சாகாக்கல்வி நூலிலிருந்து : 18
ஓருயிரிலிருந்து ஆறுயிர் வரை 84 லட்சம் யோனி வகை பிறவிகளுள் மிகவும் அருமையான, பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்ற நாம், மாதா பிதாவினால் சரீரம் பெற்ற நாம், குருவை பெற வேண்டாமா ?
குரு மூலம் தானே வினையற்று இறைவனை அடைய வழி பிறக்கும் !
இறைவன்
கருணைக்கடல் !
அருட்கடல் !
அண்டினவர்க்கு அவனருள் நிச்சயம் கிட்டும் !
"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு"
திருவள்ளுவர் பிறப்பை பேதைமை என்கிறார்.
அறியாமை என்னும் இருள்சூழ்ந்தவரே பிறக்கிறார் மீண்டும் பிறக்கிறார். பேதை பெண்போல தடுமாற்றம் கொண்டு பிறந்து துன்புறாமல் பிறப்பு நீங்க அறிவு சிறக்க வேண்டும்.
குருவை நாடி மெய்ப்பொருள் கற்றுணர்ந்து தவம் செய்தால் மெய்ப்பொருள் - கண் சிவந்து செம்மையான கண் ஆகும்.
அதுவே செம்பொருள் என்றார் திருவள்ளுவர் !
அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்ப்பர் !
🔥உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது !
🔥மரணத்தில் உடலைவிட்டு பிரிந்து விடுகிறது !
🔥மயக்கத்தில் தடுமாறுகிறது !
தடுமாறாமல் ஒடுங்காமல், பிரியாமல் உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச் செய்வதுவே ஞானம் !
உயிர் தன்மையை உடல் பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் !
ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக