செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

🔥 வினைகளை அழிக்கும் வழி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 22

"பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமே"

என்று தானே சித்தர் பெருமகனார் கூறியுள்ளார் !

இதுதானே உண்மை !

நாம் பிறக்கும்போது நம் உயிரோடு இறைவன் சேர்த்து அனுப்பியது பிராரத்துவம் !

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.

பிராரத்துவம் விதி ஆகாமியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் நிறைய செய்து தீவினை கூடலாம். இப்படி ஏதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான் !

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே !

ஆக, பிறக்கும்போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது !!

பிறக்கும்போது வந்ததைவிட கூடவோ குறையவோ செய்யலாம் !

இந்த இடம்தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது !

விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதையெதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல் ?! எதையெதையோ செய்யாமல், விதியிலிருந்து வினையிலிருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால் !!

வினைகளை அழித்துவிட்டால் !!
சாகாமல் இருக்கலாமல்லவா ?!

வினையிருந்தால் தானே சாவு !

வினையிருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?!

வினைகளை இல்லாமல் செய்து விட்டால் ?!

பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ?

இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

இதுவே நல்வழி ! சிறந்த வழி ! ஒப்பற்ற வழி !

புத்திசாலித்தனமான வழி !

உலக ஞானிகள் அனைவரும் கூறியருளிய வழி !

ஞானவழி !

விழி வழி ! விழி ! விழி ! என விழிக்கும் வழி !

மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும் ! நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி, உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கிறது !

ஞான சற்குருவால் உபதேசம் தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால்,

நமது உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை - ஜவ்வை - திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம் !!

முடியும் ! எல்லோராலும் முடியும் !

இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை !

"முயற்சிஉடையார் இகழ்ச்சியடையார்"

உங்களுக்கு ஞானம் அருள, வினைநீக்க வள்ளல் பெருமான் உதவ காத்திருக்கிறார் !!

"வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூவி உலகரை அழைக்கிறார் ! வாருங்கள் தங்க ஜோதி ஞான சபைக்கு ! கன்னியாகுமரிக்கு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts