மனிதன் என்பவன் யார்?
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞாயிறு, 24 நவம்பர், 2024
மனிதன் என்பவன் யார்?
திங்கள், 19 அக்டோபர், 2020
உபசாந்தம்
எட்டாம் தந்திரம்
"சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம்"
திருமந்திரம் பாடல் - 2376
சீவன் சிவனாக - பரமாக பற்று அறக் கூடுவது உபசாந்தபதமதிலே! உப என்றால் இரண்டு. சாந்தம் - அமைதி - மோனம் கண். நம் இரு கண்களே உபசாந்தம் எனப்படும்.
நம் சீவனை சிவமாக்க இரு கண்ணைப் பிடி முதலில்! உலகப் பற்றறும்! கண்ணைப் பற்றியிருக்கும் மும்மலப்பற்றறும்! உள்புகும் ஒளி பெருகி சீவன் சிவமாகும்! அறியலாம்! உணரலாம்
படியுங்கள்! பண்படுங்கள்!
பரம்பொருள் அருள் கிட்டும்!
🔥அருளியவர்🔥:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ்
🔥அய்யா🔥
www.vallalyaar.com
திங்கள், 16 ஏப்ரல், 2012
பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யம்
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!
எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?
"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!
கண் ஒளி தான் அவன்! கண்ணன் வாயை திறந்தான் எல்லா உலகமும் தெரிந்தது என்று தானே பாகவதம் கூறுகிறது.
நம் கண் அடைக்கப்பட்டு உள்ளதல்லவா? அந்த ஊசி முனை திறப்பதை தான் கண்ணன் வாய் திறந்தால் அந்த ராஜ்ஜியம் பூராவும் தெரியும் என்றதாகும்.
இந்த எட்டான இரண்டு கண்ணிலும் வலது கண் 'அ' என்னும்
தமிழில் முதல் எழுத்து என்றும் தமிழ் எண்ணில் எட்டை(8) குறிக்கும்
என்று இலக்கணம் கூறும்.
'உ' என்பது தமிழ் எண்ணில் இரண்டை குறிப்பதாகும். இது இடது கண்ணை
குறிப்பதாகும். இதுதான் பரிபாஷை!
"எண்ணும் எழுத்தும் கண் என தகும்" - இது ஔவையார் வாக்கு. இதை திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இப்படி தான்!
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
எண்ணாகவும் உள்ளது எழுத்தாகவும் உள்ளது - கண்.
எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள ஒரே எழுத்து அ இது தான், இரண்டு கண் என்று கூறும் வள்ளுவர் வாழும் உயிருக்குத்தான் இது என்றார்.
அதாவது உயிர் வாழ (இறக்காமல் இருக்க) எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள அ, உ என்ற இரண்டும் நம் கண்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
இதை சொல்லி தருபவர் தான் குரு!
உபதேசித்து உணர்த்துபவர் தான் சற்குரு!
எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி என திருமூலர் கூறுகிறார்!
இன்றைக்கும் ஊர் பக்கங்களில் சொல்லுவார்கள் கேட்டு இருக்கரீர்களா?
"அ. ன.உ.ன தெரியாத பயலோடு என்ன பேச்சு" என்பார்களல்லவா? நம் முன்னோர்கள் எட்டாகிய அ இரண்டாகிய உ தெரியாத அறிவிலிகள் அவர்களோடு பேசாதீர் என்று கூறியிருக்கிறார்கள் ! எவ்வளவு பெரிய ஞானத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள்
பாருங்கள்!?
நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகதான் பலப்பல விதத்திலும் பரிபாசையாக கூறியருளினர் எல்லா ஞானிகளும்.
நம் உணர்வுக்கு எட்டவேண்டும் என்பதற்காக குரு உபதேசம் பெறுக தீட்சை பெறுக என வலியுறுத்தினர் ஞானிகள்!
இறைவன் எங்கோ எட்டாத தூரத்தில் இல்லை! நமக்கு எட்டும் தூரத்தில் எட்டாக இரண்டாக கண்களாக உடலில் இருக்கிறான். அதை எட்டிப்பிடி உணர்வாலே! ? என்று தான் கூறியருளினார்கள். ஊர் புறங்களில் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை எங்காவது போய் எதாவது வாங்கி வர செல்ல மகனே "இரண்டு எட்டு போயிட்டு வா" என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?
"நான் இரண்டு எட்டு போயிட்டு வரேன்" என சொல்லவும் கேள்வி பட்டு இருகரீர்களா?
எப்படியாவது எட்டின் மகத்துவத்தை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக
நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இதை மறைமுகமாக பரிபாசையாக
பலவேறு விதமாக கூறியருளினார்கள் ஞான வள்ளல்கள்!
ஞான நூல்கள் - PDF
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
