வெள்ளி, 2 செப்டம்பர், 2022

🔥 வினையற்றால் சாகாநிலை! 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 23

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்"


மனந்தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழ்வினைகளையும் வென்றுவிட முடியும் என திருவள்ளுவர் தெளிவாக கூறுகிறார் !

சதா சர்வகாலமும் தவம் செய்வோமானால் கண்மணி ஒளியில் கருத்தை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருந்தோமானால் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் சுட்டு எரிக்கப்பட்டு அழிந்து போகும் !

வினையற்றால் சாகாநிலை !

"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை !"

ஒளவையார் கூறும் ஆறுதல் வார்த்தை இது ! இந்த மாதிரி ஞானதவம் செய்பவருக்கு அவமாகிய வினைதுன்பம் ஒருநாளும் வராது ! இதுவே சத்தியம் !

"முயற்சி திருவினையாக்கும்"

ஞான சற்குருமூலம் உபதேசம் தீட்சை பெற்று, தொடர்ந்து சதாகாலமும் தவம் மேற்கொண்டோமானால், நமது வினைகள் எல்லாம் இல்லாமலாவதுடன் நம்மை "திரு"வாகிய இறைவனாகவே ஆக்கிவிடும் !

உண்மை தானே !

வினை இருந்தால் தானே நான் ! வினையற்றால் அவன்தானே !

கடவுள் தானே !

நான்தான் அது !

“தத்துவமஸி” அதுதான் நான் !

இது தானே நமக்கு வேண்டும் !

நான் அதுவானால் மரணம் ஏது ? பிறப்பு ஏது ? துன்பம் ஏது ?

பேரின்பம் ! எப்போதும் பேரின்பமே !

ஒளியை மறைத்த வினையகன்றால் ஒளி பிரகாசிக்குமல்லவா ?

ஒளி மேலும் மேலும் பெருக பெருக ஒளியுடல் பெறலாம் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts