செவ்வாய், 28 மே, 2013

புருவ மையம் என்றால்??


புருவ மையம் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டு வைக்கிறோம். புருவமையம் என்றால் எல்லோரும் இதைதான் சொல்வர். சிந்தியுங்கள் இரு புருவமையம் என்றா சொன்னார்கள்? புருவமையம் ஒரு புருவத்தின் மத்தி அதன் கீழே உள்ள கண் இதை குழு உக்குறியாகச் சொல்லி வைத்தனர். காரணம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் சிந்திதித்து சிந்திதித்து தெளிவுபட வேண்டும். அப்போதுதான் அங்கே உறுதி பிறக்கும், அங்கே தான் ஒளி பிறக்கும். அதற்காகவே பரிபாசையாக சொல்லி வைத்தனர்.

புருவ மையம் என்றால் கண் என எல்லா சித்தர்களும் வெளிப்படையாகவே சொல்லி வைத்துள்ளனர். இதை ஏன் வெளியிடுகிறேன் என்றால் எழுதியவன் ஏட்டை கெடுத்தான், படித்தவன் பாட்டைத் கெடுத்தான் என்பது போல முறையாக குருவழி அறியாதோரும் அறிவில்லாதோரும் ஞானிகளின் நூற்களை முட்டாள்தனமாக அர்த்தம் பண்ணி குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குருடும் குருடும் குழிவிழுந்தமாரே என திருமூலர் உரைத்தது போல் பாமரர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகின்றனர்.

 
மேலும் உண்மை தெரிந்த பெரிய மடாதிபதிகளும், சாமியார்களும் தனக்குத் பின் தன மடத்துக்கு அதிபதியாகின்ற ஒருவருக்கு மட்டுமே போதித்து மெய்பொருளை மறைந்துபோகச் செய்து விட்டனர்.

பெரும்பாலான மடாதிபதிகள் மெய்ப்பொருள் அறியாதவர்களாக இருப்பது மிகவும் வேதனைகுரியாதே. வெறும் சரியை, கிரியைகளிலே காலத்தை ஓட்டி விடுகின்றனர். அவர்களுக்கு மடத்தின் சொத்துகளை, கணக்கு வழக்குகளை நிர்வககிகவே நேரம் போதவில்லை. பின் எங்கே மக்களுக்கு உண்மை உணர்த்துவது? சிலர் சந்நியாசம் பெற்று மடதிபதியாகின்றனர், உடலெங்கும் தங்கப் பூண் கொண்ட உதிராட்சம் வைரம் பதித்த ஆபரணங்கள், பட்டுத் துணிதான். காவி வேட்டி பவனிவர ஏசி கார் ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் எதைத் துறந்தார்கள்? சந்நியாசி என்று சொல்வதற்கு! மடத்திலே வித விதமான பூஜை. சாமிக்கு படைக்க பலவித பதார்த்தங்கள் சாமியா சாப்பிடுகிறது? ஆசாமிகள் தான் தின்று தீர்க்கிறார்கள். இப்படி தின்றால் எங்கே ஞானம் வரும்? வயறு தான் பெரிதாகி வரும். நல்ல ஒரு சாதகன் என்றால் சாதனை செய்யசெய்யச் எலும்பும் உருகுமே! ஊன் உருகி உளம் உருகி உன்மத்தம் பிடித்து என ஞானியர் பாடினார்களே.

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமப்பார் இச்சரக்கை - ஏரகத்து செட்டியாரே
மங்காத சீரகம் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
தந்காயம் தங்கமென ஆகுவதற்கு "

------ அர்த்தமும் சொல்கிறேன்

வெங்காயம் - வெம் - காயம், சுக்கானால்,வெந்தயதால் வெந்த - இதயத்தால், ஆவதென்ன, இங்கார் சுமப்பார் இச்சரக்கை - இங்கு யாரு சுமப்பார் இந்த உடலை, ஏரகத்து செட்டியாரே - திருவேகரத்தில் குடியிருக்கும் ஆண்டவனே, மங்காத சீரகம் - ஒளி பொருந்திய சீர்-அகம். தந்தீரல், வேண்டேன், பெருங்காயம்-பெரும்-காயம், தந்காயம்-தம்-காயம் தங்கம் என ஆக்குவதற்கு..

இப்பாடலின் பொருள் திருவேகரத்தில் அமர்ந்திருக்கும் இறைவனே என் உடலை தங்கமென மாற்றுவதற்கு எனக்கு ஒளி பொருந்திய உன் சீர் ஆகிய கண்ணை தா என்கிறார். அப்போது என் வெம்மையான காயம் சுக்குபோல் வற்றும் வெந்த இதயத்தால் எனக்கு கேடு ஒன்றும் இல்லை. எனக்கு பெரிய பருத்த உடல் வேண்டாம் என கூறுவதாக உள்ள மிக அருமையான பாடல்.

எனவே ஆன்மாக்களே, உடலை பெருகாதீர்கள், மனதை விரிவடையச் செய்யுங்கள்.

உங்கள் பணியால் மாக்கள் மக்களாக உயர வேண்டும். மக்களோடு ஐக்கியமாகி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணிபுரியுங்கள் இறைவன் அருள்வான். எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து போய்விடுவீர்கள். நல்வழிபடுங்கள் நல்வழிபடுத்துங்கள். இங்கு நாம் தெரிந்து கொண்டதை எல்லோரும் அறியட்டுமே என எண்ணியதால் தான் இக்கருத்தை எல்லாம் வல்ல இறை அருளாலும் குரு அருளாலும் முன்வைக்கிறேன்,

அன்னதானத்திற்கு அடுத்த மேலான அரிதான தானம் ஞான தானம் ஆன்ம தாகங் கொண்டோருக்கெல்லாம் வாரி வாரி வழங்க வேண்டும்! ஒரு ஜீவன் கடைத்தேற வழிகாட்டுதல்லவா? எவ்வளவு புண்ணியம்! இதைவிட பெருன்செயயல் வேறென்ன இருக்க முடியும்? ஆனால் ஆன்ம தாகம் கொண்டவர்கள் உலகில் மிகவும் குறைவு. அதை தானம் செய்பவர்களோ மிக மிகக் குறைவு - விற்பவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். பலர் தவறான வழிகாடிகலகவே
இருக்கிறார்கள் என்ன செய்வது? இறைவன் தான் அருள்புரிய வேண்டும்.

இன்றைக்கும் மகான்கள் நம்மிடையே இருகிறார்கள். உலகத்திற்காக பற்பல சேவைகளில் தன பக்தர்களை ஈடுபடுத்துகிறார்கள். அவர்களையும் பக்குவபடுதுகிறார்கள் ஆனால் ஞான சாதனையை ரகசியமாகவே காக்கிறார்கள். அது ஏன் ?

பக்குவபடுத்தி கொடுக்கலாம் என்றால் எத்தனை பேர் பக்குவம் பெறுவார்? நீச்சல் படிக்க வேண்டுமென்றால் தண்ணீரில் இறங்கியே தீர வேண்டும். ஒரு சில முறை மூழ்கி தண்ணீரும் குடித்து விடுவது இயற்கைதானே. கரையிலிருந்து கொண்டு நீச்சலைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் போதுமா? அனைவரையும் தண்ணீரில் இறக்கி விடுங்கள். எல்லோரும் நீச்சல் படிக்கட்டும். சிலர் சிறிது சிரமப்படாமல் கைதூக்கி விடுங்கள் உங்கள் அருளால்! எனவே
அடியேன் மகான்களை பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் அறிந்ததை எதுவும் மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லி எல்லோரையும் மேன்மையடையச் செய்யுங்கள் என்பதே.

இங்கே சில சித்தர்கள் பாடல்களை தருகிறேன் இதில் ரகசியம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள்.

அகத்தியர்:
---------------
"பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலைஇரண்டாகும்" எனக் கூறுகிறார் அகத்தியர்.

பதி என்ன இடம் என்ற - இறைவன் இருக்குமிடம் இது என நமக்கு குருவை சொல்லும் - சொல்லக்கூடிய குரு - நமது ஜீவன், தல இரண்டாகும் - இரண்டு தலையாகும் - அதாவது தலைக்கு தலையாக உள்ள இரண்டு கண்களாகும் -

கண்களில் உள்ளது. பரப்பிலே விள்ளாதே - வெளியிலே சொல்லாதே நீ உணர்ந்து அறி எனக் கூறுகிறார். இதைசிலர் இறைவன் இருக்குமிடம் எது என குரு சொன்னதை வெளியில் சொன்னால் உன் தலை இரண்டாக வெடித்துவிடும் என

தமிழ் தெரியாத முட்டாள்கள் மக்களை பயமுறுத்தி விடுகின்றனர். யாருக்கும் தலை வெடிக்காது தைரியமாக உண்மை ஞான ரகசியங்களை எல்லோரும் அறிய எடுத்தியம்பி எல்லாரும் மேன்மையடைய உதவுங்கள்.

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுச்
கனலெலுப்பிக் கண்ணிலே கடுப்புத் தோன்றும்".

நாம் காணுகின்ற கண்களில் நமது கண்களில் கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்றார். அங்கே ஜீவா ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தும்போது, சாதனை புரியும் போது கனல் எழும்பும் என்றும் அப்போது கண்களில்

கடுப்பு தோன்றும் எனவும் அகத்தியர் அனுபவ நிலை பற்றி மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிவவாக்கியர்:
---------------------
"கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவிலாமையால் என்னுள் நிண்ட என்னையும் யானறிந்த தில்லையே"

பட்டினத்தார்:
-----------------
"கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய்கேள் பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுந்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்"

இடைக்காடர்:
-------------------
"கண்ணுள் மணியை கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைக் போற்றீரே"

நிஜானந்த போதம்:
---------------------------
"புருவமென்ற சுழுமுனையில் மைந்தா கேளுபோதமென்ற அருள்ஞான செந்தீ பற்றித்
திருவிருந்த மாளிகையில் தீபங் காணும்செங்கமலக் கண்ணாலே நன்றாய்ப்பாரு
குருவிருந்த இருதயமாம் முக்கோணத்தில்
குவித்து மனக் கண்ணாலே தன்னைப் பார்த்தால்
கருவிருந்த பதியதுதான் மைந்தா மைந்தாகண் காணத் தோன்றுமடா கருவைப் பாரே"

எவ்வளவு எளிமையாக தெளிவாக விளக்கமாக உள்ளது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் ஒன்றுமே புரிந்து கொள்ள மாட்டார்கள். சிந்தித்து, கன்னல் பார்த்து அறிக.

கருவூரார் :
---------------
"காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்
கலங்காதே மெய் மயக்கம் மெத்தவாகும்
மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு
கோணாத முக்கோணத் குறியைப் பாரு ............"

சட்டைமுனி நாயனார்:
--------------------------------
"மனோன்மணியாம் புருவமையத்தூடே சென்று
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்"

காகபுசுண்டர்:
---------------------
"காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்"

காகம் போல ஏக பார்வையால் ஒளியை உற்று நோக்கி உள்ளே இருந்தால் கண்ணில் அதுவரை நாம் காணாத அற்புதக் காட்சிகளைக் காணலாம் என்கிறார். தான் அவ்வாறு கண்டு காகபுசுண்டர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்.

தாயுமான சுவாமிகள்:
-------------------------------
"கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றனர் நான்தொழும் தெய்வமே"

ஒரு சித்தர் ஒரு சொல் சொல்லியிருந்தால் இன்னொரு சித்தர் பாடலில் அதற்கு விளக்கம் இருப்பதைக் காணலாம். இப்படியே ஞானவான்களின் எல்லா நூல்களும் ஒன்றுகொன்று தொடர்புடையதாகவே காணும், ஏனென்றால் எல்லோரும்

மெய்பொருள் பற்றிதானே சொல்கின்றனர்.

இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா?. இதுபோன்று நிறைய சித்தர்கள் பாடல்கள் இருக்கிறது. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன மனதில் ஏற்படும் அணைத்து சந்தேகங்களுக்கும் விடையை சித்தர் பாடல்களிலே காணலாம். எல்லா சித்தரும் ஞானம், வைத்தியம், ஜோதிடம், மந்திரம் இன்னுமுள்ள எல்லா கலைஞானம் பற்றியும் கூறியிருக்கிறார்கள். இவற்றிலெல்லாம் உலகத்திலே தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடே தமிழில் உள்ளதுபோல ஞான நூல்கள் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக சொல்லலாம். 
இந்த ஞானக்கடலில் மூழ்கி  நன்முத்துகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. சிந்தையை தெளிப்பது சித்தர்கள் நூற்களே . சிந்த தெளிய சித்தர்கள் நூலைப் பாருங்கள்! பார்த்தால் பசிதீரும் - பார்த்தால் - அமுது கிடைக்கும். பேரின்பம் அடைவீர்கள். மரணமில்ல பெருவாழ்வு வாழலாம்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

குருவே சரணம் குருவடி சரணம்
 
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

Popular Posts