செவ்வாய், 22 டிசம்பர், 2015

வீணே ஏன் காலத்தை போக்குகிறாய்?



அன்னையை கோவிலில் சென்று வணங்குவது பக்தி, பூசாரியிடம்
சொல்லி அர்ச்சனை அபிசேக ஆராதனை செய்யச் சொல்லி
பார்த்து மகிழ்வது பக்தி! நாமே அம்பிகை விக்கிரத்தை வைத்து
நம் விக்கினங்களை இதை எல்லாம் செய்தால் கர்மம்! அம்பிகையை
உபசாரத்தாலும் முத்திரைகளாலும் மந்திரத்தாலும் தன்னுடலில்
பாவித்து செய்வது தந்திர மார்க்கம்! செய்பவன் தந்திரி! அம்பிகை
உயிராக வாலையாக நம் சிரஉள் நடுவிலே நம் ஆத்ம ஜோதியாக
துலங்குகிறாள் என்பதை அறிந்து அதற்காக விழி வழியே
விழித்திருந்து தவம் செய்பவனே தபஸ்வி ! ஞானி! முடிவில்
அனைவரும் ஞானத்திற்கு வந்தாக வேண்டும்! வீணே ஏன்
காலத்தை போக்குகிறாய்? இப்போதே வந்துவிடு!

Popular Posts