திங்கள், 28 ஜனவரி, 2019

போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள்

பொய் சமயங்கள் போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள் கூறும் யோகம் தவம் கர்மம் எல்லாம் ஒவ்வாத சாத்திரமாம்.

ஒத்துப் போகாது ஏன்?

அதில் உண்மை இருக்காது!

அப்படி போலியான உண்மையில்லாதவர்களை நாடினால் அவர்களை சவலைப் பிள்ளைகளை போன்று, போஷாக்கில்லாத தாய்ப்பால் அருந்தாமல் முழுவளர்ச்சியடையாத நோஞ்சான் பிள்ளையை போன்றவர்கள்!

உண்மை தெரியாமல் தடுமாறுவர்!

ஆனால், இறைவன் திருவடியை தம் கண்ணை உணர்ந்து தவம் செய்வோர் கவலை தீர்த்து ஆட்கொள்வான் அந்த இறைவனே!

அவன் புகழ்பாடி தெள்ளேணம் கொட்டாமோ - நம் கண்ணில் ஒளியாக நிலைநின்று அருளும் நாதனை நம் இரு கண் ஒளியை சேர்த்து தவம் செய்து பேரின்பம் பெருவோமாக என்கிறார். நம் மாணிக்கவாசக பெருமான்!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : திரு மணி வாசக மாலை

பக்கம் : 72

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

திங்கள், 14 ஜனவரி, 2019

போகி பண்டிகை - நம் உடலில்

நம் உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை அழுக்கே நிரம்பியிருக்கிறது!

மல ஜலம் மட்டுமல்ல தலை உச்சியில் கோழை கண்ணில் பீழை மூக்கில் களி காதில் அழுக்கு வாயில் எச்சில் தொண்டையில் நெஞ்சில் கபம் உடலெல்லாம் வியர்வை கைகால் நகங்களில் அழுக்கு இப்படி அழுக்கு மூட்டையே நம் உடம்பு!

தினமும் குளித்து புற உடலை தூய்மையாக்கினால் மட்டும் போதாது!

நல்ல ஆகாரத்தால் கூடுமானவரை எந்த அழுக்கும் வராமல் காக்கலாம்!

ஒரு சில மருந்து மூலிகைகாளால் இன்னும் ஓரளவு காக்கலாம்!

உடலில் எந்த அழுக்கும் வராமல் சேராமல் காக்க ஒரே வழி ஞான தவம்!

கண்ணை விழித்திருந்து தவம் செய்தால் ஏற்படும் சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் பரவி எல்லா அழுக்கையும் வெளியேற்றுகிறது!?

ஜன்ம ஜன்மாந்திரமாயுள்ள மும்மல அழுக்கையும் வெளியேற்றி நம் உடலை தூய்மையாக்கும்!

மலம் இல்லாத விமலன் இறைவன் நகர் நம் சிர நடு உள்போ!

தூய்மையாகு!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 65

குருவின் திருவடி சரணம்

சனி, 12 ஜனவரி, 2019

பூ - தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து

அத்தேவர் தேவர் அவரதேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிக் புலம்புகின்ற புதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற
மெய்த்தேவர் - திருக்கூத்தும்பி



அந்த தேவர் - கடவுள்! அந்த தேவதை தான் கடவுள், என
உண்மையறியாமையால் தெய்வம் எது? தேவதை எது என்ற
விவரமில்லாமல் கண்ட கண்ட கோவிலை தேவதையை கொண்டாடும் உலகர்!
தான் சொல்வது தான், இந்த தெய்வம் தான், இதுதான் தெய்வம் என்று
பொய் பல பேசி புலம்புகின்றார்கள் இன்றும்!?

பூதலத்தே - உலகிலே! ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகு ஆதலால் பூதலம் என்றார் மாணிக்கவாசகர்! இப்படிப்பட்ட உலகிலே எந்த பற்றும் இல்லாமல் எனை தடுத்து காத்து , இறைவனை அறியாத எனக்கு தன்னை அறிவித்து நான் வேறு பற்றின்றி அந்த இறைவனையே பற்றிட அருள்புரிந்தான் மெய்த்தேவன்!

இறைவன்! சிவம்! என் கண்ணிலே குடிகொண்ட ஒரே மெய்த்தேவன்! நம் தேவன் நம் மெய்ப்பொருளிளே உள்ள ஒளியே! வேறு தெய்வமில்லை! திருவடியை பணி !

பூ - தலத்திலே - பூ போன்ற கண்மலராகிய தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து என் மெய்யிலே
உள்ள தேவராகிய உன்னை நான் பற்ற, பூதலத்தில் பற்றியுள்ள என் மும்மலப் பற்றை அறுத்த
இறைவா! உலகுக்கு நீ ஒருவனே தேவன்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Popular Posts