குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜனவரி, 2026

அகத்தியர் மெய்ஞான சூத்திரம் - திருவடி



அகத்தியர் மெய்ஞான சூத்திரம்

"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்று "

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் ! கண்ணில் நின்ற ஒளிபாரு! இதுவே ஞான தவம்! 

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து 
கண்மணி நடுவே ஊசி முனை வாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு! 
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப் போகும் ! 

இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் - உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் ! 
இதை விண்ணில் நின்று , எல்லாமே வெட்டவெளி தான் என உணர்ந்து அங்கிருந்து 
உபதேசம் தீட்சை செய்த குருவை போற்று! 

உன் ஞான சற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டு செய் ! 

"குருவினடி பணிந்து கூடுவதல்லாங்கு அருவமாய் நிற்கும் சிவம் " என்கிறது ஒளவைக் குறள்! 

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார்?! 
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் இருப்பது கொடும் பாவமல்லவா? 
குருவைப் பணி! குரு பார்க்க கோடி வினை தீரும்!

நம் மனம் ஒருங்கினால் நாதவிந்து சொரூபம் காணலாம்! 
பஞ்சபூதங்களாலான நம் இரு கண் தான் 
நம் மனம் உதிக்கும் இடம் ஒடுக்கும் இடம்! 

சாதாரண மனிதருக்கு கண் பார்த்து மனம் எண்ணம் உதயத்தால் கர்மவினை நடக்கும் ! 
ஆத்ம சாதகன் எங்கே உதயமாகிறதோ? அங்கேயே கண்ணில் - பார்ப்பதால் உருவாகும் மனதை அதே கண் ஒளியில் வைப்பதால் நினைப்பதால் ஒடுக்கி விடலாம்! மனம் அடங்கும் ஒரே இடம் நம் கண்ணே ! 

" மனமடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்" என்றார் ஒரு ஞானி! 

நம் கண்ணில் தான் ஜீவ ஒளி - பரமாத்மாவின் அம்சமான பேரொளி நிறு ஒளியாக துலங்குகிறது. இறைவன் இருக்கும் துலங்கும் இறைவன் திருவடிகளில் நம் மனதை வைத்தால் மட்டுமே இறைவன் திருவடியில் மட்டும் நம் மனம் அடங்கும் ஒருங்கும் !? வேறு எங்கும் யாராலும் அடக்கவோ ஒடுக்கவோ முடியவே முடியாது!!

அக்கினி ஆதித்தன் சந்திரன் கலந்து ஒன்றாய் நின்றதுவே பூரணமாம்! அதுவே வாலையாம்! இதை அறிபவனே புண்ணியவானாம்! இதை சொல்பவனே ஞானசற்குருவாம்! நம் சிரசே ஆயிரத்தெட்டிதழ் தாமரையாம்! அதிலிருந்து உள் பாய்வதே அமுதமாம்! அமுதம் உண்டவன் சாகமாட்டான்! அவனே சிவயோகி ! ஞானி ! சீவனை சிவனாக்கிய சித்தன்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் - ஞானம் பெற விழி
பக்கம் - 140
குருவே சரணம்

திங்கள், 13 அக்டோபர், 2025

விழியை தூண்டி உணர்த்துபவர் - குரு



🔥திருமந்திரம் 2854 - ஞானவிளக்கம்🔥

" நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது "


நோக்குங்கள் எதை - நோக்கப்படும் பொருளை !
எதால் பார்க்கிறோமோ அதை பாருங்கள் !
அது மிக மிக நுண்ணிய பொருள் !
எதால் பார்க்கிறோம் ?

கண்ணால்தானே பார்க்கிறோம் !
கண்ணை பார்க்கணும் அதுதான் ஞானம் !
கண்ணாடியில் பார்க்கலாம் என்பீர் !

புறத்தே பார்ப்பதல்ல ?!
கண்ணை நாடி பார்த்தால் நம் கண்ணே ஒரு கண்ணாடிதான் !
பளப்பளப்பான பளிங்கு கண்ணாடிதானே நம் கண்கள் 

நம் கண்களால் பிரபஞ்சத்தையே பார்ப்பதுபோல நம் கண்களை 
என்று காண்கிறோமோ அன்றுதான் ஞானம் பிறக்கும் ! அவனே ஆத்ம சாதகன் !

அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர் 
விழியை தூண்டி உணர்த்துபவர்தான் குரு !
பாருங்கள் விழித்திருந்து !



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 24 நவம்பர், 2024

விதிப்படி வாழ்வதல்ல, மனித வாழ்க்கை !


விதிப்படி வாழ்வதல்ல,
மனித வாழ்க்கை !
விதியை வெல்லக் கூடியவன்தான்,மனிதன் !

நம்முடைய AIM,
நம்முடைய இலட்சியம் !
உயர்ந்ததாக இருக்கணும் !
நோக்கம் -
நல்லதாக இருக்கணும் !

இறைவனை அடையணும் !
நிச்சயமாக ,
குருமார்கள் - ஞானிகள்
காப்பாங்க !

எதுவா நடக்கட்டும் ! சாதனை,
தொடர்ந்துட்டே இருக்கணும் !

கர்ம வினை - உங்களை
போட்டு அலறடிக்கும்.

தாக்குப் பிடிக்கணும் !
வைராக்கியமாக இருக்கணும் !
இருந்தால், சாதிக்கலாம் !

👁️ஞான🔥சற்குரு👁️

செவ்வாய், 31 அக்டோபர், 2023

தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 20

🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥

 அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !

எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க 
எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரிடத்தும் அன்பு காட்டுபவன் எவனோ 
அவனே இறைவனை அடைவான் !

அவனே ஞானவான் !

அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !

மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?

இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?

ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என் 
சகோதர சகோதரிகள் என என்றைக்கு உணருகிறார்களோ அன்றுதான் உலகம் சுபிட்சமடையும் !

மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.

🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை 
உணர்வதுதான் ஒரே வழி ! இறைவனை உணர்வதுதான் !🔥

தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!

உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !

அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !

அகத்தியருக்கும் உபதேசித்தான் !

அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !

இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான் 
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 27 அக்டோபர், 2023



நூல் : சநாதனதர்மம் 19

🔥 இப்பிறவி ஆண்டவனை அடையவே! 🔥

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டுதான் அடியேன் வாழ்கிறேன்.


இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தைத் தான் எங்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்.
 
கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனைகள் செய்து, இராலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியனானேன் !
 
எமக்கு இராமலிங்க சுவாமிகளை சுட்டிக்காட்டி, உணர்த்திய ஞானசித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்.
 
அடியேனை பக்குவபடுத்தி, முதல் 12 ஆண்டு முடிவில் " கண்மணி மாலை " எழுதி வெளியிட வைத்தார்கள் !
 
அடுத்த 12-வது ஆண்டிற்குள் என்னை குருபீடத்தில் இருத்தி விட்டார் வள்ளலார்."குச்சண்டி - குச்சண்டி" என்று பாபாவும் அருள்வாக்கு கூறினார்.

 பாலாவின் கோயிலிலேயே அடியேனை குருவாக அமர வைத்தனர்."வலிந்து என்னை ஆட்கொண்டார் வள்ளலார்"

இப்போது 5 வருடங்களாக குருவாக அமர்ந்து எல்லா ஞானிகளும் உரைத்த திருவடி ஞானத்தை உபதேசித்து வருகிறேன், தீட்சை வழங்கி வருகிறேன் இறைவன் அருளால் !

"எல்லாம் அவன் செயல்"
"பாட்டுவித்தால் பாடுகிறேன் பணிவித்தால் பணிகிறேன்"
 "என் செயலாவது யாதொன்றுமில்லை"
 அடியேனை குருவாக இருத்தி, உள் இருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே !
 சென்னையிலும் நெய்வேலியிலும் பலநூறு அன்பர்கள் அடியேனிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
 கன்னியாகுமரிக்கு வந்து அடியேனிடம் தீட்சை பெற்றவர்களும் பலர்.
 அடியேன் செய்த புண்ணியம் ! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞானகுருவாக இருக்கிறேன் அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன். செம்மையாக செய்ய வைப்பதும் அவர்களே !
 
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுதல் அவசியம் !
 
அரிதான இப்பிறவி ஆண்டவனை அடையவே !
காலந் தாழ்த்தாதீர் கண் திறக்க வாருங்கள் !

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம்.


 🔴தன் ஜாதியில் உள்ள சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.

 🔵தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்.

 🔴தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம்.

 🔵சிற்சில காரியங்கள் நடந்ததை வைத்து ஏமாந்து விடுகிறது பிறிதொரு கூட்டம்.

பணத்துக்காக ஒரு கூட்டம்
புகழுக்காக ஒரு கூட்டம்
நோய்நீங்க ஒரு கூட்டம்
பொழுது போக்கவும் ஒரு கூட்டம்

இப்படியாக உலக மாந்தர்கள் அறியாமையால் அங்கங்கே சிக்கி அல்லலுறுகிறார்கள் !
 ஏமாந்தவர்களை திட்டம் போட்டு ஏமாற்றும் போலிகள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல்.

அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!\
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

குரு சொல் கேட்டு நட

குரு/இறைவன் ஒரு விசயத்தை செய்யணும் என்று சொல்லுகிறார். அதை சரியாக follow பண்ணனும். செய்யணும்.

தவம் செய்து அந்த நிலையில் நாம் இருந்தால் அவர்களும் கூடவே இருந்து, தலைக்கு வருவதை 

தலைப்பாகையுடன் போக்கி காப்பாற்றுவார்கள். அவர்கள் ஒன்றையும் நாம் செய்யாமல் ஆண்டவன் என்னை 

காப்பாற்ற மாட்டானா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று புலம்பினால் என்ன அர்த்தம். தப்பு செய்வது எல்லாம் நீ 

ஆண்டவனை குறை சொன்னால் எப்படி?  அதை மாற்ற வழியம் சொல்லி தந்து  உள்ளார்கள். அதை செய்தீர்கள் என்றால் 

கரெக்ட்டாக இருந்தால் எல்லாவற்றுக்கும் விதி விலக்கு உண்டு, குருவை பற்றினால் மட்டுமே. 

கடவுளிடம் சென்றால் law அண்ட் order படி நடப்பார். குருவிடம் சென்றால் தாய் மாதிரி எல்லாவற்றையும் மன்னித்து 

ஆட்கொள்வார். யாராக இருந்தால் சரி எப்படி இருந்தால் சரி, குரு அருள் இருந்தால் அவன்தான் பெரியவன். 

குரு சாத் சாத் பர பிரம்மா ..இதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு, 




(முதலில் குரு சொல் கேட்டு நட)

திங்கள், 27 ஜூன், 2022

அகஸ்தியர் கூறும் ஞானதவம்


🔥 அகஸ்தியர் கூறும் ஞானதவம் 🔥


"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி”
- அகஸ்தியர் மெய்ஞ்ஞான சூத்திரம்




வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் !
கண்ணில் நின்ற ஒளிபாரு ! இதுவே ஞானதவம் !

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு !


நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண்இரண்டும் 
அடங்கிப்போகும் ! இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் 
உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் !!
இதை விண்ணில் நின்று, எல்லாமே வெட்டவெளிதான் என உணர்ந்து 
அங்கிருந்து உபதேசம் தீட்சை செய்தகுருவை போற்று !

🙏உன் ஞானசற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டுசெய் !🙏
"குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"

- ஒளவைக்குறள் !

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார் ?!

நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் 
இருப்பது கொடும் பாவமல்லவா ?

குருவைப் பணி !

குரு பார்க்க கோடிவினை தீரும் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஞான சற்குருவை நாடுங்கள்!

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே"

திருமந்திரம் பாடல் - 2119


சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர், இதேபோல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி கோடி மாந்தர்! அதனால் பயனொன்றுமில்லை என்கிறார் திருமூலர்! இதெல்லாம் பக்திமார்க்கம்! இதேபோல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயனொன்றுமில்லை இதெல்லாம் கர்மமார்க்கம்! இதேபோல் பிராணாயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலனொன்றுமில்லை! இதெல்லாம் யோகமார்க்கம்! இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி கர்ம யோக மார்க்கங்களில் இறைவனை நீ அறிய முடியாது? ஏதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும்!? அது பிரயோஜனமில்லை!? தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தந்திருத்தமாக அடித்துக் கூறுகிறார்!

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்! உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞானசற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்! குரு இல்லாமல் இறைவனை அடைய முடியாது! பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார்!

குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே, ராமன், கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்! அந்த காலத்தில் எல்லா மன்னர்களும் ராஜகுரு வைத்திருந்தனர். அவர் ஆலோசனைபடியே நாட்டை ஆண்டனர். குருகுலம் சென்று கல்வி பயின்றே வாழ்ந்தனர்! குரு இல்லாமல் இருந்த ஒருவரை கூற முடியுமா? நமது வேதம் புராணம் இதிகாசம் ஞான நூற்கள் ரிஷிகள் சித்தர் உபதேசங்கள் இவையெல்லாம் குருவின் மகத்துவத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

"குருதான் பிரம்மா குருதான் விஷ்ணு குருதான் மகேஸ்வரன் குருதான் சாட்சாத் பரப்பிரம்மம் இப்படி எல்லாமான குருவை வணங்குகிறேன் என்கிறது வேதம்! புரியவில்லையா? நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உலகர் பல பள்ளி ஆசிரியர்கள் பலநூல்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தது தானே இப்போதைய உங்கள் அறிவு! பிறரால் சொல்லப்பட்டது நூற்களில் படித்தது இயற்கை இவையெல்லாம் குருவாக இருந்து கற்றுத் தந்த பாடம்தான் இப்போதைய உங்கள் அறிவு! இதுவா அறிவு?! இதனால் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார்கள்! என்ன? இன்றைய மனிதனின் மூளை ஐந்து சதவீதமே இயங்குகிறது?! மீதி 95 சதவீதம் இயங்கவில்லை என்றனர்! மாபெரும் உண்மை இது! பல்கலைகழகங்கள் கொடுத்த தாள்களை வைத்துக்கொண்டு தங்களை அதிமேதாவி எனச் சொல்லும் படித்த முட்டாள்களே அந்ததாள்களை - காகிதங்களை வைத்து ஒரு பிரயோஜனமுமில்லை!

இறைவனின் தாள்களை திருவடிகளை அறிந்தாலே உணர்ந்தாலே முக்தி! அதற்கு ஞானசற்குருவை நாடுங்கள்! உங்களை போல பல்கலை கழக தாள் இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களைப்போல் பணம் பதவி அந்தஸ்து இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களை விட வயதில் சிறியவராயிருக்கலாம்

 குரு! எப்படியிருந்தாலும் சரி  ஞான உபதேசம் தீட்சை 

கொடுப்பாரானால் அவர்தான் ஞானசற்குரு!   அவரை பணி!

                        🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

------------------------------------------------------------------------                                                 

                      கன்னியாகுமரி

        🔥தங்கஜோதி ஞானசபை🔥 

          வந்தால் பெறலாம் ஞானம்!


மேலும் அறிய:

🌐 www.vallalyaar.com

▶️ YouTube: Thangajothi Gnanasabai

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஞான உபதேசம் - திருவடி தவம்



இறைவன் யார்? பரம்பொருள் – பரஞ்ஜோதி – அருட்பெருஞ்சோதி – எங்கும் நிறைந்தவன் – எல்லாம் வல்லவன் – ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் !

எங்கும் துலங்கும் ஒளியான அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவன் நம் உடலில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன?! எங்கும் இருப்பது போல் மனித உடலிலும் அந்த பேரொளியான இறைவன் சிற்றொளியாகவே நம் உயிராகவே நின்றிலங்குகிறார்! இது சத்தியம்!உண்மை! முதலில் இதை ஒருவன் அறியனும், நம்பணும் , உணரணும்! அவனே சம்சார சாகரத்தில் இருந்து காப்பாற்ற படுவான்! வேறு யார்? கடவுள் தானைய்யா காப்பாற்றுவார்!

கடவுள் யார்? குருதான்! “குரு பிரம்மா குரு விஷ்னு குரு மகேஸ்வரா குரு சாத் சாத் பரப்பிரம்மா ! இதற்க்கு மேல் விளக்கம் வேணுமா? குருவே சாட்சத் பரப்பிரம்மாம்?! குருவே தெய்வமாம்! தெய்வத்தை அடைந்தவர் தானே நமக்கு தெய்வத்தை காட்ட முடியும்?! பின் என்ன செத்து போனவனா இறைவனை காப்பற்ற முடியும்? சற்றாவது சிந்திக்க மாட்டிர்களா?

நீ யார்? அந்த பேரொளியின் அம்சமான சின்ன ஒளி! அது தான் உன் உயிர்! நீ ஒரு ஜீவான்மா? எங்கே இருக்கிறது உன் உயிர்? அறியவேண்டாமா? நமக்கு உடல் தந்தது கண் கண்ட தெய்வமான தாயும் தந்தையும்! நமக்கு உயிரை தந்தது கண்ணிலே கண்ட ஒளியான தெய்வமே என்று அறிவது தான் ஞானம்! ஒவ்வொரு தாயின் கருவிலும் முதலில் பிண்ட உற்பத்தியே! மூன்று மாதங்களுக்கு பின்னரே இறைவனால் உயிரால் வளர்கிறது சிசு! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளக்கிறான் இறைவன்! சரியாக 270 நாட்கள் 1 மாதம் 27 நட்சத்திரங்களான 27 நாளே ஆக 10 மாதம் 270 நாட்களே! இதுவே வைத்தியர்கள் சித்தர்கள் கணக்கு! முடிந்ததும் கன்னிக்குடம் உடையும் குழந்தை பிறக்கும்! உயிர் எதன் வழி போய் எங்கு இருக்கும் உடலில்? உச்சி வழியே போய், உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேல நம் தலை மத்தியில் இருக்கிறது! பிறந்த குழந்தையின் உச்சி மிக மிக மென்மையாக இருப்பதை காணலாம்!

நம் உடல் நம் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குதான்! சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!

எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்! மறுக்க முடியாத உண்மை! அவரவர் கையால் அவரவர் எட்டு ஜாண் தான்! “எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை !

நம் உடலில் சிரசு – தலை தான் முக்கியம் அங்கே தான் , மத்தியில் தான் இறைவன் நம் உயிரை பத்திரமாக வைத்துள்ளான் . சிரசை ஏன் முக்கியம் என்கிறார்கள் ? நாம் வாழ்வதே பஞ்சேந்திரியங்களால் தானே ! மெய் வாய் கண் மூக்கு செவி , இவைகள் செயல்பட்டுத்தானே நாம் வாழ்கிறோம் ! கழுத்துக்கு கீழே கர்மேந்திரியமே ! ழுத்துக்குமேலே ,
தலையே ஞானேந்திரியமான மெய் வாய் கண் மூக்கு செவி உள்ள கேந்திரமாம் !

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது , கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது , ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது , தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி ! எக்குறையும்மின்றி நாம் பிறந்தால் மற்றும் போதாது ! ஞானக் கல்வி சாகாக்கல்வி கற்க வேண்டும் ! தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கணை திறக்கப்பெற்றுக்கொள்வது நலம் என வள்ளலார் கூறுகிறார் . மாத பிதாவை பெற்ற மனிதன் குருவை பெற்றாகவேண்டும் இல்லையேல் மரணம்தான் ! குருவை பெற்றவனே தீட்சை பெறுவான் தவம் செய்வான் ஞானம் பெறுவான் தெய்வத்தைக் காண்பான் ! ஆக தலையே , பஞ்சேந்திரியமும் தலையிலேயே
இருப்பதால் இதுதான் பிரதானம் ! ஆக , நம் உடலில் முக்கியமான தலையின் உள் மத்தியிலே தான் நம் உயிர் இருக்கின்றது ! ஏ மனிதா நீ உயிர் உள்ளவன்.

உன் உயிர் எங்கிருக்கிறது ? மனிதனில் சிரசின் உள் மத்தியில் ! ” உச்சிக்கு கீழ் ஆடியோ அண்ணாக்குக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே “ என்பதுவே சித்தர் வேத வாக்கியம் உண்மை ஞான இரகசியம் ! உச்சிக்கு கீழே நம் சிரசின் உள் நடுவிலே வைத்தான் விளக்கு இறைவன் ! விளக்கு என்றால் தீ உண்டு தானே ! அது நித்தம் எரியுதாம்! அணையாவிளக்கு ! ஜீவன் அழிவதில்லை யல்லவா ?ஆக நம் உயிர், தீயாக அக்னி சொரூபமாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது . சித்தர் வாக்கே ஆதாரம் .

நம் உயிர் ஒளிதான் என்பதை இன்னும் ஒரு விதத்தில் நிரூபிக்கலாம் . ஒரு உயிர் போன , இறந்து போன , பிணத்துக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தான் உயிரின் தன்மை என அறிந்து கொள்ளலாமல்லவா ? பிணம் போட்டது போட்டபடி மரக்கட்டைபோல் கிடக்கும் எவ்வித உணர்ச்சியும் இருக்காது . உயிர் உள்ள நாம் செயல்படுகிறோம் அசைகிறோம் உணர்வோடு உள்ளோம் . அப்படியாயின் உயிர் இருந்தாலே உணர்ச்சி இருக்கும்! அடுத்து பிணத்தை தொட்டால் உடல் ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் . நம் உடலை தொட்டால் லேசாக கதகதப்பாக சூடாக இருக்கிறதல்லவா ? இதுவே உயிரின் தன்மை! உயிர் போன உடலில் சூடு இருக்காது. உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கும்! சூடு இருக்கிறது என்றால் தீ- நெருப்பு அக்னி ஒளி இருக்கிறது என்று தானேஅர்த்தம்?! ஆக உயிரின்தன்மை ஒளி! புரிகிறதா?

”கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா” என எவரிடமாவது திட்டு வாங்கியிருக்கிறீர்களா?இல்லாவிட்டால், நீங்கள் பிரேதம், உயிர் இல்லாத மரக்கட்டை என்று அர்த்தம்! சூடு இருந்தால்,உயிராகிய ஒளி இருந்தால் சொரணை – உணர்ச்சி இருக்கும் செயல்படுவீர்கள்! இதுவே நிரூபணம்!உயிர் -ஒளிதான்! இருப்பதால் தான் உணர்வு!

நமக்கு உயிர் இருக்கிறது! நம் தலை உள்மத்தியில் ஒளியாக இருக்கிறது! ஞான ரகசியம்!உள்ளே இருப்பதை காண்பது எப்படி? அடைய வழி என்ன? அறிய வேண்டாமா?அறிந்தால் தானே சாதிக்க முடியும்?

நம் தலையில் பஞ்சேந்திரியங்கள் இருக்கிறது! அவை செயம்படுவதால் தான் நம் வாழ்வு!பஞ்சேந்திரியங்கள் செயல்பட அதற்க்கு ஆற்றல், சக்தி வேண்டுமே! உயிர் ஆற்றலால் ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. ஐம்புலன்களுக்கும் உயிர் சக்தி ஒரே சீராக இருக்க வேண்டுமானால் உயிரிலிருந்து வரவேண்டுமானால் அவற்றின் மத்தியில் இருந்தால் தானே முடியும்?! அதனால் தான் படைத்த இறைவன் தலையின் உள் மத்தியில் உயிரை வைத்தான்! இதிலிருந்தும் நம் தலையின் மத்தியின் உள்ளே தான் ஒளியாக நம் உயிர் விளங்குகிறது என புரிகிறதல்லவா?

நாம் எப்படி அறிவது? உள்ளே இருப்பது தெரிய வேண்டுமே? தெரிந்தால் தானே வழி அறிந்து போக முடியும்? தலையில் உள்ளே ஒளி-உயிர் இருப்பது தலையின் வெளியே எங்காவது தெரிகிறதா? தலையிலுள்ள ஐம்புலன்களில் கண்ணில் ஒளி தெரிகிறதல்லவா? கண்ணில் ஒளி இருப்பதால் தானே, பார்வை சக்தி, பார்க்கும் ஆற்றல் உள்ளதால் தானே நம்மால் பார்க்க முடிகிறது?! கண்ணில் ஒளி இல்லாதவன் குருடன்! கண்ணில் தெரியும் ஒளி எது என பார்த்தால் நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே ஜீவ ஒளியே என அறியலாம்! ஆகஉயிர் உள்ளே இருக்குது – கண்ணில் தெரியுது.

உள்ளே உள்ள ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் உயிர்ஸ்தானத்தில் இருந்து கண் வரை ஒரு வழி இருந்தால் தானே தெரியும்?! இதுவே உண்மை! உயிருக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே மாபெரும் உண்மை தேவ இரகசியம்! சத்தியம்!தெரிந்து கொள்ளுங்கள்!!

இதுவரை இவ்வுலகில் யாருமே சொல்லாத ஞான ரகசியம் இது!! வாலையின் அருளால் வள்ளல் பெருமான் மற்றும் சித்தர்கள் அருளாசியால் அடியேன் அனைத்து பரிபாஷைகளையும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்! உலகமே ஞானம் பெற வேண்டும்! ஜாதி மத இன மொழி நாடு பேதமற்ற
சமரச சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்ற ஆவாவினால் தான்! படியுங்கள்,!தெளியுங்கள், உணருங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள் இது தான் ஞானம் என்று! ஞானப்பதை என்று ! இவ்வழி விழி வழி விழித்திருந்து ஆத்ம சாதனை செய்தால் ஞானம் பெறலாம் என்று! உன்னை நீ அறியலாம்! உன்னை படைத்தவனை அடையலாம் என்று!!

நம் உடலில் தலையில் ஐம்புலன்களில் கண்ணில் மட்டுமே துலங்குகிறது ஒளி! ஆனால் ஒளியான உயிர் இருப்பதோ! தலை உள் நடுவில் ! உள் ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் ஒருவழி இருக்குமல்லவா? அவ்வழியே உள் போய் விட வேண்டியது தானே! போங்கள்!

எப்படி போவது? மெய் என சிரசில் சொல்லப்படுவது மூளை மூடியிருக்கிறது! வாய் திறந்து இருக்கிறது ஒளி ஒன்று தெரியவில்லை! மூக்கு திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரிய வில்லை! செவி திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரியவில்லை ! கண் அடைத்திருக்கிறது இமைகள் இமைகள் தான் மூடுகிறது ஆனால் அங்கே தான் ஒளி தெரிகிறது!? இது என்ன விந்தை?இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இரண்டு கண்கள் உள்ளதே, இருகண்ணிலும் ஒளி தெரிகிறதே தலையின் உள் ஒரு உயிர்தானே இருக்கிறது? இரு ஒளி இரு கண்களில் தெரிகிறதே! அப்படியானால் இரண்டு உயிர் உள்ளதா நமக்கு? இது அடுத்த ஞான ரகசியம்! நமக்கு இரு கண்கள் இருப்பினும் நாம் பார்ப்பது ஒரு பொருளை தானே ! அப்படியாயின் இரண்டு கண்ணும் ஒன்றுதானே! இருப்பது ஒரு உயிர் ஒளிதானே! ஆக ஒரே உயிரான ஒளிதான் இரு கண்ணிலும் தோற்றம்? எப்படி? நம் கண் எப்படி இருக்கிறது தெரியுமா?

நம் தலை உள் மத்தியிலுள்ள உயிர் ஒளி இருக்கும் இடத்திலிருந்து இரு கண்களுக்கும் இரு குழல் போன்ற நரம்புகள் வந்து சேருகிறது!? ஆங்கில வி – V வடிவில் உள்ளது! விரிந்து வந்து இரு கண்களிலும் இரு நரம்புகள் சேருகின்றன! உள் ஒளி இரு நாடி வழி வெளியே இரு கண்ணிலும் துலங்குகிறது?! புரிகிறதா? உயிர் ஒன்றே! இரு கண்களின் செயலும் ஒன்றை சேர்வதே! ஒன்றை பார்ப்பதே! அந்த ஒன்று உயிரே!

நாம் தவம் செய்வது எப்படியெனில், இரு கண்களில் துலங்கும் ஒளியை உள்முகமாக ஆதம ஸ்தானத்தில் கொண்டு சேர்ப்பது தான்!? முடியுமா? கண்டிப்பாக முடியும்! எல்லோராலும் முடியும்! எப்படி?வேத புராண இதிகாசங்கள் பைபிள் குர் ஆன் மற்றும் சித்தர்கள் ஞானிகள் வள்ளலார் எல்லோரும் உரைப்பது இந்த ஒரே ஞான வழியை பற்றித்தான், கணணைப் பற்றித்தான், கண்மணி ஒளியை பற்றித்தான்! உலக பற்றை விட்டால் தான், மனதை கண்மணி ஒளியில் நிறுத்தித்தான், குரு தீட்சையால் உன் கண் ஒளியை உணர்வை தூண்டித்தான், தவம் செய்து அடைய முடியும் என்று உறுதியாக கூறுகிறார்கள்!

குருவேண்டும்! கண்டிப்பாக குருவை ஞான சற்குருவை பெற்றேயாக வேண்டும்!?அவரால் தான் உங்கள் கண்களில் உணர்வை தீட்சையாக கொடுக்க முடியும்!?ஞானம் பெற்ற ஒளியுடல் பெற்ற ஒரு சித்தானோ ஞானியோ தான் குருவான ஒருவர் மூலமாக உங்களுக்கு ஞான தீட்சை வழங்க முடியும்?! அப்படிப்பட்டவர் தான் “ஞான சற் குரு!” எல்லோரும் குருவல்ல!? எல்லோரும் தீட்சை கொடுக்க முடியாது?! நல்ல ஒருகுருவை அல்ல, நல்ல ஒரு ஞான சற்குருவை தேர்ந்தெடுத்து ஞான உபதேசம் ஞான தீட்சை பெற்று விழித்து இருந்து விழிப்புணர்வுடன் இருந்து ஞான சாதனை செய்யுங்கள்! மரணமிலா பெருவாழ்வு பெறலாம்!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! “இப்போது யாம் இங்கு இருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்”என்று மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் திருக்காப்பீட்டுக் கொள்ளும் முன் கூறியருளினார்கள்! இதன் அர்த்தம் என்ன?யார் தீட்சை பெற ஞான சர்குருவிடம் வருகிறாரோ, அவர் கண்வழி, தீட்சை மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன்! இரு பிறப்பாளன்! மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார் ! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கி அருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுக்குள் பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான சற்குருவை சரண் அடைக !

குருவருள் இன்றி திருவருள் கிட்டாது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே, குருவின் மகத்துவம் பேசுவதே, குருவை நினைப்பதே குருவுக்கு தொண்டு செய்வதே, குருவே கதி என்று இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்!

ஞான சற்குருவிடம் ஞான தீட்சை மூலம் கண்ணில் உணர்வை பெற்று நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் அருவியாக கொட்டும்! கண்மணி உணர்வு மேலிட மேலிட கடுப்புணர்வு பெருகி அதனால் கண் ஒளி பெருகும்! கண் ஒளி பெருகினால் எங்கு போகும்? எங்கே போக முடியும்?! உள்ளே தானே ஓட்டை நாடி போகிறது? அவ்வழியே அக்குகை வழியே ஒளி உள் சென்று உள் மத்திய பகுதியான நம் ஜீவஸ்தானத்தை அடையும்! இரு கண்ணும் உள்ளே போய், போய் முடியும் ஒரே இடத்தில் நம் ஜீவஸ்தானத்தில் போய் ஒன்று சேரும்! வலது கண் சூரிய சக்தி – இடது கண் சந்திர சக்தி – உள் உள்ள ஜீவஸ்தானம் அக்னி சக்தி மூன்று தீயும் சேரும்போது பெரு நெருப்பாகும்! அற்புத ஆற்றல் வெளிப்படும்! வலைத்தாயின் இருப்பிடம் அது தான்! நம் ஆத்மஸ்தானம் அதுதான்!அப்போது தான் நாம் நம் ஆத்ம சொரூபத்தை – ஒளியை – நம் சூக்கும சரீரத்தை ஒளியுடலை வாலையை தரிசிக்கலாம், அமுதம் தருவாள் வாலை! ஞானம் துலங்கும்!

சரி நம் கண் தான் அடைத்திருக்கிறதே?! எப்படிப்போகும் ஒளி உள்ளே! ஞான சற்குருவிடம் தீட்சை மூலம் நம் கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கிறோம்! விழி விழி என விழித்திருந்து தவம் செய்தால் கண்ணில் கடுப்பு ஏறி ஒளி பெருகும்! ஒளி பெருகி பெருகி வழி திறக்கும்?! எப்படி தெரியுமா ? அதற்க்கு முன் நம் கண்ணை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! நம் கண் எப்படி இருக்கிறது? வெள்ளை விழி அதன் மத்தியில் கருவிழி அதன் மத்தியில் கண்மணி அதன் மத்தியில் ஊசி முனை அளவு ஓட்டை-துவாரம்! அந்த கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு ஓட்டையை ஒரு மெல்லிய ஜவ்வு அடைந்துள்ளது! ! இதை நமக்கு வள்ளல் பெருமான் அழகாக சிறப்பாக காட்டியுள்ளார்கள்!?நம் கண் அமைப்பே தவ நிலை உணர்த்தவே வள்ளல் பெருமான் கண்ணாடி கூண்டு விளக்கு ஏற்றச் சொன்னார்கள். அந்த ஜோதியை ஆராதியுங்கள் என்றார்!

ஆதிகாலங்களில் சுமார் 60 வருடமுன்பு கூட தமிழ் நாட்டில் தெரு விளக்கு, வீடுகளில் சிம்னி விளக்கு இருந்தது. கிட்டத்தட்ட அதை ஒத்துதான் நம் கண்ணாகிய விளக்கும் இருக்கிறது. இதை பைபிள் அழகாக கூறுகிறது! “கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கிறது. நம் கண் கண் ஒளியுள்ளதாக இருந்தால் உன் சரீரம் முழுமைக்கும் ஒளியுள்ளதாக இருக்கும்! இதை ஏன் சொன்னார் ஏசு பெருமான்? “தேவன் ஒளியாக இருக்கிறார்! நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம் ” என்றார்! ஒளியான தேவனை பராமபிதாவை காண முதலில் உன் கண் ஒளியால் உன் உடல் முழுதும் ஒளியாக்கு என்பதே! எவ்வளவு மேலான உயர்ந்த ஞானத்தை இரண்டே வசனங்களில் கூறுகிறது பைபிள்!!

எம்மதமும் எந்த ஞானியும் இதை தவிர வேறு என்ன கூறுகின்றனர்!? இதை அறிவதுதான் அறிவு!தெளிவது தான் பண்பு! உணர்வது தான் ஞானம்! அவனே சன்மார்க்கி ! ஒரே கடவுளைப்பற்றி வெவ்வேறாகவா கூற முடியும்?! பிரித்து பார்ப்பவன் மடையன்! ஜாதி மத இன மொழி நாடு எனபேதம் பார்ப்பவன் அறிவே இல்லாத முட்டாள்!

கண்ணில் ஒளி துலங்குவதை வள்ளலார் கண்ணாடி கூண்டு விளக்கு மூலம் உணர்த்துகிறார்!கண்ணாடி கூண்டு விளக்கு எப்படி தெரிகிறது? அகல்விளக்கு உள்ளே இருக்கிறது. அந்த கூண்டு கண்ணாடியினால் இருப்பதால் தானே! விளக்கேற்ற தூண்ட எண்னைய் விட கண்ணாடி கூண்டு கதவை திறந்து தானே உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இது போலவே நம் கண் உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இதுபோலவே நம் கண் உள்ளே இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்திலே ஜீவஜோதி ! கண்ணாடி போல கண் ! கண்மணி மத்தியிலும் ஊசி முனையளவு ஓட்டை அதிலே ஊசிமுனையளவு மெல்லிய ஜவ்வு ! கண்ணாடி போல துலங்கும் ஜவ்வு.

கண்ணாடி போன்ற ஜவ்வு இருப்பதால்தான் உள் ஒளி கண்ணில் தெரிகிறது ?! மரக்கதவு போன்று ஜவ்வு உள்ளவன் குருடன் ! நாம் தவம் செய்யச் செய்ய மெல்லிய ஜவ்வு உஷ்ணத்தால் உருகி கரையும் ! வாசல் திறக்கும் ! ஒளி உட்புகும் ! ஆத்மஸ்தானத்தை அடையும் ! இதுவே தவநிலை ! ஞானநிலை ! கண்ணாடிபோன்ற மெல்லிய ஜவ்வுதான் எழுதிரைகளாக அனுபவத்தில் காணலாம் ! இதைத்தான் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண ஏழு திரைவிலகும் படி ஏற்படுத்தி நமக்கு ஞானத்தை உணர்த்துகிறார் வள்ளலார் ! சன்மார்க்க அன்பர்களே உணருங்கள் ! புறத்தே ஜோதி ஏற்றி திருவருட்பா பாராயணம் செய்து அன்னதானம் செய்தால் ஞானம் வராது !? அகத்தே தங்கஜோதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துலக்குவதை காண உணர ஞானம் பெற நம்இரு கண்களே வழி என முதலில் உணருங்கள்.

அகவழிபாடு செய்யுங்கள் ! உலகிலே எந்த பேதமும் எதிலும் யாரிடமும் காணாத வள்ளலார் மக்களை இரண்டாக பிரித்தார் ?! எப்படித்தெரியுமா ? அகவினத்தார் புறவினத்தார் என்று ! சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான் !! உலக விவகாரங்களில் மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஓட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார் !

அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்திய ஞான சபை ! அங்கே பார் தங்கஜோதியை ! “சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன் “ என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா ?

ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்திய ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள் ! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள் ! ஜோதி பாத்தாச்சு , சோறு போட்டாச்சு , அருட்பா பிடிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல !? சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே எழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார் ! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி !! சுத்த சன்மார்க்கி ! வள்ளலார் சொன்னதை செய் ! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும் !

இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன ! அவர்கள் அதை செய்யட்டும் ! உன்னால் முடிந்தால் உதவிசெய் ! வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய் ! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான் !! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும் ! நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும் ! அதை விடுத்து மதவாதிகளை போல் அவரவர் மதமே உயர்ந்தது என அவரவர்கள் முட்டாள் தனமாக பேசுவது போல் சன்மார்க்கம் தான் உயர்ந்தது என்று நீயும் உளராதே !?

சன்மார்க்கம் என்றால் என்ன ? முதலில் சன்மார்க்கி சொல்லும் நீ உணர்ந்து கொள் !? “சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!” உலகில் உள்ள எல்லா மதத்தவர்களும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின் , ஒரே இறைவன் தான் உலகுக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே ! நாம் அனைவரும் உலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதரிகளே என அரியச் செய்ய வேண்டும் ! உணரச் செய்ய வேண்டும் !அதுதான் சன்மார்க்கம் !

ஊரோடு ஒத்துவாழ் ! கூடிவாழ் ! என்றெல்லாம் ஞானியர் , கூறியது எதற்க்காக ?!”ஒன்றாக காண்பதுவே காட்சி “இப்படி வாழ்பவன் தான் சன்மார்க்கி ! துவேஷம் காண்பிப்பவன் ஆணவம் கொள்பவன் சன்மார்க்கியல்ல ! விபூதி பூசுவதும் பூசாமலிருப்பதும் சன்மார்க்கமல்ல ! தர்மச்சாலையிலே மேட்டுக்குப்பதிலே பின் எதற்க்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறீர்கள் ?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞானப்பாதையில் பீடு நடைபோடுங்கள் . எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக் கூறுங்கள் ! ஜீவகாருண்யம் என்றால் அன்பு ! மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளிடத்திலும் காட்டும் அன்பு !சாப்பாடு போடுவதும் அதில் ஒன்றுதான் ! சாப்பாடு போடுவது மட்டுந்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமென்று தவறாக கருதிவிடாதீர்கள் !?

பக்தியுடன் வாழு ! பணிவுடன் வாழு ! நீதியுடன் வாழு !
ஞான தவம் செய் ! ஞான தானம் செய் !

கண்ணைப்பார் ! அதுதான் திருவடி ! மெய்ப்பொருள் !
குருவைப்பணி ! கண்ணைத் திற ! சும்மா இரு !

அறிவை மயக்கும் போதைக்கு அடிமையாகாதே !
மிருகம் போல் மாமிசம் உண்டு சாகாதே !
எவ்வித கெட்ட பழக்க வழக்கமும் கூடாது !

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் ! இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !

சாத்திரத்தில் சிறந்தது திருமூலரின் திருமந்திரம் !
தோத்திரத்தில் சிறந்தது மணிவாசகரின் திருவாசகம் !
பாத்திரத்தில் சிறந்தது வள்ளலாரின் திவருட்பா !

சிந்தை தெளிய சித்தர்கள் நூலை பார் ! உணர் !
மனுமுறை கண்டவாசகம் படி அதன்படி நட !

சன்மார்க்கம் சகலரும் சேர்ந்த ஒரே மார்க்கமே !
ஜீவகாருண்யம் சகல உயிர்களிடமும் காட்டும் அன்பே !

ஆன்ம நேய ஒருமைப்பாடு நிலவவேண்டும் உலகிலே !

உலகமக்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை கண்மணி !
ஜீவனை உணர கண்ணே – விழியே ஒரே வழி !

– ஞான சற்குரு சிவ செல்வராஜ்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

குரு சாட்சாத் பரப்பிரம்மா

புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் !
எது புண்ணியம்! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?!
குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில்

வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே
புண்ணியம்! நல்ல சற்குருவை பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை
பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!


சீடனுக்கு குருவே தெய்வம்! குருவே எல்லாம்! குரு வாக்கை வேத வாக்காக மதிக்கணும்! குருவுக்கு புத்தி சொல்ல போகாதே!  உன்விருப்ப படி குரு இருக்கவேண்டும் என்று கூறாதே! குரு சொற்படி நீ நட! குருவை வணங்க கூசி நிற்காதே! குருவுக்கு காணிக்கை கொடுக்க மறக்காதே! குருவுக்கு, உன்னை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

உடல் பொருள் ஆவி அனைத்தும் தத்தம் செய்தால்தான் அந்த காலத்தில் குருவை பெறமுடியும்! இந்த காலத்தில் ஓசியிலே எதாவது குரு கிடைப்பாரா என தேடுகிறார்கள்! குருவுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற அறிவே இல்லை! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு வாழ்கிறார்! நீ கொடுக்கும் பிச்சையில் தனே ஒரு குடும்பம் வாழ்கிறது! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு அலைந்து திரிந்து உன் போன்ற பலருக்கு ஞான உபதேசம் செய்கிறார்! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு ஞான பணி செய்கிறார்! குரு கேட்காமலே நீ குருவுக்கு பிச்சையை அள்ளி வழங்க வேண்டாமா? சீடர்கள் தரும் பிச்சைதானே குரு வாழ்க்கை!


"குரு சாட்சாத் பரப்பிரம்மா" அப்படி ஒரு குரு கிடைக்க நீ கோடி புண்ணியம்
செய்திருக்க வேண்டுமே! அப்படி ஒரு ஞான சற்குரு கிடைத்தால் உன் சிற்றறிவால் அவரை எடை போடதே! உன் ஆணவத்தால் அறிவிழந்து குருவை விட்டிடாதே! உன் பண திமிரால் குருவை புறக்கணித்து விடாதே!

அதனால் துன்பம் உனக்குத்தானே தவிர குருவுக்கு அல்ல! குரு எப்படியிருக்கிறார் என பார்க்காதே! குரு என்ன சொன்னார் என சிந்தித்து செயல்பாடு!

நதிமூலம் ரிஷிமூலம் பாராதே என சொல்வர்! நீ ஒரு நல்ல சீடனாக நடந்து கொள்! குருவுக்கு பிச்சை கொடு! வணங்கி பணி! பணிவிடை செய்! அவர் கட்டளையை சிறமேற் கொண்டு உடனே செய்!

ஞானதானம் செய்! குரு உபதேசத்தை உலகுக்கு கூறு!? ஞான நூல்களை எல்லோருக்கும் கொடு , அதுவே ஞான தானம்! உடற் பசியை போக்கும் அன்னதானம்! ஆன்ம பசியை நீக்குவதே ஞான தானம்! ஞான தானம் செய்பவனே உண்மையான சீடனாகிறான்!? அவனே பிற்காலத்தில் உன்னதமான சற்குருவாகிறான்! குரு பீடம் உன்னை தேடி வர வேண்டும்! நீ தேடி ஆசையுடன் ஓடினால் உனக்கு எட்டாத தொலைவுக்கு அது போய்விடும்!

நீ குரு ஆக விரும்பாதே! நல்ல சீடனாக முதலில் இரு!! நல்ல சீடனே நல்ல குருவாவான்! பொருளாசை குருவுக்கில்லை! உன்னக்கு இருப்பதால்தான்  கொடுக்க மறுக்கிறாய்! குருவானவர் யார்? ஞானி ஒருவரால் தகுதியானவர் எனக் கருதப்பட்டு, ஆசி வழங்கி குரு பீடத்தில் அமர்த்தப்படுபவரே!!  அவரை நீ ஒன்றும் அறிய மாட்டாய்!? உலக இன்ப துன்பங்களிலே சிக்கி, நைந்து , புடம்போட்டு எடுக்கப்படுபவரே குரு! அப்படிப்பட்ட ஒருவராலேயே திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்கமுடியும்! அந்த தகுதியை ஞானி ஒருவர் நல்குவார்!

அப்படிப்பட்ட ஞான சற்குரு மனம் நோகும்படி நீ நடக்கலாமா? உன் கர்மவினையை தன் தோளில் சுமக்கும் ஞான சற்குரு உளம் மகிழ தொண்டு செய்! பணி! உருகு! அதைவிடுத்து அவர் மனம் நோகச் செய்து நீ அவர் பாவத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதே! குருவை நிந்திக்காதே! அவர் மகிமை நீ அறிய மாட்டாய்! மாதா பிதா பெற்ற எல்லோருக்கும் குரு கிடைக்காது! குரு பெற்றவனே பாக்கியவான்!
 
           "குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு
           அருவமாய் நிற்கும் சிவம்"

ஔவைக் குறளின் பொருளுணர்ந்து, அவனியில் ஞான சற்குருவை பெற்று, மரணமிலா பெருவாழ்வு அனைவரும் பெற வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பொற்பாதம் பணிந்து வாழ்வோமாக!        

திருவருட் பாமாலை நாலஞ்சாறு
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
   
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

குரு, குரு ஆனது

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை அருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன் செயலோ அறியேன்
மனம் ஆலை பாய்வது கண் மன்றில் நடத் தரசே.



ஞானம் தெரிந்தவர் கூட முழுமையாக வில்லை! உணர்ந்தாரில்லை!
ஆனால் அடியேன் குருவருளால் திருவடிஞானம் அறிந்து உணர்ந்தேன்!
ஞானம் அனுபவம் பெற்றேன். யாருக்கும் தெரியாமால் சிவனே என்று
நாம் இருப்போமே என்றிருந்தேன்! ஆனால் எல்லோரும் அறிய ஞானம்
அறிந்தவன் இவன் என என்னை தெருவில் இழுத்து விட்டுவிட்டனர்.
இது இறைவன் அருட்செயலோ அல்லது மாயை விளையாடுகிறதோ அறியேன்! என்மனம் அலைபாய்கிறது என்கண்மணி நடராசா அருள்புரிவாயாக!

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க  சுவாமிகள் தன் அனுபவத்தை இப்பாமாலையில் உரைத்தார்! இதுவே அடியேனுக்கு அனுபவமாயிற்று! எங்குரு ஜோதி இராமசாமிதேசிகர் அவர்களிடம் தீட்சை பெற்று சாதனை செய்து கண்மணி மாலையும் வெளியிட்டு சும்மா இருந்துவிட்டேன். எங்குரு ஜீவ சமாதி கொள்ளுமுன் கடைசியாக எம்மை அழைத்து தனக்குப்பின் குருவாக இருக்க பணித்தார்கள். நான் மறுத்தேன். நீண்ட நேரம் பேசி பல
காரணங்களும் கூறிய பின் குரு வற்புறுத்தவே அடியேன் குருவாக சம்மதித்தேன்! குருவும் சமாதி ஆகிவிட்டார்! நான் நமக்கு வேண்டாமடா சாமி இந்த குருபட்டம் என ஒதுங்கி விட்டேன்!

ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வலிந்து
என்னை ஆட்கொண்டு எங்குரு சமாதி ஆகி 12  வருடங்கள் கழித்து என்னை
குரு பீடத்தில் அமர்த்திவிட்டார்?! கன்னியாகுமரியில் "சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்" ஞான சற்குருவாக இருந்து திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்க அருள்பாலித்தார்! "தங்க ஜோதி ஞான சபை" உருவாக்கி தங்கஜோதியான நம் உள்ஒளியை, பேரொளியான இறைவனை காண எல்லோருக்கும் அருட்குருவாக இருந்து ஞானம் வழங்க அடியேனை
பணித்துள்ளார்! வள்ளல் பணியை ஆக்ஞையை(ஆணை) சிரமேற்கொண்டு அடியேன் பணி புரிகிறேன்! இது வள்ளல் பெருமான் அருட்செயலே!

திருவருட் பாமாலை நாலஞ்சாறு - பக்கம் 132
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

யார் குரு?

சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு!
தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்!

நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான்
இருகிறோம்.  கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு
இருக்கிறாளாம்.

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்!  ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே !

இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்!   எல்லாமே குரு தான்!

அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன  காரணம்?

எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்!  எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல!

யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை  ஊட்டுகிறரோ அவரே குரு!

ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த  ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் !

உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி  வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு!

அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால்  உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!

ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!  இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்!

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே!  சூழ்நிலையிலே !  எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை   உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!!

அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள்புரிந்து ஞானம் பெற உதவுகிறார்!  இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை   உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள்.

நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்!

ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது !
யாதும் ஊரே யாவரும் கேளீர்!  இதுவே அவர்கள் நிலை!

"என் கடன் பணி செய்து கிடப்பதே"

எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி,
காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்!


எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே!
இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்!  கடந்த
நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு
பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன்
வாழ்கிறேன் !  இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை
தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை
வழங்கினார்!  கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க
சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க
சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி
தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை
அளித்தார்கள்!  அடியேனை பக்குவபடுத்தி முதல் 12  ஆண்டு முடிவில்
"கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12  ஆண்டிற்குள்
என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார்.

அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே!
அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே!

உலகோரே வாருங்கள் !

உபதேசம் பெறுங்கள் !

தீட்சை பெறுவது அவசியம்!

அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க
வாருங்கள்!

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம்.

தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.
தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்,
தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் .

அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும்
சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது  இறைவனை பற்றி மட்டுமே!

உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !
அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் !

இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் "  எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு!

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்
வேறோருவர்க்கும் எட்டாத புட்பம்
இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே
முட்டாத பூசை இறையாத தீர்த்தம் !

இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதி யானவன்

ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு!

புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன்  - ஆன்மலாபம்!



குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள்.

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம்


ஞான சற்குரு சிவ செல்வராஜ்.
சனாதன தர்மம்

http://www.vallalyaar.com/



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மூன்றாவது கண் எது?

 லாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம்
ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும்
சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒரு வண்ண ஜோதி சூழ்ந்திருகிறது
இதை மூன்றாவது கண் மூலம் காண இயலும் என்பது அந்த
நூலின் மைய கருத்து.


இரு புருவ நடுவிலும் உள்ள நெற்றியில் ஒரு ஆப்பை அடித்து அதற்கான
மருத்துவ சிகிச்சை செய்து புண் ஆரிய பின்பு அந்த ஆப்பை சுழற்றி
கொண்டு விடுவதே மூன்றாவது கண்ணை திறந்து விட்டதாகவும் என்பது
அந்த நூலில் குறிப்பிட பெற்றிருக்கிறது. ஆனால் அதை விஞ்ஞான
பூர்வமாகவோ மெய்ஞான பூர்வமாகவோ நம்ப முடியாது. நமது
தென்னாட்டு சித்தர்களும் வடநாட்டு மகரிஷிகளும் இப்படி மூன்றவது
கண்ணை திறந்துகொள்ளவில்லையே!

வள்ளலார் இப்படியா நெற்றிக்கண்ணாகிய மூன்றாவது
கண்ணை திறந்து கொண்டார்!
இறைவனுக்கு முக்கண்ணன் என்றும்
நெற்றிகண்ணன் என்றும், கண்ணன் என்றும் பெயர். இவை உண்மைப் பெயர்களே.


இந்த மூன்றாவது கண்ணின் ரகசியம் குரு மூலமாக தெரிந்து கொள்ளவேண்டியது.


நெற்றிகண் ஆப்பு அடித்து திறப்பது இல்லை. மெய் ஞானிகள் யாரும் இப்படி
கூறவே இல்லை. விஞ்ஞானிகளும் இப்படி கூறவில்லை. எதற்காக
திபேத்தியே லாமா இப்படி கதை கட்டியிருக்கிறார் என்பது புரியவில்லை.

மெய்ஞானியான திருவள்ளுவர் தன் நாதாந்த திறவுகோலில் மூன்றாவது கண்
குருவினால் திறந்து கொள்ளவேண்டும் என்பதை

உச்சியினி டமாம் நின்றவுதயமா சோதிபாதம்
நச்சியேயிருப்பானந்த நாதாந்த வெளியில் தானே
வச்சிரவெளியானந்த வாசியாலடர்ந்த வன்னி
குச்சியாலுச்சாத்தனை குருவினாற் திறந்து கொள்ளே!

சிவவாக்கியர்
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

வள்ளலார்
கையறவிலாது நடுக் கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.


என்று ஞானிகளின் பரிபாஷையால் கூறி சென்றார். லாமா சொல்லி இருப்பது
உண்மை ஆனால் எத்தனையோ டாக்டர்கள் மூன்றாவது கண்ணை திறந்து
இருப்பார்களே!

வியாழன், 1 டிசம்பர், 2011

காரணகுரு காரியகுரு

எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே என்று யார் நமக்கு உணரச்
செய்கிறாரோ - கிடைத்ததற்கு அரிதான இம் மானிட பிறவியிலேயே
அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார்
வழி காட்டுகிறாரோ - இவ்வுலக வாழ்க்கயை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு
வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ  -இறைவன் 

இத்தன்மையன் , நீ இத்தன்மையன் - நீ எப்படி அதுவாக வேண்டும்
என உரைக்கிறோ அவர்தான் குரு.  


குருவாக வந்து ஒருவர் வந்துதான் சொல்ல வேண்டும் என்பது அல்ல.  பல
ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம்.  அந்நூலசிரியரே மானசீக குரு ஆகிவிடலாம். 



ஏதாவது ஒரு இயற்கையோ, மனிதனோ எப்படியாயினும் சுட்டிக்காட்டி
விட ஒரு குருதேவை. அவரவர் நிலைக்குத் தக்கபடி அமையும். 

மெய்பொருள் உணர்ந்த ஒருவரை குருவாக ஏற்றுகொள்வதே சாலசிறந்தது.
"குருவில்ல வித்தை பாழ்" என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க.

நாம் பிறந்ததில் இருந்து நமக்கு ஒவ்வொரு காரியத் த்திற்கும் ஒரு ஒரு
குரு உண்டு. முதலில் தாய், இதுதான்  தந்தை எனச் சுட்டி காட்டுகிறார்.
தந்தை நாம் கல்வி கற்க பள்ளியைச் சுட்டுக் காட்டுகிறார்.  அரிச்சுவடியை
சுட்டிக் காட்டுகிறார் ஒருவர். படிப்படியாக பல பாடங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்  பலர். நம் நண்பர்கள் சகோதர சகோதிரிகள் உறவினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களை நமக்கு சுட்டிக்கட்டுகின்றனர்.நமக்கு வாகனங்கள் ஓட்ட ஒருவர் பயிற்றுவிக்கிறார்.
இப்படி பலபலவும்பற்பலராலும் சுட்டிகாட்டப்பட்டு உணர்ந்து வாழ்கையை
ஓட்டி கொண்டிருகிறோம்

இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி
காட்டுபவை. தீய பழக்க வழக்கமுடையனோடு  சேர்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீய வாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.  இவர்களெல்லாம் குரு அல்ல. மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.

இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை  சுட்டி கட்டுபவரே உண்மை
குரு. அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசை
படுத்தபட்டுள்ளது   மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம்.
குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து தெய்வமாகலாம்.

இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான்
"காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு
குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய
முடியும். வேறு வழியே கிடையாது.

முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம்.
காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து
வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை
பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து
முன்னேறுகிறோமோ  அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே
நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார். 



அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது
முதலில் காரணகுருவே-ஆத்மதரிசனம்.  இந்த காரண குருவே நம்மை,
தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து
துணை நிற்கிறார்.  கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.

"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.

சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!

பக்கம் 20
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


ஞாயிறு, 6 நவம்பர், 2011

சபரிமலை


பக்தியால் ஞானத்தை காட்டுவதில் 
முன்னிற்பது இன்று சபரிமலையிலே 
கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் 
தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே!!


தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, 
எல்லோரும் ஒரே  மாதிரி உடை, 
மலை அணிவது 
எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.

18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். 
அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. 
எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண  
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே 
சபரிமலை யாத்திரை.



குருவை பணித்து 
அவர் வழி காட்டுதலில்
இறைவனை காண 
பயண படவேண்டும். 


இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து
 மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். 

குரு வழி காட்ட மலை ஏறி 
ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்



--------பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ------

இரு முடி தாங்கி 
ஒரு மனதாகி 
குருவெனவே வந்தோம்
இரு வினை தீர்க்கும் 
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை 
காண வந்தோம்...

Popular Posts