புதன், 20 மே, 2020

ஞான பூமியாம் இந்தியா


நான் யார்? நான்-ஆத்மா ! நான் ஏன்  பிறந்தேன்? என் பாப புண்ணிய வினைகளுக்கு முடிவு  கட்ட
இறைவன் கருணையினால் பிறப்பிக்கப்பட்டேன் ! நான் எப்படி பிறந்தேன் ? ஏன் தாயும்  தந்தையும்
சுரோணித  சுக்கிலத்தால்  பிண்ட  உற்பத்திக்கு  மட்டும் காரணமாக, என்  இரு  வினைகளுக்கு
தகுந்த படி  ஆத்மாவை  மாயையால்  பொதிந்து, பிண்டத்துக்கு  உள்  இறைவன்  செலுத்தியதால்
உயிரோடு  உடலோடு  பிறந்தேன்.

      இந்த  உடலில்  இந்த உயிர்  எங்கு  இருக்கிறது ? அதாவது  ஆத்மாவின்  இருப்பிடம்  யாது ?
அதாவது  ஜீவன்  எங்கு இருக்கிறது ? எப்படி இருக்கிறது?

      இந்த ஒரு  கேள்விக்கு  விடை  தெரிந்தால்  அவன்  ஞானி !

     இந்த  கேள்வியின்  விடையை  அறிந்து, உணர்ந்தால்  அவன்  சித்தன் !!

     இந்த  கேள்வியின் விடையை  அறிந்து, உணர்ந்து  அனுபூதியடைபவனே  தெய்வமாகிறான் !!!
தான்  அதுவாகிறான் .

     தன்னுள்  குடிகொண்டிருக்கும்  தெய்வத்தை  உணர்ந்து, அதுவாகவே  மாறுபவன் - தன்
இருவினைகளையும்  இல்லாமலாக்குகிறான்  -  மாந்தருள்  தெய்வமாகிறான்! பஞ்ச  பூதத்தால்
ஆன  தூல  உடல்  ஒளியுடலாக  விளங்க  பெறுகிறான்!

     இப்படிப்பட்ட  ஒரு  மகோன்னத  நிலையடைந்தவர்  தான், கடந்த  நூற்றாண்டிலே  தமிழகத்திலே வடலூரிலே  உலாவந்தவர்தான்  திருவருட்பிரகாச  வள்ளலார்  இராமலிங்க  சுவாமிகள்  அவர்கள் .

     63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும்  அகத்தியர்  முதலான  எண்ணிறந்த  சித்தர்  பெருமக்களும் இன்னும்  பற்பல  ஞானிகளும்  மகான்களும்  இந்த  மகோன்னத  நிலையடைந்துள்ளனர் .

     நமது  புண்ணிய  பூமியாம், ஞான பூமியாம் இந்தியாவில் இது போல் ஒப்பற்ற உயர்ந்த ஞான நிலையடைந்த மகான்கள் ஏராளம்! ஏராளம்!!

இந்த புண்ணிய பூமியிலே நம்மை  பிறப்பித்தமைக்கு  முதலில்  நாம்  இறைவனுக்கு நன்றி  கூற கடமைப்பட்டுள்ளோம்.

     ஒவ்வொரு  ஆத்மாவும்  தன்னிலை  உணர  இறைவன்  அருள்  பாலிக்கிறான் .

     அவரவர்  கொண்ட  வினைக்கு  தக்கவாறு, செயலுக்கு  தக்கவாறு  உயரவோ  தாழவோ  செய்கிறான் .

 நாம்  நம்மை  உணர  வேண்டும்  -  ஆத்மானுபூதி  பெற  வேண்டும். அதுவே  நமது  பிறவிப்பயன் .

     சிந்தித்து - தெளிந்து - உணர்வு  பெறுக !

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் 

       www.vallalyaar.con

ஞாயிறு, 10 மே, 2020

குருவே சிவமெனக் கூறினன் நந்தி

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே" பாடல் - 1581

குருவே சிவம் - ஒளி - இறைவன் எனக் கூறினான் நந்தி - நம் தீ!
உலகில் இறைவனைப் பற்றிக் கூறி அடைய வழிகாட்டும் குருவே சிவம்!

சிவத்தின் அருள் பெற்றே சிவத்தைப் பற்றி கூறுவார்!
ஆகையால் மெய்யுரைக்கும் மெய்ப்பொருள் உரைக்கும் குருவே சாட்சாத் சிவமாம்!?
இது புறத்தே!

நம் அகத்தே சிவத்தை கண்டு ஆத்ம ஜோதியை கண்டு மகிழ்ந்தவர்க்கு
அகத்தீயே சிவமே குருவாய்விடும்!

பின் நம் ஆன்மாவாகிய குருவே நமக்கு வழிகாட்ட இறைவனை பரமாத்மனை அடையலாம்!

நந்தி தான் கூறுகிறான் நம்புங்கள்!

நம் குருவை நாமடைய வழிகாட்டும் விழி உணர்த்தும் குரு சிவந்தானே?!

சந்தேகமா?!

குருவே சிவம் என்பதைக் குறித்து ஓர்ந்து உணர்ந்து அறிய வேண்டும்!

அங்ஙனம் ஓராதார் உள்ளத்தும் ஒளியாய் நிற்பவன் சிவனே"!

சிந்திக்க வைத்து சுருதி காட்டி தெளிவைத் தருகிறார் குரு!

அப்படிப்பட்ட குரு தானே நமக்கு கடவுள்! மாதா பிதா குரு தெய்வம் என்பர்?

இதன் உண்மை பொருள் என்ன தெரியுமா? மாதாவும் பிதாவுமாயிருப்பவரே குரு!

அப்படிப்பட்ட குருவே தெய்வம்!? இதை சிந்தித்து தெளிபவனே உண்மை சீடன்!

உண்மை சீடனே சீவனை அறிவான்!

சுட்டிக் காட்டிய குரு சுடர் விழியில் உணர்த்தியதால் அகத்தே
சிவமாய் எவ்வுயிர்க்கும் தலைவனாய் ஒளியாய்
துலங்குவதே மெய்குரு என்பதை உணர்வான்!

காண்பான்!

அந்த குரு மெய்குரு மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்டவர்!

"குரு அருளின்ற திருவருள் உறாது" உலக குரு காட்ட,
உடலுளே மெய்குருவைப் பெற்றே இறைவனை அடையலாம்!

சத்தியம் இதுவே!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு  சிவ செல்வராஜ் அய்யா

MMM - 126

குருவின் திருவடி சரணம்

ஞானதவம் "சும்மா இருப்பதே"!

உலகோரே ஞானதவம் "சும்மா இருப்பதே"!

"சிவனேன்னு சும்மா இரேண்டா" என சுட்டித்தனம் பண்ணும்
குழந்தைகளை அதட்டி இருத்துவார்கள்!

ஞானம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் போதிக்கப்படுகிறது பார்த்தீர்களா?

ஆகையால் கண்ட கண்ட யோகங்கள் செய்து கெட்டுப் போகாதீர்கள்!

சும்மா இரு!

சாகாக்கல்வி: சும்மா இருக்கும் சுகம்

இறைவன் உங்களை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை?

சும்மா இரு என்றுதானே சொல்கிறார்?

ஏன்?

எதையாவது செய்து மேலும் மேலும் பாவ மூட்டையை பெரிதாக்குகிறாய்?

ஒன்றும் செய்யாதே!

சும்மா இரு!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

TVMM - 129

குருவின் திருவடி சரணம்

நல்ல மருந்து?

* கண்மணி ஒளியே நல்ல மருந்து *

"முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னை பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து”


முன்னை வினையிரண்டும் - நம் கண்மணி முன்னால் திரையாக
துலங்கும் வினையிரண்டையும் வேரறுத்து முன்னின்றான் - நம்
கண்ணிலுள்ளவன் நம் கண்முன்னே நின்று காட்சி கொடுத்தான்!

சிவன்! அவன் தான் இனி பிறப்பதை தடுத்த பேரருளாளன் இறைவன்!

தென்பக்கமான நம் முகத்தில் கண்மணியில் பெருந்துறையில் மேவிய
துலங்கிய பெருங்கருணையாளன் ! அதுவே நம் கண்மணி உள்
துலங்கும் ஒளியே நமக்கு வரும் எல்லா துயரங்களையும் நீக்கும்
மருந்தாகும்!

நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத
மருந்து அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்ஜோதி மருந்து என்று
வள்ளல் பெருமான் போற்றிப் பணிகிறார்!


ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

www.vallalyaar.com

 

Popular Posts