ஞாயிறு, 23 நவம்பர், 2014

மேல் மூலம் - நமது கண்!

அறிகின்ற மூலத்தில் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிக் - திருமந்திரம் 452

நாம் அறிகின்ற மேல் மூலம் - நமது கண்! நாம் அறியாதது தான்
குதத்துக்கும் குய்யத்துக்கும் நடுவுள்ள மூலம்! அறியாததை விட்டுவிடு
அதுயோகம்!

அறிந்ததை பார்? பார்க்க முடிந்ததே மேல் மூலம்-கண்!
கண்ணில் தான் அங்கி-நெருப்பு  உள்ளது. அங்கேதானே நீரும் உள்ளது!
நீர் உள்ள கண்ணே தவத்தால் சிவந்து செந்தாள் சிவந்த திருவடி எனப்படும்!

அந்த செந்தாள் கொளுவி பிடித்துள்ளது கண்மணி ஒளியை!கொக்கி
போட்டு பிடித்து வைத்துள்ளது. மாட்டி வைத்துள்ளது. தமிழ் வேதம்
திருமந்திரம்! தமிழின் எல்லா சொற்களையும் அழகாக கையாள்கிறார்!
திருமூல நாயனார்!

நீர் மேல் நெருப்பாக இருப்பவன் இறைவன்! கண்
கருவிழி உள் பிராண நீரில் சுழலும் மணியுனுள்ள இருக்குது நெருப்பு !
எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் இறைவன்!

மந்திர மணிமாலை 

ஞாயிறு, 16 நவம்பர், 2014

புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்!!

"ஒன்றாகக்  காண்பதே  காட்சி ! புலன்  ஐந்தும்
வென்றான்தன்  வீரமே  வீரம் ; -  ஒன்றானும்
"சாகாமல்  கற்பதே " வித்தை ;  தனைப்பிறர்
ஏவாமல்  உண்பதே  ஊண் ".
                                      -  ஒளவையார்

           கடவுளை  ஒன்றாக  காண்பதே  காட்சி!  கடவுளை  அடைந்த ஞானியர்கள்  பலர்  இருப்பினும்  அவர்கள்  அனைவரும் ஒருவரே ! அப்படி  கருதுபவரே  ஞானம்  பெறுவர் ! சாகாமல்  கற்பதே  கல்வி ! சாகாகல்வி  பயலுபவனே  ஞானம்  பெற  முடியும் ! செத்தவர்கள் மீண்டும்
 பிறப்பர் ! பிறந்து , செத்து , பிறப்பவர் வினைகளுக்குட்பட்ட மனிதனே ! அவர்கள்  ஞானி  அல்ல ! சாகாதவரே  ஞானி ! சித்தர் !  பிறப்பு  இறப்பை வென்றவரே  இறைவன்  திருவடியை  அடைவர் ! ஒளவையாரின் 
இந்த  ஒரு பாட்டு  போதும் !  எது  ஞானம்  என்று  விளங்க !  விளக்க !  ஜாதி  மதம்  இனம்  மொழி  நாடு  என  எல்லாம்  கடந்து  நாமனைவரும் கடவுளின்  பிள்ளைகளே  என்று  பார்ப்பவர்களுக்கே  ஞானம்  கிட்டும் !

ஞானம் பெற விழி
ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ
அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை
விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?!
அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த ஊக்கம்!
ஆக்கம்! சிறந்த நோக்கம்!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! கடவுளை அடைய கண்ணே வழி!
வேதங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆசிரமங்கள் சங்கங்கள் எல்லோரும்
கூறும் ஒரே இறைவன் உன்னுள்ளே இருக்கிறான் உயிராக! காண,உணர
வழி விழியே! கண்ணே ! விழித்திரு காண்பாய்! ஞானம் பெற ஒரே விழிதான்
ஒரே வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 10 நவம்பர், 2014

குருவை நாம் பெற வேண்டும் என்று வள்ளல் பெருமான் சொல்ல வில்லையா?



குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!


வள்ளல் பெருமான் குரு பற்றி
கூறிய உரை நடை குறிப்பு

ஞாயிறு, 9 நவம்பர், 2014

காவி உடை

காவிமலைக்கண்  வதியேனோ  கண்ணுள்  மணியை  துதியேனோ                                                                                                                                                               -    திருவருட்பா 278

    கண்மணியில்  நினைவை  செலுத்தச்  செலுத்த  கண்களில்
ரத்த  ஓட்டம்  மிகுந்து  காவிக்  கண்ணாகும் . சந்நியாசியானவன்  காவி  கட்ட  வேண்டும்  என  சொல்வது  இதைதான் . காவி உடைகள்  தரித்தவனெல்லாம்  சந்நியாசி  அல்ல . இப்படிப்பட்ட காவி ஏறிய  கண்ணிலேயே  வசிக்க  வேண்டும் . மனம்  தங்க  வேண்டும் கண்மணியின்  ஒளியை  இறைவனை  துதிக்க  வேண்டும்  என வள்ளலார்  கூறுகிறார் .

-ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

"எல்லோரும்  எல்லாமும்  பெற  வேண்டும்  இங்கு
இல்லாமை  இல்லாத  நிலை  வேண்டும் ".


        ஆண்டவனிடம்  வேண்டும்போது  எல்லோரும்  இன்புற்றிருக்க
பிரார்த்தனை  பண்ண  வேண்டும் ." எல்லோரும் "இன்புற்றிருகும்போது
எல்லோரும்  என்பதில் நாமும்  அடக்கம் . அதனால்தான்  முன்னோர்கள்
எதிலும்  பொது  நோக்கு  வேண்டும்  என்றனர் . நாடு வாழ  நாமும்
வாழுவோம் . சற்குருவை  நம்புங்கள்  கடவுளை  வழிபடுங்கள்  சற்குரு
சுட்டிக்காட்டிய  பாதையில்  செல்லுங்கள்  இறைவனை  அடையலாம் .
மரணமிலா  பெருவாழ்வு வாழலாம் .


ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

Popular Posts