சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜனவரி, 2026

அகஸ்திய மகரிஷி திருவடி கண்டேன் என்கிறார்


"பார்வையினாற் கயிறு கொண்டு கட்டு கட்டு"
செழியான சின்மயத்தின் சொரூபந்தன்னைத் தெரிசித்தேன் நாதலிங்க மூர்த்தி பாதம்
விழியான பொருள் தானே மனதிற் கொண்டு
கற்பூர தீபவொளி காட்சி கண்டேன்
அரகரா உச்சி முடி அகரந்தானே "


நம் தவம் மேலோங்க, பார்வையால் பார்த்து நீயும் படுமுடுச்சு போடடா " என்கிறார் சித்தர் பெருமக்கள் !! நீ பார்த்தால் வெளியே உன் முன்னால் உள்ளது தெரியும் ? பார்வையாகிய கயிற்றால் கட்டினால் உன்னால் வெளியே பார்க்க முடியாதே ! 

அப்போது பார்வை உள்ளே தான் போயாக வேண்டும் ! அகநோக்கம் வேண்டும் ! எப்படி பார்வையை வெளியே கட்டினால் அது உள்ளே தான் போகும் ! 
எவ்வளவு சூட்சமமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் ! 

செழுமையான தவத்தால் நம் கண்கள் சிவந்து செங்கண்ணாகும் அது ஒளியேறி செழியான என்றது ! சின்மயம் - கண் ! தவம் செய்து நான் முதலில் தரிசித்தது என் கண்ணைத்தான் ! சின்மயம் ! கண்ணைத்தான் சின்மயம் - பரிபூரணம் மெய்ப்பொருள் திருவடி என பலவாக கூறினர் பரிபாஷையாகவே ! தெரிசித்தது எதை நாதலிங்க மூர்த்தி பாதம்! நாதமயமான லிங்கமூர்த்தி - ஒளிவடிவம் பாதம் திருவடி - கண்! 

அதாவது தவம் செய்து முதலில் பார்ப்பது நம் கண்ணையே ! எப்படி தவம் செய்வது ? "விழியான பொருள் தானே மனதிற்கொண்டு "நம் விழியிலே - அதுதான் நம் மெய்யிலே உள்ள பொருள் அதிலே மனதை கொண்டு ! விழியிலே மனதை வைத்தால் காணலாம் விழிகளையே ! 

முடிவில் கற்பூர ஜோதியும் காணலாம் ! முடிவில் எல்லாம்வல்ல பரம்பொருளை உச்சியிலே 'அ ' காரத்திலே தான் கண்டேன் ! அ வாகிய கண்ணாலே தான் எட்டாலே தான் கண்டேன் என்கிறார் அகஸ்திய மகரிஷி !




நூள் - ஞானம் பெற விழி
பக்கம் 123
குருவே சரணம்

திங்கள், 6 செப்டம்பர், 2021

கர்மத்தையும் தீர்! அதை அலசாதே! பார்த்து ரசிக்காதே!

தவம் செய் - கர்மத்தை அழி பறக்கும் யானை தெரிந்தது என்று சொன்னதற்கு... 

உள்ளே இருப்பது தான் வரும். கற்பனை எல்லாம் கிடையாது. பல யுகங்கள்(பல லட்ச வருஷம்) உள்ளது. அதை பற்றி எல்லா தகவலும் நம்முள் உள்ளது. 

 சித்தர்கள் ஞானிகள் சொல்வது எல்லாம், நடந்தது பற்றி ஒன்றும் கவலை படவேண்டாம்.மறந்து விடு. இதை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். அதை ஆராய்ச்சி பண்ணினால், அதை பார்க்க ரசிக்க எத்தனையோ வருஷம் வேண்டும். 

 'தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர் பின்னை வினையை பிடித்து பிசைவர் சென்னியில் வைத்த இறைவன் அருளாலே' - வினைகளை எப்படி கை ஆழனும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது ஒன்றுமே நமக்கு வேண்டாம். அதை(வினை) இல்லாமல் பண்ண வேண்டும். அதை பற்றி பேசி நினைத்து இந்த ஜென்மமே பாழ் ஆகிவிடும். இப்ப நீ தவம் செய். அவ்வளவு கர்மத்தையும் தீர். அதை அலசாதே, பார்த்து ரசிக்காதே. 

கால விரயம் தான். அதை எல்லாம் நிறுத்து, புராணத்தில் எவ்வளவோ கதை உள்ளது, ராமர் காலத்தில் மனிதனாக நாயாக , சோல்ச்சர் ஆக இருந்து இருப்போம். இப்போ அதை பேசி என்ன பிரயோஜனம்? நீ யார் என்று பார். உன் உயிர் எங்கு உள்ளது என்று பார்... அதுவே உன் வாழ்வின் முதல் வேலை.

 -ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா! 💥🔥💥
www.vallalyaar.com

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

முதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்!!




நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றித்தான் யோக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். "மூல முதல் ஆறுதலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேலாறுதலம் காணு காணு" என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.

ஞான அனுபவ நிலைகள் நம் உடலில் தலைபகுதி மட்டுமே! கழுத்துக்கு கீழேயிருப்பது எல்லாம் கர்மாவை செய்பவனயாகும். தலைப்பகுதியிலுள்ள பன்சேந்திரியங்களும் கர்மேந்திரியங்கள்தான். 

தவ நிலையில் கர்மேந்திரியங்களும் மெய், வாய், கண் மூக்கு, செவி எல்லாம் ஞானேந்திரியமாக மாறிவிடுகிறது.

ஐம்புலன்களும் புறத்தே(வெளியே) செயல் படுகின்றது, ஞான சாதகன் தவம் செய்வது புறத்தே அலைவதை நிறுத்தி அகத்தே(உள்ளே) திருப்புவதுதான். இவை அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மனம் செம்மையானால் வாயால் மந்திரம் சொல்ல தேவை இல்லை, மூக்கால் காற்று இழுக்க தேவை இல்லை. காதில் தோத்திரம் கேட்க தேவை இல்லை. கண்மூடி வாசியோகம் செய்ய தேவை இல்லை. உடலால் எந்த பணியும் செய்ய தேவை இல்லை. ஐம் புலன்களை வைத்து  புறத்தே செய்யும் எச்செயலும் ஞான நிலையல்ல!

ஐம் புலன்களும் ஐம் பூதங்களும் ஒன்று சேரும் இடத்தில் இவற்றை ஆட்டிப்படைக்கும் இவற்றை ஆட்டி படைக்கும் மனதை இருத்தினால் போதும். ""பொறிவாயில் ஐந்துவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நெறி நின்றார் நீடு வாழ்வார்" ஐம் பொறிகளின் வாயில் - வாசலில் - கண்ணில் ம்புலன்களை - ஐம்பூதங்களை சுட்டு எரித்தவன் அவித்தவன் - உஷ்னத்தால் நீற்றுபவன் , சத்தியமாக நீடு வாழ்வான் - சாகமாட்டான்.

நம் கண்களில் உள்ள ஒளியை பெருக்க பெருக்க ஒளி ஓங்கி எல்லா மலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எரிக்கப்பட்டு விடும். புற செயல்கள் அற்று போக போக உள் முகமாக  ஒளி அலைகள் பாயும். உள்ளே அக்னிகலையை அடையும். இது தான் சாதனை.

"சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவேயாகும்" என சித்தர் கூறுகிறார். நம் மும்மலம்களும் சுட்டு எரிக்கப்படும் சுடுகாடு நம் கண்கள்.

அங்கே தானே நெருப்பு உள்ளது. உள்ளே போனால் பெருவெளி- வெட்ட வெளிதான்.  இதைதான் இன்னொரு சித்தர் ஊசி முனை காடு என்றார்.  ஊசி முனைக்குள் சென்றால் பெரும்காடுதான். காட்டில் தானே காட்டாறு சாரைப்பாம்பு காட்டானை எல்லாம் இருக்கும்!? இவை அனைத்தும் பரிபாசையாக சொல்லப்பட்டதே. ஆறுகுள்ளே சென்றால் நெருப்பாருதான்!
மூலாதாரம் கீழே என்பார் அறிவிலிகள்.

மூல முதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆதாரத்தையும் பாரு பாரு! ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள் . கண்ணே எல்லா ஆதாரத்திற்கும் மூலம். எல்லாவற்றுக்கும் மூலமான கண்ணே அதில் உள்ள ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியே நம் ஜீவ ஒளி!


விநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று அழகாக பாடி உள்ளார் ஔவையார்! மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும்.  எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள்! கண்ணே இறைவனின் கால் திருவடி!


வினைகளுக்கு காரணம் கண்ணால் பார்ப்பதே! வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது! அது என்ன? அது வெள்ளை விழி, கருவிழி  அடுத்து கண்மணி. கண்மணியின் மத்தியில் ஊசி முனை துவாரத்தை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு. இந்த ஜவ்வு தான் நாம் பார்க்கும் அனைத்துக்கும் காரணம். அது தான் நம் முன்வினை இருக்குமிடம். அதற்க்குத்தக்கபடிதான் இப்போது மனம் செயல்பட்டு மேலும் புதுப் புது  வினை உண்டாக்கும். இப்படியே போனால் இதற்க்கு முடிவு?

வள்ளல் பெருமான் உரைத்த ஞான சரியை வழி தான் தியானம். கண்மணியை நினைந்து நினைந்து கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இருக்கும் போது கனல் எழும்பும். மனம் அங்கே நிற்பதால் புற செயல்கள் நடைபெறாது புது வினை உருவாகாது. மனம் கண்மணியில் நிற்க நிற்க கனல் ஓங்கி வளரும்.ஞான கனல் பெருகினால் முன் உள்ள ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து விடும். ஊசி முனை வாசல் அடைத்து கொண்டிதிருந்த ஜவ்வு கிழிந்தவுடன் கண் திறக்கும் என்று ஞானிகள் கூறி இருக்கின்றனர்.

இதுவே சாதனை! இது தான் நாம் செய்ய வேண்டிய தவம்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.





வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

சாயுச்சிய நிலை!!

சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதி தா னில்லை தானவ னாகிற் "



நம்முடைய லட்சியம் இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்! அது  எவ்வாறு எனில், 


இறைவன் பேரொளி 

நாம் ஆத்மாக்கள் சிற்றொளி! 

சிற்றொளியாகிய நம் ஆத்மஜோதியை  தவம் செய்து கண்மணி ஒளியை
பெருக்கி அக்னி கலையான ஆத்மஜோதியுடன்  இணைத்தால் பெரும் ஜோதியாகும்! 


இவ்வாறு தொடர்ந்து தவம் மேற்கொண்டால் ஒளி - ஆத்ம ஒளி மேலும் மேலும் பெருகி தலை உள் நடு ஜோதி உடல் எங்கும் வியாபித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி பல்கி பெருகி ஒளியுடலாகும்! அப்போது தான் நாமும் பேரோளியாவோம்! அப்படி பேரொளியாகியே நாம் பேரொளியான இறைவனுடன் இரண்டற கலக்க முடியும்! நான் அவனாவது அச்சமயமே!
 


சமாதி கூடி இருந்தால் போதாது! அதற்க்கு மேல் நிலை இந்த சாயுச்சிய நிலை!  ஒளியுடலாகும் நிலை!

நம் நாட்டில் அங்ஙனம் இறைவனை அடையும் முயற்சியில் தோல்வியுற்று சமாதி பெற்றவர்களும் கோடானகோடி பேர்கள்!! நல்ல சமாதி அனுபவம் பெற்றவர்கள் அவர்கள்! அவர்களெல்லாம் மீண்டும் பிறக்க வேண்டும்! இறைவனை இரண்டற கலப்பது வரை பிறவி தொடரும்! 


ஞானிக்கு உண்டு பிராரத்துவம்!! இறைவன் வகுத்த சட்டத்தில் ஓட்டை கிடையாது! இங்கே யாராயினும் சரி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் பட்டம்! அப்பழுக்கில்லாத, தூய்மையான பரிசுத்தமான ஆன்மாவே அன்பால் மட்டுமே ஆண்டவனை அடைய முடியும்?!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க
ஜோதி ஞான சபை - கன்னியாகுமரி

செவ்வாய், 29 நவம்பர், 2011

சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்




“யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
- திருவாசகம்


யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?

என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!

என் அன்பும் பொய் – நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி?

நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நஸ்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்!

மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.

“அழுதால் உன்னை பெறலாமே” என்றார் மாணிக்கவாச்கர்.

“ நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”




என்றார் வள்ளலார் .

“கண்ணீரோடு விதைக்கிறவன் கம்பீரத்தோடு அறுப்பான்”
என்றார் இயேசு பெருமான்!



ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர்.

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!

இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்க்காக அழத்தான் சொன்னார்கள்!

இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்!

எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!!

அந்த ஞான்குழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்!

அழுது, ஒளிபெருகி, அமுது பருகி, ஒலி கேட்டு, ஒளி கண்டு பேரின்பம் பெறலாம்! நம்மை படைத்தவனை பார்க்கலாம்! அவணடி சேரலாம்! ஞானம் பெற, இறையருள் பெற எப்படி அழ வேண்டும் என்பதை தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
———————————————————————————————————————————
ஏன் அழ வேண்டும் எதற்க்கு அழ வேண்டும் என்றால் முதலில் நமக்கு சித்தர்கள் இறைவன் திருவடி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

சித்தர்கள் திருவடி – Click Here





----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.


-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

புதன், 19 அக்டோபர், 2011

திருவடி தீட்சை(Self realization)

திருவடி என்பது எது?
உயிர் எங்கே உள்ளது?
உயிரை எப்படி பார்ப்பது?
அதை பார்க்க தடை என்ன?
தடையை எப்படி தீர்ப்பது?
சத்தியஞான சபை என்பது என்ன?
எழு திரைகளை அகற்றுவது எப்படி?
தவம் எப்படி செய்வது? 
‘சும்மா இரு’ என்றால் என்ன ?


ஞானம் என்பது பரிபூரண அறிவு.
ஏன் நமக்கு 5% வேலை செய்கிறது? 
ஏன் 100% அறிவு வேலை செய்ய வில்லை?

யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது?  நான் யார்?  உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!.  இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம்  வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? 
இனி பிறவாமல் இருக்க என்ன வழி?
விதி என்பது என்ன? கர்ம வினை எங்கு உள்ளது? 
விதியை மதியால் எப்படி வெல்வது?
இதற்க்கு முதல்படியான தன்னை அறிவது எப்படி? 
அகவலில் வள்ளல் பெருமான் சொன்ன உயிர் ஒளி காணுவது எப்படி?
உரை மனம் கடந்து இறைவனை காணும் வழி என்ன?
ஞானம்  பெற எப்படி சும்மா இருப்பது?





இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.

குருவிடம் உங்களை முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள்.

கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!

மேலும் விவரங்களுக்கு இந்த பக்கத்தில் இருக்கும் தொலைபேசிக்கு அழைப்பு செய்யவும்

தவம் செய்யுங்கள். குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை  இல்லாதவர்கள்  தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.

குருவிடம் தொடர்பு கொள்ள கீழே உள்ள பச்சை படத்தை பாருங்கள்.

இந்த பதிவில் 3  வீடியோ, 2  புத்தகங்கள் உள்ளன.வீடியோவில்  ஞான  சற்குரு சிவசெல்வராஜ் அய்யா திருவடி உபதேசம் உள்ளது.

1  சாகாக்கல்வி.
2  வள்ளல் யார்.


நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் - 
அம்மை திருப்பதிகம்

மேலும் தகவல் தெரிந்து கொள்ள  இங்கே சொடுக்கவும்

பகுதி 1 (First 2 mins audio may not be clear... sorry for that)
முதல் இரண்டு நிமிடம் ஆடியோ தெளிவாக பதிவு செய்ய வில்லை. 



பகுதி 2





பகுதி 3




Online Books



Saka Kalai Updated

Vallalyaar Updated




For more details and contact guru - click here





-----------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரை விட மேலான ஒழுக்கத்தை கடைபிடி

மனிதனின் அறியாமை பிறப்பு -இறப்பு எனும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல்கிறான்.
இறைவனின் திருவிளையாடல் சம்சார சாகரத்தில் இருந்து மனிதனை கரை ஏற்றுகின்றது.

"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

இப்படி தூங்குவதும் விழிப்பதுமாக இறப்பதும் மீண்டும் பிறப்பதுமாக இருந்தால் இதற்க்கு
என்னதான் முடிவு?

சித்தர் பெருமக்கள் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்கின்றனர். தூங்குவது
மரணதிற்கு ஒப்பானது, 


மனிதா தூங்காதே! 
விழி! 
எழு! 
உழை! 
ஓயாது உழைப்பயாக! 
இலட்சியத்தை அடையும் வரை உழை! 
நமது லட்சியம் சாகாமல் இருப்பது.!
உயிர் உடம்பில் வந்து சேர்வதே பிறப்பு.

பிறந்து வாழும் மனிதனின் உடலில் உயிர் நிலை பெற செய்வதே ஞானம்.! 
மரணம் ஏற்படாமல் உடலை விட்டு உயிர் பிரியாமல் எப்போதும் இந்த உடலிலே
இந்த உயிரை நிரந்தரமாக தங்க வைப்பதே ! 


மரணம் இல்லாத பெருவாழ்வு! சாவாத நிலை ! 
செத்தால் தானே உயிர் மீண்டும் பிறக்கும். 
சாவை தவிர்த்தல் இனி பிறப்பை தவிர்க்கலாமே

சாவு என் வருகிறது? அது தெரிந்தால் தடுக்கலாமே! சாவு கட்டாயம் அல்ல. 

வாழ தெரியவில்லைசாகிறான். எப்படி வாழ்வது? 
நமது ஞானிகள் கலையில் எழுந்து இரவு தூங்கும் வரை நாம்
செய்ய வேண்டிய நித்திய கரும விதிகளை சொல்லி வழி காட்டி உள்ளார்கள்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் "

ஒரு மனிதனனுக்கு மேன்மை தருவது நல் ஒழுக்கமே! நாம் நாம் உயிரை விடவும் மேலான
ஒழுக்கத்தை கருதி கடை பிடிக்க வேண்டும். திருவள்ளுவர் கூறுவது யாதெனின்
ஒருவன் உயிரை விட மேலான ஒழுக்கத்தை கடைபிடி
ப்பானாகில் அந்த உயிரை -இறைவனை
அறியும் நற்பேறு பெறுவான். எல்லாவற்றிலும் ஒழுக்கமே சிறந்தது.

இந்த ஒழுக்கம் உயிர் ஒழுக்கம் உடல் ஒழுக்கம் என இருவகை படும். உடலும் உயிரும்
சம்மந்த பட்டதல்லவா? உடலும் உயிரும் சம்மந்த பட்டே இருக்க ஒழுக்கம் அவசியமாகிறது,
உயிர் ஒழுக்கத்தை வள்ளல்பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என
விரிவாக தெளிவாக உபதேசித்து உள்ளார்.


உடல் ஒழுக்கம் அதில் கூறப்பட்டுவிட்டது. நல் ஒழுக்கம் எது என்பதை விட தீய ஒழுக்கம்
எல்லாவற்றையும் தவிர் என்றால் சுலபம் அல்லவா? 


உடலை கெடுக்கும் உடலில் இருந்து உயிரை வெளியேற்ற துணை புரியும் பஞ்சமா பாதகங்கள் செய்யாதே! 

பொய், 
கொலை,
களவு, 
கள், 
காமம் 

என்ற இந்த ஐந்தும் நாம் வாழ்வில் வராது கவனமாக மிக மிக 
கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.


அறிவை மயக்குபவை, கெடுப்பவை உடலை கெடுப்பவை. மனதை மயக்குவபை எதுவாயினும்
தொடதே. நெருங்காதே! மனதாலும் என்னாதே. இவை கொண்ட தீயவர்களோடு சேராதே.
"துஷ்டனை கண்டால் தூர விலகு"

உணவு உடலுக்கு இன்றியமையாதது. உயிர் வாழ உணவு காற்று நீர் அவசியமல்லவா?
நீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். நாம் இருக்கும் வீட்டை சுற்றி அந்த பகுதிகளில்
நிறைய மரம் நட்டு தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படுத்துங்கள். உணவு சுத்த சைவ
உணவையே உட்கொள்ள வேண்டும்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

எவ்வுயிரையும் கொள்ளாதவன்! எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது இருப்பவன்
புலால் உணவு உண்ணாதவன் தான் மனிதன், அவனை இவ்வுலக உயிர்கள் கைகூப்பி
தொழும். எல்லா உயிர்களும் கும்பிட வேண்டாம் குறை சொல்லும்படி நாம் நடக்க வேண்டாமே.

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தம சீலரே உண்மையான நல்ல ஆன்மீக வாதி.
ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவராவர். உயிர் இறைவனல்லவா? எல்லா உயிரும் இறைவன்
தானே! அப்படியானல் எவ்வுயிரும் வணக்கத்திற்கு உரியது தானே!
இந்த உண்மையை உணர்ந்தவன் ஞானி! சித்தன்!


Popular Posts