சாகாக்கல்வி நூலிலிருந்து : 21
ஜாதி மதம் இனம் மொழி தேவையில்லை. உலகிலுள்ள மனிதர்கள்
அனைவரும் எல்லாம் வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகள் !
ஜீவாத்மாக்கள் ! அவ்வளவே !
நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரி விளங்கும் கண்மணியில் ஊசிமுனை
அளவு ஒளியாகவே அந்த ஏக இறைவன் உள்ளான் !
இதை மட்டும் நம் மனதில் கொண்டால் போதும் !
"யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா"
இந்த உலகமே மனித குலத்துக்கு சொந்தம்.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே !
நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே !
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் இறைவனே !
உலகுக்கு இறைவன் ஒருவரே !
இதுவே சத்தியம் !
யாராலும் மறுக்கமுடியாத உண்மை !
இதை அறியாதவன் குழந்தை !
இதை புரிந்து கொள்ளாதவன் அறிவில்லாதவன் !
இதை ஒப்புக் கொள்ளாதவன் முட்டாள் !
இதை ஏற்றுக் கொள்ளாதவன் மனிதனேயல்ல !
ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவரே
தான் பொறுப்பு ! வேறு யாரும் கிடையாது !
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும்
இருவினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது !
இதுவே இறைநியதி !
"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்"
நாம் பிறர்க்கு செய்யும் நல்லதோ கெட்டதோ இனி ஒருநாள் நமக்கு வந்தே தீரும் !
"வினை விதைத்தவன் வினையறுப்பான்"
சுவற்றில் எறிந்த பந்து அதேபோல் திரும்பி வந்தே தீரும் !
எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது !!
ஆனால்,,,
இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார் !
பிறப்பின் இரகசியம் இது !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக