ஞாயிறு, 18 ஜூன், 2023

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥



நூல் : உலககுரு வள்ளலார் 30

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥


திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பல்லாண்டுகளாக பல்வேறு உபதேசங்கள் வாயிலாகவும், ஆறாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பாடல்கள் மூலமாகவும் மரணமிலா பெருவாழ்வுக்கு வழிகாட்டினார்கள் !!

அப்போதும் வள்ளலார் திருப்தியடையவில்லை !

உலகுக்கு ஞானத்தை இன்னும் எப்படி சொல்லலாம் தெளிவுபடுத்தலாம் என்று சிந்தித்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வழிகாட்டினார் !

உலகுக்கு வள்ளலார் வழங்கிய அருட்கொடை "சத்திய ஞான சபை" உதயமானது !

இதுவரை இவ்வுலகில்,திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறையிலே கட்டிய ஆவுடையார் கோவில் தான் மிகப்பெரும் ஞானவிளக்கமாய் இருந்தது. கருவறையிலே ஆவடை மட்டுமே !? இறைவன் உருவங்கடந்த நிலையிலே ஒலிஒளியாக திகழ்கிறான் என்பதால் லிங்கம் ஸ்தாபிக்கவில்லை ?! பீடம் மட்டுமே இருக்கிறது. இதன் உண்மை உணராத மூடர்கள் லிங்கத்தை கொண்டு வைத்தனர். ஆவடை மட்டுமே பீடம் மட்டுமே உள்ளதால் தான் அக்கோவில் ஆவுடையார் கோவில் ஆனது ஊர்பெயரும் ஆவுடையார் கோயிலே !

இன்றும் ஆவுடையார் கோவிலிலே திருவிழா மாணிக்கவாசகருக்கே !

மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகருக்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை". 25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.

நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கியது !! ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார்.

"சத்திய ஞான சபையை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று பாடுகிறார் !

நம் தலையின் அமைப்புதான் சத்திய ஞானசபை ! உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! முன் இருபுறமும் சிற்சபை பொற்சபை !

வள்ளல்பெருமான் சத்திய ஞான சபை இயற்கை விளக்கம் என்பார் !
நம் அகத்தே தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆத்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞானசபை !! நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் அசுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !

வடலூரில் சத்தியஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதிதரிசனம் காண்கிறோம் ?
அதுபோல, நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது !

நாம் சிற்சபை பொற்சபையாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆத்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும் !

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலககுரு வள்ளலார் தெளிவாக கூறுகிறார் ! முடிவில் நம் ஆத்மஜோதி தரிசனம் நாமே காணலாம் !!

ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும் !

இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான்மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார் !

"சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு"

என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

காமத்திலிருந்து எப்படி மீள்வது?


காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படா... பாடல் 9

காமமாகிய பேய் பிடித்தாட்டும் மனிதனுக்கு கனவிலும் காணக்கிடைக்காது அம்பிகை வடிவம்! மாயை - மகாமாயைதான் காமமாதிய துர்க்குணங்களை வினைப்படிதந்து நம்மை ஆட்டுவிக்கிறாள்!? காமத்தை ஆட்சி செய்பவளே அம்பிகைதான்! அதனால்தான் அவளை காமாட்சி என்றனர். காமமில்லாத மனிதனே இல்லை! காமத்திலிருந்து எப்படி மீள்வது? இந்த உலகத்திலேயே யாருக்காவது தாயிடம் காமம் வருமா? எந்த ஒரு பெண்ணையும் தாயாக பார்த்தால் காமம் வராதே!? எல்லா பெண்ணையும் தாயாக பாருங்கள்! அம்பிகையின் வடிவமாக பாருங்கள்! அபிராமி பட்டர் எல்லா பெண்ணையும் அபிராமியாகவே பார்த்தார். அதனால் தான் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் அம்பிகை. மகா கவி காளிதாசனும், தனக்கு காளியருள் கிடைக்க காரணமான மனைவியையே தாய் என்று அழைத்தான். மகாகவி காளிதாசனுக்காகவும் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் காளித்தாய்!

ஒரு வயது பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! 16 வயது பருவப்பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! எந்தப்பெண்ணையும் அம்மா என்றே பார்த்தால், அம்பிகையின் அருள்கிட்டும். காமத்திலிருந்து மீளலாம்! அம்மா தாயே நீயே சரணம் என அம்பிகையின் பாதத்தில் சரணடைந்தால்! அந்த தாய் இந்த பிள்ளையை காத்தருள்வாள்!

இந்த உடலை கொடுத்த தாய் தானே நமக்கு பாலூட்டி சீராட்டி வளர்ப்பாள்! இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் கொடுத்ததாய் இறைவியே அமுதூட்டி உயிர் வளர்ப்பாள்!? பின்னர்தான் பரம்பொருள்! முக்திகிட்டும்!

தாயைப் பணியாதவன் தறுதலையாவான்! தாயை பணிந்தால், தாயைப்போல் நம்மை அரவணைப்பவர் இவ்வுலகில் வேறு யார் உளர்?! தாயில்லாமல் நானில்லை! யாருமில்லை!? தாயின் மகத்துவம், பெருமை அறிந்தவனே ஞானம்பெறுவான்!

திருஞான சம்பந்தருக்கு 3 வயதில் அமுதூட்டிய தாய்! வள்ளலாருக்கு அண்ணி உருவில் வந்து அமுதூட்டியதாய்! எல்லா சித்தரும் ஞானியரும் போற்றும் தாய் "வாலை! இந்தியாவின் வடக்கே காஷ்மீரிலே வைஷ்ணவி தேவியாய் வாலை! இந்தியாவின் கிழக்கே கல்கத்தாவில் காளியாய் வாலை! இந்தியாவின் மேற்கே பம்பாயில் லட்சுமியாய் வாலை! இந்தியாவின் தெற்கே கன்னியாகுமரியில் கன்னியாகுமரியாய் வாலை! எங்கெங்குகாணினும் சக்தியடா! தாய்ப்பால்தானே பிறந்த குழந்தைக்கு சிறந்தஉணவு! இனி பிறவாமலிருக்க "வாலை" தரும் அமுதம் பருகவேண்டும்! எல்லா

பெண்களையும் தாயாக பார்த்து, வாலையை பணிந்து பக்தியுடன் தவம் செய்தால் கிட்டும் வாலை தரிசனம்! தருவாள் அமுதம்! முக்தியை தர சக்தியின் அருளே அவசியம் தேவை! பிறந்த குழந்தைக்கு தேவை தாய்ப்பால்! இனி பிறவாமலிருக்க நமக்கு தேவை வாலை அமுதம்!

எல்லாம் வல்ல மகாமாயை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, எவ்வுயிர்க்கும் தாய், ஆதிசக்தி "வாலை" எண்ணிலா ஊர்களில் கோயில் கொண்டிருந்தாலும், பற்பல பெயர்களில் உருக்கொண்டிருந்தாலும் வாலை வாலையாகவே கோயில் கொண்ட புண்ணியதலம்தான், முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி!

அடியேனை இங்கே வரவழைத்து வாழ்வு தந்து குருவாக்கி காட்சி தந்து அருள் புரிந்து படியளக்கும் தாய் கன்னியாகுமரி "வாலை!" இதுவரை இவ்வுலகில் எல்லோராலும் மறைத்து இரகசியம் என்று சொல்லப்பட்ட ஞானத்தை வெட்ட வெளிச்சமாக்கி 26 நூற்களில் ஞானரகசியங்களை வெளிப்படுத்தவைத்து வெளியிடவைத்து

என்னை எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறாள் "வாலை"! வாலையின் பாதத்தில் சரணடைந்ததால் புண்ணியம் பெற்றேன்! கண்ணியனானேன்!

அந்த வாலைத்தாயை நீங்களும் காணவேண்டாமா? வாருங்கள் கன்னியாகுமரிக்கு! வாலை அருள்பெறலாம்! வரம்பல பெறலாம்! வாழ்வாங்கு வாழலாம்!


🙏 ஓம் ஶ்ரீ சிவ செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் 🙏

திருவருட் பாமாலை- பக்கம் 44 - 45


திங்கள், 5 ஜூன், 2023

தொடர்ந்து நின்றானைத் தொழுமின்

"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில்" 

திருமூலர் பாடல் - 20

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன்! இதுவே தேவ இரகசியம்! நாம் என்று? எங்கு? யாருக்கு? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார்? அடிகள் உறையும் அறனெறி நாடு - அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன. அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம்! கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.

 "தொடர்ந்து நின்றானைத் தொழுமின்" 

திருமூலர் பாடல்-26

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது? பிறவி தோறும் நம்மோடு உடனிருந்தவன்! தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே நம் உடலுள்ளேயே நம் உயிராக இருந்தவன் அவன் தானே! அந்த இறைவன் தான்! எல்லா பிறப்பிலும் நமக்கு உற்ற துணை பரம் பொருளான நம் உயிர் அல்லவா? அதை தொழ வேண்டாமா? அதை அறிய, வேண்டாமா? இப்பிறப்பிலுள்ள அப்பா அம்மா மனைவி மக்கள் சொந்தம் பந்தம் நட்பு எதுவும் நம்முடன் இல்லை! அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ இன்னும் எத்தனை பிறவியோ, முன்னும் எத்தனை ஜன்மமோ? யாரறிவார்? ஒன்றுமட்டும் உண்மை எல்லா பிறவியிலும் உயிராக இருந்தது இறைவன் தானே! அப்படியானால் எல்லாம் அவர் அறிவார் அல்லவா? அவரை சரணடைந்தால் நாம் உண்மை அறிய முடியுமல்லவா? எல்லாம் அறிந்த அவரால் நம்மை வழி நடத்த முடியும்? அந்த பரம்பொருளை சரணடைந்தால் தானே நாம் உருப்பட முடியும்! உன்னுள் இருக்கும் ஒண்பதத்தை தொழு! நீ கதி மோட்சம் பெற இது ஒன்றே வழி!

(ஒண்பதத்தை தொழு!)

இறைவன் திருவடியாக விளங்குகின்ற நமது கண்மணியில் உணர்வுடன் தவம் செய்.  

ஞான சற்குருவின் திருவடியே சரணம்  🙏🙏🙏


www.tamil.vallalyaar.com

Popular Posts