புதன், 27 மே, 2015

சுட்ட சுடுகாடும் வெளி

 வினைகளை எரிக்க உயிர் ஒளியை பெருக்க வேண்டும். அதற்க்கு உயிர் எங்கு உள்ளது? அதை அப்படி பெருக்குவது என்று தெரிந்து உணர்ந்து பெருக்க வேண்டும்.உயிர் ஒளி ஆற்றல் பெருக்கி வினைகளை சுட்டு எரித்து சாம்பல் ஆக்க வேண்டும். அதுவே சுடுகாடு. சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவாகும். அதுவே கண் மணி

 மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
என அவ்வை கூறி உள்ளாரே! என் செய்வேன்?? 
தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் - தன்னில்
மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்.!
இறைவன் திருவடியில் போட்டால் மனம் அடங்கும்.


நமது கண்ணே ஹோம குண்டம். அங்கே தான் ஜோதி உள்ளது அல்லவா அதற்க்கு ஆகுதி நமது கர்ம வினைகள் தான்! இதுவே ஞான கர்மம்! ஞான யாகம்! இதுவே திருநெறியாகும் ! இதை உணர குரு நெறிக்கு வருக!


மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மனம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பெருகும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!



-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com

ஞாயிறு, 17 மே, 2015

பக்தி இருந்தால் ஞானம் மலரும்.

பக்தியில்லாமல் வறட்டு வேதாந்தம் பேசுவோர் ஒருக்காலும் இறைவனை உணரார்! பக்தி இருந்தாலே ஞானம் மலரும்.பக்தி இருந்தாலே நல்ல பண்புகள் வரும்.அவனே உத்தமன் ஆவான்.அப்படி பட்டவனே குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற முடியும்! பக்தியில்லாதவன் பணிவு இல்லாதவன் ஞானம் பெற முடியாது!  பணிந்தவனுக்கே பரமன் அருள்! குருவை பணிந்தவர்களுக்கே பரமன் அருள் கிட்டும்! குருவை பெற்றவனே வைராக்கியத்துடன் தவம்  செய்வான்! அது மட்டும்
போதாது!?  சக்தி அருள் தரில் இவையெல்லாம் எளிதாக கிடும்மாம்! சக்தி தான் வாலை !

நம் இடக்கண் சக்தி! நம் சிர நடுவில் விளங்கும் சிவசக்தி! அந்த சக்தியை பக்தியால் போற்று! கன்னியா குமரியிலே முக்கடல் தீரத்திலே எத்தனையே கடல் கோள்களையும் தாண்டி இன்றும் நின்றும் நித்தம் தவம் செய்யும் வாலைதாய்! வா! பார்! பணி! சக்தியை பணிந்து உன்சக்தியை பெருக்கு சக்தி அருள் பெற்று சிவத்தை பார்! தாயை விட அந்த சக்தியை விட தயவுடையார் வேறு யார்?

தாயை பணி தலைவனை காணலாம்! தன்னிகரில்லாதவன் ஆகலாம்!அவனே ஞானம் பெற்றவனாவான்! எளிதாக இறைவனை அடைய குருவை நாடி உபதேசம் பெறு! தீட்சை பெறு  !பக்தியுடன் வாலை தாய் அருள் பெறு ! வைராக்கியமாய் இருக்கலாம் ஞானி ஆகலாம்! சக்தியை பணிந்தால் எல்லாம்
எளிது! இதுவே ரகசியம்.

Popular Posts