வெள்ளி, 6 நவம்பர், 2015

சிவாய நம என சிந்தி!!

சிவாய நம என சிந்திப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை!
உபாயம்  இதுவே! மதியாகும்! என ஒளவையார் கூறுகிறார்!

சிவாய நம என சொல்லி  கொண்டிருக்க சொல்லவில்லை ஒளவையார் ! சிந்தித்துக் கொண்டு தான் இருக்க சொல்கிறார்?!

எப்படி?

பஞ்சட்சரமான நமசிவாய என்பதில்
சூட்சும பஞ்சட்சரமான சிவாய நம என்பதில்
சிவா-ய நம எனப்பாருங்கள்!

'சி' என்பது அக்னி! அக்னி இருக்கும் வாய் கண்! அதை நம வணங்கி
கொண்டிருங்கள்!

எப்படி?

கண்ணில் மணியில் மத்தியில் உள்ள
நெருப்பை ஒளியான கண்ணனை தியானியுங்கள் என்று யூகித்து
மதியால் - அறிவால் சிந்தித்து உணரவேண்டும் என்கிறார் ஔவையார்!
நம் வினைதிரை அறுந்து போக உள் ஒளி பெருக வேண்டும்!
இதுவே உபாயம்!

Popular Posts