Thursday, March 22, 2012

மரணம் - ஆகாமிய கர்மம் என்ன தொடர்பு?மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று
நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு
இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை
கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த
அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு
வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல்
தடுக்க பாடுபட வேண்டும்.

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!
சனாதன  தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
1  வினை கழிந்து தன்னை உணர!!


யார் குரு?


3 தானம் தவம் (ஞான தானம்)


Sunday, March 18, 2012

சன்மார்க்கம் நடத்துவது யார்?


"உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து" - திருவருட் பிரகாச வள்ளலார்


இறைவன் ஒளிவடிவானவர்! அருள் பெருஞ்சோதி ! பிறந்து
வாழ்ந்து ஞான தவம் செய்து அந்த எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகவே - ஒளியாகவே
ஆனவர் நமது திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!!

1865  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வடலூரில் ஆரம்பித்த வள்ளல்
பெருமான் வேறு யாரிடமும்  அதை ஒப்படைக்கவில்லை ! நானே சன்மார்க்கம் என் பறை சாற்றுகிறார்!

அறிந்த - உணர்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாடுடைய திவ்ய ஆத்மா  சொரூபிகளுக்கு கூடவே இருந்து, தோன்றும் துணையாக துலங்கி வழி நடத்துகிறார்! கண்ணுள்ளவர் நோக்கக் கடவர்! நம் பெருமான் அருட்பெருன்ஜோதியின் அருளே எல்லாம்!
 

-புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை குருபூஜையாக
கொண்டாடாமல் விட்டீரே  ஏன்?

Friday, March 9, 2012

திருவடி மெய்ப்பொருள் எது?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம்
சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - திருஅருட்பா

ஒன்றாகிய இறைவனை இரு கண்களாகிய ஆறு

வட்டங்கள் கடந்து ஏழு திரைகள் விலக்கி

ஆன்மஜோதியை  நம் உள் காண வாரீர்
(ஞான சற்குரு சிவசெல்வராஜ்)

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -

அம்மை திருப்பதிகம்(வள்ளலார் )

என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் 

- மெய்யருள்வியப்பு (வள்ளலார் )

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.

(பட்டினத்தார்)

கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - (சிவவாக்கியர்)

எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!(பாரதியார்)

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் 

(கந்த குரு கவசம்)

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற 

தெய்வம் தூண்டாத மணி விளக்காய் 
துலங்குகின்ற தெய்வம்
(வள்ளலார் )

Sunday, March 4, 2012

நடு கண்ணை திறப்பது எப்படி ?


சிறுபிள்ளையாக இருக்கும் போது அப்பா அம்மா தான் பார்த்து கொண்டனர். பேச தெரியாது கேட்க தெரியாது. அப்பா அம்மா பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அதைவிட 1000  மடங்கு மேல் குரு பார்த்து கொள்வார். அதைவிட 1000  மடங்கு மேல் இறைவன் பார்த்து கொள்வார். இறைவன் அருள் புரிவார்.


குரு அருள் பெற்று தான் இறைவன் அருள் பெற முடியும்.

குருவின் பாதத்தில் சரண் அடைந்து தவம் செய்யணும். இன்ற நற்றாயினும்  இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில்  அருட்பெருஞ்ஜோதி

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே  - சிவபுராணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளியது
 <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Llvf-lnAOcY" frameborder="0" allowfullscreen></iframe>


அருட்பெருஞ்சோதி அகவல் 

பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
திரமுற வருளிய திருவருட் குருவே .1040

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தொரிந்தசற் குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தொரித்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தொரித்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050

சிவரக சியமெலாந் தொரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தொரித்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
பிறிவற விளங்கும் பொரியசற் குருவே

கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060

செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070

Thursday, March 1, 2012

பெருகி வரும் நோய்களை தீர்க்க?

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !


மிருகங்களும், பறவைகளும் மற்ற உயிர்களும் செய்யும் முறையீடும், விண்ணப்பமும்.

எல்லா உயிர்களுக்கும் பொதுக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை நீதிக்கடவுளே! தேவரீர் பெருங்கருணையினால் விசேட அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைகளை சொல்லி முடியாது.

உணவிற்காக தினசரி கோடிக்கணக்கில் எங்களை பதறப்பதற,துள்ளத்துள்ள, வெட்டி, அறுத்து, நசுக்கி இரக்கமில்லாமல் கொள்ளுகிறார்கள்.

முன் ஜென்மத்தில் ஏற்கனவே நாங்கள் உயிரைக் கொன்று இரக்கமில்லாமல்
 வாழ்ந்ததால் தான் இப்போது மனித உடம்பிலிருந்து விடுபட்டு  துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மனிதர்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கின்ற துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எங்களுக்கு செய்தாலும் அவர்கள் எங்கள் ஆன்ம இனங்கள் என்ற உணர்வு வந்துவிடுகிறது.

எங்களுக்குச் செய்யும் கொடுமையால் அவர்கள் கொடுமை, வறுமை,பிணி,துன்பம், கவலை , பூமி நடுக்கம், பெரும்புயல், யுத்தம், விஷசுரம்,பேரிடி, தீடீர் சாவு, திருட்டு, கொள்ளை, கொலை முதலியவைகளால் துன்பப்பட்டு இறக்கின்றனர். அவர்களுக்கு இரக்க சிந்தனை உண்டு பண்ணி அவர்களையும் எங்களையும் காத்தருள வேண்டும்.

தனக்கோ தன்பிள்ளைக்கோ தன் மனைவிக்கோ சுற்றத்திற்கோ ஆபத்து வரும்போது கவலைப்பட்டு கண்ணீர் விட்டுக்கதறும் மனிதர்கள் எங்களை ஏன் இரக்கமில்லாமல் கொல்லுகிறார்கள்? அவர்களுக்கு நாங்கள் என்ன கெடுதல் செய்தோம்?

இது தான் மனித நீதியா? உங்களைப் படைத்த கடவுள் தானே எங்களையும் படைத்தார்!எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று ஒருமை நடம்புரியும் ஒரே கடவுளே! ஒளியே!

எங்களுக்கு விசேட அறிவு இல்லாததால், எங்களுக்கு தேவரீரை வணங்க முடியவில்லை. நினைக்க  முடியவில்லை. பக்தி செய்ய முடியவில்லை. தொண்டு செய்ய முடியவில்லை.

ஆகவே எங்களையும் மனித உடம்பில் வரவழைத்து  தேவரீர் திருவடியை அடைய அருள் செயல் வேண்டும். மேலும் மனிதர்கள் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு உண்மை அறிவு, உண்மை இரக்கம், உண்மை அன்பு முதலிய நற்குணங்களை அளித்து இவ்வுலகையும் மற்ற உலகங்களையும் அறிவு உலகமாக, அருள் உலகமாக, ஆனந்த உலகமாக மாற்றும்படி மிகவும் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.


குற்றமெல்லாம் குணமாகக் கொள்ளும் குணப்பெருங்குன்றே! எவ்வுயிர்க்கும் தாயே!

எங்கள் சார்பில் எங்களுக்காக மனிதர்களிடம் வாதாடுகின்றவர்களுக்கும் தேவரீரிடத்தில் விண்ணப்பித்துக் கொள்பவருக்கும், கொல்லா விரதத்தை பரப்புகின்றவர்களுக்கும், எக்காலத்தும் எல்லா நன்மைகளும் பெறச்
செய்து மரணமிலாப் பெருவாழ்வில் அவர்களை வாழவைக்க வேண்டுகிறோம்.

மற்றவர்களையும் கொல்லா விரதத்தை எடுக்க செய்து அவர்களையும் மரணத்திலிருந்து விடுவிக்க  வேண்டும். சிற்றறிவால் செய்து
கொள்ளும் இச்சிறு விண்ணப்பத்தை திருச்செவிக்கு ஏற்பித்தருளல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!  வந்தனம்!


இங்ஙனம் தங்கள் அருமைப் பிள்ளைகளாகிய,
மாடு ஆடு கோழி பன்றி மீன் மற்ற உயிர்வகைகள்


ஊன் உணவை விட்டாலன்றி இன்று பெருகி வரும் எந்த
நோயையும் தீர்க்க முடியாது.  இது சத்தியம்! சத்தியம்!

------------------------------------------------------------------------------------------------------------------- 
 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

 

எந்த உயிரையும்,கொல்லாதவனை, உயிரைக் கொன்று கிடைக்கும் மாமிசத்தை உண்ணாதவனை உலகில் உள்ள எல்லா உயிர்களும், மக்களும் கை கூப்பி வணங்குவர்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

 

தன் உடம்பை வளர்ப்பதற்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்பவன்
எப்படி அருள் உடையோனாக இருக்க முடியும்?


சைவ உணவே சன்மார்க்க உணவு!


----------------------------------------------------------------------------------------------------------------
ஞான சற்குரு   - ஆன்மீக செம்மல்
சிவசெல்வராஜ்,
தங்க ஜோதி ஞான சபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
கன்னியாகுமரி

http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts