நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2020

நவராத்திரி - விஜய தசமி

"மங்களமாய் நவராத்திரிப் பூசைக் காக வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி"

- தேவி பூஜாவிதி
வாலை திரிசூலி ஓங்கார நாதமானவள் ஆதலால் ஓங்காரி! ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னியகுமரியிலே வந்தமர்ந்தாளாம்!

மூன்று மூன்று மூன்று வட்டமாக மும்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்! ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழபிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி - நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையை கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா!

ஞானம்! வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - கன்னியகுமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியாகுமரிக்கு! பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்! கன்னி'ய'குமரியிலே! பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே!

எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவள்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணி!!

படியுங்கள்! பண்படுங்கள்!
பரம்பொருள் அருள் கிட்டும்!
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ்

                    www.vallalyaar.com

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா?

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா? பக்தியோடு
அவள் திருவடியை பற்றனும்!

பற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை!
குருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்!

ஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி
பெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பணிவுடன் சேரும்!

புறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே
தவம் செய்தால் பற்றி விடலாம்!

வேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று
தீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

தாயை காண தவம் தான் செய்ய வேண்டும்! தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை
பற்றித்தான் தவம் செய்ய வேண்டும்! முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி! பிறகு
உன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி! பக்தியோடு தாயை
பணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்!

இதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது!  இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்!
இருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்!

அபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்
ஊறி ஞானத்தில் திளைத்தவர்கள்! நம் வள்ளலாரும் அப்படிதான்! பிறக்கும் போது யாரும்
ஞானி அல்ல!!? பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்!!

எனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி!!
  

திரிபுர சுந்தரி


திரிபுரம் என்றால் சூரியனாக விளங்கும் வலது  கண்
சந்திரனாக விளங்கும் இடது, இவ்விரண்டு கண்ணும் உள்ளே
சேரும் இடமான அக்னி நிலை! ஆக மூன்று இடமும் சேர்ந்தால்
முச்சுடரும் ஒன்றாகும் நிலையே திரிபுரமே சௌந்தர்ய தேவதையான
பாலாவின் இருப்பிடமாகும்! நடமாடும் கோயிலான மனித உடலில்
வாலை என்ற பாலாவிற்கு இடம் முச்சுடரும் ஒன்றாகும்,
நம் சிரநடுவே உள்விளங்கும் நம் ஜீவஸ்தானமே! அவளே மனோன்மணி
தாய் எனவும் சித்தர்களால் போற்றப்படுகிறாள்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா

Popular Posts