Thursday, February 23, 2012

சாகத்தலை! வேகாக்கால்!போகாப்புனல்!

"சாகாதகலை அறியேன் வேகாதகாலின் தரம்
அறியேன் , போகாத தண்ணீரை அறியேன்"

சாகாத்தலை! - வேகாக்கால் ! -  போகாப்புனல்!  சாகாத தலை
நாம் செத்தும் சாகாமல் நம்மிடம்  உள்ள உயிர் ஒளி - அது
விளங்கும் இடம் கண்மணி இதுவே சாகாத தலை!  இதை அறிவதே
சாகா கல்வி! சாகாத கலை ! 

வேகாதகால் - நம் கண்மணி - நம் இரு கண்மணியானது உள்ளே
சென்று சேரும் இடம் அக்னி- ஆத்மஸ்தானம்! கண்மணியிலிருந்து
ஆத்மஸ்தானம் வரை உள்ளது ஒரு நாடி! அது கண் கருவிழியினுள்
பிராண நீரில் உள்ளது! கண்மணி ஒளி உள் ஊடுருவும்போது பிராண நீர்
கொதித்து ஆவியாகும்! அது மட்டுமே ஆவி - ஒளியே அக்னி கலை அடையும்! இது தவ அனுபவ நிலை! இதுவே வேகாத கால்! வெந்துபோய் விடாது!

போகாத புனல் - கண்மணி உள் நாடி வழிபுனல் நீர் போகாது!? அனலே
போகும்!? நீராவியே - ஒளி போகும்! அந்நிலையே அது மட்டுமே போகும்!
அங்கிருந்து நீர் போகாது! அதனால்தான் "போகாப்புனல்"!

சும்மா இருந்து தவம் செய்பவருக்கே இவ்வனுபவம் கிட்டும்! ஒருவர்
ஞானசாதனையாளரா என தெரிந்து கொள்ள சில சொற்களை கூறி
தெரியுமா என்பர்? தெரிந்தால் அவர் பதில் சொல்வாரல்லவா ?
தெரியாதவர் பேந்த பேந்த விழிப்பர்? பரிபாசையாக இரகசியமாக
கூறியதே இச்சொற்கள்! "மெய்ப்பொருள்!", சாகாத்தலை! வேகாகால்!
போகாப்புனல்! கருநெல்லி! திருவடி! திருச்சிற்றம்பலம்! திருவாடுதுறை !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கன்னியாகுமரி

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Tuesday, February 21, 2012

வினை கழிந்து தன்னை உணர வழி ?


"வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்"

நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே!

இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்!

"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்"  என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்!

வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம்.

குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில்

கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக
வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து
காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து

தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக

சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து

போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Monday, February 20, 2012

குரு சாட்சாத் பரப்பிரம்மா

புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் !
எது புண்ணியம்! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?!
குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில்

வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே
புண்ணியம்! நல்ல சற்குருவை பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை
பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!


சீடனுக்கு குருவே தெய்வம்! குருவே எல்லாம்! குரு வாக்கை வேத வாக்காக மதிக்கணும்! குருவுக்கு புத்தி சொல்ல போகாதே!  உன்விருப்ப படி குரு இருக்கவேண்டும் என்று கூறாதே! குரு சொற்படி நீ நட! குருவை வணங்க கூசி நிற்காதே! குருவுக்கு காணிக்கை கொடுக்க மறக்காதே! குருவுக்கு, உன்னை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

உடல் பொருள் ஆவி அனைத்தும் தத்தம் செய்தால்தான் அந்த காலத்தில் குருவை பெறமுடியும்! இந்த காலத்தில் ஓசியிலே எதாவது குரு கிடைப்பாரா என தேடுகிறார்கள்! குருவுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற அறிவே இல்லை! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு வாழ்கிறார்! நீ கொடுக்கும் பிச்சையில் தனே ஒரு குடும்பம் வாழ்கிறது! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு அலைந்து திரிந்து உன் போன்ற பலருக்கு ஞான உபதேசம் செய்கிறார்! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு ஞான பணி செய்கிறார்! குரு கேட்காமலே நீ குருவுக்கு பிச்சையை அள்ளி வழங்க வேண்டாமா? சீடர்கள் தரும் பிச்சைதானே குரு வாழ்க்கை!


"குரு சாட்சாத் பரப்பிரம்மா" அப்படி ஒரு குரு கிடைக்க நீ கோடி புண்ணியம்
செய்திருக்க வேண்டுமே! அப்படி ஒரு ஞான சற்குரு கிடைத்தால் உன் சிற்றறிவால் அவரை எடை போடதே! உன் ஆணவத்தால் அறிவிழந்து குருவை விட்டிடாதே! உன் பண திமிரால் குருவை புறக்கணித்து விடாதே!

அதனால் துன்பம் உனக்குத்தானே தவிர குருவுக்கு அல்ல! குரு எப்படியிருக்கிறார் என பார்க்காதே! குரு என்ன சொன்னார் என சிந்தித்து செயல்பாடு!

நதிமூலம் ரிஷிமூலம் பாராதே என சொல்வர்! நீ ஒரு நல்ல சீடனாக நடந்து கொள்! குருவுக்கு பிச்சை கொடு! வணங்கி பணி! பணிவிடை செய்! அவர் கட்டளையை சிறமேற் கொண்டு உடனே செய்!

ஞானதானம் செய்! குரு உபதேசத்தை உலகுக்கு கூறு!? ஞான நூல்களை எல்லோருக்கும் கொடு , அதுவே ஞான தானம்! உடற் பசியை போக்கும் அன்னதானம்! ஆன்ம பசியை நீக்குவதே ஞான தானம்! ஞான தானம் செய்பவனே உண்மையான சீடனாகிறான்!? அவனே பிற்காலத்தில் உன்னதமான சற்குருவாகிறான்! குரு பீடம் உன்னை தேடி வர வேண்டும்! நீ தேடி ஆசையுடன் ஓடினால் உனக்கு எட்டாத தொலைவுக்கு அது போய்விடும்!

நீ குரு ஆக விரும்பாதே! நல்ல சீடனாக முதலில் இரு!! நல்ல சீடனே நல்ல குருவாவான்! பொருளாசை குருவுக்கில்லை! உன்னக்கு இருப்பதால்தான்  கொடுக்க மறுக்கிறாய்! குருவானவர் யார்? ஞானி ஒருவரால் தகுதியானவர் எனக் கருதப்பட்டு, ஆசி வழங்கி குரு பீடத்தில் அமர்த்தப்படுபவரே!!  அவரை நீ ஒன்றும் அறிய மாட்டாய்!? உலக இன்ப துன்பங்களிலே சிக்கி, நைந்து , புடம்போட்டு எடுக்கப்படுபவரே குரு! அப்படிப்பட்ட ஒருவராலேயே திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்கமுடியும்! அந்த தகுதியை ஞானி ஒருவர் நல்குவார்!

அப்படிப்பட்ட ஞான சற்குரு மனம் நோகும்படி நீ நடக்கலாமா? உன் கர்மவினையை தன் தோளில் சுமக்கும் ஞான சற்குரு உளம் மகிழ தொண்டு செய்! பணி! உருகு! அதைவிடுத்து அவர் மனம் நோகச் செய்து நீ அவர் பாவத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதே! குருவை நிந்திக்காதே! அவர் மகிமை நீ அறிய மாட்டாய்! மாதா பிதா பெற்ற எல்லோருக்கும் குரு கிடைக்காது! குரு பெற்றவனே பாக்கியவான்!
 
           "குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு
           அருவமாய் நிற்கும் சிவம்"

ஔவைக் குறளின் பொருளுணர்ந்து, அவனியில் ஞான சற்குருவை பெற்று, மரணமிலா பெருவாழ்வு அனைவரும் பெற வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பொற்பாதம் பணிந்து வாழ்வோமாக!        

திருவருட் பாமாலை நாலஞ்சாறு
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
   
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Sunday, February 19, 2012

குரு, குரு ஆனது

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை அருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன் செயலோ அறியேன்
மனம் ஆலை பாய்வது கண் மன்றில் நடத் தரசே.ஞானம் தெரிந்தவர் கூட முழுமையாக வில்லை! உணர்ந்தாரில்லை!
ஆனால் அடியேன் குருவருளால் திருவடிஞானம் அறிந்து உணர்ந்தேன்!
ஞானம் அனுபவம் பெற்றேன். யாருக்கும் தெரியாமால் சிவனே என்று
நாம் இருப்போமே என்றிருந்தேன்! ஆனால் எல்லோரும் அறிய ஞானம்
அறிந்தவன் இவன் என என்னை தெருவில் இழுத்து விட்டுவிட்டனர்.
இது இறைவன் அருட்செயலோ அல்லது மாயை விளையாடுகிறதோ அறியேன்! என்மனம் அலைபாய்கிறது என்கண்மணி நடராசா அருள்புரிவாயாக!

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க  சுவாமிகள் தன் அனுபவத்தை இப்பாமாலையில் உரைத்தார்! இதுவே அடியேனுக்கு அனுபவமாயிற்று! எங்குரு ஜோதி இராமசாமிதேசிகர் அவர்களிடம் தீட்சை பெற்று சாதனை செய்து கண்மணி மாலையும் வெளியிட்டு சும்மா இருந்துவிட்டேன். எங்குரு ஜீவ சமாதி கொள்ளுமுன் கடைசியாக எம்மை அழைத்து தனக்குப்பின் குருவாக இருக்க பணித்தார்கள். நான் மறுத்தேன். நீண்ட நேரம் பேசி பல
காரணங்களும் கூறிய பின் குரு வற்புறுத்தவே அடியேன் குருவாக சம்மதித்தேன்! குருவும் சமாதி ஆகிவிட்டார்! நான் நமக்கு வேண்டாமடா சாமி இந்த குருபட்டம் என ஒதுங்கி விட்டேன்!

ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வலிந்து
என்னை ஆட்கொண்டு எங்குரு சமாதி ஆகி 12  வருடங்கள் கழித்து என்னை
குரு பீடத்தில் அமர்த்திவிட்டார்?! கன்னியாகுமரியில் "சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்" ஞான சற்குருவாக இருந்து திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்க அருள்பாலித்தார்! "தங்க ஜோதி ஞான சபை" உருவாக்கி தங்கஜோதியான நம் உள்ஒளியை, பேரொளியான இறைவனை காண எல்லோருக்கும் அருட்குருவாக இருந்து ஞானம் வழங்க அடியேனை
பணித்துள்ளார்! வள்ளல் பணியை ஆக்ஞையை(ஆணை) சிரமேற்கொண்டு அடியேன் பணி புரிகிறேன்! இது வள்ளல் பெருமான் அருட்செயலே!

திருவருட் பாமாலை நாலஞ்சாறு - பக்கம் 132
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts