Wednesday, September 25, 2013

அகத்தியர் சொல்லும் குரு

சொல்பிறந்த விடமெங்கே முப்பாழ்
எங்கே

துவாரபாலகர் எங்கே முதற்பாழ்
எங்கே

நல்லசங்கு நதிஎங்கே வைகுந்தம்
எங்கே

நாரணனும் ஆலிலைமேல் படுத்த
தெங்கே

அல்லப்படும் ஐம்புத மொடுக்கம்
எங்கே

ஆறஞ்சுயிதழ் இரண்டு முளைத்த
தெங்கே

சொல்லவல்லார் உண்டாணல் அவரை
நாமும்

தொழுது குரு எனப் பணிந்து
வணங்களாமே{அகத்தியர் ஞானம்]
அகத்தியர் அடுக்குநிலை போதம் என்ற நூலில பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்,அப்பாடலில் வரும் வினாக்களுக்கு ஒரே பொருளில் பதில் கூறுபவர் எவரோ? அவரே குருவாக இருக்க முழுத்தகுதி பெற்றவர் ஆவார் எகிறார்.


முப்பாழ்
துவாரபாலகர்
நல்லசங்கு நதி
வைகுந்தம்
ஐம்புத மொடுக்கம்
நாரணனும் ஆலிலை
இறைவன் திருவடி?

Friday, September 20, 2013

ஓசூரில் மெய் ஞான உபதேசம்


திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191வது அவதார திருநாளை முன்னிட்டு ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய் ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191-வது குருபூஜை.

இரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம்! யாவரும் அறியலாம்!

இந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்!
வள்ளலார் உரைத்த சன்மார்க்கம்!
சித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்!
உலகர் யாவருக்கும் பொதுவான நெறி!
ஜாதி மத இன பேதமற்ற தர்ம வழி!
உன்னை அறிய! உணர! ஒரு பாதை!
இறைவன் எங்கே? அறியலாம்! வாங்க!
சுருதி வாக்கியம் அறிய வாருங்கள்!
யுக்தியினால் பரிபாஷை விளங்க வருக!
ஞானம் மட்டுமே இங்கு உபதேசம்!
இறைவன் உரைத்த ஞானம் “சும்மா இரு”!
உன்னுள் உன்னைக் காண “சும்மா இரு”!
உன்னை கண்டு இறைவனை காண வழி!

ஆன்ம பசியுள்ளவரே வருக!
தனித்திருக்க விரும்புவோரே வருக!
விழிப்புணர்வு பெற விரைந்து வருக!View Larger Map

குருவைப் பணி

ஒருவன் குருவிடமிருந்து திருவடி உபதேசம் பெறும் போது குருவின் உடலில் இருந்து உள்ளத்தில் இருந்தும் தெய்வீக சக்தியானது சிஷ்யனுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் பாய்கிறது!? தெய்வத்தின் குரல் மனித உருவிலே குருவாக இருந்து பேசும்.குருவை சாதாரணமாக கருதாமல், உலகிலேயே ஒப்பற்ற ஞானோபதேசம் ஞான தீட்சை அருளிய மகானுபாவன் எனக்கருதி பணிந்தால் சரணடைந்தால் எப்போதும் குருவை நினைந்து வாழ்ந்தால் ஞானம் வழங்கிய சூட்சும ஞானசற்குரு வள்ளலாரும் ஞானத்தாய் வாலையும் கூடவே இருந்து காத்தருள்வார்கள்! ஞானம் பெறலாம்! மோட்சம் பெறலாம்! ஸ்தூல குருவை பணிவதே சூட்சும குருவை பணிவதாம்! குருவை போற்று! நற்குணமெலாம் வாய்க்கப்பெறுவாய்! குருவே சகலம் என வாழ்! வாலையருள் பூரணமாக கிட்டும்! கன்னி 'ய' விலே தோன்றுவாள் குமரியாக!

Monday, September 16, 2013

சரியை கிரியை யோகம் ஞானம்

சரியை   - அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது
                     அதன் முடிவு சாலோகம்
                     பக்தன் - தாச மார்க்கம்

கிரியை  - அஷ்டாங்க  பூசை முதலியன செய்தல்
                     அதன் முடிவு - சாமீபம்
                      கர்மவான் - சத்புத்திர மார்க்கம்.

யோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல்
                    அதன் முடிவு - சக மார்க்கம்
                    யோகி - சகமார்க்கம்

ஞானம்  - தான் இன்னது என்று அறிந்து அம்மயமாதல்
                    அதன் முடிவு சாயுச்சியம்
                    ஞானி - சன்மார்க்கம்Thursday, September 5, 2013

ஒளி நெறி அடைந்திட வாருங்கள்


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
தங்க ஜோதி ஞானசபை


ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும்,அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூல முழு உண்மையை கண்டு ஆய்ந்து இதுதான் என்று சாட்சி கூறி வெளிப்படுத்தி வைத்தார்கள் .

பிரபஞ்ச பெருவெளியெங்கும் ஒலி ,ஒளியாக விரிந்திருப்பினும் தேகம் என்ற ஆலயத்திற்குள்தான் அது முழுமையாக வெளிப்பட முடியும் என்று உணர்ந்தனர் .அந்த உணர்வின் அடிப்படையே சகல வேதங்களிலும் சர்வ மதங்களும் ,மதங்களின் வழி வெளிப்பட்ட சாஸ்திர சடங்குகளும் ஒன்றையே குறிவைத்து ஞான குறியீடாக பேசி உள்ளன .அந்த ஒன்றுதான் ஆதிமூலம் .சித்தர்கள் வழிபடும் ஜோதிமூலம் அந்த ஆதியை அறிந்து கொள்ளவும் ,ஜோதியை உணர்ந்து கொள்ளவும் வேதாந்தங்களும் சர்வ -சகல -ஜாதி -மத -இன -மொழி -பேதங்கள் கடந்த பிரம்மப்பிரகாச ஜீவசிம்மாசன ஞானப்பெரும் பிரணவப்பீடம் அறிந்து கொள்ளவும்.

ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு சிவ  செல்வராஜ்  ஐயா அவர்களின் உபதேசமும் ஆதி பொருளை உணர்த்தும் திருவடி தீட்சையும் பெறலாம்
இந்த உன்னதமான உயிர் ஞான சேவையை பிறப்பெடுத்த அனைவரும் பயன்படுத்தி பிறவா வரம் என்ற ஒளி நெறி அடைந்திட வாருங்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி வரவேற்கின்றோம் .வந்தால் சாகா வரம் பெறலாம்
எல்லாம் செயல் கூடும் !   வாழ்வாங்கு வாழலாம் !

Popular Posts