மயிர்பாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயிர்பாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மயிர்பாலம்


“சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்” 

 நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி 
கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்! 

அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்மஸ்தானம் வரையுள்ள சூக்கும்மான வழி! 

பெரும் இரகசியம் இது! தவம் செய்வோரே காண்பர் உணர்வர்! 
நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய வட்ட ஜவ்வு மூடிக் கொண்டுள்ளது. 

 இதுவே நம் மும்மலத் திரை வெகு சூக்கும்மான நிலையில் உள்ளது. 
 ஊனக்கண்களால் காண இயலாது! 

தவம் செய்யும் போது காணலாம் திரை மறைப்பை உணரலாம்! 

இதெல்லாம் குரு உபதேசம் பெற்று குரு தீட்சை பெற்று தவம் செய்து பார்க்கலாம் உணரலாம்! 

ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா 
www.vallalyaar.com

புதன், 12 டிசம்பர், 2018

திருமூலர் ஞான இரகசியம்

"நோற்று தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே"
...................பாடல்−1642



இங்கே திருமூலர் ஞான இரகசியத்தையும் கூறுகிறார்!

நமது கண்மணி சுழல்கின்றதல்லவா? நம்  உடலில் உயிர் இருப்பதின் அடையாளம் சக்தி இருப்பதின் அடையாளமே மணியின் சுழலும் தன்மை!

நாம் உண்ணும் ஆகாரம் சக்தியை பெருக்கி சக்தியையூட்டி கண்மணி சுழற்சி இயல்பாக நடக்கிறது!

சோற்றுக்கு நின்று−நாம் உண்ணும் ஆகாரத்தால் நின்று கண்மணி சுழல்கின்றது என்கிறார் திருமூலர்!

கண்மணி உள் அக்னிகலை வரை இருகண் உள்ளேயும் நூல் போல் மெல்லிய நாடி உள்ளது.

தவம் செய்து நோன்பிருப்பவர் அறிவர்!

குருவருளினால் வைராக்கியத்துடன் கண்மணி ஒளியை பெருக்கி உள் நூல் போன்ற−மயிர்பாலம் வழி ஒளி பெருகி ஓடும் நெருப்பாறு பாயும்!

அக்னிகலையை ஆத்மஸ்தானத்தை அடையும்!

இடைப்பட்ட நூல் போன்ற நாடியையே நோன்பு தவம் செய்யாதவர் அறிய
மாட்டார்கள் என்று திருமூலர் கூறுகிறார்!

எவ்வளவு பெரிய ஞான அனுபவம் இரகசியம் இது தெரியுமா?!

புறத்தே செயல்பாடற்றவர்களுக்கு சம்மட்டி அடி!
அகத்தே தவம் செய்பவருக்கு அருளாசி!

ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:மந்திர மணிமாலை
பக்கம்:132

Popular Posts