சாகாக்கல்வி நூலிலிருந்து : 19
“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே" என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் !
ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் !
நன்றாக கவனியுங்கள்,,,
நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !
குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் !
இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ?
வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ?
ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !
இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் !
இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே !
இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !
ஞானம் என்றால் தன்னை அறிவது !
நான் யார் ? என உணர்வது !
ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் !
பக்தியில் லாமல் ஞானமில்லை !
சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ?
பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் !
அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக