Tuesday, May 22, 2018

நடுமூக்கு – இது பரிபாசை.

மெய்ப்பொருள் பரிபாஷை விளக்கம் :-->
திருமூலர் திருமந்திரத்தில்

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “
                               என்கிறார்.

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார்.

ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார்.

எது சரி.🤔

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே” 

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மேலும் பார்க்க Www.VallalYaar.Com👁️👁️

Monday, May 21, 2018

மரண அவஸ்தை!

*ஸ்ரீ  நாலாயிர திவ்யப்பிரபந்தம்*

" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது "
                         பாடல் -425

  ஊர் எல்லை என்பது போல நமது  உடல்! எல்லை அது தான் தொடக்கமும் ஆகும்! எது? கண்மணி மத்தியே! உள்ளே இருக்குது உயிர்! எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா?

வலிக்கும் இது தான் மரண அவஸ்தை! நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள
ஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும்! மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!

கண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல! காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை! உணர்! தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள்! இரட்சிப்பான்! பரமபதம் சேர்ப்பான்! தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார்! எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான்! ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்! செய் அல்லது செத்துமடி!

  உடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர்! உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா? பரம்பொருளே காப்பற்று!
 

*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

*பரமபதம்*

Sunday, May 13, 2018

கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் .....
கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் சிலவற்றை காண்போம்:-->


1. கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்


“இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.”


2. கீதையில் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “எல்லாவற்றிற்கும் மேலான அப்பெரோளி கடவுளை தியானிப்போமாக என்பதே.”


3. திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு . அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் திருமூலர்.


4. “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமே” என்கிறார் திருமூலர். நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.


5. “பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.” என்கிறார்கள் சித்தர்கள். கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது. அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.


6. “ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்” என்கிறார் ஒரு சித்தர்.


7. “கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமே” என்கிறார் ஒரு சித்தர்.


8. “அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு” என்கிறார் பட்டினத்தார். கரும்பு என்பது கரும் - பு , கருப்பு பூ. அது கண்மலரையே குறிக்கும்.


9. கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம்.


10. சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.


11. ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.


12. விழி தான் ஞானம் பெற ஒரே வழி. விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.


13. பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி” என்கிறார் சித்தர் காகபுசந்தர்.


14. “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான். வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.


15. அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது? சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே என்கிறார் ஒரு சித்தர். (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)


16. புருவமத்தி, நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.


17. பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள். இரு + உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.


18. கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். இந்த கண்ணனை – கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும்.


19. வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார்.


20. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்


21. “கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்


22. “நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுஜண்டர்.


மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் என்று எண்ணிக்கொண்டிருப்பது அறியாமையே!

இனியாவது உணர்வீரோ! அருட்பெருஞ்ஜோதி!

Popular Posts