திங்கள், 29 நவம்பர், 2021

கண்மணி உள்குகை - அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன்

“பொந்தின்னிடைத் தேனூறிய பொழில் சூழ்புள மங்கை"
பாடல் 173

நம் கண்மணி உள்குகை - பொந்து போல் உள்ளதல்லவா? 

இரு கண் பொந்தில் புகுந்து உள் போனாலே அமுதம் தேனூறி வருவதை உட்கொள்ளலாம்! 
தவ அனுபவ நிலை! "அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் ஆங்கதை ஓர் பொந்தினில் வைத்தேன் வெந்து தணலானது" என்று பாரதி பாடினானே புரியுமா யாருக்காவது? 

திருஞான சம்பந்தர் சுட்டிக்காட்டிய பொந்து தான் அது! அங்கே தேனூறி நிரம்பி சூழ்ந்திருக்க அங்கே இருக்கிறாள் மங்கை - வாலை! கன்னி'ய'குமரி! வேறு எம்மதமும் கூறாத ஞான அமுதம் பெறும் நிலை!

 நம் நாட்டு ஞானிகள் பலர் கூறுகின்றனர். இதுவே ஞானம்!


மூவர் உணர்ந்த முக்கண் .பக்கம்:34
குருவின் திருவடி சரணம் சரணம்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

திருமால் /பிரம்மன் காணவில்லை இறைவனை?


கடவுளை காணும் வழி – திருஅருட்பிரகாச வள்ளலார்
இறைவனை அடைவதாக சொல்லி பலர் செய்யும் தவறான செயல் முறைகளை கீழ்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.

காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலரே
– திருவருட்பா (தலைப்பு : அறிவரும் பெருமை)


இந்த பாடலின் மெய்ஞ்ஞான விளக்கத்தை ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் “திருவருட்பா” பாடல்களுக்கு எழுதி உள்ள உரையில் “திருவருட்பா பாமாலை“ முதல் பகுதி என்ற நூலில் விளக்கி உள்ளார்கள்.

இறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இவைகள் நமக்கு தெரிவிப்பது என்ன?

இறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இது கதை!?

நம் உடம்பில் , யோகம் – தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி குய்யத்துக்கும் குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ , பிரணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர். அங்கே காண முடியாது இறைவனை.

இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர். பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர் . அபாயம். மூடும் தலையையும் இல்லாமல் செய்யும் தவம் இது. பேராபத்துக்கள் இதனால் ஏற்படும். பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான். காணவே முடியாது கடவுளை இவ்விதம் போனால். இந்த இரு வழியிலும் செல்வோர் தான் அதிகம். கீழே போனாலும் காண முடியாது. மேலே போனாலும் காண முடியாது. நடுவிலே – கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண உணர வேண்டும். வழி காட்ட குரு வேண்டும். விழி காட்ட பெற்றால் விழியின் உள் சென்று இறைவன் – திருவடியை உணர்ந்து தவம் செய்தால் திருமுடி அறியலாம். உணரலாம். காணலாம்.

காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடும் அல்லவா. திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்துவிடும். இறைவன் கருணை வடிவானவன் அல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான். காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே. முதலில் திருவடி தரிசனம். பின்பு தான் திருமுடி தரிசனம்.

கண்ணில் தான் – கண்மணி ஒளியில் தான் தவம் செய்ய வேண்டும் என்று மற்ற பாடலிலும் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறி உள்ளார்கள்.

கண்மணிக்குள் துலங்கும் கண்மணி ஒளியான இறைவன் திருவடியை காணவும் கண்மணி ஒளியை நினைந்து , குரு அருளால் பெற்ற ஒளி உணர்வை பற்றி கண்ணீர் பெருக தவம் செய்ய வேண்டும்.

இதுவே இறைவன் அடி – முடி காண ஒரே வழி.

திருச்சிற்றம்பலம்

Popular Posts