செவ்வாய், 24 டிசம்பர், 2019

அக்னியில் ஞானஸ்நானம் - Baptize by fire

முதலில் யோவோன் நீரினால் திருமுழுக்கு ஞானஸ்நானம் அனைவருக்கும்
வழங்கினார். இன்று எல்லா சர்ச்சுகளிலும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது!
நீரில் மூழ்கி எழுவதா? அப்படியாயின் வல்லமை மிக்க ஏசு பெருமான்
தூய ஆவி என்னும் நெருப்பால் எப்படி  திருமுழுக்கு கொடுத்திருப்பார்?
நீர் ஆனதால் மூழ்கி விட்டீர்! தூய ஆவியாகின அக்னியில் மூழ்குவது எப்படி?

ஏசு பெருமான் யோவானை பணிந்து குருவாக ஏற்று அவரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்!  உத்தமர் ஏசுவின் இறைகுணம் அது!  தானும் அவ்வாறு ஞானஸ்நானம்
செய்விக்காமல் அக்னியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்!
எப்படி இது தான் மிகப்பெரிய ஞான ரகசியம்!
 

ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் நிலவ!
சனாதன தர்மம் - சன்மார்க்கம் உலகெங்கும் தழைக்க!
உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஏக இறைவன்!
அனைத்து மதங்களும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன்!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பேரொளி!!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்வீர்!
மரணமிலா பெருவாழ்வு பெறுவீர்!

ஒரு தீபம் மற்றொன்றை ஏற்றும்போது ஒளி
பெறுகிறது!


வள்ளலார் வழி நடப்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
என்பதை நிரூபிக்கும் விதமாக நாங்கள் இந்த இயேசு எழுபது
நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

தேவ மைந்தன்! ஒப்பற்ற ஞானி! வாழையடி வாழையாக உலகை
உய்விக்க வந்தமகான்! இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய
இறைத்தூதர்! அன்பால் உலகை வெல்ல வந்த அற்புதர்! அன்பால்
உலகை வெல்ல வந்த அற்புதர்! இயேசு பிரானின் மகிமை சொல்ல
வாய்ப்பளித்த எங்கள் வள்ளல் பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

-ஞான சற் குரு சிவசெல்வராஜ் 

www.vallalyaar.com

வியாழன், 12 டிசம்பர், 2019

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா"

 என மகாகவி பாரதியார் ஒளி உள்ள,
ஒளி உணர்வு உள்ள, ஒளியாகிய பரம்பொருளை அறிந்தவர்களை அறைகூவி அழைக்கிறார்!

நெஞ்சிலே உறுதியுடன் நேர்மை திறமும் கொண்டு விடுதலைக்காக பாடுபட வருக வருக என அழைக்கிறார்!

நாட்டு விடுதலைக்காக?! இல்லை?! நம் விடுதலைக்கு!
அறியாமை எனும் விலங்கு பூண்டு, மனம் எனும் அரக்கனுக்கு அடிமையாக கிடைக்கிறோம்!
விடுதலை பெற வேண்டாமா?

ஆன்மபலம் பெற்று ஒளியுடல் பெற விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ எந்த கட்டுக்குள்ளும் சிக்காது சுதந்திரமாக வாழ சித்தம்போல வாழ சிவமாகிய ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா!

ஞான சற்குருவை நாடி திருவடி தீட்சை பெற்று உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
ஆன்ம நேய உணர்வு பெறுவாய் மரணமிலா பெருவாழ்வு கிட்டும்!

இதுவே பாரதியின் அறைகூவல்!

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போலவே,
மகாகவி பாரதியாரும் மனதுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை
 உசுப்பி சித்தம் போக்கு சிவம் போக்கென சுதந்திரமாக வாழ வழிகாட்டினார்!!


ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திருவருட்பாமாலை
 நாலஞ்சாறு
பக்கம் : 71
குருவின் திருவடி சரணம்

Popular Posts