ஊரில் ஒரு நாள் இரவில் தண்ணீரால் விளக்கெரித்தார் என்பது நடந்த நிகழ்ச்சி. இதில் ஞானம் என்னவென்றால் "கருங்குழியில் தண்ணீர் விளக்கெரித்தார்" என்பதே. கருங்குழி என்பது வடலூர் அருகில் உள்ள சிற்றூர். நமது உடலிலே கருங்குழி - கண்மணியே. வெள்ளை விழி அடுத்து கருவிழி அடுத்திருக்கும் குழியிலே தான் கிருஷ்ணமணி - கண் மணி அமைந்துள்ளது. அந்த கருங்குழியில் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை துவாரத்தினுள் ஊசிமுனை அளவு ஒளி துலங்குகிறது. அந்த ஒளி எப்படி எரிகிறது தெரியுமா? நாம் உண்ணும் உணவு சக்தியாக பிரிந்து பல பகுதிகளுக்கும் செல்கிறது. ஒரு பகுதி கண்ணில் கருங்குழியில் பிராணநீராக வருகிறது. அதில் தான் நம் உயிர் ஜோதி துலங்குகிறது. அந்த பிராண நீரே அதற்கு சக்தி ஊட்டுகிறது. அதாவது நீர் மேல் நெருப்பாக மிளிர்கிறான் கண்மணி ஒளியான இறைவன். நம் கண்ணாகிய கருங்குழியினுள் விளக்கு நீரால் தான் எரிகிறது. இது மாபெரும் ஞான இரகசியம்.


அகஸ்தியர் "பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ" என்கிறார். அது நம் கண்ணினுள் பிராண நீரில் மிதக்கும் கண்மணியேயாகும். கண்மணி மத்தியில் ஜோதி துலங்குகிறது. - யாருமே சொல்லாத ஞான இரகசியங்களை அனுபவ நிலைகள் பலவற்றையும் வள்ளல் பெருமான் அருளால் அடியேன் இந்நூலில் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் ஞானம் பெற எல்லா இரகசியங்களையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறேன்.

உண்மை உபதேசம் பெற தங்க ஜோதி ஞான சபைக்கு வருக.

இன்றைய உலகில் குறிப்பாக இந்தியாவில் எத்தனையோ ஆஷ்ரமங்கள் எத்தனையோ குருமார்கள் எத்தனையோ வழிமுறைகளை கூறுகிறார்கள்! ஞானத்தை தவிர. ஆனால் வேதகாலத்திலிருந்து இன்று வரை வழங்கி வரும் தர்ம நெறி , வாழ்க்கை நெறியே "சனாதன தர்மம்" அதுவே சன்மார்க்கம். எல்லோரும் மறைத்ததை அடியேன் வெளிப்படுத்தியுள்ளேன். இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனை. இன்றும் இரகசியம் இரகசியம் என்று கூறி காலம் கடத்துகிறார்கள். அடியேன் வள்ளல் பெருமான் கொடுத்த அருளால் ஸ்ரீ ராமானுஜர் கொடுத்த ஆசியால் உண்மை ஞானத்தை உலகறிய செய்துள்ளேன். படியுங்கள். வாருங்கள். ஞானம் பெற நலமடைக.

- ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் - திருவருட்பா நாலாஞ்சாறு நூலில்

Popular Posts