ஞாயிறு, 26 அக்டோபர், 2014

உலகில் முதல் மெய்ஞ்ஞான இணையத்தளம்!!

உலகில் முதல் மெய்ஞ்ஞான இணையத்தளம்

இரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம். 

யாவரும் அறியலாம் !

இந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்!
வள்ளலார் உரைத்த சன்மார்க்கம்!
சித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்!
உலகர் யாவர்க்கும் பொதுவான நெறி!
ஜாதி மத இன பேதமற்ற தர்மவழி !
உன்னை அறிய! உணர ! ஒரு பாதை!
இறைவன் எங்க? அறியலாம்! வாங்க!
சுருதி வாக்கியம் அறிய வாருங்கள்!
யுக்தினால் பரிபாசை விளங்க வருக!
அனுபவம் பெற அனைவரும் வரலாம்!
ஞானம் மட்டுமே இங்கு உபதேசம் !
ஞானம் மட்டுமே இங்கு தீட்சை !
இறைவன் உரைத்த ஞானம் "சும்ம இரு"!
உன்னுள் உன்னைக் கான "சும்ம இரு"!
உன்னைக்கண்டு இறைவனை காண வழி !
ஆன்ம பசியுள்ளவரே வருக!
தனித்திருக்க விரும்புவோரே வருக!
விழிப்புணர்வு பெற விரைந்து வருக!

www.vallalyaar.com
தங்க ஜோதி ஞான சபை

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே!


இறைவனை உணரவும் நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழவும் ஓர் வழி-உபாயம்  உள்ளது!

அது நம் மனம் அடங்கும் இடத்தில் தவம் செய்வது ஆகும்! அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை நம் வினைத் தொகுதியான விதி! அதிலிருந்து செயல்படுவதே மனம்!

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்விலிருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலேயே நிறுத்துவது தான் சாதனை!  தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டுமே மனம் அடங்கும்! நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்!  இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை! பரம ரகசியம்!

இது தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே!

எந்தை இறைவன் இருக்கும் மணிமன்றம் கண்மணி உள் போக தெரியவில்லையே! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் - திருவருட் பாமாலை (106)

புதன், 8 அக்டோபர், 2014

சூட்சும சரீரத்தை அறிய ?

"உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைப் திறந்து காணவேண்டும் மாந்தரே"

உள்ளது சூட்சும சரீரம்! பிறப்பது ஸ்தூல சரீரம்! ஸ்தூல சரீரத்தைக் கொண்டு தான் சூட்சும சரீரத்தை அறிய வேண்டும்!

இதன் மூலமே, சூட்சும சரீரத்தை அறிய உணர மறைக்கப்பட்ட கள்ள வாசலை கண்மணி நடுவே உள்ள ஊசிமுனை வாசலை திறக்க வேண்டும்! உள்புக வேண்டும்! கண்மணி ஒளியே குண்டலினி சக்தியாம்! இதுவே ஒப்பற்ற ஞான ரகசியமாம்! உரைத்தேன் யானே!!

இருகண்மணி ஒளி - சூரிய ஒளி சந்திர ஜோதி உள்ளே இணையும் போது, உள்ளே தான் ஒன்று சேரும்!? நாதத்தொளி கேட்கும்! ஒளிக்காட்சியின் போது தான் ஒலியும் கேட்க முடியும்! ஒளியும் ஒலியும் தானே சிவமும் சக்தியும்! அதுதானே மெய்ஞானம்! விஞ்ஞானமும் இதைத்தானே பகர்கிறது?!

நம் கண்ணிலே பார்வை சக்தி! கண்ணால் தான் புறப்போருளை பார்க்கிறோம்!
பார்வை சக்தியால் தான் என்றைக்கு புறப்பார்வை அகத்தே பார்க்க திரும்புகிறதோ அதுதான் ஞானசாதனையின் ஆரம்பம்!

நம் கண்ணிலே இருந்து நம்மை பார்க்கச்செய்பவளும் அவளே! புறத்தே பார்த்து வாழவும் அகத்தே பார்த்து மீளவும் அவளே வழிகாட்டுகிறாள்! விழியிலே அமர்ந்தவள்! வாலை! “அவளருளாலே அவள்தாள் வணங்கி!” அவள் அவன் அது எல்லாம் ஒன்றே!!

அம்பிகையே வாலையே சக்தி சொருபம்! நாதஸ்சொருபம்! சிவசக்தி சொருபம்! மூலாதாரத்தில் அக்னி! மேல் மூலமான நம் இருகண் உள்சேரும் இடம் வாலையே, நமக்கு மூல ஆதாரம்! நாம் பிறக்க, வளர, வாழ ஆதாரம்!

நம் இருதயமான இரு உதயமான சூரிய சந்திரனான இரு கண் ஒளியே சூரிய ஒளி! இம்மூன்றும் சேர்ந்து உள்ளே சகஸ்ர தளத்தில் இருக்குல் சந்திர ஒளியை அடையும் போதே அமுதம் கிட்டும்! சொட்டும்! பருகுங்கள்!

நாம் உண்ட உணவின் சாரத்தை சங்கினி என்கிற நாடி உச்சித்துவாரம் வரை எடுத்துச் சென்று சிரசில் அமிர்தத்தை பெருக்குகிறது! தவம் செய்பவர்கே அது கீழே பாய்ந்து பருகிடலாம்!மூன்று மண்டலம் தாண்டிபோனால் கிட்டும்!

நம் உடலையே ஸ்ரீ சக்கரமாக தந்திர சாஸ்திரம் சொல்கிறது. மந்திர சாஸ்திரம் படித்து மனதை ஒருமைப்படுத்தலாம்! ஒழுக்க சீலனாகலாம்!

“மந்திரம் கால் மதி முக்கால்”! மந்திரம் – கால், காலேன்றால் திருவடி நம் கண்களே! மந்திரமான கண்மணி ஒளியைப் பற்றி சும்மா இருந்தாலே, மதி முதலான முக்கால் – மூன்று கால் இணைந்தாலே முக்தி! மூன்று கால் மதி – ரவி, அக்னி என மூன்று கால்! மதியூகமாக செயல்பட வேணும்! புத்தியுள்ள பில்லா பிழைக்கும்! சாகமாட்டன்! மோட்சம் பெறுவான்!

Popular Posts