புதன், 14 செப்டம்பர், 2022

🔥 இரகசியம்🔥சூட்சுமம் 🔥



"அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது ?

ஆறைந்து இதழிரண்டு முளைத்ததெங்கே ?

அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே ?


சொல்லவல்லார் உண்டானால் நாளும் குரு என பணிந்து வணங்கலாமே".


ஒரு தாயின் கருவில் குழந்தை உருவாகும்போது, சுக்கில சுரோணித சம்பந்தத்தால் உருவாகும் முதல் உறுப்பு "கண்" !

கண் ஒளி தான் பிண்ட உற்பத்திக்கு காரணமாகிறது !


ஆறுமுகம் கொண்ட ஆறுமுகனாகவும் ஆறுபட்டை கொண்ட ஒளிக்காட்சியாக தோன்றுவது, ஐந்து கரங்கொண்ட விநாயகனாகவும் கணங்களின் பதியான கணபதி ஒங்காரமாகவும், இரண்டு இதழ்கள். மலரின் இதழ்கள் போன்று மென்மையான இரு கண்மணிகளாக அதில் ஜோதியாக முளைத்து துலங்குவதாகும் !

ஐம்பூதங்களும் கண்ணில் உள்ளது.

கண்ணில் உள்ள சதை மண் அம்சம் !

கண்ணில் நீர் இருக்கிறதல்லவா ?

நீர் அம்சமாயிற்று !


கண்ணீர் சில சமயம் சூடாக இருப்பதை நாம் அறியலாம். அப்படியானால் தீ இருக்கிறது என்று தானே பொருள் !

அக்னி அம்சமுமாயிற்று !

தீ இருக்கிறது என்றால் நிச்சயம் காற்று இருந்தாகவேண்டுமே !?

நாலாவது பூதம் வாயுவுமாயிற்று !

அடுத்து ஆகாயம் ?

இதுதான் இரகசியம் ! சூட்சுமம் !

நமது கண்ணின் அமைப்பை பாருங்கள்.

வெள்ளைவிழி அதற்கு நடுவே கருவிழி அதற்கும் மத்தியில் கண்மணி கிருஷ்ணமணி என்பர், பாப்பா என்பர். கண்மணி, கருவிழியின் மத்தியில், கருவிழியின் உள், கருவிழியை தொடாமல் அந்தரத்தில் இருக்கிறது !! அங்கே இருக்குது வான்வெளி வெட்டவெளி அதுவே ஆகாயம் !

இப்படி ஐம்பூதங்களும் ஒரே இடத்தில் இருப்பது கண்ணில் மட்டுமே !
ஐம்பூத ஒடுக்கம் கண்ணிலே !

எல்லாவற்றையும் இரகசியம் ஏதுமின்றி எந்த மறைப்புமின்றி சொல்லிவிட்டேன் !

எங்குரு அருளாலே !

அடியேனை குரு என ஏற்றுக் கொள்ளலாமா ?

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts