ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

எந்த அளவுக்கு பக்தி?

நாம் எந்த அளவுக்கு பக்தி காட்டுகிறோமோ அந்த அளவுக்கு தெய்வம் நம்மை  
பற்றியுள்ள பாசமாகிய மாயையை நீக்கி நமக்கு ஞானத்தை கொடுத்தருளும், சத்தியம்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

நாம் செய்த பாவங்களை போக்கி நம் கூடவே இருந்து நம்மை காத்தருளும்.
என் சொந்த வாழ்க்கை அனுபவம். தெய்வமே நேரில் வந்து காட்சி கொடுத்து அருள் புரிந்தது! 
கண்ணியனானேன்! அன்பு என்றால் காதலல்ல! காமமல்ல!
 
காமத்தை வெல்லும் அன்பு. கருணையை தரும் அன்பு. உடலால் ஏற்படுவது அல்ல.
ஆன்மாவால் ஏற்படுவதுதான் அன்பு. ஆன்மாவுக்கு ஆன்மா நேசம் பரிவு காட்டுவது.
மனிதரிடம் மட்டும் ஏற்படுவது அல்ல.
எல்லா உயிரினங்களிடமும் ஏற்படுவது தான் அன்பு.அதற்கு ஈடு ஒன்றுமில்லை.
அன்பு ஏற்பட்டால் வருவது உள்ள நெகிழ்ச்சி. மன மகிழ்ச்சி. பேரானந்தம்.

ஞான சற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா.
நூல்:அருள்மணிமாலை
பக்கம்:53

www.vallalyaar.com

புதன், 26 செப்டம்பர், 2018

தீட்சை திருவடி என்பது என்ன?

மந்திர தீட்சை ? மந்திரம் சொன்னால் என்ன வரும்? ஒன்றும் வராது...
கையால் கண்ணை அழுத்தி விடுவதா?
தீட்சை பெறாமல் தவம் செய்ய முடியாது.

தொடாமல் தொட்டு உணர்வை ஏற்படுத்துவது தீட்சை...
தீ + அட்சம்  = அட்சம் கண் இருக்கும் தீயை தூண்டுதல்..

நினைவால்-உணர்வால் அட்சத்தில் இருக்கும் தீயை தூண்ட வேண்டும்.
அதை உணர்த்தி காட்டுவது தீட்சை.
உணர்வு எப்படி இருக்கும். உங்கள் கால் கட்டை இறைவன் என்று அதை எவ்வளவு நேரம்
நினைக்க முடியும்? கட்டை விரலை ஊசி வைத்து குத்துங்கள். உணர்வால் காலையே நினைக்க முடியும்.

அதுபோல் கண்மணி ஒளியை நினைக்க ஒரு உணர்வு வரும். உணர்வால் கண்மணி ஒளி பெருகி
உடல் முழுதும் பெருகும்....

கண்ணே சரீரத்தின் விளக்காக உள்ளது..


Popular Posts