புதன், 30 ஆகஸ்ட், 2023

🔥 பிறவி ? 🔥 நூல் : சநாதனதர்மம்



நூல் : சநாதனதர்மம் 1

🔥 பிறவி ? 🔥

மனிதனாக பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு.
மனிதனாக பிறந்த நாம்தானே மற்றெல்லா உயிர்களையும் அடக்கி ஆள்கிறோம்.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் எங்கிருந்து பிறந்தோம் ?
தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தது தெரியுமா நமக்கு ?

பிறந்து வளர வளரத்தானே ஒவ்வொன்றாக அறிகிறோம்.
தாய் தந்தை சுற்றம் உலகம் இப்படி ஒவ்வொன்றாக அறிந்து வளருகிறோம்.
அறிவிக்கப்படுகிறது. தெரிவிக்கபடுகிறது. சூழ்நிலையாலும் மாறுபடுகிறது.
அறிவிப்பவர் அறிவுக்கு தகுந்தபடி ! புகட்டப்படுகிறது. இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது ?
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகிறது !
உருவாகும் கரு எல்லாம் உருப்பெறுவது இல்லை !

கல்யாணமாகி குழந்தையில்லை என ஏங்குவோர் கோடி கோடியாக உள்ளனரே !
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிண்ட உற்பத்தி மட்டும் தான் !
உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை உருவாக்கியவன் யார் ?
உடல் இயங்க அதற்கு உயிர் அவசியமல்லவா ? உயிரை கொடுத்தது யார் ?
மனிதனால் உயிரை கொடுக்க முடியுமா ? உயிர் என்றால் என்ன ?
கருவிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு உயிர் இருந்தால் தானே நாம் மகிழ்வோம்.

பிறக்கின்ற குழந்தை அழுதால் நாம் மகிழ்வோம் !
பிறக்கின்ற குழந்தை அழவில்லையெனில் நாம் அழுவோம் !
கருவிலே உருவாகும் பிண்ட உற்பத்தி, அதன்பின் உயிர் சேர்தல் எப்படி நடக்கின்றது ? யாரால் ?
உருவானால் !? பத்திரமாக வளர்க்கத்தான் நம்மால் முடியுமே தவிர உருவாக்க முடியாது !?
நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி இதையெல்லாம் நடத்துகிறதல்லவா ?
அந்த சக்தி எது ? எதன் அடிப்படையில் நடக்கின்றது ?
இதற்கெல்லாம் விடை, உலகில் ஞானபூமியாக விளங்கும்
இந்திய நாட்டின் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இந்த உலகம் எப்போது தோன்றியதோ ! மனிதன் எப்போது தோன்றினானோ ?!
கணக்கிட முடியாத காலத்திற்கும் முன்னது இங்கே இருந்த ஞானிகள் வாழ்க்கை !
உபதேசம் ! நூல்கள் !

உலகமனைத்திற்கும்,,,
ஒரே நெறி ! ஒரே வாழ்க்கைமுறை ! ஒரே கடவுள் ! ஒரே பண்பாடு !

அதுவே "சநாதனதர்மம் !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

தெய்வத்தால் ஆகாது ??


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
 
தெய்வத்தால் ஆகாது - எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். அப்போ திருவள்ளுவர் தெய்வத்தால் ஆகாது என்று சொல்லுகிறார். நம்ம கிட்ட இருக்கு(தெய்வம்) உள்ளே இருக்குது அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன்? வினையில் act பண்ணி கொண்டு இருக்கிறோம். உள் இருக்கும் தெய்வத்தால் ஆகாமல் வினை ஆட்டுவிக்கின்றது. அப்போ இந்த வினையை தீர்த்தால்
முயற்சி செய்து தவம் செய்து தீர்த்தால் .. தெய்வத்தால் எல்லாம் ஆகும். இதுதான் திருக்குறளுக்கு விளக்கம். யாராவது சொல்லி இருக்காங்களா? இதுதான் ஞானம். உண்மை பொருள் மெய்ப்பொருளை சிந்திக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மெய்ப்பொருள் என்றால் கண் ஒளி தான். இறைவன் துலங்க கூடிய இடம் தான் கண்ணை தான் மெய்ப்பொருள் என்பது..


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
www.tamil.vallalyaar.com

Popular Posts