திங்கள், 18 ஜனவரி, 2021

ஒளியுள்ள விளக்கு நம் கண்களே!

 ************* ஒளியுள்ள விளக்கு-கண்களே! *************

ஆன விளக்கொளி தூண்டு மவனென"

- திருமூலர், திருமந்திரம்,

- பாடல் 2222

நம் கண்ணில்-மணியில் ஊசிமுனை துவாரத்தினுள் துலங்கும் ஒளி அவனின் (இறைவனின்) ஒரு துளி! அணுவுக்குள் அணுவான பேரொளியின் இறைவனின் ஒரு துளி ஒளி! 

👁️🔥👁️ ஒளியுள்ள விளக்கு      நம் கண்களே!👁️🔥👁️

நம் கண்மணி விளக்கொளியை தூண்டித் தூண்டி பேரொளியாக்குவதே ஞானசாதனை!

முதலில் ஒரு ஞான சற்குரு தூண்டி காண்பிக்க அதை புரிந்து கொண்டு அவ்வண்ணமே நாமும் தூண்டி, விளக்கொளியை தூண்டி உள்சென்று ஒளியான அவனை, நம் ஆத்மஜோதியை அடையலாம்!

ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா!

நுால்: மந்திர மணி மாலை

பக்கம்: 184



ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

🔥 சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 🔥

விண்ணுக்கும் மண்ணுக்குமாக பெருஞ்ஜோாதியாக துலங்கினான் இறைவன் அடிமுடி காணாமல் விஷ்ணுவும் பிரம்மாவும் சோர்ந்தனராம் ! அக்னி மலையாக இறைவன் திருவண்ணாமலையிலே காட்சிதருகிறார் ! அகங்காரங் கொண்ட தேவர்கள் முன்னும் ஒரு பெருஞ்ஜோதி மலை தோன்றிற்றாம் ! அம்பாள் தான் அங்கனம் பேரொளியாக தோன்றினாள் என்கிறது கேனோபநிஷத்து ! 


சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறியிலிருந்து தோன்றினவன் தானே சண்முகக் கடவுள் முருகப்பெருமான் ! 

🔥சிவனும் பொன்னார் மேனியன் ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 

🔥சக்தியும் மாதுளம் பூ நிறத்தாள் ஒளிவிடும் தங்கஜோதியானவள் ! 

🔥முருகனும் சிவஜோதியில் பிறந்த ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 


" ஜோதியே சுடரே சூழொளி விளக்கே " என்றார் மணிவாசகர் ! 

         நம்மிலே நம் உயிராக தூண்டா விளக்காக, அணையா விளக்காக மணி விளக்காகவே துலங்குகிறார். இறைவன்! சிவனை சூரிய ஜோதியாக கூறும் அடியார்கள், விஷ்ணுவை சந்திர ஜோதியாக கூறுகிறார்கள்!


🔘" மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் " என்று திருமங்கையாழ்வார் பாடியருள்கிறார். 

       திங்கள் தானாய் - சந்திர ஜோதியாய் என்று பொருள் ! அர்த்த நாரீஸ்வரராக பார்த்தால், வலது சிவம் இடது சக்தி ! சங்கர நயினாராக பார்த்தால் வலது சிவம் இடது விஷ்ணு ! சிவம் பாதி சக்தி பாதி போல சிவம் பாதி விஷ்ணு பாதியே ! இதுவும் அனுபவ ஞானத்தால் உணரலாம் ! சிவன் ஆண் அம்சம் விஷ்ணு பெண் அம்சம் ! மோகினி அவதாரம் எடுத்தாரல்லவா ? திருநெல்வேலி அருகே சங்கரன் கோவில் எனும் ஊரிலே அர்த்த நாரீஸ்வரர் போல சிவசக்தி போல ஒருபாதி சிவனும் மறுபாதி விஷ்ணுவுமாக காட்சி தருகிறார்கள் ! 🔘


சைவம் தான் பெரிது வைஷ்ணவம் தான் பெரிது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே இறைவன் இக்கோலம் கொண்டார் போலும் !! 

" அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு " இது தான் ஞானம் ! 

எம்மதமே பெரிது சிறந்தது எம்மார்க்கமே பெரிது சிறந்தது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே வந்தார் வடலூர் வள்ளலார் ! 

🙏🙏🙏 " எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்பதமே " சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம் ! என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே என்று வள்ளல் பெருமான் உலகுக்கே வழிகாட்டுகிறார் ! வள்ளலார் சொல்வது ஏதோ ஒரு புதிய மார்க்கமல்ல !? யுகம் யுகமாக நம் நாட்டிலே நிலவி வரும் சநாதன தர்மமே ! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே ! சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருக்கூட்ட மரபினில் 19-ம் நூற்றாண்டிலே வந்தவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ! சன்மார்க்கம் என்றால் இது ஏதோ புதுவழி என்று எண்ணி விடாதீர் ! ஆதி காலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய வழியே இது ! 🙏🙏🙏

👁️🔥👁️   நமது உடலில், இருதயத்தில் கட்டைவிரல் அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக இறைவன் துலங்குகிறான் என்கிறது கடோபநிஷத்து ! இரு உதயமான சூரிய சந்திரனான இருகண்களில், நமது கண்தான் நம் கட்டைவிரல் அளவிலானது ! புகையாத ஒளிரும் ஒளியாக, கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியாக துலங்குகிறான் இறைவன் ! உணருங்கள் ! 👁️🔥👁️


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு
சிவசெல்வராஜ் அய்யா


வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி !!
அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் 
ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி !!
www.vallalyaar.com

Popular Posts