Wednesday, August 28, 2013

புண்ணிய விளக்கம் - அடியார் பணி அருளவேண்டல்


பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே.

பாடும் திறன், பஞ்சமில்லா எப்போதும் கிட்டும் உணவு, நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும் சத்சங்கம், நல்ல குணவானாக திகழ்வான்...பயப்படாதே இதெல்லாம் நடக்கும்...என் மேல் ஆணை என்கின்றார் வள்ளல்பெருமான்! சிவாயநம என இறைவன் நமக்கு வழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதைத் தேடிக் காண்பதே இனிமையான அனுபவம்.


அடியார் பணி அருளவேண்டல்

எப் பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பா உன் பொன்னடிக் கென் நெஞ் சகம் இடமாக்கிமிக்க
வெப்பமான நஞ்சன வஞ்சகர் பாற் செலும் வெந்துயர் நீத்த
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே

எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தணிகையான கண் மணி ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சகத்தில் இடங்கொடுத்து அருள் புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமால் தடுத்து என் வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

Monday, August 26, 2013

இறைவன் எங்கே?

உடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்இரண்டு கண்ணே

எத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் ! கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...!

Sunday, August 25, 2013

பிரம்ம முகூர்த்ததில் ஆத்ம விசாரம்


மூலமாம் குளத்திலே முளைத்தேழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அருப்பீறேல்
பாலனாகி வாழலாம் பரப் பிரம்மமாகலாம் மூலம் என்றால் கண். அங்கே நீர் இருக்கிறதல்லவா ?
அதனால் தான் கண்ணை மூலமாகிய குளம் என்கிறார். இந்த குளத்தில் வேண்டாத  கோரைப்புற்கள் முளைக்கின்றன. அதை நாலு கட்டு அறுத்து தள்ளச் சொல்கிறார். காலையில் எழுந்து செய்ய வேண்டுமாம் ?

 நமது மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணம் நான்கினாலும் எழும் காம குரோததிகளாகிய துர்குணங்களையே விசாரித்து ஆத்மா விசாரம் புரிந்து நான்கையும் அறுத்து வெளியேற்றவேண்டும்.


மனம் சித்தம் புத்தி அகங்காரமாகிய இந்நாலு கட்டுகளும் நம்மை பற்றாது
இருக்க தினம் தினம் காலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து ஆத்ம விசாரம் -சாதனை செய்ய சொல்கிறார். அங்ஙனம் நாம் நம்மிடம் உருவாகும் கோரையாகிய துர்குணங்களை அகற்றுவோமானால் பாலனாகி வாழலாம் என்றும் இளமையோடு வாழலாம். பரப் பிரம்மமாகி வாழலாம் என்கிறார்.

கண்மணிமாலை - ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

பொன்விழாவின் போது அன்பர்கள் வழங்கிய வாழ்த்துப்பா

பூரணமாய்ப்  பூத்தெழுந்த புண்ணியமெய்  மாமலரின்

புகழ்விளங்க வந்த அய்யனே

புருவநடுப் பொட்டினிடைப்  புத்தமுதப் புனல்பெருகப்

புதையலான ஞான மெய்யனே

மாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை

மானுடர்க் களிக்க எண்ணியே

மாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி  கனிபறித்த

மாகுரு சிவசெல்வராஜரே

காரணமாய் நான்குயுகக் காரியமும் ஆற்றிடவே

கருமணியுள்  கனலு மாகியே

கருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக்

கண் கலந்த வான வட்டமே

ஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும்

ஆஃத்துணர்த்த வந்த வந்த செல்வமே

அடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும்

அற்புத மெய்ஞான குருபரா ! 

Sunday, August 18, 2013

பிறப்பின் ரகசியம்


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும்!

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது!!

ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார்! பிறப்பின் ரகசியம் இது !

"பற்றித்  தொடரும் இருவினையன்றி வேறொன்றில்லை பராபரமே"  என்று சித்தர் பெருமகனார் கூறியுள்ளார்!

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கருமங்கள் ஆகான்மியம் எனப்படும். பிராரத்துவம் - விதி ஆகான்மியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம்,  அல்லது பாவம் நிறைய செய்து தீ வினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்!

ஓவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே!  ஆக பிறக்கும் போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த  உயிரோடு போய் விடுகிறது!!  பிறக்கும் போது வந்ததை விட கூடவோ குறையவோ செய்யலாம்!

விதியில் இருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்கையை செம்மைபடுதிக் கொண்டால் !! வினைகளை அழித்துவிட்டால் !! சாகாமல் இருக்கலாமல்லவா ?! வினையிருந்தால் தானே சாவு ! வினையிருந்தால்  தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?! வினை இல்லாமல் செய்துவிட்டால் ?! பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ? இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்!??

நமது ஸ்தூல உடல் தான் அழிய கூடியது.

ஸ்தூல உடலுக்குள் சூக்கும உடல் பரு உடல் என்பர் இறைவன் படைப்பில் அற்புதம்  இதுவே !

நமது ஸ்தூல உடலில் பிணைக்க பட்டதே சூக்கும உடல் ஆகும்!

தவத்தால் தான் ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க  முடியும்!

பிரிந்தால்  தான்  வினையில்  இருந்து விடு பட முடியும்!
 

"வினை போகமே தேகம் கண்டாய்  "
உடம்பு ஆக காரணமானதும் உடல் நன்றாக பிரிக்க முடியாத
படி பொருந்தி இருக்கிறது!

தவம் செய்து தான் பிரித்து சக்தியூ ட்ட  முடியும்.

குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்ணில் மணியில் மனதை சரண் செய்து தவம் செய்து வர இது நடக்கும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

நல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு!

"புண்ணிய மாமவர்  தம்மை புதைப்பது  "

நல்ல தவம் செய்து வரும் ஒரு சாதகன் இறந்தால் அவர் உடலை எரியூட்டாமல் புதைப்பதே சாலச் சிறந்ததாகும்!

ஒரு வேலை அவர்  சமாதியில் ஆழ்ந்திருக்கலாம்!

சமாதி நிலை அறியாத பாமரர்கள் உணர்வு ஒடுங்கிய நிலையிருக்கும் அவரை செத்து விட்டார் என கருதி  சுடுகாட்டில் சுட்டெரித்து விடுவர். அது கொலைக்கு சமம்!

தவம் செய்யும் சீலர்களை புதைப்பது நல்லது என்றார் திருமூல நாயனார்!

இதைதான் வள்ளல் பெருமானும் சமாதியில் வைத்து விடுங்கள் என்றார்! இந்த நிலையில் இருப்பவரைத்தான் புதைக்க வேண்டும்!

சாதாரண மனிதரை சுட்டுவிடுங்கள் அதற்க்கு தான் சுடுகாடு உள்ளது! நல்ல தவ சீலரை  எரித்தால் நாட்டுக்கு கேடு! நல்ல தவ சீலரை முறைப்படி சமாதி செய்தால் பூஜித்தால் நமக்கு நல்ல காலம் வரும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

திருமந்திரம் - முட்டை இரண்டு

"இம்  முட்டை  இரண்டையுங் கட்டிட்டு
  ஊன்றி  இருக்க  உடம்பழியாதே"

முட்டை யிரண்டையுங் கட்டிட்டு - முட்டையை உடைத்து  சாப்பிடச்  சொல்லவில்லை ! கட்ட  வேண்டும்  என்கிறார் !

முட்டை  என்றால்  கண் ! முட்டை  போல்  இருப்பதால்  முட்டையிலே
கரு  இருப்பதைப்  போல்  கண்மணியே  கருவிலே  உருவான  முதல்  உறுப்பு  அதில்  ஒளி  இருக்கிறது  அதுவே  கரு !

இரு  கண்ணான  முட்டையையும்  புறத்தே பார்வை செல்லாமல் கட்டி  அகத்தே செலுத்துவதாகும் !

இரு  கண்களையும்  சூரிய  சந்திர  ஜோதிகளை இணைப்பதே  கட்டுவதாகும் !

இங்ஙனம்  இரு  கண்  ஒளியிலும்  நினைவை  நிறுத்தி  உணர்ந்து  உள்கொண்டு  சேர்த்தால் இவ்வுடம்பு  அழியாமல்  இருக்கும் !

சிரஞ்சீவியாக  வாழலாம் !

Saturday, August 17, 2013

சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது!

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு  மாமே

இடக்கை இடது கண் வலக்கை  வலதுகண் இவ்விரண்டு கண்களாலும் உணர்வோடு ஒளியோடு   உள் செல்ல இரண்டும் சேர்ந்து ஒன்றாகி ஆத்ம ஸ்தானத்தில் ஒளி பெருகும் உணர்வு உண்டாகும். யானையின் துதிக்கை  போன்று உள்ளிருந்து நீண்டு வெளியே  வந்து அனுபவங்கொள்ளும்இதுவே துதிக்கையால் உண்பதாகும். துதிக்கை உருவாக வேண்டும்
நீண்டு வளரவும் வேண்டும்! பின்னரே துதிக்கையால் உண்பது! கண்மணி ஒளியிலே நிற்க நிற்க சோர்வு வரும் ஆரம்பத்தில்! தூக்கம் வரும்! சோர்ந்து போகாதீர்! தூங்காதீர் ! ஆத்மஸ்தானத்தை பற்றி துதிக்கை வளர்ந்து விட்டால் சோர்வு இல்லை! தூக்கம் இல்லை! உணர்வோடு இருந்து தூங்காமல் தூங்கி இருப்பதே தவம் ! அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை! சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது! தூக்கத்தை குறைத்து  சோம்பலின்றி
தவம் செய்க! அருள் பெருக !

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

Popular Posts