ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 நவம்பர், 2024

மனிதன் என்பவன் யார்?

 மனிதன் என்பவன் யார்?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றுபவன் மனிதன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று உணர்ந்து தொழுபவன் மனிதன்.
இணையாக உள்ள திருவடியை அறிந்து சாதனை செய்து வருபவன் மனிதன்.
ஈடில்லா இறைவனை அடைய விடாது தவம் செய்பவனே மனிதன்,
உலக மக்களனைவரையும் தன்னைப்போல் கருதுபவனே மனிதன்.
ஊன்றியிருந்து உள்ளே உறைபவனை தேடுபவனே மனிதன்.
எட்டும் இரண்டும் அறிந்து உணர்ந்து எட்டாமிடம் இருப்பவனே மனிதன்
ஏகாந்தவெளியிலே ஏகாந்தமாய் திரிபவனே, இருப்பவனே மனிதன்.
ஐந்தும் ஒன்றான விந்தையை பார்த்து அதன்கண் இருப்பவனே மனிதன்.
ஒளி ஒன்றே உள்தெளிவார்க்கு என உணர்ந்தவனே மனிதன். ஓங்காரமே உலகாழும் பரம்பொருள் என உரைப்பவனே மனிதன்.
ஒளஷதம் நீயே என இறைவனை சரணடைபவனே மனிதன்.
இப்படி மனிதனை நாம் அடையாளம் காணலாம். மனதை இதம் செய்ய தெரிந்தவனே மனிதன். மனம்போன போக்கில் போகாமல், நல்வழி செல்பவனே மனிதன்.
(அருள்மணி மாலை)


திங்கள், 18 ஜனவரி, 2021

ஒளியுள்ள விளக்கு நம் கண்களே!

 ************* ஒளியுள்ள விளக்கு-கண்களே! *************

ஆன விளக்கொளி தூண்டு மவனென"

- திருமூலர், திருமந்திரம்,

- பாடல் 2222

நம் கண்ணில்-மணியில் ஊசிமுனை துவாரத்தினுள் துலங்கும் ஒளி அவனின் (இறைவனின்) ஒரு துளி! அணுவுக்குள் அணுவான பேரொளியின் இறைவனின் ஒரு துளி ஒளி! 

👁️🔥👁️ ஒளியுள்ள விளக்கு      நம் கண்களே!👁️🔥👁️

நம் கண்மணி விளக்கொளியை தூண்டித் தூண்டி பேரொளியாக்குவதே ஞானசாதனை!

முதலில் ஒரு ஞான சற்குரு தூண்டி காண்பிக்க அதை புரிந்து கொண்டு அவ்வண்ணமே நாமும் தூண்டி, விளக்கொளியை தூண்டி உள்சென்று ஒளியான அவனை, நம் ஆத்மஜோதியை அடையலாம்!

ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா!

நுால்: மந்திர மணி மாலை

பக்கம்: 184



ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

வியாழன், 9 மே, 2019

மும்மலத்தில் பெரியது மாயை!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்!





அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் உலகெங்கும் தாயின் கட்டளையை நிறைவேற்றும்
சேவகர்கள்!

மிகப்பெரிய இரகசியம் இது!

சித்தர் சொன்ன இரகசியம்!

ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்ட அந்த அரனுக்கு இவளே எல்லாமாம்!

ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்!

சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் 
உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால்\ மகளுமாவாள்!

ஆஹா அற்புதம்!

எவ்வளவு பெரிய உண்மை ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக
பூதகணங்கள் உள்ளன!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!

"நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர் முருகப்
பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!

வீரபாகு முதலானவர்கள்!

முருகனின் கணங்கள் தான் முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவப்படுத்தி ஞானப்பாதைக்கு அழைத்துச் செல்வர்!




தாயே வாலையே என மகாமாயையை பணிந்தால் அரவணைப்பாள்!

மும்மலத்தில் பெரியது மாயை!

எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!

 தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

 உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமிபட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்ததுபோல!

பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததைப் போல!

இன்னும் சொல்லிக் கொண்ட போகலாம் அன்னையின் மகிமையை!

அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!?

இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல!?

எம்மைப் பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!

வாலைதான்!

கன்னி'ய'குமரி பகவதி அன்னை சரணம்! சரணம்! சரணம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 109
குருவின் திருவடி சரணம்

புதன், 12 டிசம்பர், 2018

மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!



மலங்க மலங்க விழித்தேன் செய்வதறியாது!
உலகச் சேற்றிலே வீழ்ந்து உழலும் மனிதன் இப்படித்தான் பேந்தப் பேந்த மலங்க விழிப்பான்!
சரியான வழிகாட்டுதல் இல்லையேல் அதோகதிதான்! வழிகாட்டுபவர் குரு!
ஞானத்துக்கு வழிசொல்லி விழியை திறந்து உணர்வூட்டி தவம் செய்யும் முறை சொல்லித் தருவார்!
ஞானசற்குரு!

ஞானதவம் செய்யும்போதும் செய்வதறியாது இறைவா என கண்ணீர் பெருகி உள்ளம் உருகி இருக்கையிலே இரு - கையிலே கழுக்குன்ற பெருமான் பெருந்துறையான் நீரை மாற்றி ஒளியை பெருக்கி மும்மலங்களை நீக்கி நம்மை காத்தருள்வான்!

ஞான அனுபவம் இது!
முதலில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்.
பின் நீர்வற்றி மலங்கழியும் மும்மலம் அகல ஆரம்பிக்கும்!
இப்படியே தவம் தொடர தொடர நம் ஆன்மா தூய்மையாகும்.
பிறவா பெருநிலை பெறலாம்! குருவருளால்!


ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 122
குருவின் திருவடி சரணம்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

தவம் - சும்மா இரு!

மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும்
அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை
ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி யுக்தி
அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்!
ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள்
படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற
வேண்டும்.

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல!
தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம்
என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ
அல்ல!

உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம்
ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து
செய்யும் பயிற்சியே! முயற்சியே!

இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை
என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும்.

குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா
இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென !


இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள்
நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி
நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே!
மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி
இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும்
ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்!

இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை
உணர்தலே.

தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை
விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து
உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது
உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும்.
உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான
ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய
வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!



திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி
இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே
இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து
30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது.


நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் !
வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து
கொள்ளுங்கள்.

இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில்,
குலங்களில் மலைகளில் தேடாதீர்.

தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன்
பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும்.

தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று
நான் யார் என்பதை உணரவேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க
வேண்டும்.

புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு
இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை
பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது ,
இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள்.
இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர்.

உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள்
பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை
வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு
விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி!

ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை
என்னும்காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!!
கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது.
துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்!
பெற்றார் ஒளி உடலை!!!!!


தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை
எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்!

இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார்.
ஞான பாதை தான் மிக எளிதானது.

ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம்
சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம்
பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை
இறைவனிடம் சேர்க்கும்.


- சற்குரு சிவசெல்வராஜ் -

புதன், 14 டிசம்பர், 2011

கந்தகுரு கவசம்-திருவடி

கந்தகுரு கவசத்தில் எனக்கு புரிந்த ஞான குறிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க...இங்கே சொடுக்கவும்


திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
கஞ்சமலை(சேலம்) சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக .
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

புதன், 23 நவம்பர், 2011

திருமந்திரம் - உபநயனம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு
நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? 


 

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.
இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். 

உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி 
மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர்
கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!
உபநயனம் +
காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை
தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது
இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர்.


கிரியையில் நின்று விடுகின்றனர்.
ஞானத்திற்கு வருவதில்லை. 


எப்பொழுது புரிந்து ஞானம் அடைவார்களோ ? இறைவா உன் 
பக்தர்களை மேனிலை படுத்து. அருள் புரிவாயாக. இரு கண்களிலும் 
உள்ள ஒளியைப் பார்த்து சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் 
தூங்கி இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன்
காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில்
இதனை உணரலாம். 


சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

பக்கம் 70.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
 
www.vallalyaar.com

செவ்வாய், 15 நவம்பர், 2011

கண்தான் உடலுக்கு விளக்கு

விவிலியம்  சொல்வது என்ன?

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கு

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.

உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.



மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து"உலகின் ஒளி நானே என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும். நிலவோ இரத்த நிறமாக மாறும்.

ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஏனெனில் ஒருமுறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளாம் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது: எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்: உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்: எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்: எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.

ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.

ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.

கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.

அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.

தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும் ......

--இவை அனைத்தும் விவிலியம் இருந்து எடுத்தது

Popular Posts