ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்?

 


இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும்
ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்!
உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்!

உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர்,
ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!
வணங்கபடுவர்!

ஞான சாதனை புரிந்து அங்காங்கே சமாதி கொண்ட
ஞானிகள் கோவிலை அடைந்தால் சூட்சமமாக
வந்து நம்மை ஆசிர்வதிப்பார்!
அருள் புரிவர்!

ஞான பாதையில் பீடு நடை போட உதவுவர்!
எனவே சமாதி ஸ்தளங்களுக்கு போங்கள்!

அங்கே சமாதி கொண்ட ஞானியர் அருள் புரிய காத்திருக்கிறார்கள்!

நூறு கோயில்களுக்கு போவதை விட ஒரு
ஜீவன்முக்தர்  சமாதி கோவிலுக்கு போய்  தவம்
செய்வது புண்ணியமே!

நூறு சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வதை
விட உயிரோடு இருக்கும் நடமாடும் ஒரு ஞானியை
காண்பது உத்தமம் !

ஞானியே ஞான சற்குருவாகி ஞான பாதையை காண்பிப்பார்,
பல ஞானிகள் அருளுக்கு பாத்திரமானவர்
ஞான சற்குருவே!

அப்படிப்பட்ட ஞான சற்குரு  "பார்க்க" கோடி வினை தீருமே!
குருவே பரப்பிரம்மம்!! 



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

வியாழன், 10 ஜனவரி, 2013

பிறப்பின் ரகசியம் என்ன ?

பிறப்புக்கு ஆதாரம் என்ன? வினை!! வினை 3 வகை. அதில் கொண்டுவந்த பிராரப்தத்தை கழிப்பது எப்படி? புதிதாக ஆகான்மியம் சேராமல் செய்வது எப்படி? நெறிப்படுத்துவது எப்படி? பகவத் கீதையில் கண்ணன்  சொன்னது என்ன?  100% வினை குறைந்தால் ஆன்மாவிற்கு விடுதலை.

நல் வினை தீ வினை அறுப்பது எப்படி? இருக்கும் குப்பை/வினை  வண்டி வண்டி யாக இருக்குது, புதிதாக சேராமல் இருப்பது எப்படி? வினை போகமே தேகம் கண்டாய்!

பாவிகளே மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது.
நாம் எல்லாம் பாவிகள், ஏன்? கர்மவினை மூட்டை மூட்டையாக உள்ளது.

நமக்கு அறிவே கிடையாது ?  எப்படி ?

இறைவன் இருந்தால் அன்பு மயமாக கருணை மயமான வேலைகள் நடக்கும்.. அப்படி இல்லையே!வினை தீர்க்க என்ன வழி ? இதுவே முதல்பாடம். வினை எந்த ரூபத்தில் உள்ளது ?  எங்கு உள்ளது ? எப்படி அழிப்பது ?

நமக்கு ஒரு விரோதி உள்ளான். அவன் நம்மை விட பலசாலி. அவன் பக்கத்தில் செல்ல முடியாது? ஒரு போக்கிரி அடக்க போலீஸ் சென்று சொல்ல வேண்டும். அவனால் ஒருவருக்கும் நல்லது இல்லை, கெட்டதுதான். அப்புறம்என்ன செய்வது? என் கவுன்ட்டர் தான்!!  அப்படி தான்

நம்ம வினையும் உள்ளது, பலசாலியான இறைவனிடம் முறையிட வேண்டும்.இறைவன் தான் வினையில் இருந்து காக்க வேண்டும் .

இறைவனை நாம் காண முடியாதே? மனோ வாக்கு காயத்திற்கு உட்பட்டவன் மனிதன். குப்பையான வினை யை வைத்து கொண்டு இறைவனிடம் செல்லமுடியாது. குப்பையை நாம் தான் கழிக்க வேண்டும். தவம் செய்தால் வினை அழியும். இறைவன் திருவடியை பிடித்து கொண்டால் புதிதாக கர்மத்தை சேராது பார்த்து கொள்ளலாம்








அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி  -


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

Popular Posts